Monday, July 28, 2025

V.050 - ஆள் ஆகு - மாலைமாற்று

2018-03-06

V.050 - ஆள் ஆகு - மாலைமாற்று

---------------------------------

(குறள்வெண்செந்துறை) (மாலைமாற்று - Palindrome)


கேளா யாதி யோரை பேணு தாயனா

னாய தாணு பேரை யோதி யாளாகே.


பதம் பிரித்து:

கேளாய்; ஆதி, ஓர் ஐ, பேணு தாய் அனான்

ஆய தாணு பேரை ஓதி ஆள் ஆகே.


(மனமே! என் சொல்லை) நீ கேட்பாயாக; ஆதியும், ஒப்பற்ற தலைவனும், நம்மைப் பேணுகின்ற தாய் போன்றவனும் ஆன தாணுவின் திருநாமத்தை ஓதி அப்பெருமானுக்குத் தொண்டன் ஆவாயாக;


ஓர் - ஒப்பற்ற;

– தலைவன்;

பேணுதல் - பாதுகாத்தல்; போற்றுதல்;

அனான் - அன்னான் - அன்னவன் - ஒத்தவன்;

தாணு - சிவன் திருநாமங்களுள் ஒன்று - (தாணு = நிலையானது; மலை; தூண்);

ஆள் - தொண்டன்; அடிமை;

ஆகுதல் - ஆதல்;

- ஈற்றசை;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment