01.52 – பொது - (ஸ்ரக்விணீ )
2009-10-17
பொது
"தாள்தொழாய் நெஞ்சமே" - 2
-------------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - “தானனா தானனா தானனா தானனா" என்ற சந்தம்)
(சமஸ்கிருதத்தில் 'ஸ்ரக்விணீ ' - स्रग्विणी - என்னும் அமைப்பு - “அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்")
(சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்")
1)
நாளையென் றெண்ணியே நாளைநீ ஓட்டினாய்
தாளவொண் ணாத்துயர்ச் சாகரத் தாழ்கிறாய்
காளைமேற் செல்பவன் கண்ணுமோர் மூன்றினான்
காளகண் டன்கழல் கைதொழாய் நெஞ்சமே.
பதம்
பிரித்து:
நாளை
என்(று)
எண்ணியே
நாளை நீ ஓட்டினாய்;
தாள
ஒண்ணாத் துயர்ச் சாகரத்(து)
ஆழ்கிறாய்;
காளைமேல்
செல்பவன்,
கண்ணும்
ஓர் மூன்றினான்,
காளகண்டன்
கழல் கைதொழாய் நெஞ்சமே.
தாள
ஒண்ணாத் துயர்ச் சாகரத்து
ஆழ்கிறாய் -
தாங்க
முடியாத துன்பக் கடலில்
மூகுகின்றாய்;;
காளகண்டன்
-
நீலகண்டன்;
கழல்
-
கழல்
அணிந்த திருவடி;
கைதொழாய்
-
கையால்
தொழுவாயாக;
வணங்குவாயாக;
2)
நேற்றுமாய் இன்றுமாய் நாளையாய் நிற்பவன்
போற்றுமன் பர்க்கெனக் கூற்றுமாய் கொள்கையான்
நீற்றினைப் பூசுவான் நேரிலாச் சோதியான்
மாற்றிலாப் பொன்னவன் தாள்தொழாய் நெஞ்சமே.
நேற்றுமாய்
இன்றுமாய் நாளையாய் நிற்பவன்
-
காலத்தைக்
கடந்தவன்;
போற்றும்
அன்பர் -
வணங்குகின்ற
பக்தர் -
இங்கே
மார்க்கண்டேயர்;
கூற்று
மாய் கொள்கையான் -
காலனைக்
கொல்லும் தன்மை உடையவன்;
நேர்
இலாச் சோதி -
ஒப்பற்ற
ஒளி;
மாற்று
இலாப் பொன்
-
உரைத்து
மாற்றுக் காணுதற்கரிய,
மிக
உயர்ந்த பொன்;
(அப்பர்
தேவாரம் -
5.60.5 - "சாற்றிச்
சொல்லுவன் .....
மாற்றிலாச்
செம்பொன்
ஆவர் மாற்பேறரே");
3)
காய்நுதற் கண்ணினாற் காமனைச் சுட்டவர்;
மாய்நமன் மாளவோர் தாளினாற் செற்றவர்;
பாய்நதிச் சென்னிமேற் பாம்பையும் வைத்தவர்;
போய்நிதம் பொற்கழல் போற்றுவாய் நெஞ்சமே.
காய்
நுதற் கண்ணினால்
-
எரிக்கும்
நெற்றிக்கண்ணால்;
மாய்நமன்
-
வினைத்தொகை
-
கொல்லும்
நமன்;
பாய்நதிச்
சென்னி -
கங்கை
பாயும் திருமுடி;
பொற்கழல்
-
பொன்னடி;
4)
வம்பரோ டாடியிவ் வாழ்வினிற் கண்டதென்?
துன்பமே; நெஞ்சமே, "தூமதிக் கண்ணியா!
அம்புமால் ஆகமுன் மும்மதில் சுட்டவா!
என்பொனே!" என்றுநீ ஏத்தினால் இன்பமே.
பதம்
பிரித்து:
வம்பரோடு
ஆடி இவ்வாழ்வினில் கண்டது
என்?
துன்பமே;
நெஞ்சமே,
"தூமதிக்
கண்ணியா!
"அம்பு
மால் ஆக,
முன்
மும்மதில் சுட்டவா!
என்
பொனே!"
என்று
நீ ஏத்தினால் இன்பமே.
வம்பரோடு
ஆடுதல் -
வீணர்களோடு
கூடி உழலுதல்;
இவ்வாழ்வினில்
கண்டது என் -
இந்த
வாழ்க்கையில் அடைந்தது என்ன?
தூமதிக்
கண்ணியான் -
தூய
பிறைச்சந்திரனைத் தலைமாலையாக
அணிபவன்;
(கண்ணி
-
தலையில்
அணியும் மாலைவகை);
(அப்பர்
தேவாரம் -
4.3.6 - "தண்மதிக்
கண்ணியி னானை...");
பொனே
-
பொன்னே
என்பது இடைக்குறையாக வந்தது;
5)
நல்லறஞ் சொல்லுவார் நால்வருக் காலமர்
செல்வனார் சேவினிற் செல்லுவார் அன்பினாற்
கல்லையும் பூவெனக் கொள்ளுவார் தாள்தொழ
எல்லையில் வல்வினைக் கட்டொழிந் தின்பமே.
பதம்
பிரித்து:
நல்
அறம் சொல்லுவார் நால்வருக்(கு)
ஆல்
அமர்
செல்வனார்;
சேவினில்
செல்லுவார்;
அன்பினால்
கல்லையும்
பூ எனக் கொள்ளுவார் தாள் தொழ,
எல்லை
இல் வல்வினைக்கட்(டு)
ஒழிந்(து)
இன்பமே.
*
3-ம்
அடி சாக்கிய நாயனார் வரலாற்றைச்
சுட்டியது.
ஆல்
அமர் செல்வன் -
கல்லால
மரத்தின் கீழ் அமரும்
தட்சிணாமூர்த்தி;
சே
-
எருது;
எல்லை
இல் வல்வினைக்கட்டு -
அளவில்லாத
தீவினையின் கட்டு;
6)
ஆண்டவன் மாண்டவர் நீறணிந் தென்பையும்
பூண்டவன் பொற்பதம் போற்றிவா னோர்பலர்
வேண்டவன் னஞ்சுதான் உண்டவன் தில்லையில்
தாண்டவன் சங்கரன் தாள்தொழாய் நெஞ்சமே.
பதம்
பிரித்து:
ஆண்டவன்;
மாண்டவர்
நீறு அணிந்து என்பையும்
பூண்டவன்;
பொற்பதம்
போற்றி வானோர் பலர்
வேண்ட,
வன்
நஞ்சுதான் உண்டவன்;
தில்லையில்
தாண்டவன்;
சங்கரன்
தாள்தொழாய் நெஞ்சமே.
மாண்டவர்
-
இறந்தவர்;
(மாண்டவர்
நீறு அணிந்து -
சுடலைப்பொடி
பூசி);
என்பு
-
எலும்பு;
(சுந்தரர்
தேவாரம் -
7.46.1 - ".. செத்தார்தம்
எலும்பணிந்து சேவேறித்
திரிவீர்..");
வன்
நஞ்சு -
கொடிய
விஷம்;
தாண்டவன்
-
கூத்தன்;
7)
ஆசைகள் வந்துவந் தல்லலே செய்வதால்
பூசைகள் செய்துனைப் போற்றவல் லேனலேன்
நீசனேன் தன்னையும் வாசமார் செய்யதாள்
நேசனாச் செய்கவே நீலமார் கண்டனே.
போற்ற
வல்லேன் அலேன் -
நான்
போற்றவல்லவன் அல்லேன்;
நீசனேன்
-
இழிந்த
நான்;
(நீசனேன்
தன்னையும் -
இழிந்தவனான
என்னையும்);
வாசம்
ஆர் செய்ய தாள் -
மணம்
கமழும் சிவந்த திருவடி;
நேசனா
-
நேசனாக
– அன்பு உடையவனாக;
நீலம்
ஆர் கண்டன் -
நீலநிறம்
பொருந்திய கண்டத்தை உடையவன்;
இலக்கணக்
குறிப்பு:
'ஏன்'
- 1. First person singular
suffix (a) of a verb, as in வந்தேன்:
(b) of a noun, as in
அடியேன்;
தன்மை
ஒருமைப் பெயர்,
வினைகளில்
வரும் விகுதி.
8)
வேகமாய்ப் போயரன் வெற்பசைத் தோனுரம்
போகவோர் மெல்விரல் வைத்தவன் போற்றநாள்
ஏகமாய் ஈந்தவர் பாகமோர் மங்கையார்
நாகமார் கச்சினர் நம்மிடர் தீர்ப்பரே.
பதம்
பிரித்து:
வேகமாய்ப்
போய் அரன் வெற்(பு)
அசைத்தோன்
உரம்
போக
ஓர் மெல்விரல் வைத்து,
அவன்
போற்ற,
நாள்
ஏகமாய்
ஈந்தவர்;
பாகம்
ஓர் மங்கையார்;
நாகம்
ஆர் கச்சினர்;
நம்
இடர் தீர்ப்பரே.
வேகமாய்
-
கோபம்
உடையவன் ஆகி;
(வேகம்
-
கோபம்);
அரன்
வெற்பு -
சிவன்
உறையும் கயிலைமலை;
உரம்
-
வலிமை;
மெல்
விரல் -
மென்மையான
விரல்;
நாள்
-
வாழ்நாள்;
ஏகமாய்
-
மிகுதியாக;
பாகம்
ஓர் மங்கையார் -
பார்வதியை
ஒரு கூறாகக் கொண்டவர்;
நாகம்
ஆர் கச்சினர் -
பாம்பை
அரையில் கச்சாக அணிந்தவர்;
9)
பங்கயன் மாலிவர் காணொணாப் பண்பினீர்
செங்கயல் போல்விழிப் பெண்ணினர் சிந்தையால்
உங்கழல் வாழ்த்திடா ஊமையே னாயினேன்
இங்கழுந் தாதவா றின்னருள் செய்விரே.
பதம்
பிரித்து:
பங்கயன்
மால் இவர் காணொணாப் பண்பினீர்;
செங்கயல்போல்
விழிப் பெண்ணினர் சிந்தையால்,
உம்
கழல் வாழ்த்திடா ஊமையேன்
ஆயினேன்
இங்கு
அழுந்தாதவாறு இன்னருள்
செய்விரே.
காணொணா
-
காண்பதற்கு
ஒண்ணாத -
அறிய
இயலாத;
பண்பினீர்
-
பண்பு
உடையவரே;
பங்கயன்
-
பிரமன்;
செங்கயல்
-
செந்நிறக்
கயல் மீன்;
ஊமையே
னாயினேன் -
ஊமையேன்
ஆயினேன்;
("ஊமையேன்
நாயினேன்"
என்றும்
பிரிக்கலாம்);
ஊமையேன்
-
ஊமை
போன்ற நான்;
அழுந்துதல்
-
அமிழ்தல்;
(To sink, to be immersed, drowned);
செய்விர்
-
செய்வீர்;
இலக்கணக்
குறிப்புகள்:
1
- இர்,
ஈர்
--
இவை
முன்னிலைப் பன்மைக்குரிய
வினைமுற்று விகுதிகள்.
2
- ஈர்
--
அர்
/
ஆர்
என்று முடியும் பெயர்கள்
விளியில் ஈர் என்று ஆகும்.
(எ
-
டு.
பார்ப்பார்,
கூத்தர்,
உடையர்
என்பன பார்ப்பீர்,
கூத்தீர்,
உடையீர்
என வரும்).
10)
ஏசுவார் நேசமில் லாதநீ சர்சிலர்
மாசுசேர் நெஞ்சினார் வார்த்தைமெய் அல்லவே
பாசுரம் பாடியன் பாயரன் சீரையே
பேசுவார் இன்பமே பெற்றிருப் பார்களே.
பதம்
பிரித்து:
ஏசுவார்
நேசம் இல்லாத நீசர் சிலர்;
மாசு
சேர் நெஞ்சினார் வார்த்தை
மெய் அல்லவே;
பாசுரம்
பாடி அன்பாய் அரன் சீரையே
பேசுவார்
இன்பமே பெற்றிருப்பார்களே.
ஏசுவார்
-
இகழ்வார்;
நேசம்
-
அன்பு
(Love,
affection, piety);
நீசர்
-
கீழோர்;
அறிவிலார்;
பாசுரம்
-
திருப்பாடல்
(Sacred
poem);
அன்பாய்
-
காதலாகி
-
அன்பு
உடையவர் ஆகி;
சீர்
-
புகழ்;
பேசுவார்
-
பேசுபவர்கள்;
11)
பாலனாய்க் காளையாய்ப் பாவைமார் மேற்பெரும்
மாலனாய் ஐம்புலன் மாயையால் வாழ்வினில்
சாலநாள் போக்கிவிட் டேனையும் சங்கரா
காலனார் கொள்ளுமுன் காத்தருள் செய்கவே.
பாலன்
-
பாலகன்
-
சிறுவன்;
காளை
-
இளைஞன்;
பாவைமார்
-
பெண்கள்;
மால்
-
ஆசை;
மயக்கம்;
(மாலன்
-
மால்
உடையவன்)
மாயை
-
வஞ்சகம்
(Deception,
fraud, trick);
சால
நாள் -
பல
நாள்கள்;
பல
காலம்;
(அப்பர்
தேவாரம் -
4.67.9 - 'பாலனாய்க்
கழிந்த நாளும்.....");
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - “தானனா தானனா தானனா தானனா" என்ற சந்தம்.
சமஸ்கிருதத்தில் 'ஸ்ரக்விணீ ' - स्रग्विणी - என்னும் அமைப்பு.
அடிக்கு
4
முறை
'குரு-லகு-குரு'
அமைப்புப்
பெற்று வந்து,
4 அடிகளால்
ஆவது.
பலரும்
அறிந்த அச்சுதாஷ்டகம்
இவ்வமைப்பில் அமைந்த பாடல்.
அச்யுதம்
கேசவம் ராமநா ராயணம்
க்ருஷ்ணதா
மோதரம் வாசுதே வம்ஹரிம்
ஸ்ரீதரம்
மாதவம் கோபிகா வல்லபம்
ஜானகீ
நாயகம் ராமசந்த் ரம்பஜே)
சம்பந்தர் தேவாரம் - 3.35.7 -
கானலைக்
கும்மவன் கண்ணிடந் தப்பநீள்
வானலைக்
குந்தவத் தேவுவைத் தானிடம்
தானலைத்
தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக்
கும்வயல் தென்குடித் திட்டையே.
No comments:
Post a Comment