06.02.161 – பொது - நான் ஓதற்கு - (வண்ணம்)
2012-01-16
06.02.161 - நான் ஓதற்கு - (பொது)
-------------------------
(வண்ணவிருத்தம்;
தானானத் .. தனதான )
(நீதானெத் தனையாலும் - திருப்புகழ் - திருவாரூர்)
நானோதற்
.. கறியாமல்
..
நாளாகிக்
.. கழியாமல்
தேனார்நற்
.. றமிழால்நின்
..
சீர்பாடற்
.. கருளாயே
கானாகத்
.. துரிமூடீ
..
காதோர்பொற்
.. குழையானே
வானோருக்
.. கமுதீவாய்
..
மானார்கைப்
.. பெருமானே.
பதம்
பிரித்து:
நான்
ஓதற்கு அறியாமல்,
..
நாள்
ஆகிக் கழியாமல்,
தேன்
ஆர் நற்றமிழால் நின்
..
சீர்
பாடற்கு அருளாயே;
கான்
நாகத்து உரி மூடீ;
..
காது
ஓர் பொற்குழையானே;
வானோருக்கு
அமுது ஈவாய்;
.. மான்
ஆர் கைப் பெருமானே.
நான்
ஓதற்கு அறியாமல்,
நாள்
ஆகிக் கழியாமல் -
நான்
உன்னை ஓத அறியாமல் வீணே நாள்கள்
சென்று இறந்து அழிந்துவிடாமல்;
(கழிதல்
- சாதல்;
அழிதல்);
தேன்
ஆர் நற்றமிழால் நின் சீர்
பாடற்கு அருளாயே -
மணக்கும்
இனிய நல்ல தமிழால் உன் புகழைப்
பாடுவதற்கு அருள்புரிவாயாக;
(தேன்
- இனிமை;
வாசனை);
(ஆர்தல்
- பொருந்துதல்;
நிறைதல்;
ஒத்தல்);
(சீர்
- புகழ்);
கான்
நாகத்து உரி மூடீ -
காட்டுயானைத்தோலைப்
போர்வையாக அணிந்தவனே;
(கான்
- காடு);
(நாகம்
- யானை);
(உரி
- தோல்);
(மூடீ
- மூடியவனே);
(சம்பந்தர்
தேவாரம் - 2.17.3 - "ஆகம்
மழகா யவள்தான் வெருவ நாகம்
முரிபோர்த்தவன்")
காது
ஓர் பொற்குழையானே -
ஒரு
காதில் பொற்குழை அணிந்தவனே
(அர்த்தநாரீஸ்வரன்);
(சம்பந்தர்
தேவாரம் - 1.30.5 - "காதார்
கனபொற் குழைதோ டதிலங்கத்")
வானோருக்கு
அமுது ஈவாய் - (விஷத்தை
உண்டு) தேவர்களுக்கு
அமுதத்தைக் கொடுத்தவனே;
மான்
ஆர் கைப் பெருமானே
- மானைக்
கையில் ஏந்திய பெருமானே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment