03.04
– சிவன்
சிலேடைகள்
2006-03-21
5) சிவன் - கண் - சிலேடை - 1
-----------------------------------------------------------------------
நல்ல வழிகாட்டி நம்முடன் எவ்விடமும்
செல்வதால் மையுமணி செய்வதால் அல்லும்
பகலும் சுழன்றெல்லாம் பார்ப்பதால் அந்திக்
ககன நிறத்தரன் கண்.
கண்:
நாம் செல்ல நல்ல வழியைக் காட்டி, நம்மோடு எல்லா இடத்திற்கும் வரும். கண்ணுக்கு இடும் மையும் அதற்கு அழகு செய்யும். இரவும் பகலும் நிலையாக இராமல் சுழன்றுகொண்டே இருக்கும். (உறக்கத்திலும் கண் அசையும் - 'Rapid Eye Movement'). எல்லாவற்றையும் பார்க்கும்.
சிவன்:
(பக்தர்களுக்கு) நல்ல வழிகாட்டியாக இருப்பான். எங்கும் நமக்குத் துணையாக வருவான். அவனது (கழுத்தில் ஆலகால விஷத்தால் உண்டான) கருநிறமும் மணி போன்று இருக்கும். எப்போதும் (திருநடம் செய்து) சுழன்று ஆடி (அல்லது - பிச்சைக்காகத் திரிந்து), பிரபஞ்சத்தில் நிகழும் எல்லாவற்றையும் பார்ப்பவன்.
அந்தி வானம் போன்ற செந்நிறம் உடைய ஹரன்.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்

மையுமணி
=
1) மையும்
அணி;
/ 2) மையும்
மணி;
அணி
-
அழகு;
மை
-
1) கண்ணுக்கு
இடும் மை;
/ 2) கரிய
நிறம்;
விஷம்;
சுழல்தல்
-
சுழன்று
ஆடுதல்;
அங்குமிங்கும்
திரிதல்;
ககனம்
-
வானம்;
கண்:
நாம் செல்ல நல்ல வழியைக் காட்டி, நம்மோடு எல்லா இடத்திற்கும் வரும். கண்ணுக்கு இடும் மையும் அதற்கு அழகு செய்யும். இரவும் பகலும் நிலையாக இராமல் சுழன்றுகொண்டே இருக்கும். (உறக்கத்திலும் கண் அசையும் - 'Rapid Eye Movement'). எல்லாவற்றையும் பார்க்கும்.
சிவன்:
(பக்தர்களுக்கு) நல்ல வழிகாட்டியாக இருப்பான். எங்கும் நமக்குத் துணையாக வருவான். அவனது (கழுத்தில் ஆலகால விஷத்தால் உண்டான) கருநிறமும் மணி போன்று இருக்கும். எப்போதும் (திருநடம் செய்து) சுழன்று ஆடி (அல்லது - பிச்சைக்காகத் திரிந்து), பிரபஞ்சத்தில் நிகழும் எல்லாவற்றையும் பார்ப்பவன்.
அந்தி வானம் போன்ற செந்நிறம் உடைய ஹரன்.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment