02.74
– சிவபுரம்
-
(திருமுக்கால்)
2013-01-16
சிவபுரம் (இத்தலம் கும்பகோணத்தை அடுத்துச் சாக்கோட்டைக்கு அருகுள்ளது)
---------------
(திருமுக்கால் அமைப்பில்)
(சம்பந்தர் தேவாரம் - 3.97.1 - "திடமலி மதிளணி சிறுகுடி மேவிய")
1)
கைப்புடை நஞ்சமு துண்டருள் கண்ணுதல்
முப்புரம் படநகைத் தானே
முப்புரம் படநகைத் தான்பதி முகில்பொழி
அப்படை சிவபுரம் அதுவே.
2)
மினலிடை யாளொரு கூறமர் மேனியன்
கனல்திகழ் கண்ணுடை யானே
கனல்திகழ் கண்ணுடை யான்பதி காவிரிப்
புனலடை வண்சிவ புரமே.
3)
மாமதி சூடிய மன்னவன் அருகணை
காமனைக் காய்ந்தகண் ணானே
காமனைக் காய்ந்தகண் ணான்பதி காவிரி
ஆமடை சிவபுரம் அதுவே.
4)
படமணி பாம்பொடு பால்மதி சேர்த்தவன்
விடமணி மிளிர்மிடற் றானே
விடமணி மிளிர்மிடற் றான்பதி விரிபொழில்
புடையணி வண்சிவ புரமே.
5)
கூறணி மாதமர் கொள்கையன் நூலொடு
நீறணி நெஞ்சுடை யானே
நீறணி நெஞ்சுடை யான்பதி நீள்வயல்
சேறணி சிவபுரம் அதுவே.
6)
மண்புனல் விண்ணனல் வளியென வருபவன்
கண்புனை நெற்றியி னானே
கண்புனை நெற்றியி னான்பதி கார்தொடு
திண்பொழிற் சிவபுரம் அதுவே.
7)
வெங்கரி உரியுடல் மிசையணி சங்கரன்
பங்கினிற் பாவையி னானே
பங்கினிற் பாவையி னான்பதி பைம்பொழில்
தெங்குயர் சிவபுரம் அதுவே.
8)
நகமது பெயர்தச முகனழ நகமிடு
புகழ்மலி பொற்சடை யானே
புகழ்மலி பொற்சடை யான்பதி பூம்பொழில்
திகழ்திருச் சிவபுரம் அதுவே.
9)
நான்முகன் நாரணன் நண்ணுதற் கரியவன்
வான்மதி வாழ்சடை யானே
வான்மதி வாழ்சடை யான்பதி வண்டுகள்
தேன்மகிழ் சிவபுரம் அதுவே.
10)
புறனுரை புல்லர்கள் போதனை அறிகிலர்
அறனுரை அடிகளெம் மானே
அறனுரை அடிகளெம் மான்பதி அளியிசை
அறைபொழிற் சிவபுரம் அதுவே.
11)
வரையென வருகரி அதனுரி போர்த்தவன்
அரையினில் அரவசைத் தானே
அரையினில் அரவசைத் தான்பதி அரிசிலின்
திரைபொரு சிவபுரம் அதுவே.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு : இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பில் அமைந்தவை. இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை". என்று கருதலாம்.
முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி.
திருமுக்கால் பாடல் அடிகளின் அமைப்பு:
தானன வரும் இடத்தில் தனதன வரலாம். அதேபோல் தானா வரும் இடத்தில் தனனா வரலாம்.
தானன / தனதன – இச்சீர்கள் எல்லாம் குறில் / குறில்+ஒற்று என்ற ஒலியில் முடியும்.
1, 3-ஆம் அடிகளின் ஈற்றில் உள்ள தானன என்பது தானனா என்றும் ஒரோவழி (சில சமயம்) வரலாம்.
இப்பாடல்களில் இரண்டாம் அடி மீண்டும் மூன்றாம் அடியில் வரும். (இடைமடக்கு).
2) சம்பந்தர் தேவாரம் - 3.97.1 -
3) சிவபுரம் - சிவகுருநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=958
----------- --------------
2013-01-16
சிவபுரம் (இத்தலம் கும்பகோணத்தை அடுத்துச் சாக்கோட்டைக்கு அருகுள்ளது)
---------------
(திருமுக்கால் அமைப்பில்)
(சம்பந்தர் தேவாரம் - 3.97.1 - "திடமலி மதிளணி சிறுகுடி மேவிய")
1)
கைப்புடை நஞ்சமு துண்டருள் கண்ணுதல்
முப்புரம் படநகைத் தானே
முப்புரம் படநகைத் தான்பதி முகில்பொழி
அப்படை சிவபுரம் அதுவே.
பதம்
பிரித்து:
கைப்பு
உடை நஞ்சு அமுது உண்டு அருள்
கண்ணுதல்;
முப்புரம்
பட நகைத்தானே;
முப்புரம்
பட நகைத்தான் பதி முகில் பொழி
அப்பு
அடை சிவபுரம் அதுவே.
கைப்பு
-
கசப்பு;
கண்ணுதல்
-
நெற்றிக்கண்ணன்;
படுதல்
-
அழிதல்;
நகைத்தான்
-
நகைத்தவன்;
(நகைத்தல்
-
சிரித்தல்;)
பதி
-
தலம்;
அப்பு
-
நீர்;
2)
மினலிடை யாளொரு கூறமர் மேனியன்
கனல்திகழ் கண்ணுடை யானே
கனல்திகழ் கண்ணுடை யான்பதி காவிரிப்
புனலடை வண்சிவ புரமே.
மினல்
-
மின்னல்;
(இடைக்குறை
விகாரம்);
கூறு
-
பாகம்;
கனல்
திகழ் கண் -
நெருப்பு
இருக்கும் நெற்றிக்கண்;
வண்
சிவபுரம் -
வளமையான
சிவபுரம்;
(வண்மை
-
வளப்பம்;
அழகு);
3)
மாமதி சூடிய மன்னவன் அருகணை
காமனைக் காய்ந்தகண் ணானே
காமனைக் காய்ந்தகண் ணான்பதி காவிரி
ஆமடை சிவபுரம் அதுவே.
மா
மதி -
அழகிய
சந்திரன்;
அருகு
அணை காமனை -
பக்கத்தில்
வந்த மன்மதனை;
ஆம்
-
நீர்;
(6.28.6 - "காமனையும்
கரியாகக் காய்ந்தார் போலுங்
...ஆமனையுந்
திருமுடியார் தாமே போலும்");
(சேந்தனார்
அருளிச் செய்த திருவிசைப்பா
-
9.6.6 - "வேந்தன்
வளைத்தது மேருவில் ...
ஆந்தண்
திருவா வடுதுறை யான்செய்கை
யார்அறி கிற்பரே"
- ஆம்
-
நீர்.
'அதனால்
உண்டாகிய தண்மையை உடைய
திருவாவடுதுறை'
என்க.
);
4)
படமணி பாம்பொடு பால்மதி சேர்த்தவன்
விடமணி மிளிர்மிடற் றானே
விடமணி மிளிர்மிடற் றான்பதி விரிபொழில்
புடையணி வண்சிவ புரமே.
படம்
அணி பாம்பு -
நாகப்பாம்பு;
பால்
மதி -
வெண்திங்கள்;
மிளிர்தல்
-
பிரகாசித்தல்;
விட
மணி மிளிர் மிடற்றான் -
விஷம்
நீலமணி போல் திகழும் கண்டத்தன்;
விரிபொழில்
புடை அணி வண் சிவபுரம் -
விரிந்த
சோலைகள் சூழ்ந்த வளமையான
சிவபுரம்;
5)
கூறணி மாதமர் கொள்கையன் நூலொடு
நீறணி நெஞ்சுடை யானே
நீறணி நெஞ்சுடை யான்பதி நீள்வயல்
சேறணி சிவபுரம் அதுவே.
கூறு
அணி மாது அமர் கொள்கையன் -
பங்காக
அழகிய உமாதேவியாரை விரும்புபவன்;
நூலொடு
நீறு அணி நெஞ்சு உடையான் -
பூணூலும்
திருநீறும் திகழும் மார்பினன்;
நீள்வயல்
சேறு அணி சிவபுரம் -
சேறு
திகழும் நீண்ட வயல்கள் சூழ்ந்த
சிவபுரம்;
6)
மண்புனல் விண்ணனல் வளியென வருபவன்
கண்புனை நெற்றியி னானே
கண்புனை நெற்றியி னான்பதி கார்தொடு
திண்பொழிற் சிவபுரம் அதுவே.
மண்
புனல் விண் அனல் வளி என வருபவன்
-
நிலம்,
நீர்,
ஆகாயம்,
தீ,
காற்று
என ஐம்பூதங்கள் ஆனவன்;
(ஐம்பூதங்களின்
வரிசை யாப்பிற்காக முறை மாறி
வந்தன);
புனைதல்
-
அணிதல்;
கார்
தொடு -
மேகம்
தீண்டுகின்ற;
திண்
பொழில் -
அடர்ந்த
சோலை;
7)
வெங்கரி உரியுடல் மிசையணி சங்கரன்
பங்கினிற் பாவையி னானே
பங்கினிற் பாவையி னான்பதி பைம்பொழில்
தெங்குயர் சிவபுரம் அதுவே.
வெம்
கரி -
கொடிய
யானை;
உரி
-
தோல்;
வெங்கரி
உரி உடல் மிசை
அணி சங்கரன் -
கொடிய
யானையின் தோலைத் திருமேனிமேல்
அணியும் சங்கரன்;
பைம்பொழில்
-
பசிய
சோலைகள்;
தெங்கு
-
தென்னைமரம்;
8)
நகமது பெயர்தச முகனழ நகமிடு
புகழ்மலி பொற்சடை யானே
புகழ்மலி பொற்சடை யான்பதி பூம்பொழில்
திகழ்திருச் சிவபுரம் அதுவே.
நகம் அது பெயர் தசமுகன் அழ நகம் இடு - கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அழுமாறு பாதவிரல் ஒன்றின் நகத்தை ஊன்றிய; (நகம் - 1. மலை; 2. உகிர்);
புகழ் மலி பொற்சடையானே - புகழ் மிக்க பொற்சடையினன்;
பூம்பொழில்
-
பூஞ்சோலை;
9)
நான்முகன் நாரணன் நண்ணுதற் கரியவன்
வான்மதி வாழ்சடை யானே
வான்மதி வாழ்சடை யான்பதி வண்டுகள்
தேன்மகிழ் சிவபுரம் அதுவே.
நண்ணுதல்
-
அணுகுதல்;
அடைதல்;
( To draw near, approach, reach);
நான்முகன்
நாரணன் நண்ணுதற்கு
அரியவன் -
பிரமனாலும்
விஷ்ணுவாலும் அடைய ஒண்ணாதவன்;
வான்மதி
-
வான்
+
மதி
/
வால்
+
மதி;
வான்
-
வானம்;
அழகு;
வால்
-
வெண்மை;
தூய்மை;
இளமை;
வான்
மதி வாழ் சடையான் -
அழகிய
வெண்பிறை வாழும் சடையினன்;
வண்டுகள்
தேன் மகிழ் சிவபுரம் -
வண்டுகள்
தேனை உண்டு களிக்கும் (மலர்
மலிந்த பொழில் சூழ்ந்த)
சிவபுரம்;
(பெரியபுராணம்
-
திருநாவுக்கரசர்
புராணம்-
#93:
"நாமார்க்குங்
குடியல்லோம் என்றெடுத்து
நான்மறையின்
கோமானை
நதியினுடன் குளிர்மதிவாழ்
சடையானைத்....");
10)
புறனுரை புல்லர்கள் போதனை அறிகிலர்
அறனுரை அடிகளெம் மானே
அறனுரை அடிகளெம் மான்பதி அளியிசை
அறைபொழிற் சிவபுரம் அதுவே.
புறனுரை
-
பழிச்சொல்;
வெற்றுரை
(Meaningless
utterance);
புறன்
உரைத்தல் -
பொருந்தாத
புறம்பான உரைகளைச் சொல்லுதல்;
புல்லர்கள்
-
அறிவீனர்;
கீழோர்;
போதன்
-
ஞானவடிவினன்;
போதனை
-
ஞானம்;
அறன்
உரைத்தல் -
தர்மோபதேசம்
செய்தல்;
அடிகள்
-
கடவுள்;
அறன்
உரை அடிகள் -
கல்லால
மரத்தின்கீழ்த் தர்மோபதேசம்
உரைக்கும் தட்சிணாமூர்த்தி;
எம்மான்
-
எம்
சுவாமி;
அளி
இசை அறை பொழில் சிவபுரம் -
வண்டுகள்
இசை ஒலிக்கும் சோலை சூழ்ந்த
சிவபுரம்;
(பெரியபுராணம்
-
திருநாவுக்கரசர்
புராணம் -
12.21.186 - "பண்பயில்வண்
டறைசோலை சூழுங் காழிப் பரமர்..."
- இசை
பாடுகின்ற வண்டுகள் ஒலிக்கின்ற
சோலைகள் சூழ்ந்த சீகாழி
இறைவர்...);
(சம்பந்தர்
தேவாரம் -
2.46.3 -
கல்லா
னிழன்மேவிக் காமுறுசீர்
நால்வர்க்கன்
றெல்லா
வறனுரையும் இன்னருளால்
சொல்லினான்...);
11)
வரையென வருகரி அதனுரி போர்த்தவன்
அரையினில் அரவசைத் தானே
அரையினில் அரவசைத் தான்பதி அரிசிலின்
திரைபொரு சிவபுரம் அதுவே.
வரை
-
மலை;
என
-
ஓர்
உவம உருபு
(A
sign of comparison);
கரி
-
யானை;
உரி
-
தோல்;
அசைத்தல்
-
கட்டுதல்;
அரிசில்
-
காவிரியின்
கிளைநதிகளுள் ஒன்றின் பெயர்;
(Name of a distributary of the Kaveri river)
அரிசிலின்
திரை பொரு சிவபுரம் -
அரிசில்
ஆற்றின் அலை மோதுகின்ற சிவபுரம்;
(சம்பந்தர்
தேவாரம் -
1.112.1
இன்குரல்
இசைகெழும் யாழ்முரலத்
தன்கரம்
மருவிய சதுரனகர்
பொன்கரை
பொருபழங் காவிரியின்
தென்கரை
மருவிய சிவபுரமே.
சம்பந்தர்
தேவாரம் -
1.112.3
மலைமகள்
மறுகிட மதகரியைக்
கொலைமல்க
உரிசெய்த குழகனகர்
அலைமல்கும்
அரிசிலின் அதனயலே
சிலைமல்கு
மதிளணி சிவபுரமே.)
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு : இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பில் அமைந்தவை. இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை". என்று கருதலாம்.
முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி.
திருமுக்கால் பாடல் அடிகளின் அமைப்பு:
தானன
தானன தானன தானன
தானன
தானன தானா
தானன
தானன தானன தானன
தானன
தானன தானா
தானன வரும் இடத்தில் தனதன வரலாம். அதேபோல் தானா வரும் இடத்தில் தனனா வரலாம்.
தானன / தனதன – இச்சீர்கள் எல்லாம் குறில் / குறில்+ஒற்று என்ற ஒலியில் முடியும்.
1, 3-ஆம் அடிகளின் ஈற்றில் உள்ள தானன என்பது தானனா என்றும் ஒரோவழி (சில சமயம்) வரலாம்.
இப்பாடல்களில் இரண்டாம் அடி மீண்டும் மூன்றாம் அடியில் வரும். (இடைமடக்கு).
2) சம்பந்தர் தேவாரம் - 3.97.1 -
திடமலி
மதிளணி சிறுகுடி மேவிய
படமலி
அரவுடை
யீரே
படமலி
அரவுடை
யீருமைப் பணிபவர்
அடைவதும்
அமருல கதுவே.
3) சிவபுரம் - சிவகுருநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=958
----------- --------------
No comments:
Post a Comment