02.37
– சிராப்பள்ளி
-
(திருச்சிராப்பள்ளி)
2011-12-08
திருச்சிராப்பள்ளி
-----------------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)
1)
பாவ மாயின பாறப் பணிநெஞ்சே
நாவ லூரரின் நற்றமிழ்ப் பித்தினன்
மேவ லர்புரம் வேவக் கணைதொடு
சேவ கன்பதி தென்சிராப் பள்ளியே.
2)
வாவென் றந்தகன் வந்தழை யாமுனம்
காவென் றேத்திக் கடுகி அடைநெஞ்சே
ஓவென் றும்பர் இறைஞ்சநஞ் சுண்டருள்
தேவன் மேவிய தென்சிராப் பள்ளியே.
3)
நாட வல்லையேல் நன்மையே நெஞ்சமே
காட கத்திற் கனலிடை மாநடம்
ஆட வல்லவன் ஆல்நிழற் கீழமர்
சேடன் மேவிய தென்சிராப் பள்ளியே.
4)
தொலையும் சூழ்வினைத் துன்பம் பிறப்பிலா
நிலையும் கிட்டும் நினைமட நெஞ்சமே
அலையும் முப்புரம் அன்றெரி செய்ம்மலைச்
சிலையன் மேவிய தென்சிராப் பள்ளியே.
5)
இன்னல் தீர்ந்திட எய்து மடநெஞ்சே
பொன்னி பொங்கிய போதொரு தாயென
முன்ன டைந்தவன் முக்கணன் மூப்பிலாத்
தென்னன் மேவிய தென்சிராப் பள்ளியே.
6)
ஆத்த மாகி அடைந்துய்ம் மடநெஞ்சே
பார்த்த னுக்குப் படையருள் செய்தவன்
மூத்த வன்முடி மேல்மதி ஏற்றருள்
தீர்த்தன் மேவிய தென்சிராப் பள்ளியே.
7)
தொல்வி னைத்துயர் அல்கிச் சுகமதே
மல்க எண்ணிடில் செல்கவென் நெஞ்சமே
வல்வி டத்தை மறைத்த மிடற்றினன்
செல்வன் மேவிய தென்சிராப் பள்ளியே.
8)
கட்டந் தீரக் கருதென் மடநெஞ்சே
சட்டென் றோடித் தடவெற் பிடக்குமத்
துட்டன் தானழ ஓர்விரல் இட்டருள்
சிட்டன் மேவிய தென்சிராப் பள்ளியே.
9)
காயம் காடடை காலம் அடையாமுன்
நேய மாகி நினைமட நெஞ்சமே
மாய னோடயன் நேடு வரையிலாத்
தீயன் மேவிய தென்சிராப் பள்ளியே.
10)
பொய்யி லேபுரள் புல்லர் புகலிலார்
உய்ய ஒல்லை அடைமட நெஞ்சமே
ஐயம் ஏற்றுழல் ஐயன் பவளம்போல்
செய்யன் மேவிய தென்சிராப் பள்ளியே.
11)
அனந்த கோடி பிறவிகள் அற்றிடத்
தினந்தி ருப்புகழ் செப்பித் தொழுநெஞ்சே
நினைந்த நேயரைக் காத்து நமன்தனைச்
சினந்த வன்பதி தென்சிராப் பள்ளியே.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்புகள் :
1) யாப்புக்குறிப்பு : திருக்குறுந்தொகை அமைப்பு :
-------------- ----------------
2011-12-08
திருச்சிராப்பள்ளி
-----------------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)
1)
பாவ மாயின பாறப் பணிநெஞ்சே
நாவ லூரரின் நற்றமிழ்ப் பித்தினன்
மேவ லர்புரம் வேவக் கணைதொடு
சேவ கன்பதி தென்சிராப் பள்ளியே.
பாறுதல்
-
அழிதல்;
நாவலூரர்
-
சுந்தரமூர்த்திநாயனார்;
மேவலர்
-
பகைவர்;
தொடுதல்
-
செலுத்துதல்
(To
discharge, as an arrow or other missile);
கணைதொடுதல்
-
அம்பு
எய்தல்;
சேவகன்
-
வீரன்;
தென்
சிராப்பள்ளி -
அழகிய
திருச்சிராப்பள்ளி;
பாவம்
ஆயின பாறப் பணி
நெஞ்சே -
பாவங்கள்
அழிய வணங்கு மனமே;
நாவலூரரின்
நற்றமிழ்ப் பித்தினன்
-
சுந்தரர்
பாடிய நல்ல தமிழை விரும்புபவன்;
மேவலர்
புரம் வேவக் கணைதொடு
சேவகன் பதி தென்
சிராப்பள்ளியே
-
.பகைவர்களது
முப்புரங்களும் வெந்து அழிய
அம்பினை எய்த வீரன் உறையும்
தலமான அழகிய திருச்சிராப்பள்ளியை;
2)
வாவென் றந்தகன் வந்தழை யாமுனம்
காவென் றேத்திக் கடுகி அடைநெஞ்சே
ஓவென் றும்பர் இறைஞ்சநஞ் சுண்டருள்
தேவன் மேவிய தென்சிராப் பள்ளியே.
பதம்
பிரித்து:
"வா"
என்று
அந்தகன் வந்து அழையாமுனம்,
"கா"
என்று
ஏத்திக் கடுகி அடை நெஞ்சே,
"ஓ"
என்று
உம்பர் இறைஞ்ச நஞ்சு உண்டு
அருள்
தேவன்
மேவிய தென் சிராப்பள்ளியே.
அந்தகன்
-
எமன்;
அழையாமுனம்
-
அழைப்பதன்
முன்னமே;
கா
-
காத்தருள்வாய்;
கடுகுதல்
-
விரைதல்;
ஓ
-
ஓலம்;
உம்பர்
-
தேவர்கள்;
3)
நாட வல்லையேல் நன்மையே நெஞ்சமே
காட கத்திற் கனலிடை மாநடம்
ஆட வல்லவன் ஆல்நிழற் கீழமர்
சேடன் மேவிய தென்சிராப் பள்ளியே.
நாடுதல்
-
கிட்டுதல்
(To
reach, approach); நினைத்தல்
(To
think, consider);
வல்லுதல்
-
செய்யமாட்டுதல்
(To
be able; to be possible); (வல்லையேல்
-
உனக்கு
இயலுமானால்);
காடகம்
-
சுடுகாடு;
ஆல்நிழற்
கீழ் -
கல்லால
மரத்தின்கீழ்
சேடன்
-
மேன்மையுடையவன்;
நெஞ்சமே!
சுடுகாட்டில்
தீயிடை ஆடும் கூத்தன்;
கல்லால
மரத்தின்கீழ் அமர்ந்து
அறம் உரைக்கும் தட்சிணாமூர்த்தி;
அச்சிவபெருமான்
உறையும் அழகிய திருச்சிராப்பள்ளியை
நீ நினைந்தால் நன்மையே.
(11.5.19
- ஐயடிகள்
காடவர்கோன் நாயனார் அருளிய
சேத்திரத்திருவெண்பா -
"உள்ளிடத்தான்
வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான்
வந்து கலவாமுன் கொள்ளிடத்தின்
தென்திருவாப்
பாடியான் தெய்வமறை நான்கினையும்
தன்திருவாய்ப்
பாடியான் தாள்."
---
'வல்லையே'
என்னும்
வினா,
'வல்லையாயின்
நன்று'
என்னும்
குறிப்பினது.)
4)
தொலையும் சூழ்வினைத் துன்பம் பிறப்பிலா
நிலையும் கிட்டும் நினைமட நெஞ்சமே
அலையும் முப்புரம் அன்றெரி செய்ம்மலைச்
சிலையன் மேவிய தென்சிராப் பள்ளியே.
தொலையும்
சூழ்வினைத் துன்பம்
-
நம்மைச்
சூழ்கின்ற வினைத்துன்பம்
அழியும்;
பிறப்பு
இலா நிலையும் கிட்டும்
-
இனிப்
பிறப்பு இல்லை என்ற நற்கதியும்
பெறலாம்;
சிலை
-
வில்;
அலையும்
முப்புரம் அன்று எரிசெய்ம்
மலைச்சிலையன் -
திரியும்
முப்புரங்களை அன்று எரித்த
மேருவில்லியாகிய சிவபிரான்;
இலக்கணக்குறிப்பு
:
செய்
+
மலைச்சிலையன்
-
செய்ம்மலைச்சிலையன்;
ஆறுமுக
நாவலரின் இலக்கணச் சுருக்கத்திலிருந்து
:
94.
தனிக்குற்றெழுத்தைச்
சார்ந்த யகரமெய்யின் முன்னுந்
தனி ஐகாரத்தின் முன்னும்
வரும் மெல்லினம் மிகும் .
உதாரணம்
:
மெய்
+
ஞானம்
-
மெய்ஞ்ஞானம்;
செய்
+
நன்றி
-
செய்ந்நன்றி;
கை
+
மாறு
-
கைம்மாறு;
5)
இன்னல் தீர்ந்திட எய்து மடநெஞ்சே
பொன்னி பொங்கிய போதொரு தாயென
முன்ன டைந்தவன் முக்கணன் மூப்பிலாத்
தென்னன் மேவிய தென்சிராப் பள்ளியே.
பொன்னி
-
காவிரி;
மூப்பு
-
முதுமை;
தென்னன்
-
அழகியவன்
;
தென்னாடுடையவன்
எனினும் அமையும்;
*
தாயுமானவன்
-
இத்தலத்து
ஈசன் திருநாமம்.
6)
ஆத்த மாகி அடைந்துய்ம் மடநெஞ்சே
பார்த்த னுக்குப் படையருள் செய்தவன்
மூத்த வன்முடி மேல்மதி ஏற்றருள்
தீர்த்தன் மேவிய தென்சிராப் பள்ளியே.
ஆத்தம்
-
ஆப்தம்
-
அன்பு;
படை
-
ஆயுதம்
-
இங்கே
பாசுபதாஸ்திரம்;
தீர்த்தன்
-
பரிசுத்தன்;
7)
தொல்வி னைத்துயர் அல்கிச் சுகமதே
மல்க எண்ணிடில் செல்கவென் நெஞ்சமே
வல்வி டத்தை மறைத்த மிடற்றினன்
செல்வன் மேவிய தென்சிராப் பள்ளியே.
அல்குதல்
-
அழிதல்;
மல்குதல்
-
நிறைதல்;
மிடறு
-
கண்டம்;
கழுத்து;
தென்
-
அழகிய;
இனிய;
சிராப்பள்ளி
-
திருச்சிராப்பள்ளி;
8)
கட்டந் தீரக் கருதென் மடநெஞ்சே
சட்டென் றோடித் தடவெற் பிடக்குமத்
துட்டன் தானழ ஓர்விரல் இட்டருள்
சிட்டன் மேவிய தென்சிராப் பள்ளியே.
பதம்
பிரித்து:
கட்டம்
தீரக் கருது என் மடநெஞ்சே,
சட்டென்று
ஓடித் தட வெற்பு இடக்கும்
அத்
துட்டன்தான்
அழ ஓர் விரல் இட்டு அருள்
சிட்டன்
மேவிய தென் சிராப்பள்ளியே.
கட்டம்
-
கஷ்டம்;
தட
வெற்பு -
பெரிய
மலை -
கயிலைமலை;
துட்டன்
-
துஷ்டன்
-
இராவணன்;
சிட்டன்
-
சிரேஷ்டன்
-
உயர்ச்சியுடையோன்;
9)
காயம் காடடை காலம் அடையாமுன்
நேய மாகி நினைமட நெஞ்சமே
மாய னோடயன் நேடு வரையிலாத்
தீயன் மேவிய தென்சிராப் பள்ளியே.
காயம்
-
உடல்;
காடு
-
சுடுகாடு;
நேயம்
-
அன்பு;
மாயன்
-
திருமால்;
அயன்
-
பிரமன்;
நேடுதல்
-
தேடுதல்;
வரை
-
அளவு;
எல்லை;
தீயன்
-
சோதியன்;
(தீயன்
எனில் தீயை ஏந்தியவன் என்றும்
பிற இடங்களில் பொருள்படும்.
ஆனால்
இப்பாடலில் ஒளித்தூணாக நின்ற
பொருளே பொருந்தும்);
தீயன்
என்ற பிரயோக உதாரணங்கள் சில
:
திருநாவுக்கரசர்
தேவாரம் -
6.66.1: "தாயவனை
.....
வளரா
நின்ற தீயவனைத் திருநாகேச்
சரத்து ளானைச்..."
திருநாவுக்கரசர்
தேவாரம் -
6.87.5: "தூயவன்காண்
....
தீயவன்காண்
தீயவுணர் புரஞ்செற் றான்காண்
..."
சம்பந்தர்
தேவாரம் -
2.12.8: "தூயானைத்
....
தீயானைத்
தீதில்கச் சித்திரு வேகம்பம்
...."
10)
பொய்யி லேபுரள் புல்லர் புகலிலார்
உய்ய ஒல்லை அடைமட நெஞ்சமே
ஐயம் ஏற்றுழல் ஐயன் பவளம்போல்
செய்யன் மேவிய தென்சிராப் பள்ளியே.
புல்லர்
-
இழிந்தோர்;
அறிவீனர்;
புகல்
-
பற்றுக்கோடு
(Support);
சரண்
(Refuge);
ஒல்லை
-
சீக்கிரம்;
ஐயம்
-
பிச்சை;
செய்யன்
-
செந்நிறத்தினன்;
11)
அனந்த கோடி பிறவிகள் அற்றிடத்
தினந்தி ருப்புகழ் செப்பித் தொழுநெஞ்சே
நினைந்த நேயரைக் காத்து நமன்தனைச்
சினந்த வன்பதி தென்சிராப் பள்ளியே.
அனந்தம்
-
அளவற்றது;
திருப்புகழ்
-
ஈசன்
புகழ்;
நேயர்
-
பக்தர்
-
இங்கே
மார்க்கண்டேயர்;
பதி
-
தலம்;
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்புகள் :
1) யாப்புக்குறிப்பு : திருக்குறுந்தொகை அமைப்பு :
-
கலிவிருத்தம்
-
4 அடிகள்;
அடிக்கு
4
சீர்கள்;
-
முதற்சீர்
மாச்சீர்;
இரண்டாம்
சீர் நேர்சையில் தொடங்கும்;
2-3-4 சீர்களிடையே
வெண்டளை பயிலும்.
அடி
நேரசையில் தொடங்கினால்
அடிக்குப் 11
எழுத்துகள்;
அடி
நிரையசையில் தொடங்கினால்
அடிக்குப் 12
எழுத்துகள்;
-------------- ----------------
No comments:
Post a Comment