Saturday, April 30, 2016

03.01-41 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)

03.01 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)



01-23 Dec 2006
அண்ணாமலை அந்தாதி
--------------------------------------
(வெண்பா)
41)
ஒளிரும் மதியை உடைய சடையாய்!
மிளிர்கொன்றை சூடும் விமலா! தெளிந்த
மனத்தவர்போற் ண்ணா மலையாய்! அதைக்கண்
டுனைத்தொழுதேன்; என்நோ வொழி.



ஒளிரும் மதியை உடைய சடையாய்! - ஒளிர்கின்ற திங்களை அணிந்த சடையானே;
மிளிர் கொன்றை சூடும் விமலா! - மிளிர்கின்ற கொன்றைமலரைச் சூடிய தூயனே;
தெளிந்த மனத்தவர் போற்று அண்ணாமலையாய்! - ஞானியர் போற்றும் அண்ணாமலையானே;
அதைக் கண்டு உனைத் தொழுதேன்; என் நோவு ஒழி. - அவர்கள் போற்றுவதைக் கண்டு நானும் உன்னைத் தொழுதேன்; என் துன்பத்தைத் தீர்ப்பாயாக;


(திருநாவுக்கரசர் தேவாரம் - திருமுறை - 5.91.3 -
ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன்
ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு
ஞானத்தாய் உனை நானும் தொழுவனே. )



42)
ஒழிப்பாய் அடியார் உறுநோய்; கனலா
விழித்தாய் தவம்கெடுக்கும் வேளை; அழித்தாய்
அயன்அரி ஆணவம்; அண்ணா மலையாய்!
மயல்தீர்த் தெனக்ருள் வாய்!



ஒழிப்பாய் அடியார் உறுநோய்; - அடியவர்களை வருத்துகின்ற துன்பத்தை ஒழிப்பவனே;
கனலா விழித்தாய் தவம் கெடுக்கும் வேளை - உன் தவத்திற்கு இடையூறு செய்ய வந்த மன்மதனை நெற்றிக்கண்ணால் பார்த்துச் சாம்பலாக்கியவனே;
அழித்தாய் அயன் அரி ஆணவம்; - பிரமன் திருமால் இவர்களது அகந்தையை அழித்தவனே;
அண்ணாமலையாய்! மயல் தீர்த்து எனக்கு அருள்வாய்! - அண்ணாமலையானே; என் மயக்கத்தைத் தீர்த்து அருள்வாயாக;
(சுந்தரர் தேவாரம் - 7.61.3 - "... காம னைக்கன லாவிழித் தானை" - மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனை);



43)
வாய்தந்தாய் உன்னடியை வாழ்த்த! தொடர்பிறவி
நோய்தந்தாய் வாழ்த்தார்க்கு; நுண்ணியனே! ஆய்கின்ற
அன்பர்க்ருள்கின்ற அண்ணா மலையாய்!பேர்
இன்பனே! என்பேன் இனி.



வாய் தந்தாய் உன்டியை வாழ்த்த! - உன் திருவடியை வாழ்த்துவதற்கு வாயைத் தந்தவனே;
தொடர் பிறவிநோய் தந்தாய் வாழ்த்தார்க்கு; - அப்படி வாழ்த்தாத கல் நெஞ்சர்களுக்குத் தொடர்ந்து வரும் பிறவி என்ற நோயைத் தந்தவனே;
நுண்ணியனே! ஆய்கின்ற அன்பர்க்கு அருள்கின்ற அண்ணா மலையாய்! - மிகவும் நுட்பமானவனே; உன்னை எண்ணும் அன்பர்களுக்கு அருள்கின்ற அண்ணாமலையானே;
பேரின்பனே! என்பேன் இனி. - பேரின்ப வடிவானவனே என்றே இனி என்றும் சொல்வேன்;


(தொடர்பிறவி - தொடர்கிற பிறவி;
நுண்ணியன் - மிகவும் சிறிய பொருளாய் இருப்பவன்;
ஆய்தல் - ஆராய்தல்;
இனி - இப்பொழுது; இனிமேல்;)



44)
இனியவர் இன்னார் இலாத இறைவா!
பனிமலை மேவும் பரமா! புனிதா!
செருக்கழிக்கும் தீத்திரளே! செல்வமே! என்நெஞ்
சுருக்கிட வாராய் உடன்.



இனியவர் இன்னார் இலாத இறைவா! - வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவனே; (எல்லாரையும் சமமாக நோக்குபவன்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - சலம் இலன் சங்கரன்" - மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான்);
பனிமலை மேவும் பரமா! புனிதா! - கயிலமைலையானே; பரமனே; புனிதனே;
செருக்கு அழிக்கும் தீத்திரளே! செல்வமே! - பிரமன் விஷ்ணு இவர்களது ஆணவத்தை அழித்த சோதியே; செல்வனே;
என் நெஞ்சு உருக்கிட வாராய் உடன் - விரைவில் வந்து அருள்புரிந்து, என் நெஞ்சு உனக்கு உருகும்படி செய்வாயாக;


(இன்னார் - பகைவர்;
பனி மலை - கயிலை மலை;
செருக்கு - கர்வம்; ஆணவம்;
தீத்திரள் - தீயின் திரட்சி;)



45)
உடன்இருந்து காக்கும் ஒருதுணை நீயே!
கடல்நஞ்சை வைத்தாய் கழுத்தில்; சுடலை
மகிழ்ஈசா! அண்ணா மலையானே! என்று
நெகிழுமே என்னுடைய நெஞ்சு.



உடன் இருந்து காக்கும் ஒரு துணை நீயே! - கூடவே இருந்து காக்கின்ற ஒப்பற்ற துணை நீயே;
கடல்நஞ்சை வைத்தாய் கழுத்தில்; - கடல்விடத்தைக் கண்டத்தில் தரித்தவனே;
சுடலை மகிழ் ஈசா! அண்ணாமலையானே! என்று நெகிழுமே என்னுடைய நெஞ்சு. - சுடுகாட்டையே இடமாக விரும்பும் ஈசனே; அண்ணாமலையானே என்றெல்லாம் உன்னை அழைத்து என் மனம் உருகும்;



46)
நெஞ்சில் குடிகொண்டாய் நீ,ஈசா! தேவர்கள்
கெஞ்ச விடமுண்டாய்! கீழ்மேலாய்ச் செஞ்சுடராய்
நீண்டாய்!அண் ணாமலையாய் நின்றாய்!யான் வேறேதும்
வேண்டேன்,நீ உள்ளிருக்க வே.



நெஞ்சில் குடிகொண்டாய் நீ, ஈசா!
தேவர்கள் கெஞ்ச விடம் உண்டாய்!
கீழ்மேலாய்ச் செஞ்சுடராய் நீண்டாய்!
அண்ணாமலையாய் நின்றாய்!
யான் வேறு ஏதும் வேண்டேன், நீ உள்ருக்கவே.
(வேறு ஏதும் - வேறு எதுவும்;)


(உரைநடை அமைப்பில்:
ஈசா! தேவர்கள் கெஞ்ச விடம் உண்டாய்! செஞ்சுடராய்க் கீழ் மேலாய்
நீண்டாய்! அண்ணாமலையாய் நின்றாய்! நீ நெஞ்சில் குடி கொண்டாய்!
நீ உள் இருக்கவே, யான் வேறு ஏதும் வேண்டேன்.)



47)
இருக்கமாட் டாய்சும்மா; என்றும் வினையே
பெருக்கவேட் டாய்;பெருமை பேசிச் செருக்கினாய்;
தாணுவை,அண் ணாமலையைச் சற்றாவ(து), என்நெஞ்சே,
பேணுவாய் இன்பம் பெற;



இருக்கமாட்டாய் சும்மா; என்றும் வினையே பெருக்க வேட்டாய்; பெருமை பேசிச் செருக்கினாய்;
தாணுவை, அண்ணாமலையைச் சற்றாவது, என் நெஞ்சே,
பேணுவாய் இன்பம் பெற;


(உரைநடை அமைப்பில்:
என் நெஞ்சே! சும்மா இருக்கமாட்டாய்; என்றும் வினையே பெருக்க வேட்டாய்; பெருமை பேசிச் செருக்கினாய்;
இன்பம் பெறத், தாணுவை, அண்ணாமலையைச் சற்றாவது பேணுவாய்;)


வேட்டல் - விரும்புதல்;
செருக்குதல் - அகந்தைகொள்ளுதல்;
தாணு - சிவன்; தூண்; பற்றுக்கோடு;
பேணுதல் - போற்றுதல்; வழிபடுதல்;



48)
இன்பம் பெறவேண்டில் என்பேச்சைக் கேள்நெஞ்சே!
என்பும் அரவுமணி ஈசனுக்ன்புவைப்பாய்;
அஞ்செழுத்தை ஓதினால் அண்ணா மலைஅரன்
அஞ்சல் அளிப்பான் அறி.



இன்பம் பெற வேண்டில், என் பேச்சைக் கேள் நெஞ்சே!
என்பும் அரவும் அணி ஈசனுக்கு அன்பு வைப்பாய்;
அஞ்செழுத்தை ஓதினால் அண்ணாமலை அரன்
அஞ்சல் அளிப்பான் அறி.


(மனமே! நீ இன்பம் அடைய வேண்டுமானால், என்னுடைய சொல்லைக் கேட்பாயாக! மண்டை ஓட்டையும் பாம்பையும் மாலையாக அணிகிற ஈசனாகிய சிவன்மீது பக்திகொள்வாய். அச்சிவனுடைய நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரத்தை ஓதுபவர்களுக்குத், திருவண்ணாமலை அரன் அபயம் அளிப்பான் என்பதை உணர்வாயாக!)



49)
அறியார் அடிமுடி அங்கிருவர்; அன்பு
நெறியால் அடையலாம்; நீரும் வெறியார்
மலரும்கொண்ண்ணா மலையான்தாள் போற்ற,
விலகுமே நம்தீ வினை.



அறியார் அடிமுடி அங்கு இருவர்;
அன்பு நெறியால் அடையல் ஆம்;
நீரும் வெறிர் மலரும்கொண்டு அண்ணாமலையான் தாள் போற்ற,
விலகுமே நம் தீ வினை.


(அன்பு நெறியால் அடையல் ஆம் - பக்தி மார்க்கத்தால் அடைய இயலும்;
வெறி ஆர் மலர் - வாசம் பொருந்திய மலர்;)



50)
வினைத்தொடர்அற் றின்பம் விளைய, மனமே,
நினைத்டி போற்று நிதமும் - தனத்தொடு
வானளிப்பான் அண்ணா மலையான்; அவன்அருளால்
ஊனமற்றுள் ஓங்கும் ஒளி.



வினைத்தொடர் அற்று இன்பம் விளைய, மனமே,
நினைத்து அடி போற்று நிதமும்;
தனத்தொடு வான் அளிப்பான் அண்ணாமலையான்;
அவன் அருளால் ஊனம் அற்று உள் ஓங்கும் ஒளி.


வினைத்தொடர் அற்று இன்பம் விளைய - பழவினைகள் நீங்கி இன்பம் உண்டாக;
மனமே, நினைத்து அடி போற்று நிதமும் - நெஞ்சே, நீ தினமும் சிவனை எண்ணி அவன் திருவடியை வணங்கு; (நிதமும் - தினமும்);
தனம் - செல்வம்; பணம்;
வான் - விண்ணுலகம்;
ஊனம் - குற்றம்; குறைவு; தீமை;
உள் - உள்ளே; மனம்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



No comments:

Post a Comment