Friday, July 3, 2020

03.05.083 – ஒற்றியூர் - உவப்பினைப் பெற - (வண்ணம்)

03.05.083 – ஒற்றியூர் - உவப்பினைப் பெ - (வண்ணம்)

2009-01-20

3.5.83) உவப்பினைப் பெ - (ற்றியூர் - திருவொற்றியூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்த தத்ததனத் .. தனதான )

(நினைத்த தெத்தனையிற் - திருப்புகழ் - திருத்தணிகை)


உவப்பி னைப்பெறவிப் .. புவிவாழ்வில்

.. உளத்தில் எத்தினைவைத் .. ததனாலே

அவத்தை மிக்குறவெய்த்.. திடுவேனுன்

.. அடித்த லத்தைநினைத் .. திடுவேனோ

அவத்த ருக்கறிதற் .. கரியானே

.. அருத்தி மிக்குவழுத் .. திடுவார்தம்

பவத்தி னைத்தொலைவித் .. தருள்வாய்சீர்

.. பரக்கும் ஒற்றிநகர்ப் .. பெருமானே.


பதம் பிரித்து:

உவப்பினைப் பெற இப் புவிவாழ்வில்

.. உளத்தில் எத்தினை வைத்ததனாலே

அவத்தை மிக்கு உற, எய்த்திடுவேன் உன்

.. அடித்தலத்தை நினைத்திடுவேனோ;

அவத்தருக்கு அறிதற்கு அரியானே;

.. அருத்தி மிக்கு வழுத்திடுவார்தம்

பவத்தினைத் தொலைவித்து அருள்வாய்; சீர்

.. பரக்கும் ஒற்றிநகர்ப் பெருமானே.


உவப்பினைப் பெற இப் புவிவாழ்வில் - இவ்வுலக வாழ்க்கையில் சந்தோஷம் அடைய விரும்பி; (உவப்பு - சந்தோஷம்; விருப்பு);

உளத்தில் எத்தினை வைத்ததனாலே - (அதற்காக) மனத்தில் வஞ்சத்தையே வைத்ததனால்; (எத்து - வஞ்சகம்; வஞ்சம்);

அவத்தை மிக்கு உற எய்த்திடுவேன் உன் டித்தலத்தை நினைத்திடுவேனோ - வேதனை மிகவும் வர, அதனால் வருந்துகின்ற அடியேன் உன் திருவடியை எண்ண அருள்வாயாக; (அவத்தை - அவஸ்தை - வேதனை); (உறுதல் - சம்பவித்தல்); (எய்த்தல் - இளைத்தக்ல்; வருந்துதல்);

அவத்தருக்கு அறிதற்கு அரியானே - வீணர்களால் அறிய ஒண்ணாதவனே; (அவத்தன் - பயனற்றவன்; வீணன்; (அவம் - கேடு; பயனின்மை);

அருத்தி மிக்கு ழுத்திடுவார்தம் பவத்தினைத் தொலைவித்து அருள்வாய் - மிகுந்த அன்போடு வழிபடும் பக்தர்களது பிறவிநோயை அழித்து அருள்பவனே; (அருத்தி - விருப்பம்); (வழுத்துதல் - துதித்தல்); (பவம் - பிறப்பு); (தொலைவித்தல் - அழித்தல்);

சீர் பரக்கும் ஒற்றிநகர்ப் பெருமானே - புகழ் பரவிய திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே; (பரத்தல் - பரவுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.92.8 - "பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment