2.88 – பொது
- (நான்காரைச்
சக்கரபந்தம்)
(12 பாடல்கள்)
முற்குறிப்பு:
இப்பதிகம்
மிறைக்கவி (சித்ரகவி).
இப்பதிகப்
பாடல்களின் அமைப்பை வடமொழியில்
பத்மபந்தம் (padmabandham)
என்கின்றனர்.
தமிழில்
"நான்காரைச்
சக்கரபந்தம்" என்றும்
அழைக்கின்றனர். (சக்கர
பந்தம் - ஒரு
சக்கரம் வரைந்து,
அதனுள்
நடுவிடம் (center), ஆரக்கால்கள்
(radii), வட்டை
(rim / circumference) ஆகிய
இடங்களில் எல்லாம்,
பாட்டின்
எழுத்துகளைப் பந்திப்பது
(அடக்குவது)
ஆகும்.)
இப்பதிகப்
பாடல்களில் ஒவ்வோர் அடியும்
- வட்டத்தின்
நடுவெழுத்திலிருந்து தொடங்கி
ஓர் ஆரத்தின் வழியே கால்சுற்று
வந்து மீண்டும் வட்டத்தின்
மையத்திற்கு வந்துசேரும்
அமைப்பு.
1)
திரிபுர
தகனம் - நான்காரைச்
சக்கரபந்தம்
மேவாரழியவருமே
மேருவரையேந்துமே
மேதுந்துபியாலுமே
மேலுயாவோதரவாமே.
மேவார்
அழிய வருமே - பகைவர்கள்
அழியுமாறு வருவான்;
மேரு
வரை ஏந்துமே - மேரு
மலையை (வில்லாக)
ஏந்துவான்;
மே
துந்துபி ஆலுமே -
சிறந்த
துந்துபிகள் ஒலிக்கும்;
மேல்
உயா ஓது 'அர'
ஆமே
- வான்
உய்ந்து ஓதும் 'ஹர'
(என்ற
ஒலி) எழும்.
மே
- சிறந்த;
துந்துபி
- பேரிகை;
வாத்தியம்;
ஆலுதல்
- ஒலித்தல்;
மேல்
- வான்
- தேவர்கள்;
உயா
- 'உய்யா'
என்பது
இடைக்குறை விகாரம் பெற்றது.
உய்யா
- உய்ந்து;
செய்யா
என்னும் வாய்பாட்டு இறந்தகால
வினையெச்சம்.
2)
சிவபெருமான்
- நான்காரைச்
சக்கரபந்தம்
சேரரகத்தரசே
சேரதமாம்பரிசே
சேரிபலியோசிரசே
சேரசினமாரரசே.
சேரர்
அகத்து அரசே - சேரமான்
பெருமாள் நாயனார் மனத்தில்
உறையும் மன்னனே;
சே
ரதம் ஆம் பரிசே -
இடபமே
தேர் ஆகும் (வாகனம்
ஆகும்) தன்மை
உடையவனே;
சேரி
பலியோ சிரசே - ஊரார்
இடும் பிச்சையும் (பிரமன்)
மண்டையோட்டிலே;
சேர்
அசினம் மார் அரசே -
தோல்
(அஜினம்)
சேரும்
மார்பை உடைய தலைவனே;
சேரர்
- சேரநாட்டு
மன்னன்; அரசு
- அரசன்;
தலைவன்;
சே
- இடபம்;
சேரி
- ஊர்;
பலி
- பிச்சை;
அசினம்
- அஜினம்
- விலங்குகளின்
தோல்; இலக்கணக்குறிப்புகள்
:
1) ரதம்
- இரதம்
- யாப்பு
நோக்கி முதற்குறையாக வந்தது.
2) சேரிபலி
- சேரிப்பலி
- ஊர்ப்பிச்சை
- ஊர்
இடும் பிச்சை; யாப்பு
நோக்கிப் ('ப்')
பகர
ஒற்றுக் கெட்டது;
3)
சிவபெருமான்
சேர்விடம் - நான்காரைச்
சக்கரபந்தம்
(சேர்விடம்
- சேர்வு
இடம் / சேர்
விடம்)
தேவர்நாடுமுனதே
தேனமுதாநஞ்சதே
தேசஞ்சக்கரதே
தேரகஞ்சேர்வதே.
தேவர்
நாடும் உனதே - வானநாடும்
(தேவலோகமும்)
உன்னுடையதே;
("உடையான்",
எல்லார்க்கும்
தலைவன்);
தேன்
அமுது ஆம் நஞ்சு அதே -
(உனக்குத்)
தேனும்
அமுதும் போல் ஆகும் விடமே;
தேசு
அஞ்சு அக்கர தே - ஒளி
பொருந்திய, திருவைந்தெழுத்தாக
விளங்கும் தெய்வமே;
தேர்
அகம் சேர்வதே - நீ
பொருந்தியிருப்பது (உன்னை)
நாடும்
மனத்தையே;
தேசு
- ஒளி;
அஞ்சு
அக்கரம் - பஞ்சாக்ஷரம்
- திருவைந்தெழுத்து;
தே
- தெய்வம்;
தேர்தல்
- ஆராய்தல்;
தேடுதல்;
சிந்தித்தல்;
அகம்
- மனம்;
சேர்தல்
- பொருந்துதல்;
இலக்கணக்குறிப்புகள்:
1) தே
- பொதுவாகத்
'தேவே'
என்று
விளியாக வரினும்,
இங்கு
அண்மைவிளியாகத் 'தே'
என்றே
வந்தது.
2) தேனமுது
- உம்மைத்தொகை
- தேனும்
அமுதும்;
3) அமுதாநஞ்சு
- "அமுது
ஆம் நஞ்சு" என்பதில்
புணர்ச்சிவிதிப்படி மகர
ஒற்றுக் கெடும்.
4)
இனியது
வினவுதிரேல் - நான்காரைச்
சக்கரபந்தம்
தேவகாவலனினிதே
தேனினிதேவினாவிதே
தேவினாதினிதேர்தே
தேர்தேசங்காவதே.
தேவகாவலன்
இனிதே தேன் இனிதே?
- தேவர்களைக்
காக்கும் ஈசன் இனிமையா தேன்
இனிமையா?
வினா
இதே? - இதுவும்
ஒரு வினாவோ?
தேவின்
ஆது இனிது? - ஈசனினும்
யாது இனியது?
ஏர்
தே தேர் - நன்மையும்
அழகும் பொருந்திய தெய்வத்தைச்
சிந்திப்பாயாக;
தேசு
அங்கு ஆவதே - அப்போது
ஞானம் உண்டாகுமே;
ஏ
- வினா
ஏகாரம்; (இனிதே,
இதே
- என்ற
இடங்களில்); ஏ
- தேற்ற
ஏகாரம்; (ஆவதே
என்ற இடத்தில்); ஈற்றசை
ஏகாரமாகவும் கொள்ளலாம்;
தே
- தெய்வம்;
இன்
- ஒப்புப்
பொருளில் வரும் ஐந்தாம்
வேற்றுமை உருபு; ஆது
- யாது
என்பதன் திரிபு; ஏர்
- நன்மை;
அழகு;
தேர்தல்
- ஆராய்தல்;
தேடுதல்;
சிந்தித்தல்;
தேசு
- ஒளி;
ஞானம்;
5)
முப்புரம்
எரித்தது - நான்காரைச்
சக்கரபந்தம்
மேகமேகளமாருமே
மேருமாமலைவிலாமே
மேலாவிடவெரிவாமே
மேவாரிரிவாமேகமே.
மேகமே
களம் ஆருமே - கழுத்து
மேகத்தை ஒக்கும் (நீலகண்டன்);
மேரு
மா மலை வில் ஆம் -
பெரிய
மேருமலை வில் ஆகும்;
ஏ
மேலா விட எரிவு ஆமே -
அம்பை
மேலாகச் செலுத்தத் தீ எழும்;
மேவார்
இரிவு ஆம் ஏகமே -
பகைவர்க்கு
மொத்தமாக அழிவு ஆகும்;
அவன்
ஒப்பற்ற ஒன்றே!
களம்
- கழுத்து;
கண்டம்;
ஆர்தல்
- ஒத்தல்;
ஏ
- அம்பு;
மேலா
- மேலாக
- மேல்
நோக்கி; எரிவு
- எரித்தல்;
தீ;
மேவார்
- பகைவர்;
இரிவு
- இரிதல்
- அழிதல்;
கெடுதல்;
ஏகம்
- ஒன்று;
ஒப்பற்றது;
மொத்தம்;
மிகுதி;
6)
இனிது
எது? - நான்காரைச்
சக்கரபந்தம்
தேனினிதோதேவர்தே
தேர்வதுபலியதே
தேயலிலாய்காயாதே
தேயாகாவெனினினிதே.
தேன்
இனிதோ? தேவர்தே
- தேனோ
இனியது? தேவர்க்கும்
தேவன்
தேர்வது
பலி அதே; - எடுப்பது
பிச்சையே;
"தேயல்
இலாய்; காயாதே;
- (சிவபெருமானை)
"அழியாதவனே;
(என்னை)
வருத்தாதே";
"தேயா;
கா"
எனின்
இனிதே - "தியானிக்கப்படுபவனே!
காவாய்!"
என்றால்
இனிமையே;
இனிது
- இன்பம்
தருவது; நன்மையானது;
பலிதேர்தல்
- பிச்சையெடுத்தல்;
தேயல்
- தேய்தல்
- மெலிதல்;
அழிதல்;
சாதல்;
காய்தல்
- வருத்துதல்;
கடிந்துகூறுதல்;
விலக்குதல்;
தேயன்
- தியானிக்கப்படுபவன்;
7)
வினை
மரிவே - நான்காரைச்
சக்கரபந்தம்
வேரிமலிபூவணிவே
வேணிவனிதையுறைவே
வேறையுமிலையானைவே
வேனையாவினைமரிவே.
வேரி
மலி பூ அணிவே; - தேன்
மலிந்த பூ அணிவது;
வேணி
வனிதை உறைவே; - சடையில்
கங்கை மங்கை உறைவது;
வேறு
ஐயும் இலையால்;
நைவே
ஏன்? - (அப்பெருமான்
அல்லால்) வேறு
தலைவனும் இல்லை;
வருத்தம்தான்
ஏன்? (அவனைத்
தொழு);
நையா
வினை மரிவே - (அப்படித்
தொழுதால்) அழியா
வினையும் அழியுமே.
வேரி
- தேன்;
அணிவு
- அணிதல்;
வேணி
- சடை;
வனிதை
- பெண்;
உறைவு
- தங்குதல்;
இருக்குமிடம்;
ஐ
- தலைவன்;
ஆல்
- அசைச்சொல்;
நைவு
- வருத்தம்;
நைதல்
- கெடுதல்;
மரிவு
- சாவு;
(இறத்தல்
- இறவு,
அதுபோல்
மரித்தல் - மரிவு);
8)
அரக்கனுக்குக்
கனிவு - நான்காரைச்
சக்கரபந்தம்
வாளவுணன்கனிவா
வானிகலறமருவா
வாருமறியாவருவா
வாருவமையாவுளவா.
வாள்
அவுணன் கனிவு ஆவான் இகல் அற
- கொடிய
அரக்கனான இராவணன் வலிமை அற
(நசுக்குண்டு)
மனம்
பண்படுவான்; ("கொடிய
அரக்கனான இராவணன் வலிமை அற
(அவனை
நசுக்கிப் பின்)
இரங்குவான்"
என்றும்
பொருள்கொள்ளலாம்);
மருவா
ஆரும் அறியா அரு ஆவார் -
அடையாதவர்கள்
யாராலும் அறியப்படாத அருவும்
ஆவார்;
உவமை
யா உள? வா!
- (அச்சிவபிரானுக்கு)
உவமையாக
எவை உள்ளன? (அவர்க்கு
ஒப்பே இல்லை); (நெஞ்சே)
வா!
(அவரைத்
தொழுவோம்). (Note: "உவமையா
உளவா?" - "(அவர்க்கு
எவையும்) உவமையாக
உள்ளனவா?" என்றும்
பொருள்கொள்ளலாம்).
வாள்
அவுணன் - கொடிய
அரக்கன் - இங்கே
இராவணன்; கனிவு
- இரக்கம்;
இகல்
- பகைமை;
வலிமை;
மருவுதல்
- அடைதல்;
தியானித்தல்;
அரு
- உருவம்
அற்றது; யா
- யாவை;
ஆ
- ஈற்றில்
வரும் வினா இடைச்சொல்;
இலக்கணக்
குறிப்பு: "அரக்கனுக்குக்
கனிவு ஆவான்" என்று
பொருள்கொண்டால்,
'ஆவான்'
முன்
சொல்லிப் பின் 'அரு
ஆவார்' என்றது
ஒருமைபன்மை மயக்கம்.
9)
அடிமுடி
தேடல் - நான்காரைச்
சக்கரபந்தம்
வேதனோடுமானேடவே
வேடனேசோதிவடிவே
வேடிவணங்கிடவே
வேடகிவியனோதவே.
வேதனோடு
மால் நேடவே - பிரமனும்
திருமாலும் தேடுமாறு;
வேடனே,
சோதி
வடிவே - வேடத்தை
உடையவனே, சோதி
வடிவாகியவனே;
வேடி
வணங்கிடவே - (அவர்கள்
உன்னை) வேண்டி
வணங்குமாறு;
வேள்
தகி வியன் ஓதவே -
மன்மதனை
எரித்த பெருமையைப் போற்றுமாறு;
வேதன்
- பிரமன்;
மானேட
- மால்
நேட; நேடுதல்
- தேடுதல்;
வேடன்
- வேடத்தன்
- வேடத்தை
உடையவன்; வேடி
- வேண்டி
- இடைக்குறையாக
வந்தது; வேடகி
- வேள்
தகி - மன்மதனைத்
தகித்த; வியன்
- பெருமை;
சிறப்பு;
வியப்பு;
10)
தாள்தொழா
வீணர் - நான்காரைச்
சக்கரபந்தம்
தேவாமேனியோர்மாதே
தேமார்தாளையாராதே
தேராயாருமாவியதே
தேயவிழலேமேவாதே.
தேவா;
மேனி
ஓர் மாதே - தேவனே;
மாதொரு
பங்கனே;
தேம்
ஆர் தாளை ஆராதே -
(உன்)
இனிமையும்
வாசனையும் பொருந்திய திருவடியைப்
பொருந்தாமல்,
தேரா
யாரும் ஆவி அதே -
(உன்னைச்)
சிந்தியாத
எவரும் (அடைவது)
தம்
ஆவியானது,
தேய
விழல், ஏம்
மேவாதே - வீணாகக்
கழிந்து விழுவதே;
(அவர்களை)
இன்பம்
அடையாது;
தேம்
- இனிமை;
வாசனை;
ஆர்தல்
- பொருந்துதல்;
மிகுதல்;
உண்ணுதல்;
தேர்தல்
- சிந்தித்தல்;
விழல்
- விழுதல்;
பயனின்மை;
ஏம்
- இன்பம்;
மேவுதல்
- அடைதல்;
விரும்புதல்;
11)
ஆலை
மறாத தேன் - நான்காரைச்
சக்கரபந்தம்
யானைதேயவடுநாயா
யாநாடுமீசாவழியா
யாழிவரதாமலையா
யாலைமறாததேனையா.
யானை
தேய அடு நாயா -
(எதிர்த்து
வந்த) யானை
அழியுமாறு அதைக் கொன்ற கடவுளே;
யா[ம்]
நாடும்
ஈசா; அழியாய்
- நாம்
நாடுகின்ற ஈசனே;
அழியாதவனே;
ஆழி
வரதா; மலையாய்
- (மாலுக்குச்)
சக்கராயுதம்
வரம் அருள்பவனே; கயிலை
மலையானே; ("மயங்காதவனே"
என்றும்
பொருள்கொள்ளலாம்);
ஆலை
மறாத தேன் ஐயா -
தலைவனே;
நீ
ஆலகால விஷத்தை விரும்பி ஏற்ற
தேன்!
தேய்தல்
- சாதல்;
அழிதல்;
அடுதல்
- கொல்லுதல்;
அழித்தல்;
நாயன்
- கடவுள்;
அரசன்;
ஆழி
- சக்கராயுதம்;
வரதன்
- வரம்
கொடுப்பவன்; மலையாய்
- கயிலையானே;
மலைதல்
இல்லாதவனே; மலைதல்
- மயங்குதல்;
ஆல்
- ஆலகால
விஷம்; மறாததேன்
- மறாதது
ஏன் / மறாத
தேன்; மறாத
- மறுத்தல்
இன்றி ஏற்றுக்கொண்ட;
இலக்கணக்
குறிப்புகள்:
1) "யாம்
+ நாடும்
= யாநாடும்"
என்று
புணரும்;
2) "மறுத்து"
என்பதன்
எதிர்ப்பதம் "மறாது";
12)
கழியருளே
தருக - நான்காரைச்
சக்கரபந்தம்
கருதண்ணாலழக
கழலவினைநலிக
கலிநடலையழிக
கழியருளேதருக.
கருது
அண்ணால்; அழக
- (அடியேன்
/ பக்தர்கள்)
விரும்பும்/தியானிக்கும்
அண்ணலே! அழகனே!
கழல
வினை; நலிக
கலி - (எம்)
வினைகள்
நீங்குக! கலி
(துன்பம்/தரித்திரம்)
நலிவுறுக!
நடலை
அழிக - பொய்ம்மை/வஞ்சனை
அழிக!
கழி
அருளே தருக - (இவ்வாறு
நிகழ நீ) பேரருள்
புரிவாயாக!
கருதுதல்
- விரும்புதல்;
தியானித்தல்;
அண்ணால்
- அண்ணல்
என்பதன் விளி - அண்ணலே;
கழல்தல்
- நீங்குதல்;
கலி
- துன்பம்;
தரித்திரம்;
நலிதல்
- அழிதல்;
நடலை
- பொய்ம்மை;
வஞ்சனை;
கழி
- மிகுந்த;
இலக்கணக்
குறிப்பு: "கழல"
என்பதில்
"அ"
வியங்கோள்
வினைமுற்று விகுதி.
அன்போடு,
வி.
சுப்பிரமணியன்
--------------------------------
-------------------------------