சிவன் பாமாலை - பதிகம், திருப்புகழ், சிலேடை - by - வி. சுப்பிரமணியன்
Devotional Tamil Poetry on Siva - Padhigams by V. Subramanian
"சிவசிவ என்றிடத் தீவினை மாளும்"
பாடலை
முதலெழுத்திலிருந்து தொடங்கி
வரிசையாகப் படித்தால் ஒரு
பாடலும், கடைசியெழுத்திலிருந்து
தொடங்கி எதிர்வரிசையில்
மாலைமாற்றைப் போலப் படித்தால்
(i.e. when read in reverse order from end to
beginning) இன்னொரு
பாடலும் அமையும்.
(வடமொழியில்
இத்தகைய அமைப்பில் 30
பாடல்களால்
ஆன ராகவயாதவீயம் என்ற நூல்
உள்ளது).
(இடம்வலம்
& வலம்இடம்
என்று இருவழியிலும் ஒன்றாகவே
படிக்கின்ற சம்யுக்தாக்ஷர
எழுத்துமுறை உள்ள சம்ஸ்கிருதம்,
தெலுங்கு
போன்ற மொழிகளைவிடத் தமிழில்
இப்படிப்பட்ட பாடல்கள் எழுவது
இன்னும் அரிது).
தேய
மேமின் வார்நீர் வேணியா
னேய
னேகா வரதா காலமே.
(மேலுள்ள
பாடலை முடிவிலிருந்து தொடங்கி
வலமிடமாகப் படித்தால் கிட்டும்
பாடல்):
மேல
காதா ரவகா னேயனே
யாணி
வேர்நீர் வான்மி மேயதே.
1. இடவலம்
(normal reading sequence) பொருள்:
a) தேயமே
மின் வார் நீர் வேணி ஆன் நேயனே
கா வரதா காலமே =
மின்
வார் நீர் வேணி ஆன் நேயனே,
வரதா,
தேயமே
கா காலமே= மின்னல்
போன்ற, நீண்ட,
கங்கை
தங்கிய சடையை உடையவனும்
இடபத்தை வாகனமாக விரும்பியவனும்,
வரம்
அருள்பவனுமான சிவபெருமானே.
நாட்டை
விரைவில் காப்பாயாக;
(மின்
- மின்னல்;
ஒளி);
(வார்தல்
- நீள்தல்);
(வேணி
- சடை);
(ஆன்
- இங்கே,
எருது);
(தேயம்
- தேசம்;
நாடு);
(காலம்
- தக்க
சமயம்);
b) இப்பாடலைத்
- "தேயமே
மின் வார் நீர் வேணியானே
அனேகா வரதா காலமே"
என்றும்
பிரிக்கலாம். அப்படிப்
பிரித்தால், 'கா'
என்ற
சொல்லை வருவித்துப்
பொருள்கொள்ளவேண்டும்;
= மின்னல்
போன்ற, நீண்ட,
கங்கை
தங்கிய சடையானே;
அனேகனே;
வரம்
அருள்பவனே; நாட்டை
விரைவில் காப்பாயாக;
(அனேகன்
- பல
ஆகியவன்); திருவாசகம்
- சிவபுராணம்
- 8.1 - அடி-5
- "ஏகன்
அநேகன் இறைவன் அடிவாழ்க");
2. வலமிடம்
(reverse reading sequence)பொருள்:
மேலகா,
தாரவ,
கான்
நேயனே, ஆணி
வேர், நீர்
வான்மி மேய தே.
மேலகா- சிவலோகத்தில்
இருப்பவனே; (மேலகம்
- மேல்
வீடு);
தாரவ- மாலை
அணிந்தவனே;
கான்
நேயனே- சுடுகாட்டை
விரும்பியவனே;
ஆணி-வேர்- அனைத்திற்கும்
ஆதியாக இருப்பவனே;
சிறந்த
பொன் போன்றவனே;
எல்லாவற்றிற்கும்
வேர் போல உள்ளவனே;
(ஆணி,
வேர்
என்று தனித்தனியேயும்
பொருள்கொள்ளக்கூடும்);
(ஆணிவேர்
- மூலவேர்);
(ஆணி
- பொன்
உரையாணி); (அப்பர்
தேவாரம் - 5.2.4 - "ஆணியைச்
செம்பொன் அம்பலத்துள் நின்ற
தாணுவை");
நீர்
வான்மி மேய தே- கடல்
அருகுள்ள திருவான்மியூரில்
உறைகின்ற தேவனே;
("போற்றி"
என்ற
சொல்லை வருவித்துப் பொருள்கொள்க);
"நீர்"
என்பதை
நீ என்பதன் ஒருமை பன்மை மயக்கம்
என்றுகொண்டும் பொருள்கொள்ளல்
ஆம். அப்படிப்
பொருள்கொண்டால்:
சிவலோகனே,
மாலை
அணிந்தவனே, சுடுகாட்டை
விரும்பியவனே,
அனைத்திற்கும்
ஆதியாக இருக்கின்ற நீ
திருவான்மியூரில் உறைகின்ற
தேவன்.
(மனமே!
என்
சொல்லை) நீ
கேட்பாயாக; ஆதியும்,
ஒப்பற்ற
தலைவனும், நம்மைப்
பேணுகின்ற தாய் போன்றவனும்
ஆன தாணுவின் திருநாமத்தை ஓதி
அப்பெருமானுக்குத் தொண்டன்
ஆவாயாக;
ஓர்- ஒப்பற்ற;
ஐ
– தலைவன்;
பேணுதல்- பாதுகாத்தல்;
போற்றுதல்;
அனான்- அன்னான்
- அன்னவன்
- ஒத்தவன்;
தாணு- சிவன்
திருநாமங்களுள் ஒன்று -
(தாணு
= நிலையானது;
மலை;
தூண்);
மேரு
அன சீர் வருவ; கற்க,
தேம்
தமிழ்; வால்
விடையரே தே,
தேரே;
அடைவில்
வாழ் மிதந்தே; கற்க
வருவர் சீனவருமே.
மேரு
அன சீர் வருவ-
மேருமலையைப்
போலப் பொன்னும் புகழும்
நன்மையும் வருவன;
(சீர்
வருவ - நன்மை,
செல்வம்,
புகழ்,,,,
எனப்
பலவகைச் சீர்களைச் சுட்டியது.
எனவே,
"வருவ"
என்ற
பன்மை வினைமுற்றுப் பெற்றது.
ஒருமைபன்மை
மயக்கம் என்றும் கொள்ளலாம்);
கற்க,
தேம்
தமிழ்- (அத்தகைய
திருவைத் தரும்) இனிய
தமிழைக் கற்க; (தேம்
- இனிமை;
தேம்
தமிழ் - தேவாரம்
திருவாசகம் முதலிய இனிய
பாமாலைகள்);
அடைவில்
வாழ் மிதந்தே- அவரைப்
புகலடைந்து அவர் துணையால்
(வினைக்கடலுள்
ஆழாமல் / இன்பத்தில்)
மிதந்து
வாழ்; (அடைவு
- துணை;
புகலிடம்);
கற்க
வருவர் சீனவருமே-
அத்தகைய
திருத்தமிழைக் கற்கச் சீனர்
முதலிய வெளிநாட்டவரும் வருவர்;
(சீனவர்
- சீனம்
முதலிய நாட்டினர்;
உம்
- எச்சவும்மை;
பிறமொழி
பேசும் இந்தியநாட்டினர்
மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும்
என்ற பொருளில்);
பொழிப்புரை:
மேருமலையைப்
போலப் பொன்னும் புகழும்
நன்மையும் வருவன!
(அத்தகைய
திருவைத் தரும்) இனிய
தமிழைக் கற்க! வெள்ளை
இடபத்தை வாகனமாக உடையவரே
தெய்வம்; அறி;
அவரைப்
புகலடைந்து அவர் துணையால்
(வினைக்கடலுள்
ஆழாமல் / இன்பத்தில்)
மிதந்து
வாழ்! அத்தகைய
திருத்தமிழைக் கற்கச் சீனர்
முதலிய வெளிநாட்டவரும் வருவர்!
அ,
ஆ
- இவ்விரு
விகுதியினையும் இறுதியாக
உடைய மொழிகள் அஃறிணைப்
பன்மைப்படர்க்கை வினைமுற்றும்
குறிப்புமுற்றும் ஆம்.
இவற்றுள்
ஆகாரம் எதிர்மறை வினைக் கண்ணது
ஆமன்றி உடன்பாட்டு வினைக்கண்
வாராது.
உதாரணம்:
நடந்தன,
நடந்த;
நடவாநின்றன,
நடவாநின்ற;
நடப்பன,
நடப்ப;
கரியன,
கரிய:
அவை
எனவும் நடந்தில,
நடவாநின்றில,
நடவா:
அவை
எனவும் வரும்.
பிற்குறிப்பு:
மாலைமாற்று- ஆங்கிலத்தில்
Palindrome. ஒரு
பாடலை எழுத்தெழுத்தாக
முதலிலிருந்து இறுதிவரை
படித்தாலும், கடையிலிருந்து
முதல்வரை படித்தாலும் ஒரே
செய்யுளாக அமைவது.
2010-02-13
to 2010-02-23 பொது மாலைமாற்று(Palindrome) ------------------------------- ("குறள்
வெண்செந்துறை” அமைப்பில்) மாலைமாற்று
(ஆங்கிலத்தில்
Palindrome
) - செய்யுளை
நேராகப் படித்தாலும் தலைகீழாகப்
பின்னிலிருந்து படித்தாலும்
ஒன்று போலவே தோன்றும்.
மாலைமாற்று
என்பது முதலிலிருந்து இறுதிவரை
படித்தால் அமையும் பாடலே,
இறுதியிலிருந்து
முதல்வரை,
படிப்பினும்
அமைவது.
அதைச்
சிறுவர்கட்குக் குடகு,
விகடகவி
என்று கூறிக் காட்டுவர்.
சொல்லணியில்,
கூடசதுக்கம்,
கோமூத்திரி,
சுழிகுளம்,
மாலைமாற்று
இவைகளை மிறைக்கவி என்பர்.
எளிதில்
பொருள் காணமுடியாத பாடல்
என்பது அதன் பொருள்.
மாதவச்சிவஞானயோகிகள்
காஞ்சிப் புராணத்திலும்,
மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
திருநாகைக் காரோணப் புராணத்திலும்
இவைபோன்ற கவிதைகளை அமைத்துள்ளனர்.)
நீ
உறையும் கயிலைமலையை (வீசி
எறிவதற்காக)
அடைய
விரைந்த,
மிகுந்த
போர் விரும்பும் இராவணனுக்கு
(அவனை
நசுக்கிப் பின்)
வரம்
அருளியவனே!
மாலை
அணிந்தவனே!
பின்னுகிற
பாம்பு இருக்கும் முடியுடைய,
வெள்ளை
எருதில் எங்கும் செல்லும்,
மழுப்படையானே!
(போற்றி).
வேறு-
சிறப்புடையது
(That
which is special or distinct);
வழு-
குற்றம்;
ஏர்-
நன்மை;
எழுச்சி;
அழகு;
மனத்தில்
குற்றம் மிக உடையவர்கள்
சிறப்பு இல்லார்.
ஒருவர்
(பக்தியோடு)
மிக
அழுவாரேயானால் நன்மையே ஆகும்
.
அதுவே
அறிவு.
(திருநாவுக்கரசர்
தேவாரம் -
5.21.8 -
தொழுது
தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது
காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது
போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும்
கீழ்க்கணக்கு இன்னம்பர்
ஈசனே.)
2010-02-17
11) மாலைமாற்று
-
11 ------------------------ வேக
மாரவா வினைநிலா சூதே தேசூலா
நினைவி வார மாகவே.
பதம்
பிரித்து:
வேகம்
ஆர் அவா வினை நிலா!
சூ(து)
ஏதே?
சூலா!
நினைவி
வாரம் ஆகவே.
வேகம்-
வலிமை;
கடுமை;
விரைவு;
ஆர்-
மிகுதல்;
பொருந்துதல்;
நிலா-
நில்லா;
(நிற்றல்
-
தங்குதல்;
எஞ்சுதல்);
நினைவி-
நினைக்கச்செய்;
(அப்பர்
தேவாரம் -
6.43.1 -
"நில்லாத
நீர்சடைமேல் நிற்பித் தானை
...
நினையாவென்
நெஞ்சை நினைவித் தானை")
வாரம்-
அன்பு;
பக்தி;
சூலபாணியே!
என்
மனத்தில் (உனக்கு)
அன்பு
விளையும்படி என்னை நினைக்கச்செய்வாயாக!
(அதன்பின்)
வலிய
ஆசைகளும் வினைகளும் தீர்ந்துவிடும்.
பின்
வஞ்சமும் உண்டோ?
அன்புடன், வி.
சுப்பிரமணியன்
பிற்குறிப்புகள்
: இப்பதிகத்தின்
யாப்புக் குறிப்பு: குறள்
வெண்செந்துறை-
இலக்கணம்
-
பசுபதியாரின்
“கவிதை இயற்றிக் கலக்கு:”
என்ற
நூலிற் காண்பதிலிருந்து:
அளவொத்த
இரண்டு அடிகள்.
(ஓர்
அடியில் எத்தனை சீர்கள்
உள்ளனவோ அத்தனை சீர்கள்
அடுத்த அடியிலும் இருக்கும்).
எவ்வகைச்
சீரும் வரலாம்.
சீர்களுக்கிடையே
எந்தத் தளையும் இருக்கலாம்.
-----------------------------
Some Q&A on some songs of
this padhigam -------------------- #4) காவாரண
நாடா வீசா தேனே யாலா லாயானே
தேசா வீடா நாணர வாகா.
பதம்
பிரித்து:
கா
வாரண[ம்]
நாடா
ஈசா!
தேனே
ஆல் ஆல்!
ஆயானே!
தேசா!
வீடா!
நாண்
அரவா!
கா!
காட்டில்
வாழ் யானையை வாகனமாக விரும்பாத
ஈசனே!
(இடப
வாகனன்).
(உனக்கு)
ஆலகால
விஷமும் தேனே!
தந்தையே!
சோதியே!
இயல்பாகவே
பாசங்களினின்றும் நீங்கியவனே!
பாம்பை
அரைநாணாக அணிந்தவனே!
(முப்புரம்
எரித்த நாளில் வில்லில்
நாணாகப் பாம்பைக் கொண்டவனே);
காப்பாயாக!
-----------
இப்பாடல்
குறித்த ஓர் உரையாடல்
--------------- வாசித்தோர்களில்
ஒருவர் எழுப்பிய வினா:
"இருப்பதைத்தானே
குறிப்பிடமுடியும்!
இல்லாததையும்
குறிப்பிடலாமா?"
என்
மறுமாற்றம்:
பாடல்களில்
சில சமயம் சில விஷயங்கள்
குறிப்பினால் உணர்த்தப்பெறுவதுண்டு.
இல்லாததையும்
குறிப்பிடுவதுண்டு.
(உதாரணம்:
இறப்பு
இல்லாதவனே,
மலம்
இல்லாதவனே,
போன்றவற்றைக்
காண்க).
இந்தியா
போன்ற நாடுகளில் அரசர்கள்
யானையின் மிதே ஏறி வருவார்கள்.
எல்லா
அண்டங்களுக்கும் அரசனான
சிவனோ அவ்வாறன்றி ஒரு காளையின்
மீது ஏறி வருகிறான்.
அப்பர்
தேவாரத்தில் ஒரு பாடலில்
(6.25.1)
இப்படிக்
கூறுகிறார்:
"அயிராவணம்
ஏறாது ஆனேறு ஏறி அமரர் நாடு
ஆளாதே ஆரூர் ஆண்ட அயிரா வணமே
என் அம்மானே"
மற்றொருவர்அளித்தவிளக்கம்:
காட்டுயானை
எனும்போது பழக்கப்படுத்தாத,
கட்டுப்படாத
யானை என்ற பொருள் வரும்.
யானையை
ஆன்மீகத்தில் மனத்திற்குக்
குறியீடாகச் சொல்வதும்
வழக்கம்.
புலன்களுக்கும்
குறியீடாகச் சொல்வது வழக்கம்.
(திருமந்திரம்
-
"ஆக
மதத்தன ஐந்து களிறுள ....").
ஆகவே
தறிகெட்டலையும் காட்டுயானை
போன்ற மனத்தை நாடாத ஈசன்,
கட்டுப்பாடான
மனத்தை விரும்பி ஏற்றுக்கொள்வான்.