Thursday, April 21, 2022

M.053 - சிலையுடை - பேரானை - மடக்கு

2010-04-17

M.053 - சிலையுடை - பேரானை - மடக்கு

--------------

சிலையுடை என்பவர் தேறார் கயிலைச்

சிலையுடை ஈசனுக்கு வெற்பே - சிலையுடை

பேரானை ஈருரியே உய்திபெற ஆயிரத்தெண்

பேரானை நாவேநீ பேசு.


பதம் பிரித்து:

"சிலை உடை" என்பவர் தேறார்; கயிலைச்

சிலையுடை ஈசனுக்கு வெற்பே - சிலை; உடை

பேர் ஆனை ஈருரியே; உய்தி பெற, ஆயிரத்து எண்

பேரானை நாவே நீ பேசு.


சிலை - 1. விக்கிரகம்; 2. மலை; 3. வில்;

உடை - 1. உடைத்தல்; தகர்த்தல்; 2. உடைமை (The state of possessing, having, owning); 3. ஆடை;

தேறார் - அறியாதார் (Ignorant persons);

பேரானை - 1. பேர்ஆனை - பெரிய யானை; 2. பெயர்கள் உள்ளவனை;

ஈருரி - ஈர்உரி - உரித்த ஈரத்தோல்; (ஈர் - ஈரம்); (ஈர்த்தல் - உரித்தல்); (உரி - தோல்);

பேசு - துதித்தல்;


"விக்கிரகங்களை உடை" என்பவர்கள் அறிவிலார்; கயிலைமலையில் இருக்கும் சிவபெருமானுக்கு (முப்புரம் எரித்தபொழுது) மேருமலையே வில்; பெரிய யானையின் உரித்த ஈரத்தோலே மார்பைச் சூழும் போர்வை; என் நாவே, நீ உய்வு பெறுவதற்கு, 1008 திருநாமங்கள் உடைய ஈசனைத் துதி.


வி. சுப்பிரமணியன்

------------- -------------

No comments:

Post a Comment