Wednesday, July 6, 2022

T.137 - புகலி (காழி) - ஐம்புலனின் நசையேவ

2011-02-12

T.137 - புகலி (காழி) - ஐம்புலனின் நசையேவ

-----------------

(வண்ணவிருத்தம்;

தந்ததன தனதான தந்ததன தனதான

தந்ததன தனதான .. தனதான)

(அண்டர்பதி குடியேற - திருப்புகழ் - சிறுவை)


ஐம்புலனின் நசையேவ நெஞ்சிலுனை நினையாமல்

.. .. அம்புடைய மதனேவு .. குறியாகி

.. அந்தகனும் வரவாவி சென்றுவிட எரிகானில்

.. .. அங்கிசுடு பொடியாகி .. அழியாமுன்

வெம்பவமும் அறுமாறு செந்தமிழின் மணமாலை

.. .. மென்கழலில் இடுநேயம் .. அருளாயே

.. வெண்கடலில் எழுதீய நஞ்சமது சுடவோடி

.. .. விண்பணிய மணிபோல .. அணிவோனே

நம்பிமறை மொழியோடு கந்த(ம்)மலி புகையோடு

.. .. நைந்துதொழும் ஒருமாணி .. உயிர்வாழ

.. நந்திநமன் அவன்வீழ அன்றவனை உதைபாத

.. .. நங்கையுமை பிரியாத மணவாளா

வம்புலவு குரவோடு கங்கைதிகழ் சடையீச

.. .. வன்புலியின் அதளாடை .. உடையானே

.. வண்டுமது மலர்நாடி வந்தறையும் அணிசோலை

.. .. வண்புகலி நகர்மேவு .. பெருமானே.


பதம் பிரித்து:

ஐம்புலனின் நசை ஏவ, நெஞ்சில் உனை நினையாமல்,

.. .. அம்பு உடைய மதன் ஏவு குறி ஆகி,

.. அந்தகனும் வர, ஆவி சென்றுவிட, எரிகானில்

.. .. அங்கி சுடு பொடி ஆகி அழியாமுன்,

வெம்பவமும் அறுமாறு செந்தமிழின் மணமாலை

.. .. மென்கழலில் இடு நேயம் அருளாயே;

.. வெண்-கடலில் எழு தீய நஞ்சம்-அது சுட, ஓடி

.. .. விண் பணிய, மணி போல அணிவோனே;

நம்பி மறைமொழியோடு கந்த(ம்)மலி புகையோடு

.. .. நைந்து தொழும் ஒரு மாணி உயிர் வாழ,

.. நந்தி நமன் அவன் வீழ அன்று அவனை உதை பாத;

.. .. நங்கை-உமை பிரியாத மணவாளா;

வம்பு உலவு குரவோடு கங்கை திகழ் சடை ஈச;

.. .. வன்-புலியின் அதள்-ஆடை உடையானே;

.. வண்டு மது-மலர் நாடி வந்து அறையும் அணி சோலை

.. .. வண்-புகலி நகர் மேவு பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

ஐம்புலனின் நசை, நெஞ்சில் உனை நினையாமல், அம்புடைய மதன் ஏவு குறிகி - ஐம்புலன்களின் ஆசைகள் என்னை உந்த, மனத்தில் உன்னை எண்ணாமல், அம்புகளை உடைய மன்மதன் அவ்வம்புகளைச் செலுத்தும் இலக்கு ஆகி; (நசை - ஆசை; விருப்பம்); (மதன் - மன்மதன்; காமன்); (குறி - இலக்கு);

அந்தகனும் வர, வி சென்றுவிட, எரிகானில் அங்கி சுடு பொடிகி அழியாமுன் - காலனின் வரவால் உயிர் சென்றுவிட, சுடுகாட்டில் தீச் சுட்ட சாம்பல் ஆகி அழிவதன்முன்னமே; (எரிகான் - சுடுகாடு); (அங்கி - நெருப்பு); (பொடி - சாம்பல்); (சம்பந்தர் தேவாரம் - 3.76.1 "கற்பொலிசு ரத்தினெரி கானினிடை மாநடமதாடி");

வெம்பவமும் அறுமாறு செந்தமிழின் மணமாலை மென்கழலில் இடு நேயம் அருளாயே - (இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பமும்) கொடிய பிறவிப்பிணியும் தீரும்படி செந்தமிழ்ப் பாமாலைகளை உன் மென்மையான திருவடியில் இடுகின்ற அன்பை எனக்கு அருள்வாயாக;

