Thursday, November 17, 2022

06.04.025 – மாணிக்க வாசகர் துதி - சாற்றிய அச்சப் பத்தில்

06.04.025 – மாணிக்க வாசகர் துதி - சாற்றிய அச்சப் பத்தில்

2013-07-10

06.04.025 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2013

----------------------------------------

(அறுசீர் விருத்தம் - 'விளம் மா தேமா' - அரையடி வாய்பாடு)


சாற்றிய அச்சப் பத்தில்

.. சழக்கரைச் சாடி எந்தை

நீற்றினைப் புனைந்து வம்மின்

.. நீர்களெல் லாமென் றோதிப்

பேற்றினை அடையும் மார்க்கம்

.. பெரிதுவந் தெமக்கிங் கீந்தார்

மாற்றிலாச் செம்பொன் எங்கள்

.. வாதவூர் அடிகள் தாமே.


சாற்றுதல் - பலரும் அறியச் சொல்லுதல்;

சாடுதல் - கடிதல்; கண்டித்தல்;

பெரிதுவந் தெமக்கிங் கீந்தார் - பெரிது உவந்து எமக்கு இங்கு ஈந்தார்;

மாற்றிலா - உரைத்து மாற்றுக் காணுதற்கரிய; மிக உயர்ந்த;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment