03.05.033 – கயிலாயம் - துயர்மிகு வழிகளை - (வண்ணம்)
2007-04-17
3.5.33 - துயர்மிகு வழிகளை (கயிலாயம்)
----------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனதன தனதன .. தனதான)
(நிறைமதி முகமெனு மொளியாலே - திருப்புகழ் - சுவாமிமலை)
துயர்மிகு வழிகளை .. மிகநாடிச்
.. சுடுவினை
தனிலுழல் .. அடியேனும்
மயலற நிதமுன .. தடிபேணி
.. வழிபட இனிதருள் .. புரிவாயே
எயிலவை படவொரு .. கணையேவி
.. இமையவர் இடரது .. களைவோனே
குயிலன மொழியுமை .. ஒருகூறா
.. குளிர்மலி கயிலையில் .. உறைவோனே.
துயர்மிகு வழிகளை மிக நாடிச் சுடுவினைதனில் உழல் அடியேனும் - துன்பம் மிகும் வழிகளிலேயே மிகவும் விரும்பி ஈடுபட்டுத் தீவினையில் உழல்கின்ற அடியேனும்;
மயல் அற நிதம் உனது அடிபேணி வழிபட இனிது அருள் புரிவாயே - என் மயக்கம் தீரத் தினமும் உன் திருவடியைப் போற்றி வழிபடுமாறு எனக்கு இன்னருள் புரிவாயாக;
எயில் அவை பட ஒரு கணை ஏவி இமையவர் இடர் அது களைவோனே - முப்புரங்களும் அழிய ஒரு கணையை எய்து தேவர்களது இடரைத் தீர்த்தவனே;
குயில் அன மொழி உமை ஒரு கூறா - குயில் போன்ற இன்மொழியை உடைய உமையை ஒரு பாகமாக உடையவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.106.8 - "குயிலி னேர்மொழிக் கொடியிடை வெருவுறக்");
குளிர்மலி கயிலையில் உறைவோனே - குளிர்ச்சி மிக்க கயிலைமலையில் வீற்றிருக்கும் பெருமானே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------

No comments:
Post a Comment