Tuesday, December 13, 2022

06.03.064 - கரியவன் - காலனை - மடக்கு

06.03 – மடக்கு

2015-02-24

06.03.064 - கரியவன் - காலனை - மடக்கு

-------------------------

கரியவன் காணற் கரியவன் கண்டங்

கரியவன் மாணியைக் காத்துக் - கரியவன்

காலனை நெஞ்சில் உதைத்த கழலணி

காலனை நெஞ்சே கருது.


சொற்பொருள்:

கரியவன் - 1. திருமால்; 2. கறுத்தவன்; 3. கரிய வன் - கருநிறத்துக் கொடிய வலிய;

காலனை - 1. எமனை; 2. காலை உடையவனை;

கருது - விரும்பு; சிந்தி;


கரியவன் காணற்கு அரியவன் - திருமாலால் காண இயலாதவன்;

கண்டங் கரியவன் - நீலகண்டன்;

மாணியைக் காத்துக், கரிய வன் காலனை நெஞ்சில் உதைத்த - மார்க்கண்டேயரைக் காத்துக், கருநிறம் உடைய கொடிய கூற்றுவனை மார்பில் உதைத்த;

கழல் அணி காலனை நெஞ்சே கருது - வீரக்கழல் அணிந்த திருவடியை உடைய சிவபெருமானை, மனமே நீ சிந்திப்பாயாக / விரும்புவாயாக;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment