Friday, November 10, 2017

03.07.001 – நால்வர் துதி - அழுத நொடியினில் அரனுமை இருவரும் - (வண்ணம்)

03.07.001 – நால்வர் துதி - அழுத நொடியினில் அரனுமை இருவரும் - (வண்ணம்)

Note: English translation of the meaning is provided in the second half of this page.

 03.07.001 – நால்வர் துதி - அழுத நொடியினில் அரனுமை இருவரும் - (வண்ணம்)


2006-10-17

3.7.1 - நால்வர் துதி

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தனதன தனதன தனதன

தனன தனதன தனதன தனதன

தனன தனதன தனதன தனதன .. தனதான);

(கரமு முளரியின் மலர்முக மதிகுழல் - திருப்புகழ் - திருவாரூர்)

(தகர நறுமலர் பொதுளிய குழலியர் - திருப்புகழ் - பழநி)


அழுத நொடியினில் அரனுமை இருவரும்

.. .. அமுதொ டிருவகை அறிவினை அருளவும்

.. .. அரிய தமிழுரை கவுணியர் குலபதி .. அடிவாழ்க;

.. அலையின் அயலுறு மயிலையில் உலகினர்

.. .. அறிய ஒருகுட(ம்) நிறைபொடி அழகிய

.. .. அரிவை எனவெழ உயர்தமிழ் மொழிதவர் .. அடிவாழ்க;


முழுகு கடலலை தனிலொரு கலின்மிசை

.. .. முனிவர் அவரெழ அரனருள் செயநில(ம்)

.. .. முழுதும் அவனது புகழ்மொழி அரசர .. தடிவாழ்க;

.. முடியில் இளமதி அரவொடு நதிபுனை

.. .. முதல்வன் அவனது மலரன அடியிணை

.. .. முடியில் இடுபுகழ் உடையவர் திருமலர் .. அடிவாழ்க;


மழுவை உடையிறை முதியவர் வடிகொடு

.. .. வதுவை யிடைஎன தடியவன் இவனென

.. .. வலிய அடிமைகொ ளருமையை உடையவர் .. அடிவாழ்க;

.. மலரில் உறையயன் அரியிவர் தொழமிக

.. .. வளரும் எரியனை உரிமையில் மறுதினம்

.. .. மகிழில் இருமென உரைசெய வலவர .. தடிவாழ்க;


பழுதி லடியவ ரிடர்கெட வலிமிகு

.. .. பரிகள் எனநரி யொடுவரு குருவடி

.. .. பரவி மணிமொழி உரைசெயும் அவர்மல .. ரடிவாழ்க;

.. படியில் மிகுதுயர் தனிலுழல் நிலைதரு

.. .. பழைய வினையற உலகினர் உயு(ம்)நெறி

.. .. பகரும் அருமணி மொழியருள் அவர்மல .. ரடிவாழ்க;


பதம் பிரித்து:

அழுத நொடியினில் அரன்-உமை இருவரும்

.. .. அமுதொ(டு) இருவகை அறிவினை அருளவும்,

.. .. அரிய தமிழ்-உரை கவுணியர் குல-பதி .. அடி வாழ்க;

.. அலையின் அயல்-உறு மயிலையில் உலகினர்

.. .. அறிய ஒரு குட(ம்) நிறை-பொடி அழகிய

.. .. அரிவை எனவெழ உயர்-தமிழ் மொழி-தவர் .. அடி வாழ்க;


முழுகு கடல்-அலைதனில் ஒரு கலின்மிசை

.. .. முனிவர் அவர் எழ அரன் அருள் செய, நில(ம்)

.. .. முழுதும் அவனது புகழ் மொழி அரசர(து) .. அடி வாழ்க;

.. முடியில் இளமதி அரவொடு நதி புனை

.. .. முதல்வன் அவனது மலர்-அன அடியிணை

.. .. முடியில் இடு-புகழ் உடையவர் திருமலர் .. அடி வாழ்க;


மழுவை உடை-இறை முதியவர் வடிகொடு

.. .. வதுவையிடை என(து) அடியவன் இவன் என

.. .. வலிய அடிமைகொள் அருமையை உடையவர் .. அடி வாழ்க;

.. மலரில் உறை-அயன் அரி-இவர் தொழ மிக

.. .. வளரும் எரியனை உரிமையில், "மறு-தினம்

.. .. மகிழில் இரும்" என உரைசெய வலவர(து) .. அடி வாழ்க;


பழுதில் அடியவர் இடர்-கெட வலி மிகு

.. .. பரிகள் என நரியொடு வரு குருவடி

.. .. பரவி மணிமொழி உரைசெயும் அவர் மலரடி வாழ்க;

.. படியில் மிகு-துயர் தனில்-உழல் நிலைதரு

.. .. பழைய வினை-அற உலகினர் உயு(ம்) நெறி

.. .. பகரும் அரு-மணி மொழி-அருள் அவர் மலரடி வாழ்க;


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


அழுத நொடியினில் அரன் உமை இருவரும் அமுதொடு இருவகை அறிவினை அருளவும், அரிய தமிழ் உரை கவுணியர் குலபதி அடி வாழ்க – சீகாழியில் குளக்கரையில் அழுதவுடன் சிவனும் உமையும் வந்து அபரஞானம் பரஞானம் இரண்டையும் குழைத்த ஞானப்பாலை ஊட்டியருளவும் அரிய தமிழான தேவாரத்தைப் பாடியவரும் கவுணியர்-குலத் தலைவருமான திருஞான சம்பந்தரது திருவடிகள் வாழ்க!

அலையின் அயல் உறு மயிலையில் உலகினர் அறிய ஒரு குடம் நிறை பொடி அழகிய அரிவை எனழ உயர் தமிழ் மொழி தவர் அடி வாழ்க - கடல் அருகே உள்ள மயிலாப்பூரில் உலகோர்முன் ஒரு குடத்தில் இருந்த சாம்பல் (அஸ்தி) அழகிய (பூம்பாவை என்ற) பெண்ணாக உயிர்பெற்று எழுமாறு உயர்ந்த தமிழைப் பாடிய தவமுனிவரான சம்பந்தரது திருவடிகள் வாழ்க!


முழுகு கடல் அலைதனில் ஒரு கலின்மிசை முனிவர் அவர் எழ அரன் அருள்செய நிலம் முழுதும் அவனது புகழ் மொழி அரசரது அடி வாழ்க – மூழ்கிய கடலின் அலையில் ஒரு கல்லின்மேல் முனிவர் அவர் எழும்படி ஹரன் அருள்செய்ய, இந்நாடெங்கும் அவனது புகழைப் பாடிய வாக்கின்-மன்னரான திருநாவுக்கரசரது திருவடிகள் வாழ்க! (கலின்மிசை - கல்லின்மிசை - கல்மேல்); (புகழ் மொழி அரசர் - புகழை மொழிந்த மொழி அரசர் - புகழ் பாடிய வாக்கின் மன்னர்);

முடியில் இளமதி அரவொடு நதி புனை முதல்வன் அவனது மலர் அன அடியிணை முடியில் இடு புகழ் உடையவர் திருமலர்அடி வாழ்க - திருமுடியில் இளம்-திங்கள், பாம்பு, கங்கை இவற்றை அணிந்த முதல்வனான சிவபெருமான் தனது மலர் போன்ற பாதத்தைத் தம் சென்னிமேல் வைத்த புகழை உடைய திருநாவுக்கரசரது மலர்த்திருவடி வாழ்க! (திருமலர் அடி - திருவடி & மலரடி);


மழுவை உடைறை முதியவர் வடிகொடு வதுவையிடை "எனது அடியவன் இவன்" ன வலிய அடிமைகொள் அருமையை உடையவர் அடி வாழ்க - மழுவை ஏந்திய இறைவன் ஒரு கிழவர் வடிவம்கொண்டு திருமணத்தைத் தடுத்து, "என் அடியவன் இவன்" என்று வலிய வந்து தடுத்தாட்கொண்ட அரும்புகழ் உடைய சுந்தரரது திருவடிகள் வாழ்க! (வதுவை - திருமணம்); (சம்பந்தர் தேவாரம் - 1.123.5 - "பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு");

மலரில் உறையன் அரிவர் தொழ மிக வளரும் எரியனை உரிமையில் "மறுதினம் மகிழில் இரும்" ன உரைசெய வலவது அடி வாழ்க - தாமரையில் உறையும் பிரமன், திருமால் இவர்கள் தொழுமாறு எல்லையின்றி ஓங்கிய ஜோதியனைப் (பின்னர்த் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியார்க்குச் சத்தியம் செய்யும் சமயத்தில்) நட்புரிமையோடு, "நாளை நீர் மகிழமரத்தில் இருங்கள்" என்று சொல்லவல்ல சுந்தரர் திருவடிகள் வாழ்க! (எரி - தீ; ஜோதி);


பழுது இல் அடியவர் இடர் கெட வலி மிகு பரிகள் என நரியொடு வரு குரு அடி பரவி மணிமொழி உரைசெயும் அவர் மலரடி வாழ்க – குற்றமற்ற அடியவரது துன்பம் தீரும்படி, வலிய குதிரைகள் என்று நரிகளை மாற்றிக் கொணர்ந்தவனும் குருவும் ஆன சிவபெருமானது பாதத்தைப் போற்றித் திருவாசகம் பாடியருளிய மாணிக்கவாசகரது மலரடிகள் வாழ்க! (மணிமொழி - மாணிக்கவாசகம்);

படியில் மிகு துயர்தனில் உழல் நிலை தரு பழைய வினைற உலகினர் உயு நெறி பகரும் அரு மணிமொழிருள் அவர் மலடி வாழ்க - பூமியில் மிகுந்த துயரத்தில் உழலும் நிலையைத் தருகின்ற பழைய வினைகள் அழிய, உலகினர் உய்யும் நெறியைச் சொல்லும் திருவாசகத்தைப் பாடியருளிய மாணிக்கவாசகரது மலரடிகள் வாழ்க! (படி - பூமி); (உயுநெறி - உய்யும் நெறி; இடைக்குறையாக வந்தது);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

madisūḍi tudipāḍi - 3.7.1 – nālvar tudi - aḻuda noḍiyinil aranumai iruvarum

3.7.1) nālvar tudi

-------------------------

tanana tanadana tanadana tanadana

tanana tanadana tanadana tanadana

tanana tanadana tanadana tanadana .. tanadāna -- Rhythm

(aruva miḍaiyena varubavar - tiruppugaḻ - tiruvaruṇai)

(tagara naṟumalar poduḷiya kuḻaliyar - tiruppugaḻ - paḻani)


aḻuda noḍiyinil aran-umai iruvarum

.. .. amudoḍu iruvagai aṟivinai aruḷavum

.. .. ariya tamiḻurai kavuṇiyar kula-padi .. aḍivāḻga;

.. alaiyin ayaluṟu mayilaiyil ulaginar

.. .. aṟiya oru-kuḍam niṟai-poḍi aḻagiya

.. .. arivai enaveḻa uyar-tamiḻ moḻi-tavar .. aḍivāḻga;


muḻugu kaḍalalaidanil-oru kalinmisai

.. .. munivar avareḻa aranaruḷ seyanilam

.. .. muḻudum avanadu pugaḻmoḻi arasaradu .. aḍivāḻga;

.. muḍiyil iḷamadi aravoḍu nadi-punai

.. .. mudalvan avanadu malarana aḍiyiṇai

.. .. muḍiyil iḍu-pugaḻ uḍaiyavar tirumalar .. aḍivāḻga;


maḻuvai uḍaiyiṟai mudiyavar vaḍigoḍu

.. .. vaduvai yiḍai-enadu aḍiyavan ivanena

.. .. valiya aḍimaigoḷ arumaiyai uḍaiyavar .. aḍivāḻga;

.. malaril uṟaiyayan ariyivar toḻamiga

.. .. vaḷarum eriyanai urimaiyil maṟudinam

.. .. magiḻil irumena uraiseya valavaradu .. aḍivāḻga;


paḻudil aḍiyavar iḍar-keḍa valimigu

.. .. parigaḷ enanari yoḍuvaru guruvaḍi

.. .. paravi maṇimoḻi uraiseyum avar-malaraḍi vāḻga;

.. paḍiyil migu-tuyar taniluḻal nilaidaru

.. .. paḻaiya vinai-aṟa ulaginar uyu(n)-neṟi

.. .. pagarum arumaṇi moḻiyaruḷ avar-malaraḍi vāḻga;


aḻuda noḍiyinil aran umai iruvarum amudoḍu iruvagai aṟivinai aruḷavum, ariya tamiḻ urai kavuṇiyar kula-padi aḍi vāḻga – I worship the holy feet of Thirugnana Sambandar (of Kaundinya gothram), who sang rare Tamil hymns after he was fed the milk of knowledge by Siva and Parvathi when he cried on the steps of the temple tank in Sirkazhi!

alaiyin ayal uṟu mayilaiyil ulaginar aṟiya oru kuḍam niṟai poḍi aḻagiya arivai ena eḻa uyar tamiḻ moḻi tavar aḍi vāḻga - I worship the holy feet of Thirugnana Sambandar who sang immortal Tamil songs in Mylapore that brought back to life a beautiful girl (Poombavai) in front of everyone from a pot holding her ashes!


muḻugu kaḍal alaidanil oru kalinmisai munivar avar eḻa aran aruḷseya nilam muḻudum avanadu pugaḻ moḻi arasaradu aḍi vāḻga – I worship the holy feet of Thirunavukkarasar who safely reached the shore when the rock (that had been tied to him by the Jains to sink and kill him) floated in the sea by Siva's grace, and sang Siva's glory everywhere!

muḍiyil iḷamadi aravoḍu nadi punai mudalvan avanadu malar ana aḍiyiṇai muḍiyil iḍu pugaḻ uḍaiyavar tirumalar aḍi vāḻga - Siva wears the crescent moon, a snake, and the Ganga river. I worship the holy lotus feet of Thirunavukkarasar who was blessed by Siva when He fulfilled Thirunavukkarasar's prayer by placing His lotus feet on Thirunavukkarasar's head!


maḻuvai uḍai iṟai mudiyavar vaḍigoḍu vaduvaiyiḍai "enadu aḍiyavan ivan" ena valiya aḍimaigoḷ arumaiyai uḍaiyavar aḍi vāḻga - I worship the holy feet of Sundarar who was enslaved by Siva (who holds a battle-axe) who came in the form of an old man and stopped his wedding by claiming him as His slave!

malaril uṟai ayan ari ivar toḻa miga vaḷarum eriyanai urimaiyil "maṟudinam magiḻil irum" ena uraiseya valavaradu aḍi vāḻga - Siva stood as an infinite column of fire and was worshiped by Brahma and Vishnu. I worship the holy feet of Sundarar, who could take the liberty of asking Siva to go away from the sanctum and dwell in the 'magizham" tree the following day (when Sundarar was to make a promise to Sangili)!


paḻudu il aḍiyavar iḍar keḍa vali migu parigaḷ ena nariyoḍu varu guru aḍi paravi maṇimoḻi uraiseyum avar malaraḍi vāḻga – Siva came as the guru and made Manikkavasagar His disciple! When Manikkavasagar was being punished by the Pandya king, Siva brought foxes as strong horses and saved His faultless devotee. I worship the holy feet of Manikkavachakar who sang praises of Siva's holy feet!

paḍiyil migu tuyardanil uḻal nilai taru paḻaiya vinai aṟa ulaginar uyu neṟi pagarum aru maṇimoḻi aruḷ avar malaraḍi vāḻga - Manikkavasagar sang thiruvachakam that shows the path of salvation (and removal of karma, the root cause of all suffering) to the people of this world. I worship the holy feet of Manikkavachakar!


V. Subramanian

====================

No comments:

Post a Comment