01.07 - பொது - "பத்தியால் வணங்கு நெஞ்சே"
2007-11-17
பொது
பத்தியால் வணங்கு நெஞ்சே
--------------------------------------
(வஞ்சித்துறை)
(திருவிருக்குக்குறள் அமைப்பில்)
1)
ஆலம் உண்டநம்
நீல கண்டனின்
காலை அண்டுவார்
சீலத் தொண்டரே.
ஆலம்
-
ஆலகால
விஷம்;
கால்
-
திருவடி;
(திருப்புகழ்
-
“பாதி
மதிநதி....உனதிரு
காலில் வழிபட அருள்வாயே....”);
அண்டுதல்
-
சேர்தல்;
ஆசிரயித்தல்;
அபயம்
புகுதல்;
சீலம்
-
நல்லொழுக்கம்
(Good
conduct, character, virtue); நல்லுணர்வு
(wisdom);
2)
மங்கை இடப்புறம்
பங்கில் உடையவன்
தங்கும் இடம்தொழ
மங்கும் மடமையே.
தங்கும்
இடம் -
உறைகின்ற
தலம்;
மங்குதல்
-
கெடுதல்;
அழிதல்;
மடமை
-
பேதைமை;
அறியாமை;
(அப்பர்
தேவாரம் -
6.70.9 - “புலிவலம்
புத்தூர் … நெய்த் தானத்தோ
டெத் தானத்தும் நிலவுபெருங்
கோயில்பல கண்டால் ...
கயிலாய
நாதனையே காண லாமே” -
எந்த
ஊரிலும் விளங்குகின்ற பெருங்
கோயில்கள் பலவற்றைக் கண்டால்,
... கயிலாய
நாதனை அவ்விடங்களிலெல்லாம்
காணலாம்);
3)
கடையில் பதிஅவன்
சடையில் மதியணி
விடையன் பதிதொழ
அடைவர் நிதியமே.
கடை
இல் பதி
-
முடிவு
இல்லாத தலைவன்;
மதி
அணி விடையன் பதி
-
பிறைச்சந்திரனை
அணிகின்ற,
இடப
வாகனன் உறையும் தலம்;
நிதியம்
-
நிதி;
(அருள்
/
பொருள்);
4)
நீற்றன் கொடிமிசை
ஏற்றன் முடிமிசை
ஆற்றன் அடிதொழல்
பாற்றும் மிடியதே
நீற்றன்
-
திருநீற்றைப்
பூசியவன்;
கொடிமிசை
ஆற்றன் -
இடபச்சின்னம்
பொறித்த கொடியை உடையவன்;
முடிமிசை
ஆற்றன் -
கங்காதரன்;
அடிதொழல்
-
திருவடியைப்
போற்றுவது;
பாற்றும்
மிடியதே -
வறுமையையும்
துன்பத்தையும் தீர்க்கும்;
(பாற்றுதல்
-
நீக்குதல்;
மிடி
-
வறுமை;
துன்பம்);
5)
அருவினை வேர்கெட
எருதினில் ஊர்கிற
ஒருவன தூர்களை
விருப்பொடு சேர்மினே.
அருவினை
-
கொடிய
வினை;
வேர்
கெட – வேரோடு அழிய;
ஊர்தல்
-
செல்லுதல்;
ஒருவனது
ஊர்களை -
ஒப்பற்ற
சிவபெருமான் உறையும் தலங்களை;
(ஒருவன்
-
ஒப்பற்றவன்);
விருப்பொடு
-
அன்போடு;
சேர்மின்
-
சேருங்கள்;
அடையுங்கள்;
(மின்
-
முன்னிலை
ஏவல் பன்மை விகுதி);
6)
திரிமுப் புரங்கள்
எரிவெஞ் சரத்தைத்
தரிசங் கரன்பேர்
பெரிய அரணே.
திரி
முப்புரங்கள்
-
திரிந்த
முப்புரங்களை;
எரி
வெஞ்
சரத்தை
-
எரித்த
கொடிய அம்பை;
தரி
சங்கரன் பேர் -
ஏந்திய
சங்கரனின் திருநாமம்;
(தரித்தல்
-
தாங்குதல்
To
keep, support, carry);
பெரிய
அரண் -
சிறந்த
கவசம்;
சிறந்த
காப்பு;
7)
வேதம் பாடுமோர்
நாதன் ஆடுமா
பாதம் நாடுவோர்
ஏதம் ஓடுமே.
வேதம்
பாடும்
ஓர் நாதன்
-
வேதங்கள்
பாடுகின்ற ஒப்பற்ற தலைவன்;
ஆடு
மா பாதம் -
திருநடம்
செய்யும் அழகிய திருவடி;
நாடுவோர்
ஏதம் ஓடும் -
விரும்புகின்றவர்களுடைய
குற்றங்கள் நீங்கும்;
(நாடுதல்
-
தேடுதல்;
விரும்புதல்;
ஆராய்தல்);
(ஏதம்
-
குற்றம்);
8)
உயர்மலை இடந்தவன்
துயருற அடர்த்தவன்
பெயர்சொல இடர்தரும்
மயல்கெடும் திடமிதே.
உயர்
மலை -
கயிலைமலை;
இடந்தவன்
-
பெயர்த்தவன்
-
இராவணன்;
அடர்த்தல்
-
நசுக்குதல்;
இடர்
-
வருத்தம்;
துன்பம்;
மயல்
-
மயக்கம்
(Confusion;
bewilderment; delusion);
திடம்
-
நிச்சயம்;
உறுதி;
9)
அரிநிலம் தோண்டமா
எரியென நீண்டதாள்
பரிவொடு வேண்டிநீர்
புரிவினை தாண்டுமே.
அரி
-
ஹரி
-
விஷ்ணு;
மா
எரி -
பெரிய
சோதி;
தாள்
-
திருவடி;
பரிவு
-
அன்பு;
பக்தி;
புரிவினை
தாண்டும்
-
புரிந்த
வினைகளைத் தாண்டுங்கள்;
(வினைக்கடலைக்
கடக்கலாம்);
10)
ஏற்றனைத் தொழாதவர்தம்
கூற்றினில் விழாதவர்கள்
சேற்றினின் றழார்அரன்சீர்
சாற்றினால் இழான்நமனே.
ஏற்றன்
-
ஏற்றின்
மேல் வரும் சிவன்;
கூற்று
-
பேச்சு;
சொல்/மொழி;
விழாதவர்
-
மயங்கி
விழாதவர்;
சேற்றினின்றழார்
-
சேற்றில்
நின்று அழார் -
சேற்றில்
நின்று அழமாட்டார்;
அரன்
சீர் சாற்றினால் -
சிவபெருமான்
திருப்புகழை ஓதினால்;
(சீர்
-
புகழ்;
பெருமை;
சாற்றுதல்
-
சொல்லுதல்;
துதித்தல்);
இழான்
நமன்
-
எமன்
இழுக்கமாட்டான்;
வித்தகன் அணங்கிணையும்
உத்தமன் கணங்கடொழும்
நித்தியன் இணையடியைப்
பத்தியால் வணங்குநெஞ்சே.
வித்தகன்
-
ஞான
சொரூபன்;
திறல்
உடையவன்;
அணங்கு
இணையும் உத்தமன் -
பார்வதி
இணைந்து இருக்கும் மேலானவன்/சிறந்தவன்;
கணங்கள்
தொழும் நித்தியன் -
பல
பூத கணங்கள் சூழ்ந்து தொழுகிற
அழியா மெய்ப்பொருள்;
இணையடியைப்
பத்தியால்
வணங்கு நெஞ்சே -
மனமே,
அவனது
திருவடிகளைப் பக்தியோடு
தொழுவாயாக.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
1. வஞ்சித்துறை - நான்கு குறளடிகள் கொண்ட பாடல். (பாடலில் 4 அடிகள். அடிக்கு 2 சீர்கள்).
2. இப்பதிகத்தில் முதல் சீர்களுக்கு இடையே ஒரு எதுகையும், இரண்டாம் சீர்களுக்கு இடையே இன்னொரு எதுகையும் பயின்று வருமாறு அமைந்தது.
3. ஒவ்வொரு பாடலிலும் கட்டளை அடிகள். (4 அடிகளிலும் ஒரே எழுத்து எண்ணிக்கை. மெய்யெழுத்துகள் இக்கணக்கில் அடங்கா).
காலையில் படித்தேன் .கண்ணீர் உகுத்தேன்..கருமம் தொலைத்தேன்.
ReplyDeleteThank you.
Delete