01.43 – அண்ணாமலை - (திருவண்ணாமலை)
2008-12-08
திருவண்ணாமலை
"நெஞ்சே மறவாதே”
-------------------------------
(கலிவிருத்தம் - “விளம் மா விளம் மா" என்ற வாய்பாடு)
1)
மருள்மிக வாகி மாலயன் தேட
நெருப்பென நின்றான் நினைப்பவர்க் கெளிதில்
அருள்புரி அண்ணா மலையனை வாழ்த்த
இருள்கெடும் நெஞ்சே இறைமற வாதே.
மருள்
-
மயக்கம்
(bewilderment
of mind, confusion); delusion; வியப்பு
(wonder);
மால்
அயன் -
விஷ்ணுவும்
பிரமனும்;
இருள்
-
அஞ்ஞானம்;
மயக்கம்;
துன்பம்;
இறை
-
இறைவன்;
/ சிறிது;
- சிறிதும்;
(உம்மைத்தொகை);
இறை
மறவாதே -
இறைவனை
மறவாதே;
/ சிறிதும்
மறவாதே;
2)
கருமுகில் வண்ணன் கடிமலர் மேலான்
திருவடி யோடு திருமுடி தேடும்
அரும்சுடர் அண்ணா மலையனை வாழ்த்த
வரும்திரு நெஞ்சே இறைமற வாதே.
கருமுகில்
வண்ணன் -
மேகவர்ணன்
-
விஷ்ணு;
கடி
மலர் மேலான் -
வாச
மலரான தாமரை மேல்
இருக்கும் பிரமன்;
திரு
-
செல்வம்;
3)
பன்றியாய் அன்னப் பறவையாய்ச் சென்றும்
வென்றிகா ணாது வியர்த்தவர் வாட
அன்றுயர் அண்ணா மலையனை வாழ்த்த
நன்றுதான் என்றும் இறைமற வாதே.
வென்றி
-
வெற்றி;
வேர்த்தல்
-
அஞ்சுதல்
(to
be afraid);
வியர்த்து
அவர் வாட -
அஞ்சி
விஷ்ணுவும் பிரமனும் வாட;
வாடுதல்
-
பொலிவு
அழிதல்;
மனம்
அழிதல்;
மெலிதல்;
அலைக்கிடந் தோனும் அலர்மிசை யோனும்
அலைந்துதி ரிந்தும் அடிமுடி காணா
அலகிலா அண்ணா மலையனை வாழ்த்த
இலைதுயர் நெஞ்சே இறைமற வாதே.
அலைக் கிடந்தோன் -
கடலில்
துயிலும் திருமால்;
அலர்
மிசையோன் -
தாமரைப்
பூவின்மீது இருக்கும் பிரமன்;
அலகு
இலா -
அளவு
இல்லாத;
இலை
துயர் -
துயர்
இல்லை;
(அப்பர்
தேவாரம் -
5.95.11 - "செங்கணானும்
பிரமனும் தம்முளே எங்கும்
தேடித் திரிந்தவர் காண்கிலார்..")
5)
உலகுகள் தாண்டி உயர்கிற சோதி
நிலமகழ் மால்நான் முகன்இவர் நேடி
அலந்திடும் அண்ணா மலையனை வாழ்த்த
இலைஇடர் நெஞ்சே இறைமற வாதே.
நிலம்
அகழ் -
நிலத்தை
அகழ்ந்த;
நான்முகன்
-
பிரமன்;
நேடுதல்
-
தேடுதல்;
அலத்தல்
-
துன்பமுறுதல்;
6)
திருமகள் கேள்வன் திசைமுகன் தேடி
வருந்திடு மாறு வளர்எரி ஆன
அருமணி அண்ணா மலையனை வாழ்த்த
வரும்புகழ் நெஞ்சே இறைமற வாதே.
கேள்வன்
-
நாயகன்;
கணவன்;
திசைமுகன்
-
பிரமன்;
வளர்
எரி -
வளர்கிற
தீ;
(சம்பந்தர்
தேவாரம் -
3.75.9 - "நீலவரை
...
மாலுமல
ரானுமறி யாமைவளர் தீயுருவ
மானவரதன் ...");
அருமணி
-
அரிய
மணி போன்ற;
(சம்பந்தர்
தேவாரம் -
3.105.6 -
துறைவளர்
கேதகை மீதுவாசஞ் சூழ்வான்
மலிதென்றல்
கறைவள
ருங்கடல் ஓதமென்றுங் கலிக்குங்
கலிக்காமூர்
மறைவள
ரும்பொருள் ஆயினானை மனத்தால்
நினைந்தேத்த
நிறைவள
ரும்புகழ் எய்தும்வாதை நினையா
வினைபோமே
–-----
சிவபெருமானை
மனத்தால் நினைந்து போற்ற
எக்காலத்தும் அழியாத புகழ்
வந்து சேரும்.
துன்பம்
வந்து சேர நினையாது.
அத்துன்பத்திற்குக்
காரணமான வினைகளும் நீங்கும்.);
7)
அரவணை யானும் அலரவன் தானும்
அரண்டடி போற்ற அழலுரு ஆன
அரன்தனை அண்ணா மலையனை வாழ்த்த
வரம்மிக ஈவான் இறைமற வாதே.
அரவு
அணையான் -
பாம்புப்
படுக்கை மேல் பள்ளிகொள்ளும்
விஷ்ணு;
அலரவன்
-
தாமரை
மலர் மேல் இருக்கும் பிரமன்;
அரள்தல்
-
துணுக்குறுதல்
(to
be startled, struck with fear, shocked);
அழல்
உரு -
சோதி
வடிவம்;
(சம்பந்தர்
தேவாரம் -
1.47.9 -
"மாலினோடு
மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப்
பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
....");
8)
அரக்கனை அன்று நெரித்தருள் வோனைப்
பரமெவர் என்று முரணியோர் காணா
வரையிலா அண்ணா மலையனை வாழ்த்த
இரங்குவான் நெஞ்சே இறைமற வாதே.
அரக்கன்
-
இராவணன்;
முரணுதல்
-
மாறுபடுதல்
(to
be opposed; to disagree, differ; to be discordant; to be in
contrast);
பரம்
எவர் என்று முரணியோர் =
தங்கள்
இருவருள் எவர் பரம்பொருள்
என்று வாதிட்ட திருமால்,
பிரமன்;
வரை
இலா -
அளவு
இல்லாத;
எல்லை
அற்ற;
இரங்குதல்
-
கருணைசெய்தல்;
அருள்புரிதல்;
"அண்ணா
மலையனை வாழ்த்த இரங்குவான்"
- "அவன்
இரங்குவான்"
என்பதில்
"அவன்"
என்பது
தொக்கு
நிற்கிறது.
9)
மறையவ னோடு மணிவணன் தேடிப்
பறந்தகழ்ந் தோடிப் பணிசுட ரோனை
அறவனை அண்ணா மலையனை வாழ்த்தி
இறைஞ்சிடு நெஞ்சே இறைமற வாதே.
மறையவன்
-
பிரமன்;
மணிவணன்
-
மணிவண்ணன்
-
விஷ்ணு
(Vishnu,
as sapphire-colored);
பணி
சுடரோன் -
பணிந்த
சோதியை;
அறவன்
-
அற
வடிவினன்;
(தர்மரூபி);
வாழ்த்துதல்
-
துதித்தல்;
இறைஞ்சுதல்
-
வணங்குதல்;
10)
புறவழி யோர்சொல் புறனுரை எல்லாம்
அறவுரை அல்ல அரும்பெரும் சோதி
மறைமொழி அண்ணா மலையனை வாழ்த்தி
நிறைமகிழ் வெய்தி நிலைபெற லாமே.
புறனுரை
-
பழிச்சொல்
(slander);
வெற்றுரை
(meaningless
utterance);
அறவுரை
-
தருமோபதேசம்;
மறை
-
வேதம்;
நிறை
மகிழ்வு -
நிறைந்த
மகிழ்ச்சி;
நிலைபெறுதல்
-
துன்பமற்றநிலையை
அடைதல்;
(திருவாசகம்
-
திருவெம்பாவை
-
1 - "ஆதியும்
அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை")
11)
தருக்கிய மாலும் தாமரை யானும்
செருக்கறு மாறு செந்தழ லாய்நீள்
உருக்கொளும் அண்ணா மலையனை ஓதக்
கருக்கெடும் நெஞ்சே கணம்மற வாதே.
தருக்குதல்
-
அகங்காரம்
கொள்ளுதல்;
செருக்கு
-
ஆணவம்;
செந்தழல்
ஆய் நீள் உரு -
ஒளிப்பிழம்பு
ஆகி அளவின்றி நீண்ட
வடிவம்;;
உருக்கொள்ளுதல்
-
வடிவெடுத்தல்
(to
take shape);
ஓதுதல்
-
பாடுதல்;
கருக்
கெடும் -
பிறவித்தொடர்
அழியும்;
(கரு
-
பிறப்பு)
கணம்
-
கணமும்
-
உம்மைத்தொகை
-
நொடிப்பொழுதும்;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment