01.65 – சிராப்பள்ளி - (திருச்சிராப்பள்ளி)
2010-03-18
திருச்சிராப்பள்ளி
"சிராப்பள்ளி சேர்”
----------------------
(இன்னிசை வெண்பா)
1)
சுற்றும் வினைக்கட்டால் துன்புறல் ஏன்அதை
முற்றும் அறுக்கும் முறைகருதில் நெஞ்சமே
சுற்றும் புரமூன்றைச் சுட்டவனூர், பொன்னியலை
தெற்றும் சிராப்பள்ளி சேர்.
சுற்றும்
வினைக்கட்டால்
-
சூழ்ந்திருக்கும்
பழவினைகளால்;
துன்புறல்
ஏன் -
எதற்குத்
துன்பப்படவேண்டும்;
அதை
முற்றும் அறுக்கும் முறை
-
அப்பழவினைகளை
அடியோடு நீக்கும் உபாயம்;
கருதில்
-
கருதினால்
-
எண்ணினால்;
விரும்பினால்;
நெஞ்சமே
-
மனமே;
சுற்றும்
புரம் மூன்றைச்
சுட்டவன் ஊர் -
விண்ணில்
திரியும் முப்புரங்களை
எரித்த சிவபெருமான் உறையும்
ஊரான;
பொன்னி
அலை தெற்றும் -
காவிரியின்
அலை மோதுகிற;
சிராப்பள்ளி
சேர் -
திருச்சிராப்பள்ளி
சென்று அடைவாயாக;
2)
தருவார் அவரென்று தாரார்பால் சென்று
பெருவாதை கொள்வதேன் பேதை மனமே
தருவாகித் தாயின் உருவாய் வருவான்
திருவார் சிராப்பள்ளி சேர்.
*
தாயுமானவன்
-
திருச்சிராப்பள்ளியில்
சிவன் திருநாமம்;
தருவார்
அவரென்று தாரார்பால் சென்று
-
அவர்
தருவார் இவர் தருவார் என்று
கொடாதவர்களிடம் போய்;
பெருவாதை
கொள்வது ஏன்
-
ஏன்
பெரும் துன்பம்;
அடைவது;
தரு
ஆகி -
கற்பகமரம்
ஆகி;
தாயின்
உருவாய் வருவான்
-
தாயின்
உருவும் ஆகி வரும் சிவபெருமான்
உறையும்;;
திருவார்
-
திரு
ஆர் -
நன்மை
பொருந்திய;
3)
வல்வினை தீர்ந்து வளங்கள் வருகிற
நல்வழி தன்னை நயப்பாயேல் நன்னெஞ்சே
மெல்லிடை மாதொடு வெல்விடை மேல்வரும்
செல்வன் சிராப்பள்ளி சேர்.
நயப்பாயேல்
-
நீ
விரும்பினால்;
மெல்லிடை
மாதொடு -
சிற்றிடை
உடைய உமையோடு;
வெல்விடைமேல்
வரும் செல்வன் -
வெற்றியுடைய
இடபத்தின்மேல் வரும் செல்வனான
சிவபெருமான்;
4)
எவரே புரப்பார் எனநீ மயங்கேல்
கவலா திருக்கக் கருதில் மனமே
அவம்தீர் வழியாய் அடியார்க் கருளும்
சிவனார் சிராப்பள்ளி சேர்.
எவரே
புரப்பார் என நீ மயங்கேல்
-
யார்
நம்மைக் காப்பார் என்று நீ
மயங்காதே;
(மயங்குதல்
-
கலக்கமுறுதல்;
மருளுதல்);
கவலாது
இருக்கக்
கருதில் மனமே -
கவலைப்படாமல்
இருக்க விரும்பினால்,
மனமே;
அவம்
தீர் வழியாய் -
கேட்டைப்
போக்கும் நெறி ஆகி;
/ கேட்டைப்
போக்கும் நெறியை ஆயும்;
அடியார்க்கு
அருளும் சிவனார் சிராப்பள்ளி
சேர் -
பக்தர்களுக்கு
அருள்புரியும் சிவபெருமானார்
உறையும் திர்ச்சிராப்பள்ளி
சென்று அடைவாயாக;
5)
தீவல் வினையெல்லாம் தீர்ந்து சிறப்புற
ஆவல் உனக்குள தாயின் மடநெஞ்சே,
காவலன், கண்ணுதலான், கண்டத்தில் நஞ்சொளித்த
தேவன் சிராப்பள்ளி சேர்.
தீ
வல் வினை -
வலிய
தீய வினைகள்;
ஆவல்
-
ஆசை;
உளது
ஆயின் -
இருந்தால்;
காவலன்
-
காப்பவன்;
கண்ணுதலான்
-
நெற்றிக்கண்ணன்;
6)
விலகா வினைகள் விடுமென்றும் இன்ப
நிலையே பெறலாம் நினைநீ மனமே
அலைமூ வெயில்கள் அழித்த பொருப்புச்
சிலையான் சிராப்பள்ளி சேர்.
விலகா
வினைகள் விடும்;
என்றும்
இன்ப நிலையே பெறலாம் -
நீங்காத
வல்வினைகள் நீங்கி,
அழியாத
இன்பம் அடையலாம்;
நினை
நீ மனமே -
மனமே,
நீ
எண்ணுவாயாக;
அலை
மூ எயில்கள் அழித்த
-
திரியும்
முப்புரங்களை எரித்த;
பொருப்புச்
சிலையான் -
மலையை
வில்லாக ஏந்தியவன்;
7)
புலம்பும் நிலைதரும் பொல்லா வினைபோய்
நலம்பெற எண்ணுதியேல் நன்னெஞ்சே இன்றே
அலம்பும் புனற்சடை அப்பன் கயிலைச்
சிலம்பன் சிராப்பள்ளி சேர்.
எண்ணுதியேல்
-
நீ
எண்ணினால்;
அலம்பும்
புனற்சடை
அப்பன் -
ஒலிக்கிற
கங்கையைச் சடையில்
உடைய தந்தை;;
கயிலைச்
சிலம்பன் -
கயிலைமலையான்
-
சிவன்;
(சிலம்பு
-
மலை);
8)
சேர்த்தவினை தீரநெஞ்சே தேர்செல்ல வெற்பினைப்
பேர்த்தெறிவேன் என்று பெருங்குரலோ டோடிமுயல்
தூர்த்தனின் நாலைந்து தோள்வலியை ஓர்விரலால்
தீர்த்தான் சிராப்பள்ளி சேர்.
பதம்
பிரித்து:
சேர்த்த
வினை தீர நெஞ்சே,
'தேர்
செல்ல வெற்பினைப்
பேர்த்(து)
எறிவேன்'
என்று
பெருங்குரலோ(டு)
ஓடி
முயல்
தூர்த்தனின்
நாலைந்து தோள் வலியை ஓர்
விரலால்
தீர்த்தான்
சிராப்பள்ளி சேர்.
வெற்பு
-
மலை;
பேர்த்தல்
-
பிடுங்குதல்;
தூர்த்தன்
-
கொடியவன்;
நாலைந்து
தோள் -
இருபது
புஜங்கள்;
தீர்த்தான்
-
அழித்தவன்;
வலி
-
வலிமை;
பலம்;
9)
இகழும் நிலைநீங்கி இவ்வுல கெல்லாம்
புகழும் நிலையும் பொருளுமுற நெஞ்சே
அகழ்மால் அயனார்க் கரிய நெருப்பாய்த்
திகழ்ந்தான் சிராப்பள்ளி சேர்.
உறுதல்
-
அடைதல்;
அகழ்
மால் அயனார்க்கு அரிய நெருப்பாய்த்
திகழ்ந்தான் -
நிலத்தை
அகழ்ந்து தேடிய திருமாலுக்கும்
பிரமனுக்கும் அடைய இயலாத
சோதியாக விளங்கிய சிவபெருமான்;
10)
திட்டித் திரியும் சிறுநெறியார், தீப்புகும்
விட்டில் அனையவர்; வீடுபெற வேண்டினெஞ்சே,
நட்டன், நதிச்சடையன், நால்வர்க் கறம்சொல்லும்
சிட்டன் சிராப்பள்ளி சேர்.
தீப்புகும்
விட்டில் அனையவர் -
தீயில்
விழும் விட்டில் பூச்சியைப்
போல்பவர்கள்;
வீடுபெற
வேண்டினெஞ்சே -
வீடு
பெற வேண்டில் நெஞ்சே -
உய்தி
பெற விரும்பினால் மனமே;
நட்டன்
-
நடம்
செய்பவன்;
கூத்தன்;
நதிச்சடையன்
-
கங்கையைச்
சடையில் அடைத்தவன்;
சிட்டன்
-
சிரேஷ்டன்
-
உயர்ந்தவன்;
மேலானவன்;
நால்வர்க்கு
அறம் சொல்லும் சிட்டன் -
தட்சிணாமூர்த்தி;
11)
தீரா வினையெல்லாம் தீர்ந்தினி ஓர்பிறவி
வாரா வழியைக் கருதில் மனமேநீ
காரார் மிடற்றண்ணல் காரிகையோர் பங்கனூர்
சீரார் சிராப்பள்ளி சேர்.
தீரா
வினை எல்லாம்
தீர்ந்து
-
தீராத
வினைகள் எல்லாம் நீங்கி;
இனி
ஓர் பிறவி வாரா வழியைக் கருதில்
மனமே நீ -
மறுபிறப்பு
இல்லாமற் செய்யும் நெறியை
விரும்பினால்,
மனமே,
நீ;
கார்
ஆர் மிடற்று அண்ணல் -
கருமை
பொருந்திய கழுத்தை உடைய கடவுள்
-
நீலகண்டன்;
காரிகை
ஓர் பங்கன் ஊர் -
பார்வதியை
ஒரு பங்காக உடைய சிவபெருமானின்
ஊரான;
சீர்
ஆர் சிராப்பள்ளி சேர்
-
நன்மை
பொருந்திய திருச்சிராப்பள்ளி
சென்று அடைவாயாக;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment