Saturday, December 11, 2021

06.01.100 - சிவன் - வியாழம் (வியாழன்) - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2009-10-28

06.01.100 - சிவன் - வியாழம் (வியாழன்) - சிலேடை

-----------------------------------------------

குருவென்பர் பேர்தினம் கொண்டாடும் அன்பர்

வருவர் வணங்க வரங்கள் - தருவாரோர்

வாரமாய் மன்னுபுக ழார்வியா ழம்பாம்பே

ஆரமாம் மார்புடை யார்.


சொற்பொருள்:

குரு - 1. தேவகுரு; / 2. தட்சிணாமூர்த்தி;

என்பர் - 1. என்று சொல்வார்கள்; / 2. எலும்பை அணிந்தவர்;

பேர் - பெயர்;

பேர்தல் - பெயர்தல் - இடம் விட்டு மாறுதல்;

பேர்தினம் கொண்டாடும் - 1. பெயரும் தினத்தைக் கொண்டாடுகின்ற; / 2. திருநாமத்தைத் தினமும் போற்றுகின்ற;

ஓர் - 1. ஒரு; / 2. எண்ணு; (ஓர்தல் - நினைத்தல்);

வாரம் - 1) கிழமை (day of the week); / 2) அன்பு;

மன்னுதல் - 1. மிகுதல்; / 2. நிலைத்தல்;

புகழார் - 1. புகழ் பொருந்திய (புகழ் ஆர்); / 2. புகழ் உடையவர்;


வியாழம் (வியாழன்):

குருன்பர் - தேவகுரு என்பார்கள்;

பேர்தினம் கொண்டாடும் அன்பர் வருவர் வணங் வரங்கள் ருவார் - குருப்பெயர்ச்சி நாளைக் கொண்டாடும் அன்பர்கள் வணங்க வருவார்கள்; (பூசை / பரிகாரம் முதலியன செய்து) வணங்கும் அவர்களுக்கு வரம் தருபவர்;

ர் வாரமாய் மன்னு புகழ் ஆர் வியாழம் - ஒரு கிழமையாகி மிகுந்த புகழ் பொருந்திய வியாழம் (வியாழன்);


சிவன்:

குரு - (கல்லால மரத்தின்கீழ் இருக்கும்) தட்சிணாமூர்த்தி;

ன்பர் - எலும்பை அணிந்தவர்;

பேர் தினம் கொண்டாடும் அன்பர் வருவர் வணங் வரங்கள் ருவார் - திருநாமத்தைத் தினமும் போற்றுகின்ற பக்தர்கள் வருவார்கள், வணங்க, வரங்கள் அளிப்பவர்;

ர் வாரமாய் - (மனமே, அப்பெருமானாரை) பக்தியோடு எண்ணு;

மன்னு புகழார் - நிலைத்த புகழை உடையவரும்;

பாம்பேம் ஆம் மார்புடையார் - நாகத்தையே மார்பில் மாலையாக அணிந்தவருமான சிவபெருமானாரை;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment