03.04
– சிவன்
சிலேடைகள்
2006-03-17
4) சிவன் - மன்மதன் - சிலேடை - 2
-----------------------------------------------------------------------
வில்லேந்தி மென்மலர் அம்பை உடையவன்
கொல்லாக் கணையால் கொளுத்துவான் இல்லான்
வடிவம் பெரிய வரையும் வளைக்கும்
அடிகள் மதனவேள் ஆங்கு.
மன்மதன்:
கையில் கரும்பை வில்லாக ஏந்தி இருப்பவன். மென்மலர்களால் ஆன அம்புகளை உடையவன். யாரையும் கொல்லாத அம்மலர்க்கணைகளால் தாக்கி, மக்களது உள்ளத்தில் காமத்தீயை மூட்டுவான். (சிவனது தவத்தைக் குலைக்க முயன்றபொழுது, நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டு உடல் சாம்பல் ஆனவன்). உருவமற்றவன்; பெரியவர்களையும் (முனிவர்கள் போன்றவர்களையும்) மனம் பிறழச் செய்வான்.
சிவன்:
வில்லை ஏந்தியவன் (முப்புர தஹனம் (அல்லது) விஜயனோடு காட்டில் வேடனாய்ச் சென்று பொருதது). மென்மையான மலர் போன்ற பார்வதிக்குத் தலைவன். (தன் கையிலிருந்து கணையை ஏவாததால் அது 'கொல்லாத கணை'); முப்புரங்களைச் சிரிப்பினாலேயே கொளுத்தியவன். அருவமும் ஆனவன். (முப்புரம் எரித்த பொழுது) பெரிய மலையையும் வில்லாக வளைத்தவன்.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்

அம்பை
=
1) அம்பு+ஐ;
/ 2) பார்வதி;
உடையவன்
-
உடையான்
-
சுவாமி;
வரை
=
மலை;
வளைத்தல்
=
1) நேர்மையினின்று
விலகச் செய்தல்;
/ 2) வளையச்
செய்தல்;
அடிகள்
=
சிவன்;
மதனவேள்
=
மன்மதன்;
மன்மதன்:
கையில் கரும்பை வில்லாக ஏந்தி இருப்பவன். மென்மலர்களால் ஆன அம்புகளை உடையவன். யாரையும் கொல்லாத அம்மலர்க்கணைகளால் தாக்கி, மக்களது உள்ளத்தில் காமத்தீயை மூட்டுவான். (சிவனது தவத்தைக் குலைக்க முயன்றபொழுது, நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டு உடல் சாம்பல் ஆனவன்). உருவமற்றவன்; பெரியவர்களையும் (முனிவர்கள் போன்றவர்களையும்) மனம் பிறழச் செய்வான்.
சிவன்:
வில்லை ஏந்தியவன் (முப்புர தஹனம் (அல்லது) விஜயனோடு காட்டில் வேடனாய்ச் சென்று பொருதது). மென்மையான மலர் போன்ற பார்வதிக்குத் தலைவன். (தன் கையிலிருந்து கணையை ஏவாததால் அது 'கொல்லாத கணை'); முப்புரங்களைச் சிரிப்பினாலேயே கொளுத்தியவன். அருவமும் ஆனவன். (முப்புரம் எரித்த பொழுது) பெரிய மலையையும் வில்லாக வளைத்தவன்.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment