2018-01-16
V.045 - எங்களிறை - ( கோமூத்திரி )
---------------------------------
(குறள்வெண் செந்துறை)
முற்குறிப்பு - யாப்புக் குறிப்பு : கோமூத்திரி = இரண்டிரண்டு வரியாக ஒரு செய்யுள் எழுதப்பட்டு மேலும் கீழும் ஒன்று இடையிட்டு வாசித்தாலும் அச்செய்யுளே வருவது.
= அதாவது - 2, 4, 6, 8, , , என இரட்டைப்படை இடங்களில் வரும் எழுத்துகள் ஈரடிகளிலும் ஒன்றாகவே அமையும்.
எ |
ங் |
க |
ளி |
றை |
கு |
ண் |
ட |
ல |
ம |
ணி |
வே |
தி |
ய |
ன் |
தி |
ங் |
க |
ளி |
ல |
கு |
ப |
ட |
ரு |
ம |
ணி |
வே |
ணி |
ய |
ன் |
எங்க ளிறைகுண் டலமணி வேதியன்
திங்க ளிலகு படருமணி வேணியன்.
பதம் பிரித்து:
எங்கள் இறை, குண்டலம் அணி வேதியன்,
திங்கள் இலகு படரு(ம்) மணி வேணியன்.
எங்கள் இறை - எம் இறைவன்;
குண்டலம் அணி வேதியன் - காதில் குண்டலம் அணிந்தவன், வேதம் ஓதுபவன், வேதங்களின் பொருள் ஆனவன்; (சுந்தரர் தேவாரம் - 7.61.4 - "குண்டலந் திகழ் காதுடையானை"); (வேதியன் - வேதம் ஓதுபவன்; வேதப்பொருள் ஆனவன்);
திங்கள் இலகு படரும் மணி வேணியன் - சந்திரன் ஒளிவீசும், படர்ந்த அழகிய பவளம் போன்ற சடை உடையவன்; (இலகுதல் - விளங்குதல்); (மணி - அழகு; பவளம்); (அணி - அழகு); (வேணி - சடை);
பிற்குறிப்பு : இப்பாடலில் முதலடியின் ஈற்று-எழுத்தும் இரண்டாம் அடியின் முதல்-எழுத்தும் புணர்ச்சியோடு நோக்கினும் பாடலின் கோமூத்திரி அமைப்புக் கெடாது.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment