01.74 – பாதிரிப்புலியூர் - (திருப்பாதிரிப்புலியூர்)
Verses & Meaning in English - please see bottom half of this page.
2010-07-18
திருப்பாதிரிப்புலியூர்
------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - 'கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்')
1)
வரையிலதோர் வாரியென வருவினையால் வருந்தாமே
கரங்கொடுத்துக் காக்கின்ற கண்ணுதலான் கருதுமிடம்
திரையிலெறிந் தாலுமரன் திருப்பெயரை நாவரசர்
பரவியுய்ந்து கரையேறு பாதிரிப் புலியூரே.
2)
நாடிவரும் வினைக்கடலுள் நாமாழா வணம்காக்கும்,
ஓடிவரு நதிதன்னை ஒளிர்சடையுள் வைத்தவனூர்,
மாடிவரும் மாதேவன் நாமத்தை நாவரசர்
பாடியுய்ந்து கரையேறு பாதிரிப் புலியூரே.
3)
மேன்மையிலா வினையடியார் மேல்மேவா வணம்காக்கும்
பான்மையினான் மான்விழியாள் பங்கனவன் உறையுமிடம்
வான்மதிசூ டரனருளால் மாகடலில் கல்நாவாய்
போன்மிதந்து அப்பரடை பாதிரிப் புலியூரே.
4)
கடல்போல வினைவரினும் கழல்போற்றும் அடியார்கட்(கு)
இடரில்லா நிலையளிக்கும் எம்பெருமான் மேவியவூர்,
அடலேற்றன் திருப்பெயர்சொல் அப்பர்க்குக் கல்லுமொரு
படகாகி அவர்அடைந்த பாதிரிப் புலியூரே.
5)
தணியாத வினைக்கடலுள் தவிக்கின்ற நிலைதவிர்த்துப்,
பணிசெய்யும் அடியார்க்குப் பரிந்தருளும் பசுபதியூர்,
மணிகண்டன் மலரடியை மனத்திருத்தி நாவரசர்
பணியக்கல் மிதந்தடைந்த பாதிரிப் புலியூரே.
6)
துணையாக உடன்நின்று தொண்டரைக்காத் தருள்கின்ற
இணையில்லா அருளாளன் எருதேறும் இறைவனிடம்,
பிணைகல்லும் பெருமானின் பெயர்பரவும் அப்பர்க்குப்
புணையாகிக் கரைசேர்க்கும் பாதிரிப் புலியூரே.
7)
முனிவொடுசேர் முன்வினையுள் மூழ்காத வாறடியார்க்
கினிதருளும் சிவபெருமான் ஏந்திழையோ டுறையுமிடம்,
கனிவறியாச் சமண்மூடர் கடலிலெறிந் தாலுமப்பர்
புனிதனடி போற்றியடை பாதிரிப் புலியூரே.
8)
அகலாத வினைக்கட்டை அறுத்தடியார்க் கருள்செய்யும்
பகவான்முன் அரக்கனையும் பாடவைத்த பரமனிடம்,
இகல்கொண்டோர் கடலிலெறிந் தாலுமப்பர் எழுத்தஞ்சைப்
புகல்கொண்டே கரையேறு பாதிரிப் புலியூரே.
9)
இன்னலளி வினைக்கடலில் எய்யாவா றடியார்கட்
கின்னருள்செய் ஈசனெல்லை இலாச்சோதி உறையுமிடம்
முன்னமணர் கல்பிணைத்து மூழ்த்தியபோ தப்பரரன்
பொன்னடியைப் போற்றியடை பாதிரிப் புலியூரே.
10)
கோதைத்தான் பெரிதுடையார் கூறுவன கேளாமே
போதத்தின் வடிவன்தாள் போற்றினருள் புரியரனூர்
ஓதத்துள் வீசியக்கால் நாவரசர் உமைகோனின்
பாதத்தைப் போற்றியடை பாதிரிப் புலியூரே.
11)
பண்ணிசைத்துத் தொழுமன்பர் பழவினைதீர்த் தருள்செய்யும்,
வெண்ணிலவும் விரைபுனலும் சடைவைத்த விமலனிடம்,
தண்ணலையுள் கல்பூட்டித் தள்ளியக்கால் நாவரசர்
புண்ணியன்பேர் போற்றியடை பாதிரிப் புலியூரே.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
இத்தலத்தைத் தரிசிப்பதன் முன்னரே மனத்தால் உன்னிப் பாடியது இப்பதிகம்.
madisūḍi tudipāḍi - padigam 1.74 - pādirippuliyūr - (tiruppādirippuliyūr)
---------------------------------
(nālaḍit taravu koccagak kalippā)
(sambandar tēvāram - 2.43.1 - 'kaḷḷārnda pūṅgoṇḍrai madamattam kadirmadiyam')
1)
varai iladōr vāri ena varu vinaiyāl varundāmē
karam koḍuttuk kākkiṇḍra kaṇṇudalān karudum iḍam,
tiraiyil eṟindālum aran tiruppeyarai nāvarasar
paravi uyndu karaiyēṟu pādirip puliyūrē.
Siva reaches out and saves His devotees from drowning in the endless ocean of karma / suffering. He dwells in tirup-pādirippuliyūr where tiru-nāvukkarasar came ashore singing Siva's name when he was saved by Siva (after tiru-nāvukkarasar was tied to a stone and thrown in the deep sea by the Jains).
2)
nāḍi varum vinaikkaḍaluḷ nām āḻāvaṇam kākkum,
ōḍivaru nadidannai oḷir-saḍaiyuḷ vaittavan ūr,
māḍu ivarum mādēvan nāmattai nāvarasar
pāḍi uyndu karaiyēṟu pādirip puliyūrē.
Siva saves us from drowning in the ocean of karma. He kept the Ganga river in His matted locks. Siva has a bull as His vehicle. He dwells in tirup-pādirippuliyūr where tiru-nāvukkarasar came ashore singing Siva's name when he was saved by Siva (after tiru-nāvukkarasar was tied to a stone and thrown in the deep sea by the Jains).
3)
mēnmaiyilā vinai aḍiyārmēl mēvāvaṇam kākkum,
pānmaiyinān; mān-viḻiyāḷ paṅgan-avan uṟaiyum iḍam,
vānmadi sūḍu aran aruḷāl mā kaḍalil kal nāvāy
pōl midandu appar aḍai pādirip puliyūrē.
Siva saves His devotees from being enveloped by karma. He has doe-eyed Uma as one half of His form. He wears the moon. He dwells in tirup-pādirippuliyūr where tiru-nāvukkarasar came ashore riding on the stone that floated like a raft in the sea due to Siva's grace.
4)
kaḍal pōla vinai varinum kaḻal pōṭrum aḍiyārgaṭku
iḍar illā nilai aḷikkum emberumān mēviya ūr,
aḍal-ēṭran tiruppeyar sol apparkkuk kallum oru
paḍagu āgi avar aḍainda pādirip puliyūrē.
Siva protects His devotees from the ocean of karma. He has a strong victorious bull as His vehicle. He dwells in tirup-pādirippuliyūr where tiru-nāvukkarasar came ashore riding on the stone that floated like a raft in the sea when tiru-nāvukkarasar chanted Siva's holy name.
5)
taṇiyāda vinaikkaḍaluḷ tavikkiṇḍra nilai tavirttup,
paṇi seyyum aḍiyārkkup parindaruḷum pasubadi ūr,
maṇigaṇḍan malaraḍiyai manattu irutti nāvarasar
paṇiyak, kal midandu aḍainda pādirip puliyūrē.
Siva saves His loving devotees from suffering in the endless ocean of karma. He is the Lord of all beings. He has a dark throat. He dwells in tirup-pādirippuliyūr where tiru-nāvukkarasar came ashore riding on the stone that floated like a raft in the sea when tiru-nāvukkarasar meditated on Siva's lotus Feet.
6)
tuṇaiyāga uḍan-niṇḍru toṇḍaraik kāttu aruḷgiṇḍra
iṇai illā aruḷāḷan, erudu ēṟum iṟaivan iḍam,
piṇai-kallum perumānin peyar paravum apparkkup
puṇai āgik karaisērkkum pādirip puliyūrē.
Siva has infinite Grace and he always protects His devotees and never leaves them. He is incomparable. He rides a bull. He dwells in tirup-pādirippuliyūr where tiru-nāvukkarasar came ashore riding on the stone (that had been tied to his body to drown him) that floated like a raft in the sea when tiru-nāvukkarasar chanted Siva's holy name.
7)
munivoḍu sēr munvinaiyuḷ mūḻgādavāṟu aḍiyārkku
inidu-aruḷum siva-perumān ēndiḻaiyōḍu uṟaiyum iḍam,
kanivu aṟiyāc camaṇ-mūḍar kaḍalil eṟindālum appar
punidan-aḍi pōṭri aḍai pādirip puliyūrē.
Siva protects His devotees from drowning in the ocean of past karma. He, along with Uma, dwells in tirup-pādirippuliyūr where tiru-nāvukkarasar came ashore safely by worshiping Siva's holy feet (after the cruel Jains threw him in the sea).
8)
agalāda vinaikkaṭṭai aṟuttu aḍiyārkku aruḷseyyum
bagavān, mun arakkanaiyum pāḍavaitta paraman iḍam,
igal-koṇḍōr kaḍalil eṟindālum appar eḻuttu-añjaip
pugal-koṇḍē karaiyēṟu pādirip puliyūrē.
Siva is the Lord. Siva cuts off the bondage of karma of devotees. He is the ultimate God. He crushed Ravana under Kailasa mountain and made him sing. Siva dwells in tirup-pādirippuliyūr where tiru-nāvukkarasar came ashore safely by chanting the Holy five letters 'namassivaya' (after the inimical Jains threw him in the sea).
9)
innal aḷi vinaikkaḍalil eyyāvāṟu aḍiyārgaṭku
innaruḷsey īsan, ellai ilāc cōdi uṟaiyum iḍam,
mun amaṇar kal piṇaittu mūḻttiyabōdu appar aran
ponnaḍiyaip pōṭri aḍai pādirip puliyūrē.
Siva protects devotees from suffering in the ocean of karma. He is the infinite flame. Siva dwells in tirup-pādirippuliyūr where tiru-nāvukkarasar came ashore safely by worshiping Siva's holy feet (after the Jains tied him to a stone and threw him in the sea).
10)
kōdaittān peridu uḍaiyār kūṟuvana kēḷāmē
bōdattin vaḍivan-tāḷ pōṭrin aruḷ-puri aran ūr,
ōdattuḷ vīsiyakkāl nāvarasar umai-kōnin
pādattaip pōṭri aḍai pādirip puliyūrē.
Siva (whose form is infinite knowledge) will bestow His grace on those devotees who disregard the nonsensical words of evil people and worship His holy feet. He is the consort of Uma. Siva dwells in tirup-pādirippuliyūr where tiru-nāvukkarasar came ashore safely by worshiping Siva's holy feet (after the Jains tied him to a stone and threw him in the sea).
11)
paṇ isaittut toḻum anbar paḻavinai tīrttaruḷ seyyum,
veṇṇilavum virai-punalum saḍai vaitta vimalan iḍam,
taṇ-alaiyuḷ kal pūṭṭit taḷḷiyakkāl nāvarasar
puṇṇiyan-pēr pōṭri aḍai pādirip puliyūrē.
Siva destroys the past karma of devotees who sing His praises. He wears the bright moon and fast-flowing Ganga river in His matted locks. He is Pure one. Siva dwells in tirup-pādirippuliyūr where tiru-nāvukkarasar came ashore safely by chanting Siva's holy name (after the Jains tied him to a stone and threw him in the cold sea).
V. Subramanian
====================
No comments:
Post a Comment