01.29 – பொது - தட்சிணாமூர்த்தி போற்றி-2
2008-03-26
தட்சிணாமூர்த்தி போற்றி - 2
-----------------------------------
(கலி விருத்தம் - "மா மா மா மா" என்ற வாய்பாடு)
(12 பாடல்கள்)
1)
பாலில் நெய்போல் பயில்வாய் போற்றி
ஆலின் அடியில் அமர்வாய் போற்றி
நூலின் பொருளை நுவல்வாய் போற்றி
மாலின் இருள்தீர் மதியே போற்றி.
பயில்தல்
-
தங்குதல்
(to
stay, abide, reside);
நூல்
-
வேதம்,
ஆகமம்;
நுவல்தல்
-
சொல்லுதல்
(to
say, speak, declare, utter);
மால்
-
மயக்கம்
(illusion,
delusion, aberration of mind; dullness; stupor; confusion);
இருள்
-
துன்பம்;
அந்தகாரம்
(darkness);
மயக்கம்
(mental
delusion, clouded state of mind); அஞ்ஞானம்
(spiritual
ignorance concerning god);
மதி
-
அறிவு;
ஞானம்;
மாலின்
இருள்தீர் மதியே -
அஞ்ஞானத்தால்
உண்டாகும் துன்பத்தினை
நீக்குகின்ற அறிவுவடிவு
ஆனவனே;
2)
வேலை விடம்சேர் மிடற்றாய் போற்றி
மேலை வினைதீர் விமலா போற்றி
காலை உதிக்கும் கதிரே போற்றி
மாலை நீக்கும் மருந்தே போற்றி.
வேலை
-
கடல்;
மிடற்றாய்
-
கண்டத்தை
உடையவனே;
(மிடறு
-
கழுத்து);
மேலை
வினை -
ஆகாமியம்
(karma
which is yet to come, actions good and bad of the present life which
are expected to bring their rewards in future births);
விமலன்
-
மலம்
அற்றவன்;
பரிசுத்தமானவன்;
கதிர்
-
சூரியன்;
(காலை
உதிக்கும் சூரியன் போல்
செந்நிறம் உடையவன்);
மால்
-
மயக்கம்
(illusion,
delusion, aberration of mind; dullness; stupor; confusion);
மருந்து
-
அமிர்தம்;
ஔஷதம்
(medicine);
3)
சின்முத் திரைசேர் கையாய் போற்றி
சன்மத் தொடரைத் தடுப்பாய் போற்றி
புன்மை தீர்க்கும் புனிதா போற்றி
நன்மை நல்கும் நாதா போற்றி.
சின்முத்திரை
-
Hand-pose assumed by a guru while giving spiritual instruction;
சன்மத்
தொடர் -
பிறவித்
தொடர்;
தடுத்தல்
-
தடைசெய்தல்;
விலக்குதல்
(to
ward off, avert);
புன்மை
-
இழிவு
(meanness,
lowness, vileness); குற்றம்
(fault);
4)
ஆசான் ஆகி அமர்வாய் போற்றி
பேசா துரைக்கும் பிரானே போற்றி
ஆசா பாசம் அறுப்பாய் போற்றி
நேசா கல்லால் நிழலா போற்றி.
ஆசாபாசம்
-
ஆசையாகிய
பந்தம் (noose
of desire);
கல்லால்
-
ஆலமர
வகைகளுள் ஒன்று;
நிழல்
-
ஸ்தானம்
(place);
5)
கறையை உடைய கண்டா போற்றி
பிறையை அணிபூ ரணனே போற்றி
குறைகள் தீர்க்கும் கோவே போற்றி
மறைகள் சொல்லும் மணியே போற்றி.
பிறையை
அணி பூரணன்
-
பிறைச்சந்திரனை
அணிந்த முழுமுதல்;
கோ
-
தலைவன்;
அரசன்;
6)
உறவில் லாதார்க்(கு) உறவே போற்றி
இறவில் லாத ஈசா போற்றி
பிறவிப் பிணிக்கு மருந்தே போற்றி
அறவ ஆல மர்ந்தாய் போற்றி.
(சுந்தரர்
தேவாரம் -
திருமுறை
7.70.6
-
“குறைவிலா
நிறைவே.....
உறவிலேன்
உனையன்றி.....
அறவனே
எனை அஞ்சல் என்றருளாய் ஆர்
எனக்குறவு அமரர்கள் ஏறே")
இறவு
-
சாவு
(death);
அறவ
– அறவனே;
(அறவன்
-
அறவடிவினன்);
ஆல்
அமர்ந்தாய் -
ஆலமரத்தின்கீழ்
அமர்ந்தவனே;
7)
உழையின் உரியை உகந்தாய் போற்றி
பழைய வினைதீர் பரமா போற்றி
குழைய ணிந்த குழகா போற்றி
அழக ஆல மர்ந்தாய் போற்றி.
உழை
-
மான்
(deer);
உரி
-
தோல்;
(அப்பர்
தேவாரம் -
திருமுறை
-
6.47.7 - “உழையுரித்த
மானுரிதோ லாடை யானே”)
உகத்தல்
-
மகிழ்தல்;
விரும்புதல்
குழை
-
குண்டலம்
(a
kind of earring) – ஆண்கள்
காதில் அணிவது;
குழக
– குழகனே;
(குழகன்
-
இளையோன்
(youth);
அழகன்
(beautiful
person) );
அழக
– அழகனே;
8)
மானை ஏந்தெம் மானே போற்றி
வானைக் கடந்து வளர்வாய் போற்றி
மோனத் தாலே மொழிவாய் போற்றி
ஞானச் சுடரே போற்றி போற்றி.
எம்மான்
-
எம்
சுவாமி (our
lord);
மோனம்
-
மௌனம்;
ஞானச்சுடர்
-
[ஞான
ஒளியாய் இருப்பவன்]
கடவுள்
(God,
as the embodiment of Spiritual Light);
9)
தன்போல் இல்லாத் தனியாய் போற்றி
இன்பால் ஆடும் இறைவா போற்றி
தென்பால் நோக்கும் தேவே போற்றி.
அன்பர்க் கறங்கள் அருள்வாய் போற்றி.
தனியன்
-
ஒன்றியானவன்.
(தனி
-
ஒப்பின்மை
(Uniqueness,
matchlessness) ); (தனியாய்
-
ஏகனாய்
இருப்பவனே);
(திருவாசகம்
-
திருச்சாழல்
-
8.12.3 - "தாயுமிலி
தந்தையிலி தான்தனியன்...");
(அப்பர்
தேவாரம் -
5.96.3 - “உலகம்
முழுது ஆளினும் தனியாய் நீ”);
இன்
பால் ஆடுதல் -
இனிய
பாலால் அபிஷேகம் செய்யப்
பெறுதல்;
தென்
பால் -
தென்
திக்கு;
10)
சத்தி இணையும் சத்தே போற்றி
அத்தி முகத்தன் அத்தா போற்றி
சித்தி அளிக்கும் சித்தே போற்றி
முத்தி அளிக்கும் முத்தே போற்றி.
சத்தி
-
சக்தி
-
உமை;
பார்வதி;
சத்து
-
மெய்ப்பொருள்;
என்றும்
உள்ளது (That
which exists through all times, the Imperishable);
அத்தி
முகத்தன் -
யானை
முகம் உடைய கணபதி -
விநாயகர்;
அத்தன்
-
தந்தை;
சித்தி
-
கைகூடுகை
(Success,
realization, attainment); மோட்சம்
(Final
liberation);
சித்து
-
அறிவு
(Intellect,
intelligence); அறிவுடைப்
பொருள் (Intelligent
being);
முத்தி
-
முக்தி;
11)
முன்பின் இல்லா முதல்வா போற்றி
இன்பின் வடிவாய் இருப்பாய் போற்றி
அன்பி னால்ஆல் அமர்வாய் போற்றி
துன்பின் கருவைத் துடைப்பாய் போற்றி.
முன்
பின் இல்லா முதல்வன்
-
காலத்தைக்
கடந்தவன்;
இன்பின்
வடிவு -
ஆனந்த
சொரூபி;
(இன்பு
-
இன்பம்);
அன்பு
-
கருணை;
நேசம்;
துன்பின்
கரு -
துன்பத்திற்கு
மூலமான வினை;
(துன்பு
-
துன்பம்);
துடைத்தல்
-
அழித்தல்;
நீக்குதல்;
12)
கோதி லாத குணத்தாய் போற்றி
நீதி வழுவார் நேசா போற்றி
போதிக் கின்ற பொருளே போற்றி
ஆதி குருவே போற்றி போற்றி.
கோது
-
குற்றம்
(fault,
blemish, defect, error);
நீதி
-
ஒழுக்கநெறி
(right
conduct, morality);
நேசன்
-
அன்பன்;
பொருள்
-
மெய்ப்பொருள்
-
கடவுள்
(god);
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
எளிய தமிழில் அருமை அளிப்பு
ReplyDelete