01.34 – பொது - (புஜங்கம்)
2008-08-04
பொது - புயங்கப் பெருமான் புஜங்கம் - 1
-------------------------------------------
(“தனானா தனானா தனானா தனானா” என்ற சந்தம்.
சமஸ்கிருதத்தில் உள்ள 'புஜங்கம்' என்ற பாடல் அமைப்பு).
புயங்கப் பெருமான் - பாம்பணிந்த பெருமான்; (புயங்கம் - புஜங்கம் - பாம்பு);
(8.45.1 - திருவாசகம் - யாத்திரைப்பத்து - “பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான்”)
1)
பொலாநோய்க டீர்க்கும் பெரும்பாவ மெல்லாம்
நிலாவாறு தீய்க்கும் பிறப்பின்றி ஆக்கும்
நிலாத்துண்டு சூடும் சிவன்பேரு ரைக்கும்
நலார்நாளு மின்பே அடைந்துய்ய லாமே.
(
"தனானா
தனானா தனானா தனானா"
என்ற
சந்தம் எளிதில் புலப்படப்
பாடலை இப்படி நோக்கலாம்:
பொலாநோய்
கடீர்க்கும் பெரும்பா வமெல்லாம்
நிலாவா
றுதீய்க்கும் பிறப்பின்
றிஆக்கும்
நிலாத்துண்
டுசூடும் சிவன்பே ருரைக்கும்
நலார்நா
ளுமின்பே அடைந்துய் யலாமே.)
பதம்
பிரித்து:
பொலா
நோய்கள் தீர்க்கும்,
பெரும்
பாவம் எல்லாம்
நிலாவாறு
தீய்க்கும்,
பிறப்(பு)
இன்றி
ஆக்கும்,
நிலாத்
துண்டு சூடும் சிவன் பேர்
உரைக்கும்
நலார்
நாளும் இன்பே அடைந்(து)
உய்யல்
ஆமே.
பொலா,
நிலாவாறு,
நலார்
-
பொல்லா,
நில்லாவாறு,
நல்லார்
-
இவை
இடைக்குறையாக வந்தன;
2)
ஒளிர்கின்ற திங்கள் ஒலிக்கின்ற கங்கை
தெளிக்கின்ற நீர்மா மலர்க்கொன்றை எல்லாம்
மிளிர்கின்ற சென்னிப் பரன்தன்னை வாழ்த்திக்
களிக்கின்ற அன்பர் கழல்பேணு நெஞ்சே.
பதம்
பிரித்து:
ஒளிர்கின்ற
திங்கள்,
ஒலிக்கின்ற
கங்கை
தெளிக்கின்ற
நீர்,
மா
மலர்க் கொன்றை,
எல்லாம்
மிளிர்கின்ற
சென்னிப் பரன்தன்னை வாழ்த்திக்
களிக்கின்ற
அன்பர் கழல் பேணு நெஞ்சே.
மா
மலர்க் கொன்றை -
அழகிய
கொன்றை மலர்;
சென்னி
-
தலை;
(திங்கள்
ஒலிக்கின்ற -
இதைச்
சந்தத்திற்காக "திங்கள்ளொலிக்கின்ற"
என்று
ஒற்று விரிந்ததாகக் கொள்ளலாம்)
3)
சுரும்பார் குழல்சேர் மடந்தைக் கிடத்தை
விரும்பிக் கொடுத்தான் திருக்கோ யிலிற்போய்
இருந்தும் கிடந்தும் வணங்கித் துதித்தால்
அருந்தேன் எனத்தான் இனிப்பான் நமக்கே.
பதம்
பிரித்து:
சுரும்(பு)
ஆர்
குழல் சேர் மடந்தைக்(கு)
இடத்தை
விரும்பிக்
கொடுத்தான் திருக்கோயிலில்
போய்,
இருந்தும்
கிடந்தும் வணங்கித் துதித்தால்
அரும்
தேன் எனத்தான் இனிப்பான்
நமக்கே.
சுரும்பு
ஆர் -
வண்டு
பொருந்திய;
(ஆர்தல்
-
பொருந்துதல்);
மடந்தை
-
பெண்;
பார்வதி;
இருந்தும்
கிடந்தும் -
அமர்ந்தும்
நிலத்தில் கிடந்தும்;
(சுந்தரர்
தேவாரம் -
7.95.10 "செருந்தி
....
இருந்தும்
நின்றும் கிடந்தும் உம்மை
இகழா தேத்துவோம் ...");
தான்
-
படர்க்கை
ஒருமைப்பெயர்.
(he, she or it); தேற்றச்சொல்
(a
word used as intensive);
எனத்தான்
-
என்றே
/
என்று
அவன்;
4) --- (2008-08-08 - ஆடிச் சுவாதி - சுந்தரர் குருபூஜை நாள் அன்று எழுதிய பாடல் இது) --
மணத்தைத் தடுத்தாய் மனத்தைக் கொடுத்தாய்
கணக்கில் தமிழ்ப்பாத் தரச்சுந் தரர்க்கு;
மணக்கின் றதேவா ரமோதிப் பணிந்தேன்
குணக்குன் றமேநின் திருத்தாள் புகழ்ந்தே.
பதம்
பிரித்து:
மணத்தைத்
தடுத்தாய்,
மனத்தைக்
கொடுத்தாய்
கணக்கில்
தமிழ்ப் பாத் தரச் சுந்தரர்க்கு;
மணக்கின்ற
தேவாரம் ஓதிப் பணிந்தேன்,
குணக்குன்றமே
நின் திருத்தாள் புகழ்ந்தே.
மணத்தைத்
தடுத்தாய் -
நம்பி
ஆரூரரின் திருமணத்தைத்
தடுத்தவனே;
கணக்கு
இல் -
அளவற்ற;
(சுந்தரர்
தேவாரம் -
7.70.6 - "குறைவிலா
நிறைவே குணக்குன்றே);
5)
பகைத்தார் புரங்கள் கனல்பற் றிவேவ
நகைத்தார்; நமன்மேல் சினங்கொண் டுதைத்தார்;
மிகத்தான் கொடுப்பார் வரம்தா மரைத்தாள்
அகத்தே இருத்தித் தினம்போற் றுவார்க்கே.
பதம்
பிரித்து:
பகைத்தார்
புரங்கள் கனல் பற்றி வேவ
நகைத்தார்;
நமன்மேல்
சினம் கொண்(டு)
உதைத்தார்;
மிகத்
தான் கொடுப்பார் வரம்,
தாமரைத்
தாள்
அகத்தே
இருத்தித் தினம் போற்றுவார்க்கே.
பகைத்தார்
புரங்கள் -
முப்புரங்கள்;
கனல்
பற்றி வேவ -
தீப்
பிடித்துச் சாம்பல் ஆக;
நமன்
-
எமன்;
அகத்தே
-
மனத்தில்;
6)
சலம்பூ இவற்றால் தனக்கொப் பிலாதான்
சிலம்பார் திருத்தா ளினைப்போற் றுவார்க்கு
நலங்கள் கொடுப்பான் நகர்மூன் றெரித்தான்,
விலங்காய் இருக்கும் வினைக்கட் டழித்தே.
பதம்
பிரித்து:
சலம்
பூ இவற்றால் தனக்(கு)
ஒப்(பு)
இலாதான்
சிலம்(பு)
ஆர்
திருத்தாளினைப் போற்றுவார்க்கு,
நலங்கள்
கொடுப்பான் நகர் மூன்(று)
எரித்தான்,
விலங்காய்
இருக்கும் வினைக்கட்(டு)
அழித்தே.
சலம்
-
ஜலம்
-
நீர்;
ஆர்தல்
-
அணிதல்;
ஆர்த்தல்
-
ஒலித்தல்;
சிலம்பு
ஆர் -
சிலம்பு
அணிந்த;
/ சிலம்பு
ஒலிக்கிற;
நகர்
மூன்று எரித்தான் -
முப்புரங்களை
எரித்த சிவன்;
விலங்கு
-
தளை
(shackles);
வினைக்கட்டு
-
கர்மபந்தம்;
(அப்பர்
தேவாரம் -
4.1.6 -
"சலம்பூவொடு
தூபம் மறந்தறியேன்
..
தமிழோடு
இசைபாடல் மறந்தறியேன்")
7)
நடிக்கின்ற நாதன் கடல்கக்கு நஞ்சைக்
குடிக்கின்ற கண்டன் கொடுங்கால னம்மைப்
பிடிக்கின்ற போதில் பெருங்காவ லாவான்
அடிக்கன்பு செய்தால் பவம்தீரு மன்றே.
பதம்
பிரித்து:
நடிக்கின்ற
நாதன்,
கடல்
கக்கு நஞ்சைக்
குடிக்கின்ற
கண்டன்,
கொடும்
காலன் நம்மைப்
பிடிக்கின்ற
போதில் பெரும் காவல் ஆவான்
அடிக்(கு)
அன்பு
செய்தால் பவம் தீரும் அன்றே.
நடித்தல்
-
கூத்தாடுதல்;
நாட்டியம்
ஆடுதல்;
கக்கு
நஞ்சு -
வினைத்தொகை
-
கக்கிய
விடம்;
பவம்
-
பிறவி;
8)
சினங்கொண் டுவெற்பைப் பெயர்க்கும் செருக்கன்
தனைத்தன் விரல்கொண் டடர்நீ லகண்டன்
தனக்கோர் நிகர்தான் இலன்தன் மலர்த்தாள்
நினைப்போர் மனத்தில் வசிப்பான் மகிழ்ந்தே.
பதம்
பிரித்து:
சினம்
கொண்டு வெற்பைப் பெயர்க்கும்
செருக்கன்தனைத்
தன்
விரல் கொண்(டு)
அடர்
நீலகண்டன்,
தனக்(கு)
ஓர்
நிகர்தான் இலன்,
தன்
மலர்த் தாள்
நினைப்போர்
மனத்தில் வசிப்பான் மகிழ்ந்தே.
வெற்பு
-
மலை
-
இங்கே,
கயிலை
மலை;
செருக்கன்
-
கர்வம்
உடையவன் -
இங்கே,
இராவணன்;
அடர்
நீலகண்டன் -
வினைத்தொகை
-
அடர்த்த
(நசுக்கிய)
நீலகண்டன்
;
நிகர்தான்
இலன் -
ஒப்பே
இல்லாதவன்;
9)
அரிக்கும் மலர்மேல் அயற்கும் வளர்தீ
உருக்கொண் டுயர்ந்தே நெருங்கற் கொணாத
ஒருத்தன், திருப்பேர் விருப்போ டுரைப்போர்
கருத்தில் மகிழ்வோ டிருக்கும் பிரானே.
பதம்
பிரித்து:
அரிக்கும்
மலர்மேல் அயற்கும்,
வளர்
தீ
உருக்
கொண்(டு)
உயர்ந்தே,
நெருங்கற்(கு)
ஒணாத
ஒருத்தன்,
திருப்பேர்
விருப்போ(டு)
உரைப்போர்
கருத்தில்
மகிழ்வோ(டு)
இருக்கும்
பிரானே.
அரிக்கும்
-
விஷ்ணுவிற்கும்;
அயற்கும்
-
அயனுக்கும்
-
பிரமனுக்கும்;
வளர்தல்
-
பெரிதாதல்;
நீளுதல்;
வளர்
தீ -
வினைத்தொகை
-
நீள்கிற
சோதி;
ஒணாத
-
ஒண்ணாத
– இயலாத;
ஒருத்தன்
-
ஒப்பில்லாதவன்;
கருத்து
-
மனம்;
எண்ணம்;
(அரிக்கும்மலர்மேல்
-
இங்கே
சந்தத்திற்காக "ம்"
ஒற்று
விரிந்ததாகக் கொள்ளலாம்)
10)
மருட்டிப் புறன்கள் புகல்வோர் மனத்தில்
இருட்டே நிறைந்தீ சனைத்தே றகில்லார்
உருக்கொண் டுமிங்கே விருப்போ டுபூசித்(து)
இருக்கின் றஅன்பர்க்(கு) அருள்வான் மிகுத்தே.
பதம்
பிரித்து:
மருட்டிப்
புறன்கள் புகல்வோர்,
மனத்தில்
இருட்டே
நிறைந்(து),
ஈசனைத்
தேற கில்லார்;
உருக்
கொண்டும்,
இங்கே
விருப்போடு பூசித்(து)
இருக்கின்ற
அன்பர்க்(கு)
அருள்வான்
மிகுத்தே.
மருட்டுதல்
-
ஏமாற்றுதல்
(to
cheat); மயக்குதல்
(to
entice); பயமுறுத்துதல்
(to
threaten, menace);
புறன்
-
பழிச்சொல்;
புறங்கூற்று
(maliciously
false statements; slander);
இருட்டு
-
இருள்;
அறியாமை;
தேற
கில்லார் -
தெளிய
மாட்டார்;
உணர
மாட்டார்;
உருக்கொள்ளுதல்
-
வடிவு
எடுத்தல்;
மிகுத்து
-
மிகவும்;
("உருக்கொண்டும்"
என்றதால்,
அருவ
நிலையும் சுட்டப்பெற்றது);
11)
விரைந்தோடு நீரும் சிரம்சேரு மங்கே
இரைந்தாடு பாம்பும் பிறையோடு காணும்
அரன்தாள் பணிந்தே மகிழ்கின் றபத்தர்
இரக்கும் வரம்தந் தருள்வான் உவந்தே.
பதம்
பிரித்து:
விரைந்(து)
ஓடு
நீரும் சிரம் சேரும் அங்கே
இரைந்(து)
ஆடு
பாம்பும் பிறையோடு காணும்
அரன்
தாள் பணிந்தே மகிழ்கின்ற
பத்தர்
இரக்கும்
வரம் தந்(து)
அருள்வான்
உவந்தே.
ஓடு
நீர்,
ஆடு
பாம்பு -
வினைத்தொகை;
இரைதல்
-
ஒலித்தல்;
சீறுதல்;
இரத்தல்
-
யாசித்தல்;
வேண்டுதல்;
உவத்தல்
-
மகிழ்தல்;
விரும்புதல்;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:
புஜங்கம் என்பது சமஸ்கிருத பாடல் அமைப்புகளுள் ஒன்று.
புஜங்க அமைப்பின் இலக்கணம்:
4 அடிகள்; ஓர் அடிக்கு 4 "தனானா" - அதாவது - "லகு-குரு-குரு" இருக்கும்.
லகு = குறில்.
குரு = நெடில்/நெடில்+ஒற்று/குறில்+ஒற்று. அடி ஈற்றுக் குறிலும் 'குரு' எனக் கருதப்படும்
ஆதி சங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம் - பலரும் அறிந்த ஒரு துதி. அதிலிருந்து ஒரு பாடல்:
मयूराधिरूढं
महावाक्यगूढं
मनोहारिदेहं
महच्चित्तगेहम् |
महीदेवदेवं
महावेदभावं
महादेवबालं
भजे लोकपालम् ||
3 ||
மயூராதி
ரூடம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரி
தேஹம் மஹத்சித்த கேஹம்
மஹீதேவ
தேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ
பாலம் பஜேலோக பாலம்.
(3).
இதைக் கீழ்க்கண்டவாறு சீர் பிரித்தால் "லகு-குரு-குரு" இலக்கண அமைப்புத் தெளிவாகும்:
மயூரா
திரூடம் மஹாவாக் யகூடம்
மனோஹா
ரிதேஹம் மஹத்சித் தகேஹம்
மஹீதே
வதேவம் மஹாவே தபாவம்
மஹாதே
வபாலம் பஜேலோ கபாலம்.).
No comments:
Post a Comment