வெண்கடலில் எழு தீய நஞ்சம்-து சுட, டி விண் பணிய, மணி போல அணிவோனே - வெண்மையான பாற்கடலில் எழுந்த கொடிய விஷம் சுட்டெரிக்க, அஞ்சி ஓடிய தேவர்கள் உன்னை வணங்க, அவர்களுக்கு இரங்கி அந்த விஷத்தை உண்டு மணி போலக் கண்டத்தில் அணிந்தவனே;

நம்பி மறைமொழியோடு கந்த(ம்)மலி புகையோடு நைந்து தொழும் ஒரு மாணி உயிர் வாழ - விரும்பி, மனமுருகி, வேதமந்திரங்கள், நறும்புகை இவற்றால் உன்னைத் தொழுத ஒப்பற்ற மார்க்கண்டேயர் உயிரோடு வாழும்படி; (நம்புதல் - விரும்புதல்); (கந்தம் - வாசனை); (1.20.7 - "நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை யொளிமுதல் மலரவை கொடுவழி படுதிறன் மறையவன்");

நந்தி நமன் அவன் வீழ அன்று அவனை உதை பாத - கூற்றுவன் இறந்து விழ அன்று அவனை உதைத்த பாதனே; (நந்துதல் - சாதல்);

நங்கை-மை பிரியாத மணவாளா - உமைநங்கையை ஒரு பாகமாக மகிழும் மணவாளனே;

வம்புலவு குரவோடு கங்கை திகழ் சடை ஈச - வாசனை கமழும் குராமலரும் கங்கையும் திகழும் சடையை உடைய ஈசனே; (வம்பு - வாசனை);

வன்-புலியின் அதள்-ஆடை உடையானே - வலிய புலியின் தோலை ஆடையாக உடையவனே; (அதள் - தோல்); (பெரியபுராணம் - திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் - 12.19.92 - "வன்புலியி னுரியாடைத் திருவேகம்பர்");

வண்டு மது-மலர் நாடி வந்து அறையும் அணி சோலை - வண்டுகள் தேன்மலர்களை நாடி வந்து ஒலிக்கின்ற அழகிய சோலை சூழ்ந்த; (அறைதல் - ஒலித்தல்);

வண்-புகலி நகர் மேவு பெருமானே - வளம் மிக்க புகலியில் (சீகாழியில்) விரும்பி உறைகின்ற பெருமானே; (புகலி - சீகாழியின் 12 பெயர்களில் ஒன்று);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

Tuesday, July 5, 2022

T.136 - புகலி (காழி) - என்றனகம் மடமாதர்

2011-02-12

T.136 - புகலி (காழி) - என்றனகம் மடமாதர்

-----------------

(வண்ணவிருத்தம்;

தந்ததன தனதான தந்ததன தனதான

தந்ததன தனதான .. தனதான)

(அண்டர்பதி குடியேற - திருப்புகழ் - சிறுவை)


என்றனக(ம்) மடமாதர் என்றுபல விதவாசை

.. .. என்றுமெழு மனமாகி .. மிகுகாசை

.. இம்பர்மிசை அலையோடு வங்க(ம்)மலி கடலோடி

.. .. எண்டிசையு(ம்) மிகநேடு .. மயலாலே

உன்றனடி பரவாமல் இங்குழலு(ம்) நிலைமாற

.. .. உன்பெயரை உரைநாவை .. அருளாயே

.. ஒண்கடலில் எழுமாலம் உம்பருய அமுதாக

.. .. உண்டுகரு மணியாரு(ம்) .. மிடறானே

அன்றுமலர் அடிதேடு சங்குதரி அரிவாட

.. .. அங்கியதன் உருவாகி .. உயர்வோனே

.. அங்கையினில் மழுவாள கொன்றையணி திருமார்ப

.. .. அம்புதொடு மதவேளை .. முனிவோனே

தென்றலினில் மணம்வீசு தண்பொழிலில் அறுகால்கள்

.. .. தெந்தனென இசைபாட .. அடியார்கள்

.. செந்தமிழ்கள் அவையோதி வந்துதொழு பதியான

.. .. தென்புகலி தனில்மேவு .. பெருமானே.


பதம் பிரித்து:

என்றன் அக(ம்) மடமாதர் என்று பலவித ஆசை

.. .. என்றும் எழு மனம் ஆகி, மிகு காசை

.. இம்பர்மிசை அலையோடு வங்க(ம்)மலி கடல் ஓடி

.. .. எண்-திசையு(ம்) மிக நேடு மயலாலே

உன்றன் அடி பரவாமல் இங்கு உழலு(ம்) நிலை மாற,

.. .. உன் பெயரை உரை நாவை அருளாயே;

.. ஒண்-கடலில் எழும் ஆலம் உம்பர் உய அமுதாக

.. .. உண்டு கரு மணி ஆரு(ம்) மிடறானே;

அன்று மலர்அடி தேடு சங்கு தரி அரி வாட

.. .. அங்கி-அதன் உரு-ஆகி உயர்வோனே;

.. அங்கையினில் மழுவாள; கொன்றை அணி திருமார்ப;

.. .. அம்பு தொடு மதவேளை முனிவோனே;

தென்றலினில் மணம் வீசு தண்பொழிலில் அறுகால்கள்

.. .. தெந்தனென இசை பாட, அடியார்கள்

.. செந்தமிழ்கள் அவை ஓதி வந்து தொழு பதியான

.. .. தென்-புகலிதனில் மேவு .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

என்றன் அ(ம்) மடமாதர் என்று பலவிதசை என்றும் எழு மனம் ஆகி - என் வீடு, மனைவி, என்று பலவகை ஆசைகள் எப்பொழுதும் எழுகின்ற மனத்தை உடையேன் ஆகி; (அகம் - வீடு);

மிகு காசை இம்பர்மிசை அலையோடு வங்க(ம்)மலி கடல் ஓடி எண்-திசையு(ம்) மிக நேடு மயலாலே - மிகுந்த பொருளை இவ்வுலகில் அலைகளும் கப்பல்களும் நிறைந்த கடல் கடந்து சென்று எட்டுத்-திக்குகளிலும் மிகவும் தேடும் மயக்கத்தினால்; (இம்பர் - இவ்வுலகம்); (வங்கம் - படகு); (ஓடுதல் - செல்லுதல்); (நேடுதல் - தேடுதல்); (மயல் - மயக்கம்); (கொன்றைவேந்தன் - "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு");

உன்றன் அடி பரவாமல் இங்குழலு(ம்) நிலை மாற - உன் திருவடியைப் போற்றாமல் இங்கு வருந்தும் நிலை மாறும்படி; (பரவுதல் - துதித்தல்);

ன் பெயரை உரை நாவை அருளாயே - உன் திருநாமத்தைச் சொல்லும் நாக்கை எனக்கு அருள்வாயாக;

ஒண்-கடலில் எழும் ஆலம் உம்பர் உய அமுதாக உண்டு கருமணிரு(ம்) மிடறானே - ஒளியுடைய பாற்கடலில் எழுந்த விஷத்தைத், தேவர்கள் உய்யும்பொருட்டு, அமுதம்போல் உண்டு கரிய மணி பொருந்தும் கண்டத்தை உடையவனே; (ஆலம் - விஷம்); (உம்பர் - தேவர்);

அன்று மலடி தேடு சங்கு தரி அரி வாட அங்கி-தன் உரு-கி உயர்வோனே - முன்பு மலரடியைத் தேடியவனான சங்கை ஏந்தும் திருமால் வாடுமாறு ஜோதி உருக்கொண்டு ஓங்கியவனே; (அங்கி - நெருப்பு);

அங்கையினில் மழுவாள - கையில் மழுவாள் ஏந்தியவனே;

கொன்றைணி திருமார்ப - திருமார்பில் கொன்றைமாலை அணிந்தவனே;

அம்பு தொடு மதவேளை முனிவோனே - கணை ஏவிய மன்மதனைச் சினந்து எரித்தவனே; (மதவேள் - காமன்); (முனிதல் - கோபித்தல்);

தென்றலினில் மணம் வீசு தண்-பொழிலில் அறுகால்கள் தெந்தனென இசை பாட - தென்றலில் மணம் கமழும் குளிர்ந்த சோலையில் வண்டுகள் தெந்தனென இசை பாட; (திருப்புகழ் - திருப்பரங்குன்றம் - "மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென வண்டினங் கண்டுதொடர் குழல்மாதர்");

அடியார்கள் செந்தமிழ்கள் அவை தி வந்து தொழு பதி - அடியவர்கள் தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடிவந்து வணங்குகின்ற தலமான; (பதி - தலம்; தலைவன்);

தென்-புகலிதனில் மேவு பெருமானே - அழகிய புகலியில் (சீகாழியில்) விரும்பி உறைகின்ற பெருமானே; (தென் - அழகிய); (புகலி - சீகாழியின் 12 பெயர்களில் ஒன்று);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

T.135 - புகலி (காழி) - எந்தநொடி உயிர்நாடி

2011-02-09

T.135 - புகலி (காழி) - எந்தநொடி உயிர்நாடி

-----------------

(வண்ணவிருத்தம்;

தந்ததன தனதான தந்ததன தனதான

தந்ததன தனதான .. தனதான)

(அண்டர்பதி குடியேற - திருப்புகழ் - சிறுவை)


எந்தநொடி உயிர்நாடி அந்தநமன் விடுதூதர்

.. .. என்றனிடம் வருவேளை .. அறியேனே

.. என்பிரிய உடல்மீது கந்த(ம்)மலி மலர்தூவ

.. .. இந்தனம தணையாக .. எரிமூழ்கும்

அந்தநிலை அடையாமு னண்டுவினை அவையோட

.. .. அன்பொடுன கழல்பாட .. அருளாயே

.. அந்தமொடு முதலாகி அண்டமிவை பலவாகி

.. .. அஞ்சொலுமை ஒருபாகம் .. உடையானே

வெந்தபொடி அதுபூசும் அந்திவண அடிதேடி

.. .. விண்டுசெல முடிதேடி .. அயனேக

.. வெந்தழலின் உருவாகி அன்றுயரும் ஒருநாத

.. .. வென்றிவிடை மிசையேறி .. வருவோனே

சந்திரனை இளநாகம் ஒன்றுதனை அலையாறு

.. .. தங்குசடை அதன்மீது .. புனைவோனே

.. சந்த(ம்)மிகு தமிழ்பாடு பந்தனுரை மகிழ்காத

.. .. தண்புகலி நகர்மேவு .. பெருமானே.


பதம் பிரித்து:

எந்த நொடி உயிர் நாடி அந்த நமன் விடு தூதர்

.. .. என்றனிடம் வரு வேளை அறியேனே;

.. என் பிரிய உடல்மீது கந்த(ம்)மலி மலர் தூவ,

.. .. இந்தனம்-அது அணையாக எரி மூழ்கும்

அந்த நிலை அடையாமுன், அண்டு வினை அவை ஓட,

.. .. அன்பொடு உன கழல் பாட அருளாயே;

.. அந்தமொடு முதல் ஆகி, அண்டம் இவை பல ஆகி,

.. .. அஞ்சொல்-உமை ஒரு பாகம் உடையானே;

வெந்த பொடி அது பூசும் அந்தி-வண; அடி தேடி

.. .. விண்டு செல, முடி தேடி அயன் ஏக,

.. வெந்தழலின் உரு ஆகி அன்று உயரும் ஒரு நாத;

.. .. வென்றி-விடைமிசை ஏறி வருவோனே;

சந்திரனை, இளநாகம் ஒன்றுதனை, அலை-ஆறு

.. .. தங்கு சடை அதன்மீது புனைவோனே;

.. சந்த(ம்)மிகு தமிழ் பாடு பந்தன் உரை மகிழ் காத;

.. .. தண்-புகலி நகர் மேவு பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

எந்த நொடி உயிர் நாடி அந்த நமன் விடு தூதர் என்றனிடம் வரு வேளை அறியேனே - எந்தக் கணம் என் உயிரைக் கொல்ல அந்தக் கூற்றுவன் அனுப்புகின்ற எமதூதர்கள் என்னிடம் வருகின்ற சமயம் என்று நான் அறியமாட்டேன்; (சம்பந்தர் தேவாரம் - 2.41.3 - "ஆரறிவார் சாநாளும் வாழ்நாளும்");

என் பிரிய உடல்மீது கந்த(ம்)லி ர் தூ, இந்தனம்-அது ணையாக எரி மூழ்கும் அந்த நிலை அடையாமுன் - (அப்படி அத்தூதர்கள் வந்து என் உயிர் பிரிந்துவிட) எனக்கு மிகவும் பிரியமான இவ்வுடல்மேல் வாசமலர்களைத் தூவி, விறகே படுக்கையாகக் கிடத்தத், தீயில் மூகும் அந்த நிலையை அடைவதன்முன்னமே; (பிரியம் - அன்பு); (இந்தனம் - விறகு; அது - பகுதிப்பொருள்விகுதி); (அணை - படுக்கை);

ண்டு வினை அவை, அன்பொடுன கழல் பாட அருளாயே - என்னை நெருங்குகின்ற வினையெல்லாம் ஒழியப், பக்தியோடு உனது திருவடிகளைப் போற்றிப் பாட அருள்வாயாக; (அண்டுதல் - கிட்டுதல்); (ஓடுதல் - விரைந்து நீங்குதல்); (உன - உன்+- உன்னுடைய; - ஆறாம் வேற்றுமையுருபு);


அந்தமொடு முதல் ஆகி, அண்டம் இவை பலகி, அஞ்சொல்-மை ஒரு பாகம் உடையானே - அனைத்திற்கும் முதலும் முடிவும் ஆகி, இவ்வண்டங்கள் எல்லாம் ஆகி, இன்மொழி பேசும் உமையை ஒரு பாகமாக உடையவனே;

வெந்த பொடி அது பூசும் அந்தி-வண - சுட்ட திருநீற்றைப் பூசுகின்ற, அந்திநேரத்து வானம் போல் செம்மேனியனே; (அந்திவண - அந்திவண்ணனே); (அந்தி - சாயங்காலம்; அந்தீ (அம் தீ - அழகிய தீ) என்பதன் குறுக்கல் விகாரம் என்றும் கருதலாம்);

அடி தேடி விண்டு செல, முடி தேடி அயன் ஏ - திருவடியைத் தேடி விஷ்ணு செல்ல, திருமுடியைத் தேடிப் பிரமன் செல்ல; (விண்டு - விஷ்ணு); (ஏகுதல் - போதல்);

வெந்தழலின் உருகி அன்றுயரும் ஒரு நாத - வெம்மையான ஜோதி வடிவில் முன்பு எல்லையின்றி நீண்ட ஒப்பற்ற தலைவனே; (ஒரு - ஒப்பற்ற);

வென்றி-விடைமிசைறி வருவோனே - வெற்றியுடைய இடபத்தின்மேல் ஏறி வருபவனே; (வென்றி - வெற்றி);


சந்திரனை, இளநாகம் ஒன்றுதனை, அலை-று தங்கு சடை அதன்மீது புனைவோனே - திங்களையும் இளம்பாம்பையும் அலையுடைய கங்கை தங்கிய சடையின்மேல் அணிந்தவனே; (அலை - திரை); (சம்பந்தர் தேவாரம் - 1.52.4 - "கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா");

சந்த(ம்)மிகு தமிழ் பாடு பந்தன் உரை மகிழ் காத - சந்தம் மிகுந்த தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் திருஞான சம்பந்தரின் பாடல்களை விரும்பிக் கேட்பவனே; (பந்தன் - சம்பந்தன் - ஒருபுடைப் பெயர்); (உரை - சொல்); (காத - காதனே); (சுந்தரர் தேவாரம் - 7.58.5 - "குண்டலங் குழைதிகழ் காதனே");

தண்-புகலிநகர் மேவு பெருமானே - குளிர்ந்த புகலிநகரில் (சீகாழியில்) விரும்பி உறைகின்ற பெருமானே; (புகலி - சீகாழியின் 12 பெயர்களில் ஒன்று);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

T.134 - நின்றவூர் (திருநின்றவூர்) - தினமண்டும் ஆசை

2011-01-23

T.134 - நின்றவூர் (திருநின்றவூர்) - தினமண்டும் ஆசை

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதந்த தானத் தனதந்த தானத்

தனதந்த தானத் .. தனதான)


தின(ம்)மண்டும் ஆசைப் புயலுந்த ஆடித்

.. .. திருவின்றி வாடித் .. தவியாமல்

.. செறிசந்த மாலைத் தமிழ்கொண்டு பாடித்

.. .. திகழ்கின்ற தாளைத் .. தொழுவேனோ

இனலின்றி வாழற் கருளென்று சேவித்

.. .. தெழில்பொங்கு பூவிட் .. டடைமாணி

.. இனியென்றும் வாழற் கியமன்றன் மார்பத்

.. .. திடுகின்ற வீரக் .. கழலானே

உனையென்றும் ஓதித் தெருள்கொண்ட பூசற்

.. .. குள(ம்)நின்ற மாணத் .. தளியானே

.. உடையென்று தோலைப் புனையின்ப ஆகத்

.. .. துமைதங்கு வேணிச் .. சடையானே

சினம்வென்று வாசக் கணைகொண்ட காமற்

.. .. செருவென்ற சீலர்க் .. கினியானே

.. சினைநின்று கோலக் கிளிகொஞ்சு சோலைத்

.. .. திருநின்ற வூரிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

தின(ம்) மண்டும் ஆசைப் புயல் உந்த ஆடித்,

.. .. திரு இன்றி வாடித் தவியாமல்,

.. செறி-சந்த மாலைத் தமிழ்கொண்டு பாடித்,

.. .. திகழ்கின்ற தாளைத் தொழுவேனோ;

"இனல் இன்றி வாழற்கு அருள்" என்று சேவித்து,

.. .. எழில் பொங்கு பூ இட்டு அடை-மாணி

.. இனி என்றும் வாழற்கு, இயமன்றன் மார்பத்து

.. .. இடுகின்ற வீரக் கழலானே;

உனை என்றும் ஓதித் தெருள்கொண்ட பூசற்கு

.. .. உள(ம்) நின்ற மாணத் தளியானே;

.. உடை என்று தோலைப் புனை இன்ப; ஆகத்து

.. .. உமை தங்கு, வேணிச்-சடையானே;

சினம் வென்று, வாசக்-கணைகொண்ட காமற்

.. .. செரு வென்ற சீலர்க்கு இனியானே;

.. சினை-நின்று கோலக்-கிளி கொஞ்சு சோலைத்

.. .. திருநின்றவூரிற் பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

தின(ம்) மண்டும் ஆசைப்-புயல் உந்த ஆடித், திருன்றி வாடித் தவியாமல் - தினமும் மிகுகின்ற ஆசைப்புயலானது என்னைத் தள்ள அங்குமிங்கம் அலைந்து, திரு இல்லாமல் வாடித் துன்புறும் நிலையை அடையாமல்; (மண்டுதல் - மிகுதல்); (ஆடுதல் - அசைதல்; சஞ்சரித்தல்;)

செறி-சந்த மாலைத் தமிழ்கொண்டு பாடித், திகழ்கின்ற தாளைத் தொழுவேனோ - சந்தம் செறிந்த தமிழ்ப்பாமாலைகளைப் பாடி, விளங்குகின்ற திருவடியை வணங்க அருள்வாயாக; (செறி-சந்த மாலைத் தமிழ் = சந்தம் செறி தமிழ் மாலை); (சம்பந்தர் தேவாரம் - 1.57.11 - "ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு பாடக் குணமாமே");


"இனல் இன்றி வாழற்கு அருள்" ன்று சேவித்து, ழில் பொங்கு பூட்டு அடை-மாணி - "துன்பம் இல்லாமல் வாழ அருள்வாயாக" என்று துதித்து, அழகிய பூக்களைத் தூவிச் சரண்புகுந்த மார்க்கண்டேயர்; (இனல் - இன்னல்; இடைக்குறை விகாரம்); (அடைதல் - சரண்புகுதல்); (மாணி - மார்க்கண்டேயர்);

இனின்றும் வாழற்கு இயமன்றன் மார்பத்து டுகின்ற வீரக் கழலானே - இனிமேல் என்றும் இறப்பின்றிச் சிரஞ்சீவியாக வாழும் பொருட்டுக் காலனது மார்பில் உதைத்த வீரக்கழல் அணிந்த திருவடியினனே; (மார்பம் - மார்பு); (இடுதல் - வைத்தல்; குத்துதல்);


உனைன்றும் ஓதித் தெருள்கொண்ட பூசற்கு (ம்) நின்ற மாணத்-தளியானே - உன்னை என்றும் போற்றி வழிபாடு செய்து தெளிந்த பூசலார்க்கு அவர் உள்ளத்தில் இருந்த சிறந்த கோயிலில் உறைபவனே; (பூசற்கு - பூசல்+கு - பூசலார்க்கு); (மாணம் - மாட்சிமை); (தளி - கோயில்); (பெரியபுராணம் - பூசலார் புராணம் - 12.65.10 - "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீடாலயத்து நாளை நாம் புகுவோம்"); (* திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்);

உடைன்று தோலைப் புனைன்ப - புலித்தோலை உடையாக அணியும் இன்பனே;

ஆகத்து மை தங்கு, வேணிச்-சடையானே - திருமேனியில் உமை ஒரு பாகமாகத் தங்கிய, கங்கைச்-சடையானே; (ஆகம் - மேனி); (வேணி - நதி);


சினம் வென்று, வாசக்-கணை கொண்ட காமற் செரு வென்ற, சீலர்க்கு இனியானே - சினத்தையும் வென்று, வாசம் மிக்க பூங்கணை ஏவும் காமனது போரையும் வென்ற, சீலர்களுக்கு இனிமை பயப்பவனே; (செரு - போர்); (காமற் செரு வென்ற - மன்மதனைப் போரில் வென்ற; இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள்தெளிவு கருதி, முதற்சொல்லின் ஈற்றில் உள்ள ன் ஒற்று ற் ஒற்றாகத் திரியும்); ("உனைத் தினம்" - திருப்புகழ் - திருப்பரங்குன்றம் - "சினத்தை நிந்தனை செயுமுநிவரர் தொழ மகிழ்வோனே");

சினை-நின்று கோலக்-கிளி கொஞ்சு சோலைத் திருநின்றவூரிற் பெருமானே - மரக்கிளையில் தங்கி அழகிய கிளிகள் இன்னொலி செய்யும் பொழில் சூழ்ந்த திருநின்றவூரில் உறைகின்ற பெருமானே; (சினை - மரக்கிளை); (நிற்றல் - தங்குதல்); (கோலம் அழகு); (கொஞ்சுதல் - இனிதாய் ஒலித்தல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


T.133 - ஆலங்காடு (திருவாலங்காடு) - ஈனங் கேடு

2010-12-31

T.133 - ஆலங்காடு (திருவாலங்காடு) - ஈனங் கேடு

-----------------

(வண்ணவிருத்தம்;

தானந் தான தானந் .. தனதான)


ஈனங் கேடு சூழுஞ் .. சிறியோர்பால்

.. ஈயென் றோடி நாணங் .. கெடுவேனோ

நானன் போடு நாளுங் .. கழல்பாடி

.. வானந் தேடு ஞானந் .. தருவாயே

ஏனந் தேடு பாதம் .. பணிவார்தம்

.. ஏதந் தீர ஆளுஞ் .. சடையானே

ஆனஞ் சாடி நீறும் .. புனைவோனே

.. ஆலங் காடு மேவும் .. பெருமானே.


பதம் பிரித்து:

ஈனம் கேடு சூழும் சிறியோர்பால்

.. "" என்று ஓடி நாணம் கெடுவேனோ;

நான் அன்போடு நாளும் கழல் பாடி,

.. வானம் தேடு ஞானம் தருவாயே;

ஏனம் தேடு பாதம் பணிவார்தம்

.. ஏதம் தீர ஆளும் சடையானே;

ஆனஞ்சு ஆடி, நீறும் புனைவோனே;

.. ஆலங்காடு மேவும் பெருமானே.


ஈனம் கேடு சூழும் சிறியோர்பால் "" என்று ஓடி நாணம் கெடுவேனோ - இழிவும் தீமையும் சூழும் அற்பர்களிடம் பொருளை நாடிப் பல்லிளித்துக்கொண்டு வெட்கமின்றிச் செல்லாமல்; (ஈனம் - இழிவு); (ஈ என்று - தா என்று; "" என்று பல்லிளித்துக்கொண்டு);

நான் அன்போடு நாளும் கழல் பாடி, வானம் தேடு ஞானம் தருவாயே - நான் தினமும் பக்தியோடு உன் திருவடியைப் பாடி உய்தியை நாடும் அறிவை அருள்வாயாக; (வானம் - விண்ணுலகு; மோட்சம்);

ஏனம் தேடு பாதம் பணிவார்தம் ஏதம் தீர ஆளும் சடையானே - பன்றி உருவில் திருமால் சென்று தேடிய திருவடியை வணங்குபவர்களது துன்பம் தீர அருள்கின்ற, சடையை உடையவனே; (ஏனம் - பன்றி); (ஏதம் - பாவம்; துன்பம்);

ஆனஞ்சு ஆடி, நீறும் புனைவோனே - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்துபொருள்களால் அபிஷேகம் செய்யப்பெற்றுத், திருநீற்றையும் அணிந்தவனே; (ஆனஞ்சு - பஞ்சகவ்வியம்); (ஆடுதல் - அபிஷேகம் செய்யப்பெறுதல்); (நீறும் - உம் - எச்சவும்மை; கங்கை, பாம்பு, மலர்கள் இவற்றையும் புனைவதைக் குறிப்பால் உணர்த்தியது; திருநீறானது பசுவின் சாணத்திலிருந்து பெறப்படும் பொருள் என்று கொண்டும் பொருள்கொள்ளலாம்);

ஆலங்காடு மேவும் பெருமானே - திருவாலங்காட்டில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

Saturday, July 2, 2022

T.132 - கோயில் (சிதம்பரம்) - சிரிக்கச் சஞ்சரித்து

2010-11-27

T.132 - கோயில் (சிதம்பரம்) - சிரிக்கச் சஞ்சரித்து

-----------------

(வண்ணவிருத்தம்;

தனத்தத்தந் தனத்தத்தந்

தனத்தத்தந் தனத்தத்தந்

தனத்தத்தந் தனத்தத்தந் .. தனதான)

(பெருக்கச்சஞ் சலித்துக்கந் தலுற்றுப்புந் தியற்றுப்பின் - திருப்புகழ் - திருச்செந்தூர்)


சிரிக்கச்சஞ் சரித்துச்சிந் தனைப்பட்டுஞ் சினப்பட்டுஞ்

.. செகத்திற்றுன் பினைத்துய்க்கும் .. பவ(ம்)மாயச்

சரிப்பட்டென் பிணிப்பற்றுன் கழற்கிட்டஞ் சிறக்கப்பண்

.. தழைக்கச்செந் தமிழ்ப்புட்பம் .. புனைவேனோ

புரத்திற்செந் தழற்பற்றும் படிப்பொற்குன் றெடுத்துத்தென்

.. புலத்தற்கன் றுவப்பைத்தந் .. தருள்வோனே

திருச்சிற்றம் பலத்துட்கங் கைநிற்பிக்குஞ் சடைத்தட்பந்

.. தெளிக்கத்திங் களிச்சிக்கும் .. பெருமானே.


பதம் பிரித்து:

சிரிக்கச் சஞ்சரித்துச், சிந்தனைப்பட்டும் சினப்பட்டும்,

.. செகத்தில் துன்பினைத் துய்க்கும் பவ(ம்) மாயச்,

சரிப்பட்டு, என் பிணிப்பு அற்று, உன் கழற்கு இட்டம் சிறக்கப், பண்

.. தழைக்கச், செந்தமிழ்ப்-புட்பம் புனைவேனோ;

புரத்தில் செந்தழல் பற்றும்படிப் பொற்குன்று எடுத்துத், தென்-

.. புலத்தற்கு அன்று உவப்பைத் தந்து அருள்வோனே;

திருச்சிற்றம்பலத்துள் கங்கை நிற்பிக்கும் சடைத் தட்பம்

.. தெளிக்கத் திங்கள் இச்சிக்கும் பெருமானே.


சிரிக்கச் சஞ்சரித்துச், சிந்தனைப்பட்டும் சினப்பட்டும், செகத்தில் துன்பினைத் துய்க்கும் பவ(ம்) மாயச் - பிறர் எள்ளி நகையாடும்படி வாழ்ந்து, கவலையும் கோபமும் பட்டு, இவ்வுலகில் துன்பத்தை அனுபவிக்கும் பிறவிகள் அழிய; (சிரித்தல் - பரிகசித்தல்); (சிந்தனை - கவலை); (துய்த்தல் - அனுபவித்தல்); (பவம் - பிறப்பு); (மாய்தல் - அழிதல்);

சரிப்பட்டு, ன் பிணிப்பு அற்று, ன் கழற்கு இட்டம் சிறக்கப், பண் தழைக்கச், செந்தமிழ்ப்-புட்பம் புனைவேனோ - நல்வழியை அடைந்து, என் பந்தங்கள் அற்று, உன் திருவடிக்கு அன்பு சிறக்கச் சந்தமும் இசையும் மிகுந்த தமிழ்ச்சொற்கள் என்ற மலர்களால் மாலை தொடுத்துச் சூட்ட அருள்வாயாக; (சரிப்படுதல் - நேராதல்); (பிணிப்பு - பந்தம்; பற்று); (இட்டம் - இஷ்டம் - அன்பு); (செந்தமிழ்ப்புட்பம் - செந்தமிழ்ப்பாமாலை); (புனைதல் - சூட்டுதல்; தொடுத்தல்);

புரத்தில் செந்தழல் பற்றும்படிப் பொற்குன்று எடுத்துத், தென்புலத்தற்கு அன்றுவப்பைத் தந்து அருள்வோனே - முப்புரங்களில் தீப் பற்றும்படி பொன்மலையான மேருமலையை ஏந்திப் போர்செய்து, தென்புலத்தனான இயமனுக்கு அன்று மகிழ்ச்சியைத் தந்தவனே (= முப்புரத்து அசுரர்களை யமனுக்கு இரையாக்கியவனே); (தென்புலத்தன் - தென்திசைக்கோனான யமன்); (தென்புலத்தற்கு = தென்புலத்தன்+கு = யமனுக்கு); (செந்தழல் பற்றும்படி பொற்குன்று - சந்தம் கருதிச் - "செந்தழற்பற்றும் படிப்பொற்குன்று" என்று வந்தது);

திருச்சிற்றம்பலத்துள் கங்கை நிற்பிக்கும் சடைத் தட்பம் தெளிக்கத் திங்கள் இச்சிக்கும் பெருமானே - கங்கையைத் தடுத்து நிறுத்திய சடையில் (மேலும்) குளிர்ச்சியைத் தெளிக்குமாறு சந்திரனை விரும்பி அணிந்தவனே; திருச்சிற்றம்பலத்தில் உறையும் சிவபெருமானே! (தறுதல் - இறுக உடுத்துதல்; கட்டுதல்); (தட்பம் - குளிர்ச்சி); (இச்சித்தல் - விரும்புதல்); ("கங்கை நிற்பிக்கும் சடைத் தட்பம் தெளிக்கத் திங்கள் இச்சிக்கும்" - கங்கையைத் தடுத்து நிறுத்திய சடையில் குளிர்ச்சியைத் தெளிக்கச் சந்திரன் விரும்புகின்ற - என்றும் பொருள்கொள்ளுமாறு அமைந்தது); (அப்பர் தேவாரம் - 6.43.1 - "நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை");


வி. சுப்பிரமணியன்

----------- --------------