03.04
– சிவன்
சிலேடைகள்
2006-03-21
6) சிவன் - கண் - சிலேடை - 2
-----------------------------------------------------------------------
இமையோர் கணம்சூழ்ந் திருப்பதால் நீர்மை
அமைவதால் ஓயாமல் ஆடி நமைநாளும்
காப்பதால் உள்ளே கருமணி காட்டும்கண்
தீப்புரை மேனிச் சிவன்.
கண்:
(இமைக்கும் பொழுது) இமை ஒரு க்ஷண நேரம் கண்ணைச் சுற்றி இருக்கும். நீரும் மையும் இருக்கும். நிலைகொள்ளாமல் பல பக்கங்களில் பார்த்து, எப்பொழுதும் நம்மைக் காக்கும். அதனுள் கண்மணியும் இருக்கும்.
சிவன்:
தேவர்கள், பூத கணங்கள் சுற்றி இருப்பர். சிறந்த குணங்கள் (அல்லது அழகு) உடையவர். சதா ஆனந்த நடம் புரிபவர். உயிர்களை என்றும் காப்பவர். (அவரது கழுத்தின்) உள்ளே விடம் கரிய மணி போலத் தோன்றும்.
தீப் போன்ற செம்மேனி உடைய சிவன்;
அன்போடு,
வி. சுப்பிரமணியன்

இமையோர்
கணம் =
தேவர்கள்,
பூத
கணங்கள்;
இமை
ஓர் கணம் =
இமை
ஒரு க்ஷணம்;
நீர்மை
=
1) நீர்,
மை;
/ 2) சிறந்த
குணம்;
அழகு;
அமைதல்
=
பொருந்துதல்;
தங்குதல்;
கருமணி
=
1) கண்ணில்
உள்ள கண்மணி;
/ 2) கரிய
மணி;
புரை
-
போன்ற;
ஒத்த;
கண்:
(இமைக்கும் பொழுது) இமை ஒரு க்ஷண நேரம் கண்ணைச் சுற்றி இருக்கும். நீரும் மையும் இருக்கும். நிலைகொள்ளாமல் பல பக்கங்களில் பார்த்து, எப்பொழுதும் நம்மைக் காக்கும். அதனுள் கண்மணியும் இருக்கும்.
சிவன்:
தேவர்கள், பூத கணங்கள் சுற்றி இருப்பர். சிறந்த குணங்கள் (அல்லது அழகு) உடையவர். சதா ஆனந்த நடம் புரிபவர். உயிர்களை என்றும் காப்பவர். (அவரது கழுத்தின்) உள்ளே விடம் கரிய மணி போலத் தோன்றும்.
தீப் போன்ற செம்மேனி உடைய சிவன்;
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment