Wednesday, August 14, 2019

03.05.042 – மயிலாப்பூர் - தினமும் அலைந்திழி செயலை - (வண்ணம்)



03.05.042 – மயிலாப்பூர் தினமும் அலைந்திழி செயலை - (வண்ணம்)

Note: English translation of the meaning is provided in the second half of this page.

2007-05-03

3.5.42 - தினமும் அலைந்திழி செயலை - (மயிலாப்பூர்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தனந்தன .. தனன தனந்தன

தனன தனந்தன .. தனதான )

(பரவு நெடுங்கதிர் - திருப்புகழ் - மதுரை)


தினமு மலைந்திழி .. செயலை விழைந்தழி

.. .. சிறுமை ஒழிந்திட .. மதிமூடும்

.. கனவு கலைந்திரு .. கழலை நயந்தொரு

.. .. கவிதை புனைந்திடு .. நினைவாகி

மனமு(ம்) மகிழ்ந்திட .. மயலும் அழிந்திட

.. .. வலிய பவங்கெட .. அலைமோதும்

.. வளமை பொருந்திய .. மயிலை அடைந்தடி

.. .. மலரை வணங்கிட .. அருளாயே

கனையும் இருங்கடல் .. விடமும் அருந்திய

.. .. கரிய நிறந்திகழ் .. மிடறானே

.. கடிய சரந்தொடு .. மதனின் உடம்பது

.. .. கடிதில் எரிந்திட .. முனிவோனே

புனலை விழுங்கிய .. சடையில் இளம்பிறை

.. .. புனையும் அரும்புகழ் .. உடையானே

.. புதுமை திகழ்ந்திடு .. பழைய பரம்பர

.. .. பொதுவில் நடம்புரி .. பெருமானே.


பதம் பிரித்து:

தினமும் அலைந்து இழி .. செயலை விழைந்து அழி

.. .. சிறுமை ஒழிந்திட, .. மதி மூடும்

.. கனவு கலைந்து இரு .. கழலை நயந்து ஒரு

.. .. கவிதை புனைந்திடு .. நினைவாகி,

மனமு(ம்) மகிழ்ந்திட, .. மயலும் அழிந்திட,

.. .. வலிய பவம் கெட, .. அலை-மோதும்

.. வளமை பொருந்திய .. மயிலை அடைந்து அடி-

.. .. மலரை வணங்கிட .. அருளாயே;

கனையும் இருங்கடல் .. விடமும் அருந்திய

.. .. கரிய நிறம் திகழ் .. மிடறானே;

.. கடிய சரம் தொடு .. மதனின் உடம்பது

.. .. கடிதில் எரிந்திட .. முனிவோனே;

புனலை விழுங்கிய .. சடையில் இளம்-பிறை

.. .. புனையும் அரும்-புகழ் .. உடையானே;

.. புதுமை திகழ்ந்திடு .. பழைய பரம்பர;

.. .. பொதுவில் நடம்-புரி .. பெருமானே.


தினமும் அலைந்து, ழி செயலை விழைந்து, ழி சிறுமை ஒழிந்திட - நாள்தோறும் அலைந்து, தீய செயல்களை விரும்பிச்செய்து, அதனால் அழிகின்ற என் சிறுமையெல்லாம் நீங்கிட; (தினமுமலைந்திழி = 1. தினமும் அலைந்து, இழி; அலைதல் - திரிதல்; 2. தினமும் மலைந்து, இழி; மலைதல் - மயங்குதல்; வாதாடுதல்);

மதி மூடும் கனவு கலைந்து, ரு கழலை நயந்து ஒரு கவிதை புனைந்திடும் நினைவாகி - என் அறிவை மூடும் மாயை விலகி, உன் இரு திருவடிகளை விரும்பி, ஒரு பாடல் புனையும் ( / ஒரு பாமாலையால் அலங்கரிக்கும்) நினைவு உண்டாகி; (நயத்தல் - விரும்புதல்); (ஒரு - ஒன்று; ஒப்பற்ற); (புனைதல் - செய்யுள் இயற்றுதல்; அலங்கரித்தல்);

மனமும் மகிழ்ந்திட, மயலும் ழிந்திட, வலிய பவம் கெட - என் மனம் மகிழ, அறியாமை அழிய, வலிய பிறவித்துன்பம் அழிய; (மயல் - மயக்கம்; அறியாமை); (பவம் - பிறவி; பாவம்);

அலை மோதும் வளமை பொருந்திய மயிலை அடைந்து அடிமலரை வணங்கிட அருளாயே - அலைகள் மோதும் கடலின் அருகே வளமை மிக்க மயிலாப்பூரை அடைந்து உன் திருவடித்தாமரையை வணங்குவதற்கு அருள்வாயாக; (மயிலை - மயிலாப்பூர்);

கனையும் இருங்கடல் விடமும் அருந்திய கரிய நிறம் திகழ் மிடறானே - ஒலிக்கின்ற பெரிய கடலில் தோன்றிய ஆலகால விடத்தையும் உண்ட நீலகண்டனே; (கனைதல் - ஒலித்தல்); (மிடறு - கண்டம்; மிடறான் - மிடற்றான் என்பதன் இடைக்குறை); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "மழையார் மிடறா மழுவாள் உடையாய்"); (சம்பந்தர் தேவாரம் - 2.46.5 - "கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன்");

கடிய சரம் தொடு மதனின் உடம்பு அது கடிதில் எரிந்திட முனிவோனே - வாசக் கணையை ஏவிய மன்மதனின் உடம்பு விரைந்து எரிந்து அழியச் சினந்தவனே; (கடி - வாசனை; கடிய சரம் - வாசனையுடைய அம்பு; கடுமை - கடிய என்று கொண்டு கொடிய கணை என்றும் பொருள்கொள்ளலாம்); (சரம் - அம்பு); (கடிதில் - விரைவாக); (முனிதல் - கோபித்தல்);

புனலை விழுங்கிய சடையில் இளம்பிறை புனையும் அரும் புகழ் உடையானே - கங்கைச்சடையில் இளம் பிறையை அணிந்த அரிய புகழ் உடையவனே;

புதுமை திகழ்ந்திடு பழைய பரம்பர - புதுமையும் பழமையும் உடைய பரம்பரனே; (அப்பர் தேவாரம் - 6.11.7 - "புதியனவு மாய்மிகவும் பழையான் தன்னைத்" - மிகவும் பழைமையாகிய தான் புதியவனாகவும் இருப்பவன்);

பொதுவில் நடம் புரி பெருமானே - அம்பலத்தில் கூத்தாடும் பெருமானே; (பொது - மன்று; அம்பலம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


madisūḍi - 3.5.42 - dinamum alaindiḻi

---------------------------------

(tanana tanandana .. tanana tanandana

tanana tanandana .. tanadāna)

(paravu neḍuṅgadir - tiruppugaḻ - madurai)


dinamum alaindiḻi .. seyalai viḻaindaḻi

.. .. siṟumai oḻindiḍa .. madimūḍum

.. kanavu kalaindiru .. kaḻalai nayandoru

.. .. kavidai punaindiḍu .. ninaivāgi

manamum magiḻndiḍa .. mayalum aḻindiḍa

.. .. valiya bavaṅkeḍa .. alaimōdum

.. vaḷamai porundiya .. mayilai aḍaindaḍi

.. .. malarai vaṇaṅgiḍa .. aruḷāyē

kanaiyum iruṅgaḍal .. viḍamum arundiya

.. .. kariya niṟandigaḻ .. miḍaṟānē

.. kaḍiya sarandoḍu .. madanin uḍambadu

.. .. kaḍidil erindiḍa .. munivōnē

punalai viḻuṅgiya .. saḍaiyil iḷampiṟai

.. .. punaiyum arumpugaḻ .. uḍaiyānē

.. pudumai tigaḻndiḍu .. paḻaiya parambara

.. .. poduvil naḍampuri .. perumānē.


V. Subramanian


Meaning:

dinamum alaindu, iḻi seyalai viḻaindu, aḻi siṟumai oḻindiḍa - In order to be free of faults that cause me to wander aimlessly in life and act meanly;

madi mūḍum kanavu kalaindu, iru kaḻalai nayandu oru kavidai punaindiḍum ninaivāgi - with the removal of illusion covering my mind, getting a thought to compose verses praising Your Holy feet;

manamum magiḻndiḍa, mayalum aḻindiḍa, valiya bavam keḍa - and for my mind to feel joy, and my ignorance to be destroyed, and the strong cycle of birth to be destroyed;

alai mōdum vaḷamai porundiya mayilai aḍaindu aḍimalarai vaṇaṅgiḍa aruḷāyē - O Siva, May You bestow Your grace on me to reach Mylapore near the sea and worship Your lotus Feet!

kanaiyum iruṅgaḍal viḍamum arundiya kariya niṟam tigaḻ miḍaṟānē - O Siva with a dark throat that ate the deadly poison that arose in the roaring milky ocean!

kaḍiya saram toḍu madanin uḍambu adu kaḍidil erindiḍa munivōnē - O Lord who burnt Kama (Manmatha) in no time when he shot his fragrant arrow on You!

punalai viḻuṅgiya saḍaiyil iḷambiṟai punaiyum arum pugaḻ uḍaiyānē - O Lord with great glory of wearing the young crescent moon on Your matted locks that swallowed the Ganga river;

pudumai tigaḻndiḍu paḻaiya parambara - O Ultimate Lord who is new and ancient!

poduvil naḍam puri perumānē - O Siva dancing in the hall ("ambalam")!

======================

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment