2013-03-15
M.059 - கையானை - ஊரான் - மடக்கு
-------------
கையானை ஈருரிபோர் மெய்யானை மான்மறிக்
கையானை அன்பர்க்கெக் காலத்தும் - கையானை
ஊரான் மகிழ்ந்தானை ஒப்பிலியைப் பூந்துருத்தி
ஊரான் தனைநெஞ்சே உன்னு.
பதம் பிரித்து:
கை-யானை ஈருரி போர்-மெய்யானை, மான்மறிக்
கையானை, அன்பர்க்கு எக்காலத்தும் கையானை,
ஊர்-ஆன் மகிழ்ந்தானை, ஒப்பிலியைப், பூந்துருத்தி
ஊரான்-தனை, நெஞ்சே உன்னு.
சொற்பொருள்:
கையானை - 1. துதிக்கையை உடைய ஆனை; 2. கையை உடையவனை; 3. கசத்தல் இல்லாதவனை; (கைத்தல் - கசத்தல்);
ஊரான் - 1. ஊர் ஆன் - இடபவாகனம்; (ஊர்தல் - ஏறுதல்); (ஆன் - இடபம்); 2. ஊரில் உறைபவன்;
ஈர்-உரி - உரித்த தோல்; (ஈர்த்தல் - உரித்தல்); (உரி - தோல்);
உன்னுதல் - நினைதல்;
துதிக்கை உடைய ஆனையின் உரித்த தோலைப் போர்த்த திருமேனியனை, மான்கன்றைக் கையில் ஏந்தியவனைப், பக்தர்களுக்கு எக்காலத்திலும் கசத்தல் இல்லாதவனை ( = என்றும் இனிப்பவனை), இடபவாகனத்தை விரும்பியவனை, ஒப்பு இல்லாதவனைத், திருப்பூந்துருத்தி என்ற ஊரில் உறைபவனை, நெஞ்சே நீ நினை.
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment