01.39 – பொது - (தோடகம்)
2008-10-01
பொது
"நாடகனுக்குத் தோடகம் - 2”
---------------------------------
(தோடகம் என்பது ஒரு சமஸ்கிருத பாடல் அமைப்பு.
"தனனா தனனா தனனா தனனா” என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - “சடையாய் எனுமால் சரணீ எனுமால்”);
(கந்தர் அனுபூதியில் பல பாடல்களும் இச்சந்தமே).
1)
பணமே பெரிதாய்ப் பலநாள் கருதிக்
குணமில் செயலால் குழியில் விழலேன்
மணமா மலரால் மதிசூ டிறைவன்
இணையார் அடிபோற் றிடுவாய் மனமே.
பதம்
பிரித்து:
பணமே
பெரிதாய்ப் பல நாள் கருதிக்,
குணம்
இல் செயலால் குழியில் விழல்
ஏன்?
மண
மா மலரால் மதி சூ(டு)
இறைவன்
இணை
ஆர் அடி போற்றிடுவாய் மனமே.
பணமே
பெரிது ஆய்ப் பல நாள்
கருதி -
பணமே
பிரதானம் ஆகி,
அவ்வாறே
நெடுங்காலம் எண்ணி;
குணம்
இல் செயல் -
குணமற்ற
செயல்கள்:
விழல்
-
விழுதல்;
மண
மா மலர் -
வாசம்
மிகுந்த சிறந்த பூக்கள்;
இணை
ஆர் அடி -
இரண்டாகிய
அரிய திருவடியை;
2)
அகலா வினையும் இகலைம் புலனும்
பகலோன் கதிரிற் பனியொத் தொழியும்
புகலாய் உளநம் புனிதன் கழலைப்
பகலோ டிரவாய்ப் பணியாய் மனமே.
பதம்
பிரித்து:
அகலா
வினையும் இகல் ஐம்புலனும்
பகலோன்
கதிரில் பனி ஒத்(து)
ஒழியும்;
புகலாய்
உள நம் புனிதன் கழலைப்
பகலோ(டு)
இரவாய்ப்
பணியாய் மனமே.
அகல்தல்
-
நீங்குதல்;
இகல்தல்
-
மாறுபடுதல்
(be
inimical);
ஐம்புலன்
-
புலனாசைகள்;
வினையும்மிகலைம்
-
'வினையும்
இகல் ஐம்'
என்பது
சந்தத்திற்காக மகர ஒற்று
விரித்தல் பெற்றுவந்தது.
பகலோன்
-
சூரியன்;
புகல்
-
சரண்
(refuge);
அடைக்கலம்;
3)
தணியா நசையாற் றகவில் செயலாற்
பிணிதீ வினையாற் பெறுதுன் பமற
அணிமா துமையாள் அகலாப் பெருமான்
மணிகண் டனைநீ மறவேல் மனமே.
பதம்
பிரித்து:
தணியா
நசையால் தகவு இல் செயலால்
பிணி
தீவினையால் பெறு துன்பம் அற,
அணி
மாது உமையாள் அகலாப் பெருமான்
மணிகண்டனை
நீ மறவேல் மனமே.
நசை
-
விருப்பம்;
தகவு
இல் -
தகாத;
பிணி
தீவினை -
பிணிக்கும்
தீயவினை;
அணி
-
அழகிய;
மணிகண்டன்
-
நீலகண்டன்;
மறவேல்
-
மறவாதே
(நினைவாய்);
4)
கனைவா ரிதிபோல் இனலைத் தருதீ
வினைகள் விடவே நினையாய் மனமே
சினமா விடையான் புனலார் சடையான்
கனலேந் துகரன் கழலைத் தினமே.
பதம்
பிரித்து:
கனை
வாரிதி போல் இனலைத் தரு தீ
வினைகள்
விடவே,
நினையாய்
மனமே,
சின
மா விடையான்,
புனல்
ஆர் சடையான்,
கனல்
ஏந்து கரன் கழலைத் தினமே.
கனை
வாரிதி -
ஒலிக்கும்
கடல்;
இனல்
-
இன்னல்
(இடைக்குறை
விகாரம்);
கனல்
ஏந்து கரன் -
தீயை
ஏந்தும் கரத்தை உடையவன்;
5)
நிலவைத் தலைமேல் அணிவான் நிமலன்
உலகிற் பலிகொண் டுழலும் பெருமான்
அலகில் புகழான் அடியைத் தொழுதால்
விலகாப் பழியும் விடுமே மனமே.
பதம்
பிரித்து:
நிலவைத்
தலைமேல் அணிவான்;
நிமலன்;
உலகில்
பலி கொண்(டு)
உழலும்
பெருமான்;
அல(கு)
இல்
புகழான்;
அடியைத்
தொழுதால்
விலகாப்
பழியும் விடுமே மனமே.
நிமலன்
-
மலமற்றவன்;
பலி
-
பிச்சை;
அலகு
இல் புகழான் -
அளவற்ற
புகழ் உடையவன்;
நதிசேர் சடையான் நடனம் புரிவான்
பதினா றுபசா ரமதால் பணியும்
மதியுள் ளவருள் மகிழும் சிவனைத்
துதியாய் மனமே துயரே தினியே.
பதம்
பிரித்து:
நதி
சேர் சடையான்;
நடனம்
புரிவான்;
பதினா(று)
உபசாரம்
அதால் பணியும்
மதி
உள்ளவர் உள் மகிழும் சிவனைத்
துதியாய்
மனமே,
துயர்
ஏ(து)
இனியே.
பதினா(று)
உபசாரம்
அதால் -
ஷோடசோபசாரங்களால்;
(“அதால்”
என்ற பிரயோக உதாரணம்:
- (சம்பந்தர்
தேவாரம் -
3.113.3 - “பாதம
தாற்கூற் றுதைத்தனனே”);
மதி
-
அறிவு;
உள்
-
மனது;
(ஆறுமுக
நாவலர் எழுதிய 'இந்துமத
இணைப்பு விளக்கம்'
என்ற
நூலிலிருந்து:
பதினாறு
உபசாரம் -
சோடசோபசாரங்கள்
-
1. ஆவாகனம்;
2. ஸ்தாபனம்;
3. சந்திதானம்;
4. சந்நிரோதனம்;
5. அவகுண்டம்;
6. அபிஷேகம்;
7. பாத்யம்;
8. ஆசமநீயம்;
9. அர்க்கியம்;
10. மாலை
சாத்தல்;
11. தூபம்;
12. தீபம்;
13. நைவேத்தியம்;
14. பாநீயம்;
15. ஜபசமர்ப்பணம்;
16. தீப
ஆராதனை.
தீப
ஆராதனை பதினாறு வகைப்படும்.
1. தூபம்;
2. புஷ்பதீபம்;
3. நாக்தீபம்;
4. விருஷதீபம்;
5. மேகதீபம்;
6. புருஷாமிருகதீபம்;
7. கும்பதீபம்;
8. ஆரத்திரிகம்;
9. நக்ஷத்திரதீபம்;
10. கற்பூரதீபம்;
11. பஸ்மோபசரம்;
12. கண்ணாடிகாட்டல்;
13. குடைபிடித்தல்;
14. கொடிகட்டுதல்;
15. சாமரம்
வீசுதல் 16.
விசிறிவீசுதல்.)
7)
அருளைப் பொழிவான் அடியைப் பணிவார்
இருளைக் களைவான் இடபக் கொடியான்
விருதா அலையா தொருவன் கழலைக்
கருதாய் மனமே வருமே சுகமே.
பதம்
பிரித்து:
அருளைப்
பொழிவான்;
அடியைப்
பணிவார்
இருளைக்
களைவான் இடபக் கொடியான்;
விருதா
அலையாது ஒருவன் கழலைக்
கருதாய்
மனமே;
வருமே
சுகமே.
இருள்
-
அறியாமை;
விருதா
-
வீணாய்;
பயனின்றி:
ஒருவன்
-
ஒப்பற்றவன்;
8)
அறிவற் றருமா மலையாட் டியவன்
வெறிகெட் டழவோர் விரலிட் டருளும்
மறிமான் உடையான் மதிசேர் சடையான்
வெறியார் கழலே விழைவாய் மனமே
பதம்
பிரித்து:
அறி(வு)
அற்(று)
அரு
மா மலை ஆட்டியவன்
வெறி
கெட்(டு)
அழ
ஓர் விரல் இட் (டு)
அருளும்,
மறி
மான் உடையான்,
மதி
சேர் சடையான்,
வெறி
ஆர் கழலே விழைவாய் மனமே.
அரு
மா மலை -
கயிலை
மலை;
வெறி
-
பேதைமை
(ignorance);
பைத்தியம்;
கோபம்;
வாசனை;
மறி
மான் -
மான்
கன்று;
வெறி
ஆர் கழல் -
வாசம்
மிக்க திருவடி;
9)
அலைமேல் திருமால் அலரோன் அறியார்
அலமந் தருளாய் எனவோர் அழலாய்
இலகும் பெருமான் எழிலார் கழலே
மலமா சகலத் துதியாய் மனமே.
பதம்
பிரித்து:
அலைமேல்
திருமால்,
அலரோன்
அறியார்;
அலமந்(து)
"அருளாய்"
என
ஓர் அழலாய்
இலகும்
பெருமான் எழில் ஆர் கழலே
மல
மா(சு)
அகலத்
துதியாய் மனமே.
அலரோன்
-
தாமரைப்பூவில்
உறையும் பிரமன்;
அலமருதல்
-
வருந்துதல்
(To
be vexed, distressed);
அழல்
-
தீ;
இலகுதல்
-
விளங்குதல்
(to
shine, glisten, glitter);
எழில்
ஆர் கழல் -
அழகு
வாய்ந்த திருவடி;
மல
மாசு -
மும்மலங்கள்;
10)
ஒருதத் துவமும் தெரியார் உளறும்
பொருளில் மொழிகள் மருளைத் தருமே
திருவைப் பெறநீ தினமும் துதிசெய்
கருணைக் கடலாம் உமைகோன் கழலே.
ஒரு
தத்துவமும் தெரியார் -
(சம்பந்தர்
தேவாரம் -
1.52.10 - "...தத்துவம்
ஒன்றறியார்…");
பொருள்
இல் மொழிகள் -
அர்த்தமற்ற
பேச்சு;
மருள்
-
மயக்கம்
(confusion;
delusion);
11)
முடியா முதலே முடிமேல் பிறையாய்
அடியார் மனமே குடியா உடையாய்
அடியேற் கருளாய் அரனே எனநம்
மிடிபோய் வருமே விலகாத் திருவே.
பதம்
பிரித்து:
"முடியா
முதலே;
முடிமேல்
பிறையாய்;
அடியார்
மனமே குடியா உடையாய்;
அடியேற்(கு)
அருளாய்;
அரனே"
என
நம்
மிடி
போய்,
வருமே
விலகாத் திருவே.
முடியா
முதல் -
அழிவில்லாத
முதல்வன்;
முடி
மேல் பிறையாய் -
திருமுடி
மீது பிறைச்சந்திரனை உடையவனே;
குடியா
-
குடியாக
-
உறைவிடமாக;
அடியேற்கு
-
அடியேனுக்கு;
மிடி
-
வறுமை;
துன்பம்;
விலகா
-
நீங்காத;
திரு
-
செல்வம்;
பாக்கியம்;
சிறப்பு;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:
தோடகம் என்பது சமஸ்கிருத பாடல் அமைப்புகளுள் ஒன்று.
தோடகத்தின் இலக்கணம்: Thotakam Meter
4 அடிகள். அடிக்கு 4 "தனனா" -- “லகு-லகு-குரு" இருக்கும்.
லகு = குறில்.
குரு = நெடில்/நெடில்+ஒற்று/குறில்+ஒற்று. அடி ஈற்றுக் குறிலும் 'குரு' எனக் கருதப்படும்).
(For more details on Sanskrit prosody: https://en.wikipedia.org/wiki/Sanskrit_prosody )
No comments:
Post a Comment