சிவன் பாமாலை - பதிகம், திருப்புகழ், சிலேடை - by - வி. சுப்பிரமணியன்
Devotional Tamil Poetry on Siva - Padhigams by V. Subramanian
"சிவசிவ என்றிடத் தீவினை மாளும்"
வேளை
- 1. மன்மதனை;
2. முருகனை;
3. காலம்;
சமயம்;
பொழுது;
ஒரு
- 1. ஒப்பற்ற;
2. ஒன்று
வேலை
- 1. வேல்
என்ற ஆயுதத்தை; 2.
தொழில்;
செயல்;
வேளை
எரிக்க விழித்தான் மகன்-
மன்மதனை
நெற்றிக்கண்ணால் எரித்த
சிவனாரின் மகனான;
முருகவேளை
வணங்கிட வேண்டுமோ வேளை-
முருகனைத்
தொழுவதற்குத் தனியாக ஒரு
நேரம் வேண்டுமோ?
ஒரு
வேலை ஏந்தி வருவோன் தாள்
போற்றும் ஒரு வேலை செய்வார்க்கு
உண்டு உய்வு- ஒப்பற்ற
வேலாயுதத்தைக் கையில் தாங்கி
வருகின்ற முருகனுடைய திருவடியைத்
தொழுகின்ற அந்த ஒரு செயலைச்
செய்பவர்களுக்கு நற்கதி
உண்டு.
பசித்து
வந்தவர்உண ஒரு
கறி இலை எனப்,
பரிந்து
அவர் இலைதனில் ஒரு கனி
படைத்து உவந்தவர்-
(காலையில்)
பசியோடு
வந்த ஓர் அடியவர்க்கு
உணவிடும்பொழுது, கறி
இன்னும் சமைக்கப்பட்டிராத
காரணத்தால், அன்போடு
அவர் இலையில் (கணவன்
கொடுத்தனுப்பியிருந்த
இருமாம்பழங்களில்)
ஒரு
மாம்பழத்தை இட்டு மகிழ்ந்தவர்;
பிறகு
உண வரும் அவர்
மணவாளன், "பழத்தை
இங்கு இட"என,
உள
ஒரு கனி கலத்தில் அன்பினொடு
இட, உணும்
அவன்- பின்னர்ப்
பகலில் உண்ண வந்த அவர் கணவன்,
"பழத்தை
இங்கே இடுக" என்று
சொல்ல, இருந்த
ஒரு பழத்தை இலையில் அன்போடு
இட, உண்ட
அவன்; (இட
– இடுக என்ற வியங்கோள்);
அவர்
பதைத்திடும்படி,
"இனும்
ஒரு கனியையும் இடு நீ
நான் புசிக்க"என்றிட
– அவர் மனம் கலங்கும்படி,
"இன்னொரு
பழத்தையும் நான் சாப்பிட நீ
இடு" என்று
சொன்னதும்; (இனும்
- இன்னும்);
அவர்
அரன் அடிதொழுது இரக்க,
அங்கு
ஒரு கனி வர,
மறு-கனி
புசித்தவன், "கழறு,
இருகனி
இருசுவை வரும்-ஆறு
புலப்படும்படி"என
– அவர் ஈசன் திருவடியை வணங்கி
வேண்ட, அங்கே
அவர் கையில் ஒரு பழம் வந்தடைய,
(அதனை
இட்டதும்), அந்த
இரண்டாம் பழத்தை உண்டவன்,
"(ஒரே
மரத்தின்) இருபழங்கள்
இருவிதச் சுவை பெற்ற உண்மையை
நான் அறியும்படி சொல்லு"
என்று
சொல்ல; (ஆறு
- விதம்);
(கழறுதல்
- சொல்தல்);
அவர்
அரன் அருள்தனைப் பகர்ந்திட,
அவன்
அறி-வணம்
ஒரு புதுப்பழம் கரம்
வர, அவன்
வெருவொடு பிரிவானே-
அவர்
சிவன் அருள்புரிந்ததைச்
சொல்ல, (அப்படி
எனில் இன்னொரு பழம் வரவழைத்துக்
காட்டு என்று அவன் சொன்னதும்),
அவனும்
அறியும்படி ஒரு புதிய பழம்
அவர் கையில் வந்ததும்,
அவன்
(இவர்
தெய்வம் என்று) அஞ்சி
அவரைப் பிரிந்தான்;
(வெரு
- அச்சம்);
(பிரிவான்
- பிரிந்தான்;
காலவழுவமைதி);
(ஏ
- அசை);
"நசிக்க
ஒன்பது-துளை
உடல் அழகு;
ஒரு
கணத்து உடம்பதுதனை
இவண் அருள்"
என
நயக்கும் அன்பரது
உள(ம்)மகிழ்
உரு இறை தருவானே-
(சில
காலம் கழித்து, அவன்
இவரோடு வாழ மறுத்ததும்),
"இந்த
நவதுவாரம் உடைய உடலழகு
அழியட்டும்; ஒரு
பூதகணத்தின் உடம்பை இவ்விடம்
அருள்க" என்று
விரும்பி இறைஞ்சிய அன்பரது
உள்ளம் மகிழும் உருவினை இறைவன்
தந்தான்; (கணம்
- பூதகணம்);
(இவண்
- இவ்விடம்);
நரிக்குலம்
திரி சுடலையில் நடமிடு
நிருத்தன் அங்கழல்-இணை
தொழும் அடியவர்,
நரர்க்கு
இடும்பைகள் அற,
இரு-பதிகமு(ம்)மொழிவாரே- (பின்னர்)
நரிகள்
திரியும் சுடுகாட்டில் ஆடும்
கூத்தனது அழகிய இருதிருவடிகளைத்
தொழும் அடியவரான அவர்,
மனிதர்களுக்குத்
துன்பம் தீர (மூத்த
பதிகங்கள் என்று அழைக்கப்படும்)
இரண்டு
பதிகங்களைப் பாடினார்;
வசிட்டர்
அந்தரர் அயன் அரி தொழு-பதி
மலைத்தடந்தனில் அடி இட
வெருவிய மனத்தர் தம்
தலை-நடைகொடு
கயிலையை அடைவாரே-
வசிஷ்டர்
(முதலான
ரிஷிகள்), தேவர்கள்,
பிரமன்,
திருமால்
எல்லாரும் தொழும் தலைவனான
சிவன் உறையும் தலமான கயிலைமலையைக்
காலால் மிதிக்க அஞ்சித்
தலையால் நடந்து ஏறிக் கயிலையை
அடைந்தார்; (அந்தரர்
- தேவர்);
(பதி
- தலம்;
தலைவன்);
(தடம்
- வழி;
இடம்);
(மலைத்தடம்
- தடமலை
என்று முன்பின்னாக மாற்றியும்
பொருள்கொள்ளலாம்;
தடமலை
- பெரிய
மலை);
மலைக்கு
மங்கையும் வினவிட,
"அனை
இவர் நமக்கு"
எனும்
சொலை அரன் உரை-செயும்- (அப்பொழுது
"தலையால்
ஏறி வரும் இவர் யார்"
என்று)
உமாதேவி
வினவிய பொழுது, "இவர்
நம்மைப் பேணும் அம்மை"
என்ற
சொல்லை ஹரன் உரைத்தான்
(/உரைத்த);
(அனை
- அன்னை;
இடைக்குறை);
(செயும்
- செய்யும்;
இடைக்குறை);
.. .. செடி-வினைகள்
யாவும் எரி புகு பஞ்சு என ..
