Wednesday, November 1, 2017

03.05.004 – ஏடகம் (திருவேடகம்) - பூதலத்தில் வந்து - (வண்ணம்)

03.05.004 – ஏடகம் (திருவேடகம்) - பூதலத்தில் வந்து - (வண்ணம்)

Verse and Meaning in English - Please see the bottom half of this page.

2006-08-20

3.5.4 - பூதலத்தில் வந்து (ஏடகம் - திருவேடகம்)

---------------------------

(வண்ணவிருத்தம்;

தான தத்த தந்த

தான தத்த தந்த

தான தத்த தந்த .. தனதான);

(வார முற்ற பண்பின் - திருப்புகழ் - சுவாமிமலை)


பூத லத்தில் வந்து .. .. போகம் உய்க்க என்று

.. .. போதம் அற்று ழன்று .. பலநாளும்

.. பூதி யைப்பு னைந்து .. .. பூவ டிக்க ளிந்து

.. .. பூசை யைப்பு ரிந்து .. மகிழாது

பாத கத்தில் நின்ற .. .. பாழ கத்தில் இன்று

.. .. பாம ணக்க அன்பை .. அருளாயே;

.. பாரு றப்ப ணிந்த .. .. பால னைத்தொ டர்ந்த

.. .. பாச னைக்க டிந்த .. கழலானே;

வாதை யுற்ற டைந்த .. .. வான வர்க்கி ரங்கி

.. .. வாழ வைக்க வென்று .. மகிழ்வோடு

.. வாரி கக்கு நஞ்சை .. .. வாயி லிட்ட ருந்தி

.. .. மாமி டற்ற ணிந்த .. அருளாளா;

ஏத மிக்க குண்டர் .. .. ஈரம் அற்ற நெஞ்சர்

.. .. ஈனர் வெட்கி மங்க, .. உயர்ஞான

.. ஏறு விட்ட அந்த .. .. ஏடெ திர்த்த டைந்த

.. .. ஏட கத்த மர்ந்த .. பெருமானே.


பதம் பிரித்து:

பூதலத்தில் வந்து .. .. போகம் உய்க்க என்று

.. .. போதம் அற்று உழன்று .. பல நாளும்

.. பூதியைப் புனைந்து .. .. பூவடிக்கு அளிந்து

.. .. பூசையைப் புரிந்து .. மகிழாது


பாதகத்தில் நின்ற .. .. பாழ் அகத்தில் இன்று

.. .. பா மணக்க அன்பை .. அருளாயே;

.. பார் உறப் பணிந்த .. .. பாலனைத் தொடர்ந்த

.. .. பாசனைக் கடிந்த .. கழலானே;


வாதையுற்று அடைந்த .. .. வானவர்க்கு இரங்கி

.. .. வாழ வைக்க என்று .. மகிழ்வோடு

.. வாரி கக்கு நஞ்சை .. .. வாயில் இட்டு அருந்தி

.. .. மா மிடற்று அணிந்த .. அருளாளா;


ஏதம் மிக்க குண்டர் .. .. ஈரம் அற்ற நெஞ்சர்

.. .. ஈனர் வெட்கி மங்க, .. உயர்ஞான

.. ஏறு விட்ட அந்த .. .. ஏடு எதிர்த்து அடைந்த

.. .. ஏடகத்து அமர்ந்த .. பெருமானே.


* 4-ஆம் அடி, புனல் வாதத்தில் சம்பந்தரின் ஏடு வைகையில் எதிர்த்துச் சென்று திருவேடகத்தில் நின்றதைச் சுட்டியது.


பூதலத்தில் வந்து போகம் உய்க்க என்று போதம் அற்றுழன்று பல நாளும் - மண்ணுலகில் பிறந்து இன்பம் அனுபவிக்க எண்ணி அறிவு இன்றிப் பலகாலம் உழன்று; (போதம் - அறிவு);

பூதியைப் புனைந்து பூவடிக்கு அளிந்து பூசையைப் புரிந்து மகிழாது - பன்னாளும் திருநீற்றைப் பூசி உன் மலரடிக்கு உருகிப் பூசை செய்து இன்புறாமல்; (பூதி - திருநீறு); (பூவடி - மலரடி); (பலநாளும் - இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);


பாதகத்தில் நின்ற பாழ் அகத்தில் இன்று பா மணக்க அன்பை அருளாயே - தீமையிலே என்றும் நின்ற இழிந்த என் மனத்தில் இனி உன் திருப்புகழைப் பாடும் பாடல்கள் மணக்கும்படி பக்தியை அருள்வாயாக; (பாதகம் - பெரும் பாவம்); (பாழ் - குற்றம்; இழிவு); (அகம் - மனம்);

பார் உறப் பணிந்த பாலனைத் தொடர்ந்த பாசனைக் கடிந்த கழலானே - நிலத்தில் விழுந்து உன்னை வணங்கிய மார்க்கண்டேயரைக் கொல்லத் தொடர்ந்த, கையில் பாசத்தை உடைய காலனை உதைத்துத் தண்டித்த திருவடியினனே; (பாலன் - இங்கே மார்க்கண்டேயர்); (பாசன் - இயமன் - பாசத்தைக் கையில் பற்றியவன்);


வாதையுற்று அடைந்த வானவர்க்கு இரங்கி வாழவைக்க ன்று மகிழ்வோடு - (பாற்கடலைக் கடைந்த சமயத்தில் ஆலகாலம் தோன்றிச் சுட்டெரிக்க் அதனால்) மிகவும் துன்புற்று உன்னைச் சரணடைந்த தேவர்களுக்கு இரங்கி அவர்களை வாழவைப்பதற்காக விரும்பி;

வாரி கக்கு நஞ்சை வாயில் இட்டு அருந்தி மா மிடற்று அணிந்த அருளாளா - கடல் உமிழ்ந்த ஆலகால விடத்தைத் திருவாயில் இட்டு உண்டு அழகிய கண்டத்தில் கரிய மணிபோல் அணிந்த அருளாளனே; (வாரி - கடல்);


ஏதம் மிக்க குண்டர், ஈரம் அற்ற நெஞ்சர், ஈனர் வெட்கி மங்க - குற்றம் மிக்க, பருத்த உடலுள்ள, தயை இல்லாத நெஞ்சை உடைய, இழிந்த சமணர்கள் நாணி அஞ்சி ஒழியும்படி; (ஏதம் - குற்றம்); (குண்டர் - பருத்த உடலுள்ளவர்; இழிந்தோர்); (ஈரம் - தயை); (ஈனர் - இழிந்தோர்); (வெட்குதல் - நாணுதல்; அஞ்சுதல்); (மங்குதல் - வாடுதல்; அழிதல்);

உயர்ஞான ஏறு விட்ட அந்த டு எதிர்த்து அடைந்த ஏடகத்து அமர்ந்த பெருமானே - உயர்ந்த ஞானச் சிங்கமான திருஞான சம்பந்தர் வைகையாற்றில் விட்ட அந்த அழகிய ஏடு ஆற்றுவெள்ளத்தை எதிர்த்துச் சென்று அடைந்த திருவேடகத்தில் விரும்பி உறைகின்ற பெருமானே. (று - சிங்கம்); (அந்த - That); (அந்தம் - அழகு);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

-------------------------------- -------------------------------

madisūḍi 3.5.4) pā maṇakka anbai aruḷāy (ēḍagam - tiruvēḍagam)

--------------------------------------------------

03.05.004 – ēḍagam (tiruvēḍagam) - pūda lattil vandu - (vaṇṇam)

(tāna tatta tanda .. tāna tatta tanda

tāna tatta tanda .. tanadāna ----- Rhythm);

(vāra muṭra paṇbin - tiruppugaḻ - suvāmimalai)


pūdalattil vandu .. .. bōgam uykka eṇḍru

.. .. bōdam aṭru uḻaṇḍru .. pala nāḷum

.. būdiyaip punaindu .. .. pūvaḍikku aḷindu

.. .. pūsaiyaip purindu .. magiḻādu


pādagattil niṇḍra .. .. pāḻ agattil iṇḍru

.. .. pā maṇakka anbai .. aruḷāyē;

.. pār uṟap paṇinda .. .. pālanait toḍarnda

.. .. pāsanaik kaḍinda .. kaḻalānē;


vādaiyuṭru aḍainda .. .. vānavarkku iraṅgi

.. .. vāḻa vaikka eṇḍru .. magiḻvōḍu

.. vāri kakku nañjai .. .. vāyil iṭṭu arundi

.. .. mā miḍaṭru aṇinda .. aruḷāḷā;


ēdam mikka kuṇḍar .. .. īram aṭra neñjar

.. .. īnar veṭki maṅga, .. uyarñāna

.. ēṟu viṭṭa anda .. .. ēḍu edirttu aḍainda

.. .. ēḍagattu amarnda .. perumānē.


pūdalattil vandu bōgam uykka eṇḍru bōdam aṭru uḻaṇḍru pala nāḷum - After being born on this earth, seeking enjoyments, without wisdom, suffering for a long time;

būdiyaip punaindu pūvaḍikku aḷindu pūsaiyaip purindu magiḻādu - without finding the joy of wearing the holy ash and lovingly worshiping Your lotus feet;


pādagattil niṇḍra pāḻ agattil iṇḍru pā maṇakka anbai aruḷāyē - May you make my terrible heart to be full of devotion and the fragrance of songs praising You!

pār uṟap paṇinda pālanait toḍarnda pāsanaik kaḍinda kaḻalānē - For the sake of Your ardent devotee Markandeya, You kicked Yama with Your feet;


vādaiyuṭru aḍainda vānavarkku iraṅgi vāḻavaikka eṇḍru - You took pity on the suffering Devas and in order to save them, ;

magiḻvōḍu, vāri kakku nañjai vāyil iṭṭu arundi mā miḍaṭru aṇinda aruḷāḷā - You happily swallowed the deadly poison that arose in the ocean of milk and wore it Your throat;


ēdam mikka kuṇḍar, īram aṭra neñjar, īnar veṭki maṅga - Making the sinful Jains (who had tried to kill Sambandar and entourage) to be ashamed and afraid,

uyarñāna ēṟu viṭṭa anda ēḍu edirttu aḍainda ēḍagattu amarnda perumānē - Sambandar, a lion of great knowledge, released the palm leaf with his song that swam upstream in the Vaigai river and reached Thiruvedagam; O Siva, dwelling in that Thiruvedagam! May You bestow Your grace on me!

======================

No comments:

Post a Comment