Wednesday, December 14, 2022

06.03.065 - என்னிலை - வாரி - மடக்கு

06.03 – மடக்கு

2015-04-07

06.03.065 - என்னிலை - வாரி - மடக்கு

-------------------------

என்னிலை என்றிங் கியம்பவும் வேண்டுமோ

என்னிலை நீயறிவாய் எம்பெருமான் - என்னிலை

வாரி விடமுண்டு வானோரைக் காத்தபரன்

வாரி வழங்கும் வரம்.


பதம் பிரித்து:

"என் இலை என்று இங்கு இயம்பவும் வேண்டுமோ;

என் நிலை நீ அறிவாய் எம்பெருமான்" என்னில், ,

வாரி விடம் உண்டு வானோரைக் காத்த பரன்

வாரி வழங்கும் வரம்.


சொற்பொருள்:

என்னிலை - 1. என் இலை; 2. என் நிலை; 3. என்னில், ;

என் - 1) என்ன; எது அல்லது எதையெனப் பொருள்படும் இடைச்சொல்; 2) என்னுடைய;

இலை - இல்லை; (இடைக்குறை விகாரம்);

என்தல் (என்னுதல்) = என்று சொல்லுதல்;

- தலைவன்;

வாரி - 1. கடல்; 2. அள்ளி; (வாருதல் - அள்ளுதல்);

வழங்கும் - வழங்குவான்; (செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று)


"என் இலை என்று இங்கு இயம்பவும் வேண்டுமோ; என் நிலை நீ அறிவாய் எம்பெருமான்" என்னில் - "என்ன இல்லை என்று சொல்லவும் வேண்டுமோ? எம்பெருமானே; என் நிலையை நீ அறிவாய்" என்று இறைஞ்சினால்;

- தலைவன்;

வாரி விடம் உண்டு வானோரைக் காத்த பரன் - கடல் விடத்தை உண்டு தேவர்களைக் காத்த பரமன்;

வாரி வழங்கும் வரம் - வரத்தை வாரி வழங்குவான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment