01.33 – பொது
2008-06-21
பொது
-----------------
(ஆசிரிய இணைக்குறட்டுறை)
(1,3 அடிகளில் 4 சீர்களும், 2,4 அடிகளில் 3 சீர்களும் உள்ள அமைப்பு).
(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.58.5 - "பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்")
1)
முந்தைச் செய்வினை முற்றிலும் விட்டிடச்
சிந்தை செய்மட நெஞ்சமே,
வந்த காலனே மாளுமா(று) ஓர்உதை
தந்த சேவடி தன்னையே.
உதை
தந்த சேவடி தன்னை -
உதை
கொடுத்த சிவந்த திருவடியை;
குறிப்பு:
மார்க்கண்டேயருக்காக
எமனை உதைத்த வரலாற்றைச்
சுட்டியது.
2)
பாயும் காவிரிப் பக்கமோர் பக்தையின்
தாயும் ஆனவன், தன்னடி
ஆயும் அன்பருக்(கு) அன்பனை, நித்தலும்
நீயும் எண்ணுவாய் நெஞ்சமே.
பக்கம்
-
அருகு;
இடம்;
தேசம்;
ஓர்தல்
-
எண்ணுதல்;
ஆராய்தல்;
ஓர்
பக்தை -
ஒரு
பக்தை;
/ தியானிக்கும்
பக்தை;
நித்தலும்
-
தினம்தோறும்;
குறிப்பு:
திருச்சிக்கு
அருகில் பக்தைக்காகத் தாய்
உருவில் வந்து பிரசவம் பார்த்த
வரலாற்றைச் சுட்டியது.
3)
இங்(கு)இன் புற்றிட, எண்ணுவாய் நெஞ்சமே,
செங்கல் பொன்னெனச் செய்பவன்,
பங்கில் இன்மொழிப் பாவையைக் கொண்டநம்
சங்க ரன்மலர்த் தாளையே.
இங்கு
-
இவ்வுலகில்;
பங்கில்
இன்மொழிப் பாவையைக் கொண்ட
-
இனியமொழி
பேசும் பார்வதியை ஒரு கூறாக
உடைய;
சங்கரன்
-
நன்மை
செய்பவன்;
குறிப்பு:
திருப்புகலூரில்,
சுந்தரர்
தலையணையாக வைத்திருந்த
செங்கற்கள் பொன்னாக மாறிய
வரலாற்றைச் சுட்டியது.
சுந்தரர்
தேவாரம் -
திருமுறை
7.34.1
- "தம்மையே
புகழந்து..."
4)
கலங்கும் நெஞ்சமே காணலாம் இன்பமே,
இலங்கும் வெண்பிறை சூடிய
நலம்செய் நாதனின் கோயிலை நாள்தொறும்
வலம்செய்(து) அன்பொடு வாழ்த்தவே.
இலங்குதல்
-
பிரகாசித்தல்;
நலம்
செய் நாதன் -
சங்கரன்;
அன்பு
-
பக்தி;
5)
கரிமு கத்தனைக் கந்தனைப் பெற்றவன்,
திரியும் முப்புரம் செற்றவன்,
பரிவொ(டு) ஆட்செயும் பத்தருக்(கு) உற்றவன்,
எரிவண் ணன்கழல் ஏத்துமே.
கரி
முகத்தன் -
ஆனை
முகத்தன் -
பிள்ளையார்;
செற்றவன்
-
அழித்தவன்;
பரிவு
-
அன்பு;
பக்தி;
ஆட்செய்தல்
-
தொண்டுசெய்தல்;
உற்றவன்
-
சுற்றம்/நண்பன்
-
துணையாக
இருப்பவன்;
எரி
வண்ணன் -
தீவண்ணன்
-
தீயைப்
போன்ற நிறம் உடைவன் -
சிவந்த
மேனி உடைய சிவன்;
ஏத்தும்
-
ஏத்துங்கள்
-
துதியுங்கள்;
6)
பூவின் மாலைகள் போல்நிதம் செந்தமிழ்ப்
பாவின் மாலைகள் பாடுவார்
தீவி னைத்துயர் தீர்சிவன் தாள்நினை
நீவி ரும்பிஎன் நெஞ்சமே.
உரைநடை:
"என்
நெஞ்சமே,
நீ
விரும்பி நினை -
பூவின்
மாலைகள் ...
தீர்
சிவன் தாள்"
பாடுவார்
தீவினைத்துயர் தீர்சிவன்
-
பாடுகிறவர்களுடைய
தீவினை ஆகிய துன்பத்தைத்
தீர்க்கும் சிவன்;
7)
கங்கை நாயகா, கண்ணுதல் ஈசனே,
திங்கள் சூடியே, தேவனே,
எங்கள் நாதனே, என்(று)அடி போற்றுவார்
தங்கள் மேல்வினை தங்குமோ.
மேல்
வினை -
முன்னை
வினைகளாகிய சஞ்சிதமும்,
இப்பிறப்பில்
ஈட்டப்படுகின்ற,
இனி
ஈட்டப்படுவதாகிய ஆகாமிய
வினையும்;
அடி
போற்றுவார் தங்கள் மேல் வினை
தங்குமோ -
திருவடியைத்
தொழும் பக்தர்களது வினைகள்
தங்காது அழியும்.
8)
மலையை ஆட்டுமி லங்கையர் மன்னனின்
தலைகள் பத்தையும் தாள்விரல்
மலர்போல் வைத்துநெ ரித்தவன் அன்பருக்(கு)
இலையே தீவினை இன்னலே.
மலையை
ஆட்டும் இலங்கையர் மன்னனின்
தலலகள் பத்தையும் -
கயிலையைப்
பெயர்க்க எண்ணி ஆட்டிய இராவணனின்
பத்துத் தலைகளையும்;
தாள்விரல்
மலர்போல் வைத்து நெரித்தவன்
-
தனது
திருவடியின் விரல் ஒன்றை
மலரைப் போல மென்மையாக வைத்து
நசுக்கியவன்;
அன்பருக்(கு)
இலையே
தீவினை இன்னலே -
(அச்சிவனின்)
பக்தர்களுக்குத்
தீவினைத் துன்பம் இல்லை.
9)
கழலாத் தீவினைக் கட்டுகள் விட்டிடக்
கழறாய் நெஞ்சமே கண்ணனும்
கழலார் சேவடி காண்கிலா வண்ணமோர்
தழலாய் நின்றவன் தன்னையே.
கழலுதல்
-
நீங்குதல்;
நெகிழ்தல்;
கழறுதல்
-
சொல்லுதல்;
கழல்
ஆர் சேவடி -
கழல்
பொருந்திய சிவந்த திருவடி;
தழல்
-
நெருப்பு;
10)
பாங்கில் லாமொழிப் பாவியர் பொய்களை
நீங்கிப், போற்றுவோம் நித்தலும்,
ஆங்குச் சென்னிமேல் ஆற்றுடன் திங்களைத்
தாங்கி னான்மலர்த் தாளையே.
பாங்கு
இல்லா -
நன்மையற்ற;
பொருந்தாத;
நீங்குதல்
-
விலகிச்செல்லுதல்;
சென்னி
-
தலை;
11)
உய்ய வேண்டில்நீ உள்ளுவாய் நெஞ்சமே,
வையம் ஆளவும் வைத்திடும்
ஐயன், அன்(பு)உரு ஆனவன், பாதிஓர்
தையல் தாங்கினான் தாளையே.
உள்ளுதல்
-
நினைத்தல்;
வையம்
-
உலகம்;
பாதி
ஓர் தையல் தாங்கினான் -
அர்த்தநாரீஸ்வரன்;
(திருநாவுக்கரசர்
தேவாரம் -
திருமுறை
5.60.7
-
"ஐயனே
அரனே என்று அரற்றினால்
உய்யலாம்
உலகத்தவர் பேணுவர்
செய்ய
பாதம் இரண்டும் நினையவே
வையம்
ஆளவும் வைப்பர் மாற்பேறரே")
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
இப்பாடல்கள் ஓரளவு "திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பை ஒத்தன – ஆனால், திருமுக்காலுக்கும் இவற்றுக்கும் சில வித்தியாசங்கள்:
1)
முதற்சீர்
'தான'
என்று
வரும் (திருமுக்காலில்
முதற்சீர் தானன என்று வரும்);
2)
இரண்டாம்,
மூன்றாம்
அடிகள்
மடக்கு இன்றி வருவன.
(திருமுக்காலில்
2-ஆம்
அடி அப்படியே
3-ஆம்
அடியில் மீண்டும் வரும்);
இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை". என்று கருதலாம். (முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி).
(1,3 அடிகளில் 4 சீர்களும், 2,4 அடிகளில் முச்சீரும் உள்ள அமைப்பு.
மா
+
3 கூவிளம்
மா
+
2 கூவிளம்
மா
+
3 கூவிளம்
மா
+
2 கூவிளம்
என்ற
அமைப்பு)(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.58.5 -
பண்ணி
னார்மறை பாடலன் ஆடலன்
விண்ணி
னார்மதில் எய்தமுக்
கண்ணி
னான்உறை யும்கர வீரத்தை
நண்ணு
வார்வினை நாசமே.)