Friday, July 3, 2020

03.05.080 – அண்ணாமலை - பண்ணார் தமிழ்பாடிப் - (வண்ணம்)

03.05.080 – அண்ணாமலை - பண்ணார் தமிழ்பாடிப் - (வண்ணம்)

2009-01-19

03.05.080) பண்ணார் தமிழ்பாடிப் - (அண்ணாமலை - திருவண்ணாமலை)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தன்னா .. தனதான )


பண்ணார் .. தமிழ்பாடிப்

.. பன்னாள் .. தொழுவேனே

விண்ணோர் .. பெருமானே

.. வெம்மா .. வினைதீராய்

எண்ணா .. அயன்மாலார்

.. என்னே .. எனநேடி

அண்ணா .. நிலையானே

.. அண்ணா .. மலையானே.


பதம் பிரித்து:

பண் ஆர் தமிழ் பாடிப்

.. பன்னாள் தொழுவேனே;

விண்ணோர் பெருமானே;

.. வெம் மா வினை தீராய்;

எண்ணா அயன் மாலார்

.. "என்னே" என நேடி,

அண்ணா நிலையானே;

.. அண்ணாமலையானே.


பண் ஆர் தமிழ் பாடிப் பன்னாள் தொழுவேனே - பண் (இசை) பொருந்திய தமிழ்ப் பாமாலைகள் பாடிப் பல நாளும் உன்னைத் தொழுவேன்; (பன்னாள் - பல் நாள் - பல நாளும்; உம்மைத்தொகை); (பன்னாள் + தொழுவேனே = பன்னாடொழுவேனே);

விண்ணோர் பெருமானே - தேவர்கள் பெருமானே;

வெம் மா வினை தீராய் - எனது கொடிய பெரிய வினைகளைத் தீர்த்தருள்வாயாக; (வெம்மை - வெப்பம்; கடுமை);

எண்ணா அயன் மாலார் "என்னே" என நேடி, அண்ணா நிலையானே - (உன்னை) எண்ணாத பிரமனும் திருமாலும் (அவர்களிடையே சோதியாக நீ எழுந்தபொழுது) 'இஃது என்னே' என அதிசயித்து, (அதன் அடியையும் முடியையும்) தேடியும், அடையாத தன்மை உடையவனே; (என்னே - என்ன; ஓர் அதிசயக் குறிப்பு / இரக்கக் குறிப்பு); (நேடுதல் - தேடுதல்); (அண்ணுதல் - கிட்டுதல்); (நிலை - தன்மை);

அண்ணாமலையானே - திருவண்ணாமலையானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment