02.85
– திருந்துதேவன்குடி - ("கற்கடேஸ்வரர் கோயில்")
2013-05-01
திருந்துதேவன்குடி (இக்காலத்தில் "கற்கடேஸ்வரர் கோயில்" - "திருவிசநல்லூர்" அருகுள்ளது)
----------------------
(பன்னிரண்டு பாடல்கள்)
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.1.1 - “அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற் றம்பலம்”)
1)
வேலன் தாதை விடமுண் மிடற்றினில்
நீலன் கண்ணமர் நெற்றியன் நீறணி
சீலன் செய்சூழ் திருந்துதே வன்குடிச்
சூலன் தாள்தொழு வார்க்கிலை துன்பமே.
2)
மெய்யன் வெண்பொடி மேனியன் மான்மறிக்
கையன் கண்டத்தில் மையன் எரிபுரை
செய்யன் செய்சூழ் திருந்துதே வன்குடி
ஐயன் தாள்தொழு வார்க்கிலை அல்லலே.
3)
பார்த்தன் செய்தவம் கண்டு பரிந்தவன்
ஆத்தன் ஆரழல் நேத்திரன் அஞ்சடைத்
தீர்த்தன் செய்சூழ் திருந்துதே வன்குடிக்
கூத்தன் தாள்தொழு வார்க்கின்பம் கூடுமே.
4)
விருத்தன் வேயன தோளி விரும்பிய
ஒருத்தன் சென்னியில் ஒண்மதி சூடிய
திருத்தன் செய்சூழ் திருந்துதே வன்குடி
நிருத்தன் தாள்தொழு வார்வினை நீங்குமே.
5)
தூயன் தொன்மறை நாலும் துதிசெயும்
நாயன் பங்கினில் நாரியன் அங்கையில்
தீயன் செய்சூழ் திருந்துதே வன்குடி
நேயன் தாள்தொழு வார்வினை நீங்குமே.
6)
கலையொன் றேந்திய கையன் கயிலாய
மலையன் மாமதில் மூன்றை எரித்தவெஞ்
சிலையன் செய்சூழ் திருந்துதே வன்குடி
நிலையன் தாள்தொழு வார்வினை நீங்குமே.
7)
கொல்வன் கூற்றைக் குமைத்தவன் சென்னிமேல்
வில்வன் வெல்வெள் விடையன் பலிதிரி
செல்வன் செய்சூழ் திருந்துதே வன்குடி
நல்லன் தாள்தொழு வார்வினை நாசமே.
8)
வரையின் கீழிலங் கைக்கிறை வாய்பத்தும்
பரவிப் பாடப் பரிந்தவன் செஞ்சடைத்
திரையன் செய்சூழ் திருந்துதே வன்குடி
அரையன் தாள்தொழு வார்க்கிலை அல்லலே.
9)
பாசன் மார்பில் உதைத்தவன் பார்வதி
நேசன் மாலயன் நேடு முடிவிலாத்
தேசன் செய்சூழ் திருந்துதே வன்குடி
ஈசன் தாள்தொழு வார்க்கிலை இன்னலே.
10)
மற்றோர் மார்க்கமுண் டென்று மயங்குவார்
கற்றார் அல்லர் கடிமதில் மூன்றினைச்
செற்றான் செய்சூழ் திருந்துதே வன்குடி
உற்றான் தாள்தொழு வார்வினை ஓடுமே.
11)
அட்ட மூர்த்தி அரண்மூன்றை அட்டவன்
நட்டன் ஆலின்கீழ் நால்வர்க் கறமுரை
சிட்டன் செய்சூழ் திருந்துதே வன்குடி
இட்டன் தாள்தொழு வார்க்கிலை இன்னலே.
12)
முன்னன் முக்கணன் முப்புரி நூலினன்
மின்னன் மெல்லிடை மாதமர் மேனியன்
தென்னன் செய்சூழ் திருந்துதே வன்குடி
மன்னன் தாள்தொழு வார்வினை மாயுமே.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு : திருக்குறுந்தொகை அமைப்பு :
3) திருந்துதேவன்குடி - கற்கடேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=386
திருந்துதேவன்குடி தலக்குறிப்பு: http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=357
'திருமுறைத் தலங்கள்' என்ற நூலில் பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதியது:
திருந்துதேவன்குடி என்னும் பெயருடைய ஊர் தற்போது இல்லை. கோயில் மட்டுமே உள்ளது. கோயில் இருந்த இடம் நன்செய் நிலங்களாயின. ‘கோயிலைச் சுற்றி அகழியுள்ளது.’.
-------------- --------------
2013-05-01
திருந்துதேவன்குடி (இக்காலத்தில் "கற்கடேஸ்வரர் கோயில்" - "திருவிசநல்லூர்" அருகுள்ளது)
----------------------
(பன்னிரண்டு பாடல்கள்)
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.1.1 - “அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற் றம்பலம்”)
1)
வேலன் தாதை விடமுண் மிடற்றினில்
நீலன் கண்ணமர் நெற்றியன் நீறணி
சீலன் செய்சூழ் திருந்துதே வன்குடிச்
சூலன் தாள்தொழு வார்க்கிலை துன்பமே.
வேலன்
தாதை -
முருகனுக்குத்
தந்தை;
விடம்
உண் மிடற்றினில் நீலன்
-
விடத்தை
உண்ட கழுத்தில் நீலநிறம்
உடையவன்;
கண்
அமர் நெற்றியன் -
நெற்றிக்கண்ணன்;
நீறு
அணி சீலன் -
திருநீறு
பூசியவன்;
செய்
சூழ் திருந்துதேவன்குடிச்
சூலன் -
வயல்
சூழ்ந்த திருந்துதேவன்குடியில்
உறைகின்ற சூலபாணி;
(செய்
-
வயல்);
தாள்
தொழுவார்க்கு
இலை துன்பமே
-
அப்பெருமானுடைய
திருவடிகளை வணங்கும்
அடியவர்களுக்குத் துன்பம்
இல்லை;
2)
மெய்யன் வெண்பொடி மேனியன் மான்மறிக்
கையன் கண்டத்தில் மையன் எரிபுரை
செய்யன் செய்சூழ் திருந்துதே வன்குடி
ஐயன் தாள்தொழு வார்க்கிலை அல்லலே.
மெய்யன்
-
மெய்ப்பொருள்;
வெண்பொடி
-
திருநீறு;
மான்மறி
-
மான்கன்று;
மை
-
கருமை;
எரி
புரை செய்யன் -
தீப்போல்
சிவந்தவன்;
(புரைதல்
என்ற வினைச்சொல் இங்கே
வினைத்தொகையாக வருகின்றது);
(திருவாசகம்
-
திருப்பள்ளியெழுச்சி
-
8 - "முந்திய
முதல்நடு இறுதியு மானாய்
.....
செந்தழல்
புரைதிரு மேனியுங் காட்டி....);
ஐயன்
-
தலைவன்;
3)
பார்த்தன் செய்தவம் கண்டு பரிந்தவன்
ஆத்தன் ஆரழல் நேத்திரன் அஞ்சடைத்
தீர்த்தன் செய்சூழ் திருந்துதே வன்குடிக்
கூத்தன் தாள்தொழு வார்க்கின்பம் கூடுமே.
பார்த்தன்
செய் தவம் கண்டு
பரிந்தவன் -
அருச்சுனன்
செய்த தவத்தைக் கண்டு இரங்கி
அருள்புரிந்தவன்;
ஆத்தன்
-
ஆப்தன்
-
இஷ்டன்;
நம்பத்தக்கவன்;
ஆர்
அழல் நேத்திரன்
-
அரிய
தீப் பொருந்திய நெற்றிக்கண்
உடையவன்;
அம்
சடை -
அழகிய
சடை;
தீர்த்தன்
-
பரிசுத்தன்;
தூயவன்;
('தீர்த்தம்
-
கங்கை'
என்று
கொண்டும் பொருள்கொள்ளல்
ஆம்);
கூடுதல்
-
பொருந்துதல்;
மிகுதல்;
4)
விருத்தன் வேயன தோளி விரும்பிய
ஒருத்தன் சென்னியில் ஒண்மதி சூடிய
திருத்தன் செய்சூழ் திருந்துதே வன்குடி
நிருத்தன் தாள்தொழு வார்வினை நீங்குமே.
விருத்தன்
-
பழையவன்;
வேய்
அன தோளி -
மூங்கில்
போன்ற புஜங்களை உடைய பார்வதி;
ஒருத்தன்
-
ஒருவன்;
ஒப்பற்றவன்;
ஒண்
மதி -
ஒளி
வீசும் பிறைச்சந்திரன்;
திருத்தன்
-
அழகியவன்;
தூயவன்;
நிருத்தன்
-
கூத்தன்;
5)
தூயன் தொன்மறை நாலும் துதிசெயும்
நாயன் பங்கினில் நாரியன் அங்கையில்
தீயன் செய்சூழ் திருந்துதே வன்குடி
நேயன் தாள்தொழு வார்வினை நீங்குமே.
தொன்மறை
-
பழமையான
வேதங்கள்;
நாயன்
-
தலைவன்;
கடவுள்;
(இச்சொல்லின்
அடிப்படையில்தான் அடியவர்களை
'நாயன்மார்'
என்று
வழங்குவதும்);
பங்கினில்
நாரியன் -
ஒரு
பங்கில் பெண்ணை உடையவன்;
அங்கை
-
உள்ளங்கை;
தீயன்
-
தீயை
ஏந்தியவன்;
நேயன்
-
விரும்பியவன்;
அன்புடையவன்;
6)
கலையொன் றேந்திய கையன் கயிலாய
மலையன் மாமதில் மூன்றை எரித்தவெஞ்
சிலையன் செய்சூழ் திருந்துதே வன்குடி
நிலையன் தாள்தொழு வார்வினை நீங்குமே.
கலை
-
மான்;
வெம்
சிலை -
கொடிய
வில்;
நிலையன்
-
நிலைத்து
இருப்பவன்;
உறைபவன்;
7)
கொல்வன் கூற்றைக் குமைத்தவன் சென்னிமேல்
வில்வன் வெல்வெள் விடையன் பலிதிரி
செல்வன் செய்சூழ் திருந்துதே வன்குடி
நல்லன் தாள்தொழு வார்வினை நாசமே.
கொல்
வன் கூற்று -
கொல்லும்,
கொடிய
எமன்;
குமைத்தல்
-
கொல்லுதல்;
வில்வன்
-
வில்வம்
புனைந்தவன்;
(உதாரணங்கள்:
மத்தம்
-
மத்தன்;
அரவம்
-
அரவன்;
அப்பர்
தேவாரம்
-
5.4.3 - "மத்தனை
மதிசூடியை"
- மத்தன்
-
ஊமத்த
மலரை அணிந்தவன்;
சுந்தரர்
தேவாரம் -
7.81.6 - "....படமுடைய
அரவன்"
- படமுடைய
பாம்பை உடையவன்);
வெல்
வெள் விடையன் -
வெற்றி
உடைய வெள்ளை இடபத்தை வாகனமாக
உடையவன்;
பலி
திரி செல்வன் -
பிச்சைக்கு
உழலும் செல்வன்;
நல்லன்
-
நல்லவன்;
நன்மையுடையவன்;
8)
வரையின் கீழிலங் கைக்கிறை வாய்பத்தும்
பரவிப் பாடப் பரிந்தவன் செஞ்சடைத்
திரையன் செய்சூழ் திருந்துதே வன்குடி
அரையன் தாள்தொழு வார்க்கிலை அல்லலே.
வரை
-
மலை;
கயிலைமலை;
இலங்கைக்கு
இறை -
இலங்கைக்கு
மன்னன் -
இராவணன்;
பரவுதல்
-
துதித்தல்;
செஞ்சடைத்
திரையன் -
செஞ்சடையில்
கங்கையை உடையவன்;
(திரை
-
அலை;
நதி);
அரையன்
-
அரசன்;
9)
பாசன் மார்பில் உதைத்தவன் பார்வதி
நேசன் மாலயன் நேடு முடிவிலாத்
தேசன் செய்சூழ் திருந்துதே வன்குடி
ஈசன் தாள்தொழு வார்க்கிலை இன்னலே.
பாசன்
-
பாசம்
வீசும் எமன்;
மால்
அயன் நேடு -
திருமாலும்
பிரமனும் தேடிய;
முடிவு
இலாத் தேசன் -
எல்லையற்ற
ஒளியுருவினன்;
10)
மற்றோர் மார்க்கமுண் டென்று மயங்குவார்
கற்றார் அல்லர் கடிமதில் மூன்றினைச்
செற்றான் செய்சூழ் திருந்துதே வன்குடி
உற்றான் தாள்தொழு வார்வினை ஓடுமே.
பதம்
பிரித்து:
மற்று
ஓர் மார்க்கம் உண்டு என்று
மயங்குவார்
கற்றார்
அல்லர்;
கடி
மதில் மூன்றினைச்
செற்றான்,
செய்
சூழ் திருந்துதேவன்குடி
உற்றான்
தாள் தொழுவார் வினை ஓடுமே.
கடி
மதில் மூன்று -
காவலுடைய
முப்புரங்கள்;
செற்றான்
-
அழித்தவன்;
(செறுதல்-
அழித்தல்);
உற்றான்
-
உற்றவன்
-
நண்பன்;
உறைபவன்;
(உறுதல்
-
தங்குதல்
(To
dwell, reside));
ஓடுதல்
-
நீங்குதல்;
(சம்பந்தர்
தேவாரம் -
2.76.2 - "துன்னங்கொண்ட
உடையான் ...
அகத்தியான்
பள்ளியை உன்னஞ்செய்த மனத்தார்கள்
தம் வினையோடுமே.");
11)
அட்ட மூர்த்தி அரண்மூன்றை அட்டவன்
நட்டன் ஆலின்கீழ் நால்வர்க் கறமுரை
சிட்டன் செய்சூழ் திருந்துதே வன்குடி
இட்டன் தாள்தொழு வார்க்கிலை இன்னலே.
அட்டமூர்த்தி
-
ஐம்பூதங்களும்
ஞாயிறும் மதியும் உயிருமாகிய
எண்வகை வடிவு.
அரண்மூன்றை
அட்டவன் -
முப்புரங்களை
அழித்தவன்;
(அடுதல்
-
அழித்தல்);
நட்டன்
-
நடனமாடுபவன்;
ஆலின்கீழ்
நால்வர்க்கு அறம் உரை
சிட்டன் -
கல்லால
மரத்தின்கீழ்ச் சனகாதியர்
நால்வருக்கு மறைப்பொருள்
விரித்த தட்சிணாமூர்த்தி;
(சிட்டன்
-
சிஷ்டன்;
உயர்ந்தவன்);
இட்டன்
-
இஷ்டன்
-
விருப்பம்
உடையவன்;
(அப்பர்
தேவாரம் -
5.4.1 - "வட்ட
னைம்மதி சூடியை ...
இட்டனை..."
- இட்டம்
உடையோன் இட்டன் ;
முதல்வன்
உயிர்களுக்குச் சிவத்துவத்தை
வழங்கும் விருப்பம் உடையான்
ஆதல்பற்றி இட்டன் எனப்பட்டான்.);
(சுந்தரர்
தேவாரம் -
7.48.7 - "விரும்பி
நின்மலர்ப் பாதமே
நினைந்தேன்...பாண்டிக்
கொடுமுடி விரும்பனே"
- விரும்பப்படுபவனே
-
'நம்பன்'
என்பதனை,
'விரும்பன்'
என்று
அருளினார்);
12)
முன்னன் முக்கணன் முப்புரி நூலினன்
மின்னன் மெல்லிடை மாதமர் மேனியன்
தென்னன் செய்சூழ் திருந்துதே வன்குடி
மன்னன் தாள்தொழு வார்வினை மாயுமே.
முன்னன்
-
முன்னவன்
-
எல்லாவற்றிற்கும்
முன் இருப்பவன்;
(திருவாசகம்
-
திருச்சதகம்
-
99: "மன்ன
எம்பிரான் வருக ....
யாரினும்
முன்ன எம்பிரான் வருக ...");
மின்னன்
மெல்லிடை =
மின்னல்
+
மெல்
+
இடை;
மின்னல்
மெல்லிடை மாது -
மின்னல்
போல் மெலிந்த இடையை உடைய
உமையம்மை;
தென்னன்செய்
-
தென்
நன்செய் -
அழகிய
நன்செய் வயல்;
(நன்செய்
-
நெற்பயிர்
உண்டாம் கழனி -
Wet lands);
("தென்னன்
+
செய்"
என்றும்
பிரித்துப் பொருள்கொள்ளல்
ஆம்;
தென்னன்
-
அழகியவன்;
தென்னாடுடையவன்;
என்றும்
பொருள்கொள்ளலாம்);
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு : திருக்குறுந்தொகை அமைப்பு :
-
கலிவிருத்தம்
-
4 அடிகள்;
அடிக்கு
4
சீர்கள்;
-
முதற்சீர்
மாச்சீர்;
-
இரண்டாம்
சீர் நேர்சையில் தொடங்கும்;
-
2-3-4
சீர்களிடையே
வெண்டளை பயிலும்.
-
அடி
நேரசையில் தொடங்கினால்
அடிக்குப் 11
எழுத்துகள்;
அடி
நிரையசையில் தொடங்கினால்
அடிக்குப் 12
எழுத்துகள்;
மாசில்
வீணையும் மாலை மதியமும்
வீசு
தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு
வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன்
எந்தை இணையடி நீழலே.
3) திருந்துதேவன்குடி - கற்கடேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=386
திருந்துதேவன்குடி தலக்குறிப்பு: http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=357
'திருமுறைத் தலங்கள்' என்ற நூலில் பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதியது:
திருந்துதேவன்குடி என்னும் பெயருடைய ஊர் தற்போது இல்லை. கோயில் மட்டுமே உள்ளது. கோயில் இருந்த இடம் நன்செய் நிலங்களாயின. ‘கோயிலைச் சுற்றி அகழியுள்ளது.’.
-------------- --------------
No comments:
Post a Comment