Saturday, July 4, 2020

03.05.087 – ஒற்றியூர் - அற்றவரைப் புறம் வைத்து - (வண்ணம்)


 03.05.087 – ஒற்றியூர் அற்றவரைப் புறம் வைத்து - (வண்ணம்)

Note: English translation of the meaning is provided in the second half of this page.

2009-01-21

3.5.87) அற்றவரைப் புறம் வைத்து - (ற்றியூர் - திருவொற்றியூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தன தத்தன தத்தன தத்தன

தத்தன தத்தன .. தனதான )

(பத்தர்க ணப்ரிய - திருப்புகழ் - திருச்செங்கோடு)


அற்றவ ரைப்புறம் வைத்திழி வைத்தரும்

..... அற்பரை உற்றவர் .. எனநாடி

.. அக்கறை அற்றெழும் இச்சையு கைத்திட

..... அப்படி இப்புவி .. தனிலாடி

மற்றவ ருக்கிழை குற்றமி குத்தழி

..... வைப்பெறு சித்தம .. துடையேனும்

.. வற்றிவி னைத்தொடர் அற்றிட நித்தலு(ம்)

..... மத்தவு னைத்தொழ .. அருளாயே

கற்றவ ருக்குமி கச்சுவை யுற்றிடு

..... கற்பக நற்கனி .. எனவானாய்

.. கைத்தவி டத்தைமி டற்றில டைத்தொரு

..... கச்சென நச்சர .. வணிவானே

எற்றையும் உற்றிடும் அற்புத முக்கண

..... இட்டிடை உத்தமி .. மணவாளா

.. எற்றுதி ரைக்கரை ஒற்றியில் நச்சினர்

..... இட்டம தைத்தரு .. பெருமானே.


பதம் பிரித்து:

அற்றவரைப் புறம் வைத்து, இழிவைத் தரும்

..... அற்பரை உற்றவர் என நாடி,

.. அக்கறை அற்று, எழும் இச்சை உகைத்திட,

..... அப்படி இப்-புவிதனில் ஆடி,

மற்றவருக்கு இழை குற்றம் மிகுத்து,

..... அழிவைப் பெறு சித்தமது உடையேனும்,

.. வற்றி வினைத்தொடர் அற்றிட, நித்தலும்

..... மத்த உனைத் தொழ அருளாயே;

கற்றவருக்கு மிகச் சுவையுற்றிடு

..... கற்பக நற்கனி என ஆனாய்;

.. கைத்த விடத்தை மிடற்றில் அடைத்து, ஒரு

..... கச்சு என நச்சு-அரவு அணிவானே;

எற்றையும் உற்றிடும் அற்புத; முக்கண;

..... இட்டிடை உத்தமி .. மணவாளா;

.. எற்று திரைக் கரை ஒற்றியில், நச்சினர்

..... இட்டமதைத் தரு பெருமானே;


அற்றவரைப் புறம் வைத்து - அடியவர்களைத் தள்ளி வைத்து - அடியவர்களை அணுகாமல்; (அற்றவர் - அற்றார் - அன்புடைய பக்தர்கள்; வேறு பற்றற்ற மெய்யடியார்கள்); (புறம் - வெளியிடம்); (சம்பந்தர் தேவாரம் - 3.120.2 - "அற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவா யாவது மிதுவே");

இழிவைத் தரும் அற்பரை உற்றவர் என நாடி - இழிவைக் கொடுக்கும் அற்பர்களை மிகவும் வேண்டியவர்கள் என விரும்பி;

அக்கறை அற்று - (எனது நலனில் / விளைவுகளில்) அக்கறை இன்றி;

எழும் இச்சை உகைத்திட, அப்படி இப் புவிதனில் ஆடி - எழுகின்ற ஆசைகள் என்னைச் செலுத்த, அவ்விதமே இந்த உலகில் செயல்பட்டு; (உகைத்தல் - செலுத்துதல்); (ஆடுதல் - செய்தல்);

மற்றவருக்கு இழை குற்றம் மிகுத்து - பிறர்க்குச் செய்யும் குற்றங்கள் மிகுத்து;

அழிவைப் பெறு சித்தமது உடையேனும் - அழிவை அடையும் (தெளிவில்லாத) மனத்தை உடைய அடியேனும்;

வற்றி வினைத்தொடர் அற்றிட, நித்தலும், மத்த உனைத் தொழ அருளாயே - (எனது) முன்வினைகள் எல்லாம் வற்றி அழிந்து போக, ஊமத்த மலரை அணிந்தவனே, உன்னைத் தினத்தோறும் தொழுவதற்கு அருள்புரிவாயாக; (நித்தலும் - எந்நாளும்); (மத்தன் - ஊமத்த மலரைச் சூடியவன்); (நித்தலுமத்த - "நித்தலும் அத்த" என்றும் பிரிக்கல் ஆம். ஆனால் அப்படிப் பிரித்தால் அவ்விடத்தில் மோனை இராது. அத்த - தந்தையே);

கற்றவருக்கு மிகச் சுவையுற்றிடு கற்பக நற்கனி என ஆனாய் - உன்னை ஓதக் கற்றவர்களுக்கு மிகவும் இனிக்கும் கற்பக மரத்தின் நல்ல கனி என ஆனவனே; (சேந்தனார் அருளிய திருவிசைப்பா - 9.5.2 - "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்");

கைத்த விடத்தை மிடற்றில் அடைத்து - கசக்கின்ற விஷத்தைக் கண்டத்தில் ஒளித்து; (கைத்தல் - கசத்தல்);

ஒரு கச்சு என நச்சு-அரவு அணிவானே - ஒப்பற்ற கச்சாக விஷப் பாம்பை அரையில் கட்டியவனே; (நச்சு-அரவு - விஷப்பாம்பு);

எற்றையும் உற்றிடும் அற்புத - என்றும் இருக்கும் அற்புதனே; (எற்றையும் - என்றும்);

முக்கண - முக்கண்ணனே;

இட்டிடை உத்தமி மணவாளா - சிற்றிடையை உடைய உத்தமியான உமைக்குக் கணவனே; (இட்டிடை - சிறுகிய இடை); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.16 - "எம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து");

எற்று திரைக் கரை ஒற்றியில், நச்சினர் இட்டதைத் தரு பெருமானே - அலைகள் மோதும் கடற்கரையில் உள்ள திருவொற்றியூரில், (உன்னை) விரும்பிய அடியவர்கள் வேண்டும் வரத்தைத் தந்து அருளும் பெருமானே; (எற்றுதல் - மோதுதல்; அடித்தல்); (திரை - அலை; கடல்); (நச்சினர் - விரும்புபவர்; நச்சுதல் - விரும்புதல்); (இட்டம் - இஷ்டம்; விருப்பம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

madisūḍi 3.5.87) aṭravaraip puṟam vaittu (oṭriyūr - tiruvoṭriyūr)

--------------------------------------------------

(tattana tattana tattana tattana

tattana tattana .. tanadāna)

(pattar gaṇapriya - tiruppugaḻ - tirucceṅgōḍu)


aṭrava raippuṟam vaittiḻi vaittarum

..... aṟparai uṭravar .. enanāḍi

.. akkaṟai aṭreḻum iccai ugaittiḍa

..... appaḍi ippuvi .. tanil-āḍi

maṭravarukkiḻai kuṭramiguttaḻi

..... vaippeṟu sittamaduḍaiyēnum

.. vaṭri vinaittoḍar aṭriḍa nittalum

..... matta unaittoḻa .. aruḷāyē

kaṭravarukku migaccuvai uṭriḍu

..... kaṟpaga naṟkani .. enavānāy

.. kaitta viḍattai miḍaṭril aḍaittoru

..... kaccena naccaravu .. aṇivānē

eṭraiyum uṭriḍum aṟpuda mukkaṇa

..... iṭṭiḍai uttami .. maṇavāḷā

.. eṭru tiraikkarai oṭriyil naccinar

..... iṭṭamadaittaru .. perumānē.


aṭravaraip puṟam vaittu - Not keeping the company of devotees;

iḻivait tarum aṟparai uṭravar ena nāḍi - always being friendly with people of inferior qualities;

akkaṟai aṭru - without caring about the consequences;

eḻum iccai ugaittiḍa, appaḍi ip puvidanil āḍi - always doing things as driven by the uncontrolled desires;

maṭravarukku iḻai kuṭram miguttu - causing hurt to others;

aḻivaip peṟu sittamadu uḍaiyēnum - and as a result I experience never ending suffering;

vaṭri vinaittoḍar aṭriḍa, nittalum, matta unait toḻa aruḷāyē - O Siva wearing "Umatta" flowers! May You straighten my mind so that I will worship You always and thereby destroy all my karma;

kaṭravarukku migac cuvaiyuṭriḍu kaṟpaga naṟkani ena ānāy - O Siva, You are like the fruit of "kalpaka" tree enjoyed by Your devotees! ('Kalpa" is a tree in the heavens - that grants all the wishes) ;

kaitta viḍattai miḍaṭril aḍaittu - You withheld the bitter poison in Your throat;

oru kaccu ena naccuaravu aṇivānē - and wear a deadly cobra as Your belt!

eṭraiyum uṭriḍum aṟpuda - O Eternal Siva! O Wondrous one!

mukkaṇa - O Lord with three eyes!

iṭṭiḍai uttami maṇavāḷā - O Husband of slender-waist noble Uma;

eṭru tiraik karai oṭriyil, naccinar iṭṭamadait taru perumānē - O Lord dwelling in Tiruvotriyur situated on the sea-shore! O Siva who grants all the wishes of devotees!

======================

V. Subramanian

No comments:

Post a Comment