2018-01-23
V.047 - மாறா நின்றாய் - (கூடசதுர்த்தம்)
---------------------------------
(கூடம் - gūḍha. 1. மறைவு. 2. மறைபொருள்;
கூடசதுர்த்தம் - நான்காமடியில் உள்ள எழுத்துகள் யாவும் ஏனை மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி.)
கீழே உள்ள பாடலின் அமைப்பு - பாடலைப் படிக்கும் முறை:
1 |
6 |
7 |
12 |
13 |
18 |
19 |
34 |
25 |
30 |
31 |
36 |
2 |
5 |
8 |
11 |
14 |
17 |
20 |
23 |
26 |
29 |
32 |
35 |
3 |
4 |
9 |
10 |
15 |
16 |
21 |
22 |
27 |
28 |
33 |
34 |
மா |
யே |
றூ |
றா |
ம |
ன |
தூ |
ந |
ற் |
ட |
நு |
ளே |
றா |
றா |
ர் |
வே |
ணி |
யா |
யா |
ரு |
ற |
வி |
ங் |
கே |
நி |
ன் |
தே |
வா |
ப |
ணி |
நீ |
றா |
வ |
னே |
க |
டி |
கட்டங்களில் உள்ள எழுத்துகளை மேல்-கீழ், இடம்-வலம், கீழ்-மேல் என்று சுற்றிச்சுற்றி வாசித்தால் - பாடலின் முதல் மூன்று அடிகள் வரும்.
கட்டங்களின் நடுவில் உள்ள இரண்டாம் வரிசையை இடமிருந்து வலமாக வாசித்தால் - பாடலின் நாலாம் அடி வரும்.
முற்குறிப்பு: யாப்புக் கருதிச் சொற்கள் புணர்ச்சி பிரியாத வடிவில் தரப்பட்டுள்ளன.
மாறா நின்றா யேறூர் தேவா
வேறா மணிபணி யான தூயா
நீறாரு நற்றவனே விடநுங் கடிகேளே
றாறார் வேணியா யாருற விங்கே?
பதம் பிரித்து:
மாறா நின்றாய்; ஏறு ஊர் தேவா;
வேறு ஆம் அணி பணி ஆன தூயா;
நீறு ஆரும் நற்றவனே; விடம் நுங்கு அடிகேள்;
ஏறு ஆறு ஆர் வேணியாய்; ஆர் உறவு இங்கே?
மாறா நின்றாய் - என்றும் மாறாத மெய்ப்பொருளே;
ஏறு ஊர் தேவா - இடபவாகனம் உடைய தேவனே; (ஊர்தல் - ஏறுதல்);
வேறு ஆம் அணி பணி ஆன தூயா - நாகம் சிறந்த அணி ஆன தூயனே; (வேறு - சிறப்புடையது); (பணி - நாகம்);
நீறு ஆரும் நற்றவனே - திருநீறு பூசிய நல்ல தவ-வடிவினனே; (சுந்தரர் தேவாரம் - 7.48.1 - "நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே");
விடம் நுங்கு அடிகேள் - விடத்தை விழுங்கிய கடவுளே; (அடிகேள் - அடிகள் என்பதன் விளி); (சுந்தரர் தேவாரம் - 7.51.11 - "கடல்நஞ்சை வானவர்கள் தாம்உய்ய நுங்கி அமுது அவர்க்கருளி"); (சம்பந்தர் தேவாரம் - 3.55.2 - "திருவான்மியூர் உறையும் அடிகேள்");
ஏறு-ஆறு ஆர் வேணியாய் - நீர் மிக்க கங்கையைச் சடையில் உடையவனே; (ஏறுதல் - உயர்தல்; மிகுதல்); (அப்பர் தேவாரம் - 5.100.3 - "ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்");
ஆர் உறவு இங்கே - (உன்னையன்றி எனக்கு) இங்கு எவர் உறவு? (சுந்தரர் தேவாரம் - 7.70.1 - "ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே");
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment