Saturday, August 30, 2025

V.057 - தேசனே தீயன்ன - நிரோட்டகம்

2018-06-22

V.057 - தேசனே தீயன்ன - நிரோட்டகம்

---------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம்)


தேசனே தீயன்ன செய்ய னேநஞ்சார்

ஈசனே திங்களை ஏற்ற சென்னியாய்

தாசராய்த் தாளிணை தன்னை ஏத்தினார்

நேசனே என்னிடர் நீக்கிக் காத்திடே.


தேசனே - ஒளியுருவினனே;

தீ அன்ன செய்யனே - தீப் போன்ற செம்மேனியனே;

நஞ்சு ஆர் ஈசனே - விடத்தை உண்ட (& அணிந்த) ஈசனே; (ஆர்தல் - உண்தல்; அணிதல்);

திங்களை ஏற்ற சென்னியாய் - திருமுடிமேல் சந்திரனை அணிந்தவனே;

தாசராய்த் தாளிணை-தன்னை ஏத்தினார் நேசனே - அடியவர்கள் ஆகி இரு-திருவடிகளைத் துதிப்பவர்களுக்கு அன்பு உடையவனே; (இணை - இரட்டை);

என் இடர் நீக்கிக் காத்திடே - என் துன்பத்தைத் தீர்த்துக் காத்தருள்வாயாக. (- ஈற்றசை);


பிற்குறிப்பு :

* நிரோட்டகம் (நிரோஷ்டகம்) - உதடு குவியாமலும் ஒட்டாமலும் வரும் ஒலிகள் மட்டுமே அமைந்த பாடல். அதாவது - பாட்டில் உ, , , , , என்ற உயிரொலிகளும், , , வ என்ற வருக்கங்களும் இருக்கக்கூடாது.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment