01.23 – நாகேச்சரம் - போற்றி-1
Verses & Meaning in English - please see bottom half of this page.
2008-03-03
திருநாகேச்சரம் - போற்றி-1 - (திருநாகேஸ்வரம்)
நாகவீச்சரவனே போற்றி
-------------------------------
(எண்சீர் விருத்தம் - "விளம் விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு. 1-5 சீர்களில் மோனை)
1)
அக்கரம் ஐந்தென நின்றாய் போற்றி
.. அனைத்துல கங்களும் படைத்தாய் போற்றி
சக்கரம் மாலினுக்(கு) அளித்தாய் போற்றி
.. தனக்கொரு நிகரிலாத் தலைவா போற்றி
அக்கர(வு) அணிகிற அரனே போற்றி
.. அடிதொழும் அன்பருக்(கு) அரணே போற்றி
நக்கெயில் மூன்றெரி நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.
2)
அங்கையில் மழுவுடை யானே போற்றி
.. அரவினைக் கயிறென அணிவாய் போற்றி
திங்களை முடியினில் வைத்தாய் போற்றி
.. திரிபுரம் தீயெழச் சிரித்தாய் போற்றி
கங்கையைச் சடையினில் கரந்தாய் போற்றி
.. கருநிறம் ஒளிர்கிற கண்டா போற்றி
நங்கையோர் பங்குடை நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.
3)
அச்சிற மலரடி இட்டாய் போற்றி
.. அத்திரம் எனநகை செய்தாய் போற்றி
அச்சம கற்றிடும் அரனே போற்றி
.. அருவிடம் அருந்திய அமுதே போற்றி
இச்சகத் தினைப்படைத் தவனே போற்றி
.. எங்கணும் நிறைந்தஎம் மானே போற்றி
நச்சர வணிகிற நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.
4)
அஞ்செழுத் தாகிய அரனே போற்றி
.. அன்பரின் நெஞ்சினில் உறைவாய் போற்றி
வெஞ்சரத் தால்புரம் எரித்தாய் போற்றி
.. வெண்ணிற எருதினில் வருவாய் போற்றி
மஞ்சினில் தவழ்மதி அணிவாய் போற்றி
.. வான்நதி சடையினில் வைத்தாய் போற்றி
நஞ்சினை அருந்திய நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.
5)
இட்டமாய்த் தொழுபவர்க்(கு) இனியாய் போற்றி
.. ஏற்றினில் வருகிற எந்தாய் போற்றி
மட்டிலாச் சோதியாய் வளர்ந்தாய் போற்றி
.. மாதவர் போற்றிடும் மணியே போற்றி
சுட்டநீ(று) அணிகிற அரனே போற்றி
.. சூழ்வினை களைந்தருள் புரிவாய் போற்றி
நட்டம தாடிடும் நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.
6)
கண்ணினால் காமனை எரித்தாய் போற்றி
.. காலினால் காலனை உதைத்தாய் போற்றி
வெண்ணிற எருதமர் வேந்தே போற்றி
.. விடம்திகழ் கருநிற மிடற்றாய் போற்றி
பண்ணிய வினைகளைத் தீர்ப்பாய் போற்றி
.. பாவையோர் பங்கென உடையாய் போற்றி
நண்ணினார்க்(கு) அரண்என ஆனாய் போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.
7)
அந்தியின் செந்நிற அழகா போற்றி
.. அடியவர்க் கருள்கிற அப்பா போற்றி
வெந்துயர் தீர்க்கும் விமலா போற்றி
.. வேண்டுவ தளிக்கிற வரதா போற்றி
சந்திரன் திகழ்முடி உடையாய் போற்றி
.. தலம்பல எழுந்தருள் தலைவா போற்றி
நந்தியென் றொருபெயர் உடையாய் போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.
இலக்கணக் குறிப்பு: திருத்தாண்டகத்தில் பொதுவாகக் "காய் காய் மா தேமா" என்ற அரையடி அமைப்பு. ஒரோவழி (சில சமயம்) காய்ச்சீர் வருமிடத்தில் விளம் / மா வரும். அப்படிக் காய்ச்சீர் வருமிடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.
இந்தப் பதிகம் திருத்தாண்டக அமைப்பை ஒத்தது; ஆனால், காய்ச்சீர் வரும் இடத்தில் விளச்சீர் வரும் அமைப்பு. அதனால், விளம் வரும் இடத்தில் "தீர்க்கும்" என்று மாச்சீர் வரவும், அடுத்த சீர் "விமலா" என்று நிரையசையில் தொடங்கிகுகின்றது.
8)
அம்புலி சூடிய அழகா போற்றி
.. அருவினை அழித்திடும் அரனே போற்றி
வெம்புலித் தோல்அணி விகிர்தா போற்றி
.. விறல்அழித் தரக்கனை அடர்த்தாய் போற்றி
கொம்புள ஏறமர் கோவே போற்றி
.. கொடியிடை உமையொரு கூறா போற்றி
நம்புவார்க் கருள்கிற நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.
9)
எல்லையில் சோதியாய் எழுந்தாய் போற்றி
.. இருவரால் அறியவொண் ணாதாய் போற்றி
கல்லையும் மலர்என ஏற்பாய் போற்றி
.. கருமுகில் போல்ஒளிர் கண்டா போற்றி
அல்லலை அகற்றிடும் அரனே போற்றி
.. ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
நல்லவர் மனத்துறை நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.
10)
வெற்றிகொள் விடையமர் வீரா போற்றி
.. வெங்கணை யால்புரம் எரித்தாய் போற்றி
புற்றர வணிகிற புனிதா போற்றி
.. புறனுரை மதத்தவர்க் கெட்டாய் போற்றி
குற்றமில் அடியவர்க் கெளியாய் போற்றி
.. கோயிலா அவர்மனம் கொள்வாய் போற்றி
நற்றுணை ஆகிற நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
நாகேச்சரம் - திருநாகேஸ்வரம்- கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=918
தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=164 )
==========================
madisūḍi tudipāḍi - padigam 1.23 - nāgēccaram - (tirunāgēsvaram)
nāgavīccaravanē pōṭri
---------------------------------
1)
akkaram aindena niṇḍrāy pōṭri
.. anaittu ulagaṅgaḷum paḍaittāy pōṭri
sakkaram mālinukku aḷittāy pōṭri
.. tanakkoru nigarilāt talaivā pōṭri
akkaravu aṇigiṟa aranē pōṭri
.. aḍi-toḻum anbarukku araṇē pōṭri
nakkeyil mūṇḍreri nādā pōṭri
.. nāgavīccaravanē pōṭri pōṭri.
(pōṭri = I worship you. My salutations.)
O Siva in the form of Holy five letters!
O Creator of all the worlds!
O Giver of Chakrayudham to Vishnu!
O Lord with no equal!
O Hara wearing bones and snakes!
O Protector of devotees!
O Destroyer of the 3 forts by a laugh!
O Siva dwelling in Thirunageswaram! I worship you! My salutations!
2)
aṅgaiyil maḻu uḍaiyānē pōṭri
.. aravinaik kayiṟena aṇivāy pōṭri
tiṅgaḷai muḍiyinil vaittāy pōṭri
.. tiri-puram tīyeḻac cirittāy pōṭri
kaṅgaiyaic caḍaiyinil karandāy pōṭri
.. karuniṟam oḷirgiṟa kaṇḍā pōṭri
naṅgaiyōr paṅguḍai nādā pōṭri
.. nāgavīccaravanē pōṭri pōṭri.
O Siva holding a battle-axe!
O Siva wearing a snake as a belt on Your waist!
O Wearer of the moon on Your head!
O Siva who laughed and burned down the three forts!
O Concealer of Ganga in Your matted locks!
O Siva with a shining dark-throat!
O Lord who has Uma as one half!
O Siva dwelling in Thirunageswaram! I worship you! My salutations!
3)
acciṟa malaraḍi iṭṭāy pōṭri
.. attiram ena-nagai seydāy pōṭri
accam agaṭriḍum aranē pōṭri
.. aruviḍam arundiya amudē pōṭri
iccagattinaip paḍaittavanē pōṭri
.. eṅgaṇum niṟainda emmānē pōṭri
naccaravu aṇigiṟa nādā pōṭri
.. nāgavīccaravanē pōṭri pōṭri.
O Lord who climbed on a chariot and broke its axle (at the time of Tripura Samharam)!
O Lord whose was the arrow that burned down the three forts!
O Hara, the destroyer of our fear!
O Divine nectar that ate the Halahala poison!
O Creator of this world!
O Omnipresent Lord!
O Lord wearing deadly snakes!
O Siva dwelling in Thirunageswaram! I worship you! My salutations!
4)
añjeḻuttu āgiya aranē pōṭri
.. anbarin neñjinil uṟaivāy pōṭri
veñjarattāl puram erittāy pōṭri
.. veṇṇiṟa erudinil varuvāy pōṭri
mañjinil tavaḻ-madi aṇivāy pōṭri
.. vānnadi saḍaiyinil vaittāy pōṭri
nañjinai arundiya nādā pōṭri
.. nāgavīccaravanē pōṭri pōṭri.
O Siva in the form of Holy five letters!
O Dweller in the hearts of devotees!
O Destroyer of the three forts with fiery arrow!
O Rider on a white bull!
O Wearer of the moon that moves among the clouds!
O Lord with Ganga river in Your matted locks!
O Lord who ate the poison!
O Siva dwelling in Thirunageswaram! I worship you! My salutations!
5)
iṭṭamāyt toḻubavarkku iniyāy pōṭri
.. ēṭrinil varugiṟa endāy pōṭri
maṭṭilāc cōdiyāy vaḷarndāy pōṭri
.. mādavar pōṭriḍum maṇiyē pōṭri
suṭṭanīṟu aṇigiṟa aranē pōṭri
.. sūḻvinai kaḷaindaruḷ purivāy pōṭri
naṭṭamadu āḍiḍum nādā pōṭri
.. nāgavīccaravanē pōṭri pōṭri.
O Siva who is very sweet to the loving worshipers!
O Rider on a bull!
O Endless flame!
O Gem praised by great saints!
O Hara besmeared in Holy ash!
O Destroyer of our karma!
O Dancing Lord!
O Siva dwelling in Thirunageswaram! I worship you! My salutations!
6)
kaṇṇināl kāmanai erittāy pōṭri
.. kālināl kālanai udaittāy pōṭri
veṇṇiṟa erudamar vēndē pōṭri
.. viḍam tigaḻ karuniṟa miḍaṭrāy pōṭri
paṇṇiya vinaigaḷait tīrppāy pōṭri
.. pāvaiyōr paṅgena uḍaiyāy pōṭri
naṇṇinārkku araṇ ena ānāy pōṭri
.. nāgavīccaravanē pōṭri pōṭri.
O Siva who burned Kama with Your third eye!
O Siva who kicked Yama with your Foot!
O King riding on a white bull!
O Siva with a dark-throat holding the Halahala poison!
O Remover of our karma!
O Lord having Uma as one half! (Ardhanareeswara!)
O Protector of the devotees who taken refuge in You!
O Siva dwelling in Thirunageswaram! I worship you! My salutations!
7)
andiyin senniṟa aḻagā pōṭri
.. aḍiyavarkku aruḷgiṟa appā pōṭri
venduyar tīrkkum vimalā pōṭri
.. vēṇḍuvadu aḷikkiṟa varadā pōṭri
sandiran tigaḻ muḍi uḍaiyāy pōṭri
.. talam pala eḻundaruḷ talaivā pōṭri
nandi eṇḍru oru peyar uḍaiyāy pōṭri
.. nāgavīccaravanē pōṭri pōṭri.
O Beautiful Lord with reddish complexion like the evening sky!
O Father bestowing grace on devotees!
O Pure One who removes our terrible suffering!
O Giver of all boons that a devotee wishes for!
O Wearer of the moon!
O Lord dwelling in many temples (kshethrams)!
O Lord who has a name Nandi!
O Siva dwelling in Thirunageswaram! I worship you! My salutations!
8)
ambuli sūḍiya aḻagā pōṭri
.. aruvinai aḻittiḍum aranē pōṭri
vembulittōl aṇi vigirdā pōṭri
.. viṟal aḻittu arakkanai aḍarttāy pōṭri
kombuḷa ēṟamar kōvē pōṭri
.. koḍiyiḍai umaiyoru kūṟā pōṭri
nambuvārkku aruḷgiṟa nādā pōṭri
.. nāgavīccaravanē pōṭri pōṭri.
O Beautiful One wearing the moon!
O Hara who destroys our karma!
O 'Vikirdha' wearing a tiger skin! (vikirdhan - vikrita - is a name of Siva. It covers attributes such as Him acting differently - that is He acts in ways we cannot understand. It can also mean "not created")
O Siva who crushed Ravana (under Kailasa mountain) and destroyed his strength!
O King riding on a bull!
O Lord of Uma with a slender-waist!
O Lord who bestows grace on loving devotees!
O Siva dwelling in Thirunageswaram! I worship you! My salutations!
9)
ellaiyil sōdiyāy eḻundāy pōṭri
.. iruvarāl aṟiya oṇṇādāy pōṭri
kallaiyum malar ena ēṟpāy pōṭri
.. karumugil pōl oḷir kaṇḍā pōṭri
allalai agaṭriḍum aranē pōṭri
.. ādiyum andamum ānāy pōṭri
nallavar manattuṟai nādā pōṭri
.. nāgavīccaravanē pōṭri pōṭri.
O Lord who appeared as an endless flame!
O Lord who could not be known by the two - Brahma and Vishnu!
O Lord who accepts even a stone as a flower! (This refers to Sakkiya Nayanar story - one of the 63 nayanars)
O Lord with a throat like a dark cloud!
O Hara, the destroyer of our suffering!
O Lord who is the beginning and the end!
O Lord dwelling in the hearts of good people!
O Siva dwelling in Thirunageswaram! I worship you! My salutations!
10)
veṭrigoḷ viḍaiyamar vīrā pōṭri
.. veṅgaṇaiyāl puram erittāy pōṭri
puṭraravu aṇigiṟa punidā pōṭri
.. puṟanurai madattavarkku eṭṭāy pōṭri
kuṭramil aḍiyavarkku eḷiyāy pōṭri
.. kōyilā avar manam koḷvāy pōṭri
naṭruṇai āgiṟa nādā pōṭri
.. nāgavīccaravanē pōṭri pōṭri.
O Valiant One riding on a victorious bull!
O Lord who burned down the three forts with a fiery arrow!
O Pure One wearing a snake!
O Lord who is beyond the religions of those who speak slanderous words!
O Lord who is easily reached by pure devotees!
O Lord who dwells in the hearts of pure devotees!
O Lord who is the savior!
O Siva dwelling in Thirunageswaram! I worship you! My salutations!
V. Subramanian
====================
thank you for sharing to this world Guruji. Beautiful lyrics and soul touching presentation by Amma avargal. Namasivaya.
ReplyDeleteThanks. I have now added English transcription & English translation for this padhigam. Hope it helps you and others!
ReplyDeleteமிக்க மிக்க நன்றி Guruji, every line is a praise to Lord Siva and his attributes,it melts one's heart ♥
ReplyDelete������NAMASIVAYA �� ������