01.16 – ஆரூர் - (திருவாரூர்)
2008-01-01
திருவாரூர்
-------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
1)
கண்ணிருந்தும் குருடனெனக் காலத்தைக் கழிப்பதற்கே
எண்ணுகிற என்மனமே; இருவிழியும் இல்லாது
மண்ணகழ்ந்து குளம்வெட்டி மகிழ்தண்டிக்(கு) எம்பெருமான்
தண்ணருள்செய் தலம்ஆரூர் தன்னையடைந்(து) உய்வாயே.
பதம்
பிரித்து:
கண்
இருந்தும் குருடன் எனக்
காலத்தைக் கழிப்பதற்கே
எண்ணுகிற
என் மனமே;
இரு
விழியும் இல்லாது
மண்
அகழ்ந்து குளம் வெட்டி மகிழ்
தண்டிக்கு எம்பெருமான்
தண்
அருள்செய் தலம் ஆரூர்தன்னை
அடைந்து உய்வாயே.
தண்டி
-
தண்டியடிகள்
நாயனார்;
(தண்டியடிகள்
வரலாற்றைப் பெரிய புராணத்திற்
காண்க);
தண்
அருள்
-
குளிர்ந்த
திருவருள்;
(சம்பந்தர்
தேவாரம் -
திருமுறை
2.75.11
- 'கண்ணு
மூன்று....தண்ணருள்
பேணி....');
ஆரூர்தன்னை
-
திருவாரூரை;
2)
இளம்பெண்டிர் பொருள்இவற்றின் ஈர்ப்பினிலே உழன்றுழன்று
தளர்கின்ற மடநெஞ்சே; தன்கண்கள் காணாதும்
குளம்வெட்டும் தண்டிக்குக் கொன்றையணி முக்கண்ணன்
அளப்பரிய அருள்செய்த ஆரூரை அடைவாயே.
ஈர்ப்பு
-
இழுப்பு;
உழலுதல்
-
அலைதல்;
நிலைகெடுதல்;
தளர்தல்
-
சோர்ந்து
போதல்;
மட
நெஞ்சே -
பேதை
மனமே;
தன்கண்கள்
காணாதும் -
தன்னுடைய
கண்கள் பார்வையில்லாதபோதும்;
கொன்றை
அணி முக்கண்ணன் -
கொன்றை
மலர் அணிகின்ற,
மூன்று
கண்கள் உடைய சிவன்;
அளப்பு
அரிய அருள் -
அளவு
இல்லாத அருள் -
பேரருள்;
3)
புலனாசை மிகவாகிப் பொல்லாங்கே புரிந்துபெற்ற
பலன்யாது; கண்களிலே பார்க்கின்ற திறன்சிறிதும்
இலர்ஆன தண்டிசெய்த இறைபணியை ஏற்றுவிழி
நலம்ஆக்கும் ஈசனுறை நல்ஆரூர் அடைநெஞ்சே.
பதம்
பிரித்து:
புலன்
ஆசை மிக ஆகிப் பொல்லாங்கே
புரிந்து பெற்ற
பலன்
யாது;
கண்களிலே
பார்க்கின்ற திறன் சிறிதும்
இலர்
ஆன தண்டி செய்த இறை பணியை
ஏற்று,
விழி
நலம்
ஆக்கும் ஈசன் உறை நல் ஆரூர்
அடை நெஞ்சே.
பொல்லாங்கு
-
தீமை;
கேடு;
யாது
-
என்ன?
இறைபணி
-
திருத்தொண்டு;
4)
உயிர்வளர்க்கும் வழிஒன்றும் உணராமல் தீவினையாம்
பயிர்வளர்க்கும் மடநெஞ்சே; பலர்சிரித்தும் கண்ணின்றிக்
கயிறுகட்டிக் குளம்வெட்டிக் கைங்கரியம் செய்தண்டிக்(கு)
எயில்எரித்தான் அருள்புரிந்த இடம்ஆரூர் அடைவாயே.
உயிர்
-
ஆன்மா;
ஆம்
-
An appositional particle – ஆகிய;
கைங்கரியம்
செய் தண்டிக்கு -
திருத்தொண்டு
செய்த தண்டியடிகளுக்கு;
எயில்
எரித்தான் -
முப்புரங்கள்
எரித்த சிவன்;
5)
பெண்டிர்க்கும் பொருளுக்கும் பித்தாகி உடல்பெருக்கும்
உண்டிக்கே தினந்தோறும் உழல்கின்ற மடநெஞ்சே;
தண்டிக்குக் கண்ணிரண்டும் தந்தசிவன் உறைகின்ற
எண்டிக்கும் போற்றுகிற எழில்ஆரூர் அடைவாயே.
உண்டி
-
உணவு;
தண்டி
-
தண்டி
அடிகள் நாயனார்;
எண்டிக்கும்
-
எண்
திக்கும் -
எட்டுத்
திசைகளும் -
உலக
மக்கள் எல்லாம்;
6)
உய்கின்ற வழிஉணரா(து) ஓயாமல் உழன்றுழன்று
தொய்கின்ற மடநெஞ்சே; தொட்டுணர்ந்து குளம்வெட்டி
நைகின்ற தண்டிக்கு நம்பெருமான் இன்னருள்கள்
செய்கின்ற தலமான திருவாரூர் அடைவாயே.
தொய்கின்ற
-
சோர்கின்ற;
தொட்டு
உணர்ந்து -
பார்வை
இல்லாததால் கயிற்றைத் தொட்டு
உணர்ந்து செல்லுதல்;
நைகின்ற
-
மனம்
உருகுகின்ற;
இன்
அருள்கள் -
இனிய
அருள்கள்;
(அப்பர்
தேவாரம் -
திருமுறை
6.49.10
- 'கையாற்
கயிலை யெடுத்தான் தன்னைக்.....
மீண்டே
அவற்குஅருள்கள் நல்கி
னான்காண்....');
7)
அழிகின்ற உடல்மேலே ஆசையுற்றுத் தீவினைசெய்(து)
இழிகின்ற என்மனமே; இருவிழியும் இல்லாதும்
கழியூன்றிக் கைப்பணிசெய் தண்டியடி களுக்கருளும்
விழிமூன்று காட்டுசிவன் ஆரூரை விழைவாயே.
கழி
ஊன்றி -
கோலை
நட்டு;
கைப்பணி
-
கையால்
செய்யும் தொண்டு;
(காரைக்கால்
அம்மையார் -
அற்புதத்
திருவந்தாதி -
11.4.72 - “கண்டெந்தை
என்றிறைஞ்சிக் கைப்பணியான்
செய்யேனேல்”);
விழி
மூன்று காட்டு சிவன் -
மூன்று
கண்கள் உடைய சிவன்;
விழைதல்
-
விரும்புதல்;
8)
விதிஎல்லாம் எளிதாக வென்றுவிடும் வழிஉண்டே
மதியில்லா இராவணனை மலையின்கீழ் நெரித்தவனே
கதிநீயே என்றிருந்த தண்டிக்குக் கண்தந்த
பதிஆகும் ஆரூர்போய்ப் பணிவாயே மடநெஞ்சே.
உரைநடை:
மட
நெஞ்சே!
விதி
எல்லாம் எளிதாக வென்றுவிடும்
வழி உண்டே;
'மதி
இல்லா இராவணனை மலையின்கீழ்
நெரித்தவனே!
கதி
நீயே!'
என்று
இருந்த தண்டிக்குக் கண் தந்த
பதி ஆகும் ஆரூர் போய்ப் பணிவாயே.
பதி
-
தலம்;
9)
மண்ணுக்கும் விண்ணுக்கும் அப்பாலாய் மால்பிரமன்
கண்ணுக்குத் தெரியாத கழல்முடியை உடையசெந்தீ
வண்ணத்தன், வந்திக்கும் தண்டிக்கின் னருள்செய்த
அண்ணிக்கும் அரன்உறையும் ஆரூரை அடைநெஞ்சே.
செம்
தீ வண்ணத்தன் -
சிவந்த
தீ உரு ஆனவன்;
வந்தித்தல்
-
போற்றுதல்;
அண்ணித்தல்
-
தித்தித்தல்;
மண்ணுக்கும்
விண்ணுக்கும் அப்பால் ஆய்
-
எல்லா
அண்டங்களையும் கடந்து நின்று;
மால்
பிரமன் கண்ணுக்குத் தெரியாத
கழல் முடியை உடைய செம் தீ
வண்ணத்தன் -
திருமாலாலும்
பிரமனாலும்
காண இயலாத திருவடியையும்
திருமுடியையும் உடைய சிவந்த
தீ உரு ஆனவன்;
வந்திக்கும்
தண்டிக்கு இன் அருள்செய்த
– வணங்கிய தண்டி
அடிகளுக்கு இனிய அருள்புரிந்த;
அண்ணிக்கும்
அரன் உறையும் ஆரூரை அடை நெஞ்சே
-
(பக்தர்களுக்குத்)
தித்திக்கும்
சிவன் உறைகிற திருவாரூரைச்
சென்று அடை மனமே.
10)
மறைநெறியைத் துறந்தெங்கள் வழியேற்று வருகவென்னும்
புறநெறிகள் புகல்கின்ற பொய்களிலே மயங்காமல்
அறநெறியில் நிற்பவர்கள் அன்பன்தண் டிக்கருளும்
இறையவன்முக் கண்ணனுறை எழில்ஆரூர் எய்துவரே.
பதம்
பிரித்து:
மறை
நெறியைத் துறந்(து)
எங்கள்
வழி ஏற்று வருக என்னும்
புற
நெறிகள் புகல்கின்ற பொய்களிலே
மயங்காமல்
அற
நெறியில் நிற்பவர்கள்,
அன்பன்
தண்டிக்(கு)
அருளும்
இறையவன்
முக்கண்ணன் உறை எழில் ஆரூர்
எய்துவரே.
மறை
நெறி -
வேதநெறி;
புற
நெறி -
பரசமயங்கள்;
அற
நெறி -
தர்ம
மார்க்கம் (Path
of virtue);
அன்பன்
-
பக்தன்;
எழில்
ஆரூர் -
அழகிய
திருவாரூர்;
எய்துதல்
-
அடைதல்;
11)
நேர்வழியிற் செல்வதற்கு நினையாத மடநெஞ்சே
நீர்வழியும் சடையுடைய நிமலன்தாள் போற்றிவந்த
பார்வையிலாப் பத்தன்தண் டிக்கருளும் பரமனுறை
ஊர்வளங்கள் மலிகின்ற ஆரூர்சென் றுய்வாயே.
பதம்
பிரித்து:
நேர்
வழியில் செல்வதற்கு நினையாத
மட நெஞ்சே;
நீர்
வழியும் சடை உடைய நிமலன் தாள்
போற்றி வந்த
பார்வை
இலாப் பத்தன் தண்டிக்(கு)
அருளும்
பரமன் உறை
ஊர்,
வளங்கள்
மலிகின்ற ஆரூர் சென்(று)
உய்வாயே.
நிமலன்
-
மலம்
இல்லாதவன் -
சிவன்;
நினையாத
– எண்ணாத;
தாள்
-
திருவடி;
பரமன்
உறை ஊர் -
வினைத்தொகை
-
பரமன்
உறைகின்ற
ஊர்;
மலிகின்ற
-
மிகுந்து
இருக்கின்ற;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
திருவாரூர் - கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=598 )
No comments:
Post a Comment