அறியாமல்,
.. நழுவும்
இக-வாழ்வை
நிலை என, அங்கயல்
.. .. .. நயனியரை
நாடும் எனது உயிர் கொண்டிட
.. .. நமனுடைய
தூதர் இடர் தரும் அந்தியம்
.. அணுகாமுன்,
கழுமலவர்-கோனின்
அரு-விரை
சிந்திடு
.. .. .. கவின்
மலியு(ம்)
மாலை-கொடு
மிகும் அன்பொடு
.. .. கழலிணையை
ஓதி வழிபடு நெஞ்சு உற,
.. நிலமீதே
.. எழு-பிறவி
தோறும் உனது அடி சிந்தையில்
.. .. .. எனது
துணை ஆகி அனுதின(ம்)
நின்றிட,
.. .. இடைமருது
மேய இறையவ, இங்கு
அருள் புரியாயே;
வழு
மலியு(ம்)
மூடன்
இருபது திண்புய(ம்)
.. .. ..
மணிமுடிகளோடு
நெரிதர அன்று அரு-
.. .. மலையில்
ஒரு பாத-விரலது
கொண்டு அடர் .. கயிலாயா;
.. மறி-கடலில்
ஆலம் அது வர, அஞ்சிய
.. .. .. சுரர்
அலறி "ஓலம்"
என,
அவர்
உய்ந்திட
.. .. வலிய
விட(ம்)
மேவி
அரு-மணி
ஒன்று அணி .. மிடறானே;
தழுவும்
உமை மாதுதனை ஒரு பங்கு என
.. .. ..
மகிழு(ம்)
மணவாள;
திரை-நதி
தங்கிய
.. .. சடையதனில்
நாறு குரவொடு கொன்றை ..
புனைவோனே;
.. சரண(ம்)
நினை
மாணி உயிரது கொன்றிட
.. .. .. வரு-மறலி
மாள உதைதரு சங்கர;
.. .. தயை
உடைய நாத; விடையை
விரும்பிய .. பெருமானே.
* (ம்)
- புணர்ச்சியில்
மகர-ஒற்றுக்
கெடும் இடம்;
செழுமலர்கள்
தூவி அரகர என்பவர் திரு உடையர்
ஆவர்- சிறந்த
பூக்களைத் தூவி "ஹரஹர"
என்று
போற்றுபவர்கள் திரு அடைவார்கள்;
(திரு
- செல்வம்;
பாக்கியம்;
தெய்வத்தன்மை;
நல்வினை;
சிறப்பு);
அவரது
பண்டைய செடி-வினைகள்
யாவும் எரி புகு பஞ்சு என
அறியாமல்- அவர்களது
பழைய, துன்பம்
தரும் வினையெல்லாம் தீப்
புகுந்த பஞ்சுபோல் அழியும்
என்று அறியாமல்; (செடி
- துன்பம்);
நழுவும்
இக-வாழ்வை
நிலை என – (நாம்
அறியாமலே) நழுவி
அழியும் இவ்வுலக வாழ்வை
நிலையானது என்று எண்ணி;
(இகம்
- இம்மை);
அங்கயல்
நயனியரை நாடும் எனது
உயிர் கொண்டிட நமனுடைய
தூதர் இடர் தரும் அந்தியம்
அணுகாமுன் - அழகிய
கயல்மீன் போன்ற கண்களையுடைய
மாதரை நாடும் என்னுடைய உயிரைக்
கவர எமதூதர்கள் துன்பம்
செய்யும் மரணகாலம் என்னை
நெருங்குவதன் முன்னமே;
(அங்கயல்
- அம்
கயல் - அழகிய
கயல்மீன்); (நயனி
- கண்ணை
உடையவள்);(அந்திமம்
- மரணகாலம்);
கழுமலவர்-கோனின்
அரு-விரை
சிந்திடு கவின் மலியு(ம்)மாலை-கொடு- சீகாழியர்
தலைவரான திருஞான சம்பந்தர்
அருளிய அரிய மணம் கமழும் அழகிய
பாமாலைகளால்; (கழுமலம்
- சீர்காழி);
(விரை
- வாசனை);
(சிந்துதல்
- பரப்புதல்);
(கவின்
- அழகு);
மிகும்
அன்பொடு கழலிணையை ஓதி வழிபடு
நெஞ்சு உற – மிகும் அன்போடு
உன் இருதிருவடிகளைப் போற்றி
வணங்கும் மனம் பெற;
(ஓதுதல்
- பாடுதல்);
நிலமீதே
எழு-பிறவி
தோறும் உனது அடி சிந்தையில்
எனது துணை ஆகி அனுதின(ம்)நின்றிட
– மண்ணுலகில் எழுகின்ற
பிறவிகள்தோறும் உன் திருவடி
என் நெஞ்சில் துணை ஆகி என்றும்
நிற்க; (எழுதல்
- தோன்றுதல்);
(சிந்தை
- மனம்);
(அப்பர்
தேவாரம் - 4.94.8 - "புழுவாய்ப்
பிறக்கினும் புண்ணியா உன்னடி
என்மனத்தே வழுவாதிருக்க
வரந்தர வேண்டும்");
இடைமருது
மேய இறையவ, இங்கு
அருள் புரியாயே-
திருவிடைமருதூரில்
எழுந்தருளிய இறைவனே,
இங்கு
அருள்வாயாக; (இறையவன்
- இறைவன்);
வழு
மலியு(ம்)மூடன்
இருபது திண்புய(ம்)மணிமுடிகளோடு
நெரிதர அன்று அரு-மலையில்
ஒரு பாதவிரலது கொண்டு
அடர் கயிலாயா-
குற்றம்
மிக்க அறிவிலியான இராவணனது
இருபது வலிய புஜங்களும் அழகிய
கிரீடம் அணிந்த தலைகளும்
நசுங்கும்படி முன்பு கயிலைமலையில்
ஒரு பாதவிரலால் நசுக்கியவனே;
(வழு
- குற்றம்);
(புயம்
- புஜம்
- தோள்);
(நெரிதல்
- நசுங்குதல்);
(அடர்த்தல்
- நசுக்குதல்);
மறி-கடலில்
ஆலம் அது வர, அஞ்சிய
சுரர் அலறி "ஓலம்"என
– அலையெழும் பாற்கடலில்
ஆலகாலம் தோன்ற, அது
கண்டு அச்சமுற்ற தேவர்கள்
அலறி "ஓலம்"
என்று
திருவடியில் சரண்புக;
(மறிதல்
- அலையெழுதல்);
(ஓலம்
- அபயம்
வேண்டும் குறிப்புமொழி);
அவர்
உய்ந்திட வலிய விட(ம்)மேவி
அரு-மணி
ஒன்று அணி மிடறானே-
அவர்கள்
உய்ய, வலிய
நஞ்சை விரும்பி உண்டு அரிய
மணி ஒன்றை அணிந்த கண்டம்
உடையவனே; (மேவுதல்
- விரும்புதல்;
உண்ணுதல்);
தழுவும்
உமை மாதுதனை ஒரு பங்கு
என மகிழு(ம்)மணவாள
– தழுவும் உமைநங்கையை ஒரு
பாகமாக விரும்பிய மணவாளனே;
திரை-நதி
தங்கிய சடையதனில் நாறு குரவொடு
கொன்றை புனைவோனே-
அலையெழுகின்ற
(/ அலை
மிக்க) கங்கை
தங்கிய சடையில் மணம் கமழும்
குராமலரையும் கொன்றைமலரையும்
அணிந்தவனே; (திரை
- அலை;
திரைதல்
- அலையெழுதல்;);
(புனைதல்
- அணிதல்);
சரண(ம்)நினை
மாணி உயிரது கொன்றிட வரு-மறலி
மாள உதைதரு சங்கர – உன்
திருவடியை நினைந்த மார்க்கண்டேயரது
உயிரைக் கொல்ல வந்த காலனே
இறக்கும்படி காலனை உதைத்த
சங்கரனே; (சரணம்
- பாதம்);
(மாணி
- இங்கே,
மார்க்கண்டேயர்);
(மறலி
- இயமன்);
(தருதல்
- ஒரு
துணைவினை); (சங்கரன்
- சிவன்
திருநாமம் - நன்மையைச்
செய்பவன்);
தயை
உடைய நாத – கருணை உடைய
தலைவனே; (தயை
- அருள்);
விடையை
விரும்பிய பெருமானே-
இடபத்தை
வாகனமாக விரும்பிய பெருமானே;
அற்றைக்கு
ஒரு மலர் குறைவுஆகவைக்கத்,
தனது
அக்கத்தினை இட –
அன்று ஒரு நாள் நீ ஒரு பூவைக்
குறையச்செய்தபொழுது,
அவன்
தனது கண்ணையே தோண்டித்
தாமரைப்பூவாக இட்டு வழிபாடு
செய்ய; (அற்றைக்கு
- அன்றைக்கு
- அந்தத்
தினம்); (அக்கம்
- அக்ஷம்
- கண்);
அப்பத்தி-தனக்குப்
பரிசு என வைப்-பல்-திகழ்
வெற்றித் திகிரியை அருள்வோனே- அந்தப்
பக்திக்குப் பரிசாகக் கூர்மையான
பற்கள் திகழும் வெற்றியுடைய
சக்கராயுதத்தை அருளியவனே;
(பத்தி
- பக்தி);
(வை
- கூர்மை);
(வைப்பற்றிகழ்
= வைப்-பல்-திகழ்);
(திகிரி
- சக்கரம்);
மட்டு-அற்ற
செருக்கு உற்று,
இருபது
மற்-கைத்தல(ம்)மெச்சிச்,சிலை
எறி மட்டிக்கு ஒரு
பத்துத் தலை இற நெரி
பாதா- அளவில்லாத
ஆணவம் கொண்டு, இருபது
வலிய கைகளை மிகவும் எண்ணிக்,
கயிலைமலையைப்
பெயர்த்து எறிய முயன்ற மூடனுக்கு
அவனது பத்துத்தலையும் அழியும்படி
நசுக்கிய திருப்பாதனே;
(மட்டு
- அளவு);
(மல்
- வலிமை);
(மெச்சுதல்
- புகழ்தல்;
மதித்தல்);
(சிலை
- மலை);
(மட்டி
- மூடன்);
(இறுதல்
- முரிதல்;
கெடுதல்);
(நெரித்தல்
- நசுக்குதல்);
மத்தத்தொடு
எருக்கு உற்றிடு முடி
எற்றித் திரை சுற்றக்,
கதிர்-மதி
வைத்துப், பெரு-நச்சுப்
பணியையும் அணிவோனே-
ஊமத்தமலரோடு
எருக்கமலரும் இருக்கும்
திருமுடியில், அலைமோதிக்
கங்கை சுற்றிவர,
ஒளிவீசும்
திங்களை அணிந்து,
பெரிய
விஷப்பாம்பையும் அணிந்தவனே;
(மத்தம்
- ஊமத்தமலர்);
(எற்றுதல்
- மோதுதல்);
(திரை
- அலை;
நதி);
(பணி
- பாம்பு);
எட்டுத்-திசை
சுட்டுப் பெருவிடம் எட்டிற்று
என அச்சத்தொடு சுரர்
எய்ப்பு-உற்று
அடி பற்றிப் பரவிட –
எல்லாத் திசைகளையும் சுட்டுப்
பெரிய விஷம் (ஆலகாலம்)
எட்டியது
என்று பயந்து வருந்தித்
தேவர்கள் உன் திருவடியைச்
சரணடைந்து துதிக்க;
(எட்டுதல்
- நெருங்குதல்);
(சுரர்
- தேவர்);
(எய்ப்பு
- இளைப்பு;
மெய்வருத்தம்);
(பரவுதல்
- துதித்தல்);
அமுதாக
இட்டத்தொடு துற்றிக்
களனிடை நிற்பித்து-
(அவர்களுக்கு
இரங்கி) அமுதம்போல
அந்த நஞ்சை விரும்பி உண்டு
கண்டத்தில் நிறுத்தி;
(இட்டம்
- இஷ்டம்
- விருப்பம்);
(துற்றுதல்
- உண்ணுதல்);
(களன்
- களம்
- கண்டம்);