2015-02-24
M.064 - கரியவன் - காலனை - மடக்கு
-------------
கரியவன் காணற் கரியவன் கண்டங்
கரியவன் மாணியைக் காத்துக் - கரியவன்
காலனை நெஞ்சில் உதைத்த கழலணி
காலனை நெஞ்சே கருது.
சொற்பொருள்:
கரியவன் - 1. திருமால்; 2. கறுத்தவன்; 3. கரிய வன் - கருநிறத்துக் கொடிய வலிய;
காலனை - 1. இயமனை; 2. காலை உடையவனை;
கரியவன் காணற்கு அரியவன் - திருமாலால் காண இயலாதவன்;
கண்டம் கரியவன் - நீலகண்டன்;
மாணியைக் காத்துக், கரிய வன்-காலனை நெஞ்சில் உதைத்த - மார்க்கண்டேயரைக் காத்துக், கருநிறம் உடைய கொடிய கூற்றுவனை மார்பில் உதைத்த; (மாணி - மார்க்கண்டேயர்);
கழல் அணி காலனை நெஞ்சே கருது - வீரக்கழல் அணிந்த திருவடியினனான சிவபெருமானை, மனமே நீ எண்ணு (/விரும்பு); (கருதுதல் - விரும்புதல்; சிந்தித்தல்);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment