03.04
– சிவன்
சிலேடைகள்
2006-03-13
2) செல்பேசி (cell phone) - சிவன் - சிலேடை
-----------------------------------------------------------------------
ஏழிசை பாடி எழுப்புவதும் உண்டுபல
ஊழியர்கை யேந்திநட மாடுவர்நீர் சூழிவ்
வுலகில் மறைவாய் ஒலிக்கும்செல் பேசி
அலகில் அரற்கிணை ஆம்.
செல்பேசி (cell phone) :
பலவித ஸ்வரங்களில் ஒலி செய்து நம்மை உறக்கத்திலிருந்து எழுப்புவதும் உண்டு. கடல் சூழ்ந்த இவ்வுலகில் பல அலுவலர்கள் கையில் தூக்கிக்கொண்டு நடமாடுவார்கள். பிறர் அறியா வண்ணம் ஒலிசெய்யாமல் அதிர்வதும் உண்டு.
சிவன் :
பக்தர்கள் காலையில் இன்னிசைகொண்டு திருப்பள்ளியெழுச்சி பாடித் துயிலெழுப்புவதும் உண்டு. பல பிரளய காலங்களைக் கண்டவர். பிரமனது மண்டையோட்டில் பிச்சை எடுப்பவர்; பல தலங்களிலும் திருநடம் செய்பவர். அவரது திருவாய் வேதம் ஓதும்.
அளவற்ற (புகழ், வடிவம் உடைய) ஹரன்.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்

ஊழி
-
பிரளயம்;
ஊழியர்
-
1) அலுவலர்;
2) ஊழியார்
=
ஊழிக்காலத்தும்
அழியாதிருப்பவர்;
கையேந்தி
-
1) கையில்
ஏந்தி;
2) யாசிப்பவன்;
நடமாடுதல்
-
1) அங்கும்
இங்கும் சஞ்சரித்தல்;
2) நாட்டியம்
ஆடுதல்;
மறைவாய்
-
1) பிறர்
அறியாதபடி;
2) வேதத்தை
வாய்;
அலகில்
=
அலகு
இல் -
அளவு
இல்லாத;
அரற்கு
-
அரன்+கு
-
அரனுக்கு;
இணை
-
சமம்;
செல்பேசி (cell phone) :
பலவித ஸ்வரங்களில் ஒலி செய்து நம்மை உறக்கத்திலிருந்து எழுப்புவதும் உண்டு. கடல் சூழ்ந்த இவ்வுலகில் பல அலுவலர்கள் கையில் தூக்கிக்கொண்டு நடமாடுவார்கள். பிறர் அறியா வண்ணம் ஒலிசெய்யாமல் அதிர்வதும் உண்டு.
சிவன் :
பக்தர்கள் காலையில் இன்னிசைகொண்டு திருப்பள்ளியெழுச்சி பாடித் துயிலெழுப்புவதும் உண்டு. பல பிரளய காலங்களைக் கண்டவர். பிரமனது மண்டையோட்டில் பிச்சை எடுப்பவர்; பல தலங்களிலும் திருநடம் செய்பவர். அவரது திருவாய் வேதம் ஓதும்.
அளவற்ற (புகழ், வடிவம் உடைய) ஹரன்.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment