02.68
– கானூர்
(திருக்கானூர்)
2012-12-05
திருக்கானூர்
" கானூர்க் கரும்பு "
----------------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.76.1 - “திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை”)
1)
பிறையார் செஞ்சடைப் பிஞ்ஞக னைப்பண்டு
மறையால் கீழ்விரிப் பானை மணிபோலக்
கறையார் கண்டனைக் கானூர்க் கரும்பினை
மறவா நெஞ்சர்க் குறவாய் வருவனே.
2)
நீரார் செஞ்சடை மீது நிரைகொன்றை
ஏரார் வெண்மதி இண்டை புனைவானைக்
காரார் கண்டனைக் கானூர்க் கரும்பினை
ஓராய் நெஞ்சே ஒழியும் வினைகளே.
3)
நாளை எண்ணும் நமனவன் ஆருயிர்
மாள மார்பினில் அன்றுதை காலனைக்
காள கண்டனைக் கானூர்க் கரும்பினை
நீள எண்ணில் அரணென நிற்பனே.
4)
மங்கை பங்கனை வன்னிவண் கூவிளம்
திங்கள் நாகம் திகழும் முடிமிசைக்
கங்கை சூடியைக் கானூர்க் கரும்பினை
அங்கை யால்தொழ அல்லலொன் றில்லையே.
5)
நாட்டம் மூன்றுடை நம்பனைப் பல்பிணக்
காட்டில் ஆடும் கழலனைக் கார்விடம்
காட்டும் கண்டனைக் கானூர்க் கரும்பினைப்
பாட்டும் பாடிப் பரவிப் பணிநெஞ்சே.
6)
பரந்த பாற்கடல் தோன்றிய நஞ்சினைக்
கரந்த கண்டனைக் கானூர்க் கரும்பினை
இரந்து கைதொழு தேத்திடும் அன்பரைப்
புரந்து நிற்பான் வரந்தரும் வள்ளலே.
7)
ஆனில் அஞ்சுகந் தாடும் அடிகளை
வானில் ஓடு மதிபுனை மைந்தனைக்
கானில் ஆடியைக் கானூர்க் கரும்பினைப்
பாநல் மாலைகள் பாடிப் பணிநெஞ்சே.
8)
மாலி னால்மலை ஆட்டினான் வாய்பத்தும்
ஓல மேசெய ஓர்விரல் ஊன்றிய
கால காலனைக் கானூர்க் கரும்பினைச்
சூல பாணியைச் சொல்ல வினைவீடே.
9)
கண்ணன் நான்முகன் நேடியும் காணொணா
வண்ணம் நின்ற வரையிலாச் சோதியைக்
கண்ணிற் றீயனைக் கானூர்க் கரும்பினை
அண்ண லைத்தொழும் அன்பருக் கின்பமே.
10)
பூதி யைப்புனை யார்புகல் ஒன்றிலர்
ஆதி மூர்த்தியை ஆதிரை யானையோர்
காதில் தோடணி கானூர்க் கரும்பினைக்
காதல் செய்வார் வினைகள் கழலுமே.
11)
தலைவா நின்தாள் சரணெனும் உம்பர்க்காச்
சிலையால் முப்புரம் செற்ற பெருமானைக்
கலைமான் கையனைக் கானூர்க் கரும்பினைத்
தலையால் கும்பிடும் தன்மையர்க் கின்பமே.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு : திருக்குறுந்தொகை அமைப்பு :
திருவின் நாதனும் செம்மலர் மேலுறை
உருவ னாயுல கத்தின் உயிர்க்கெலாம்
கருவ னாகி முளைத்தவன் கானூரில்
பரம னாய பரஞ்சுடர் காண்மினே.
3) திருக்கானூர் - இத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சில கிலோமிட்டர் தொலைவில், கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ளது.
4) திருக்கானூர் - செம்மேனிநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=387
5) தலக்குறிப்பு: இறைவன் - செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்;
-------------- --------------
2012-12-05
திருக்கானூர்
" கானூர்க் கரும்பு "
----------------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.76.1 - “திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை”)
1)
பிறையார் செஞ்சடைப் பிஞ்ஞக னைப்பண்டு
மறையால் கீழ்விரிப் பானை மணிபோலக்
கறையார் கண்டனைக் கானூர்க் கரும்பினை
மறவா நெஞ்சர்க் குறவாய் வருவனே.
பிறை
ஆர் செஞ்சடைப் பிஞ்ஞகனை -
செஞ்சடைமேல்
பிறைசூடிய பிஞ்ஞகனை;
பண்டு
மறை ஆல்கீழ் விரிப்பானை -
முன்பு
கல்லால மரத்தின்கீழ் மறைப்பொருள்
சொல்பவனை;
மணி
போலக் கறை ஆர் கண்டனை -
நீலமணி
போல் கறை திகழும் கண்டம்
உடையவனை;
கானூர்க்
கரும்பினை -
திருக்கானூரில்
எழுந்தருளியிருக்கும் கரும்பு
போல்பவனை;
மறவா
நெஞ்சர்க்கு உறவாய் வருவனே
-
மறவாத
மனம் உடையவர்க்கு அவன் உறவாகி
வருவான்.
2)
நீரார் செஞ்சடை மீது நிரைகொன்றை
ஏரார் வெண்மதி இண்டை புனைவானைக்
காரார் கண்டனைக் கானூர்க் கரும்பினை
ஓராய் நெஞ்சே ஒழியும் வினைகளே.
ஆர்தல்
-
பொருந்துதல்;
நிரை
கொன்றை -
வரிசையாகத்
தொடுத்த கொன்றை மாலை;
ஏர்
-
அழகு;
இண்டை
-
முடிக்கு
அணியும் மாலை;
கார்
-
கருநிறம்;
ஓர்தல்
-
நினைதல்;
3)
நாளை எண்ணும் நமனவன் ஆருயிர்
மாள மார்பினில் அன்றுதை காலனைக்
காள கண்டனைக் கானூர்க் கரும்பினை
நீள எண்ணில் அரணென நிற்பனே.
நாளை
எண்ணும் நமன் -
நம்
வாழ்நாளை எண்ணுகின்ற இயமன்;
நமனவன்
ஆர் உயிர் மாள மார்பினில்
அன்று உதை காலனை -
நமனுடைய
அரிய உயிர் நீங்குமாறு அவனுடைய
மார்பில் உதைத்த திருவடியை
உடைய சிவபெருமானை;
(சம்பந்தர்
தேவாரம் -
1.76.3 - "பாலனாம்
விருத்தனாம் பசுபதி தானாம்
பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க்
கருளும் காலனாம்...."
- CKS எழுதிய
திருத்தொண்டர் புராண உரையில்
,
சம்பந்தர்
வரலாற்றில் "அங்குள்ள
பிறபதியி னரிக்கரியார்
கழல்வணங்கிப்"
என்று
தொடங்கும் பாடலின் குறிப்புரையில்,
இப்பதிகப்பாடற்குறிப்பில்
"காலன்
-
காலை
உடையவன்;
காலத்தைச்
செலுத்துபவன் (காலம்
-
கால
தத்துவம்);"
என்று
விளக்குகின்றார்);
காளகண்டன்
-
நீலகண்டன்;
நீள
எண்ணில் -
இடைவிடாது
நினைந்தால்;
(சுந்தரர்
தேவாரம் -
7.20.1 - "நீள
நினைந்தடியேன் உனை நித்தலுங்
கைதொழுவேன்"
- ' நீள
'
என்றது,
' கால
எல்லை இன்றி '
என்னும்
பொருளதாய்,
இடைவிடாமையைக்
குறித்தது);
அரண்
-
காவல்;
4)
மங்கை பங்கனை வன்னிவண் கூவிளம்
திங்கள் நாகம் திகழும் முடிமிசைக்
கங்கை சூடியைக் கானூர்க் கரும்பினை
அங்கை யால்தொழ அல்லலொன் றில்லையே.
வன்னி
-
வன்னியிலை;
கூவிளம்
-
வில்வம்;
கங்கை
சூடியை -
கங்கையை
அணிந்தவனை;
5)
நாட்டம் மூன்றுடை நம்பனைப் பல்பிணக்
காட்டில் ஆடும் கழலனைக் கார்விடம்
காட்டும் கண்டனைக் கானூர்க் கரும்பினைப்
பாட்டும் பாடிப் பரவிப் பணிநெஞ்சே.
நாட்டம்
-
கண்;
நம்பன்
-
சிவன்;
(நம்புதல்
-
விரும்புதல்);
பல்
பிணக் காட்டில் -
பல
பிணங்களையுடைய சுடுகாட்டில்;
(சுந்தரர்
தேவாரம் -
7.98.4 - "பாடிய
நான்மறையான் படு பல்பிணக்
காடரங்கா ஆடிய மாநடத்தான்...");
பாட்டும்
பாடிப் பரவி -
உரையாற்
சொல்லுதலேயன்றிப் பாட்டாலும்
பாடித் துதித்து;
(சுந்தரர்
தேவாரம் -
7.91.1 -
"பாட்டும்
பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும்
வினைகள் தீர்ப்பார் ....")
6)
பரந்த பாற்கடல் தோன்றிய நஞ்சினைக்
கரந்த கண்டனைக் கானூர்க் கரும்பினை
இரந்து கைதொழு தேத்திடும் அன்பரைப்
புரந்து நிற்பான் வரந்தரும் வள்ளலே.
பாற்கடற்றோன்றிய
-
பாற்கடல்
+
தோன்றிய
-
பாற்கடலில்
தோன்றிய;
நஞ்சினைக்
கரந்த கண்டனை -
விடத்தைக்
கண்டத்தில் ஒளித்தவனை;
(கரத்தல்
-
ஒளித்தல்;
மறைத்தல்);
புரத்தல்
-
காத்தல்;
7)
ஆனில் அஞ்சுகந் தாடும் அடிகளை
வானில் ஓடு மதிபுனை மைந்தனைக்
கானில் ஆடியைக் கானூர்க் கரும்பினைப்
பாநல் மாலைகள் பாடிப் பணிநெஞ்சே.
ஆனில்
அஞ்சு -
பால்,
தயிர்,
நெய்,
முதலிய
ஐந்து பொருள்கள்;
(சம்பந்தர்
தேவாரம் -
3.92.5 - "ஏனவெண்
கொம்பொடும் ...
ஆனினல்
ஐந்துகந் தாடுவர்..."
- ஆனில்
நல் ஐந்து -
five good products of the cow - பசுவிற்கிடைப்பதாகிய
நல்ல.
பஞ்சகவ்வியத்தை);
அடிகள்
-
கடவுள்;
வானில்
ஓடு மதி -
வானில்
உலவுகின்ற திங்கள்;
(அப்பர்
தேவாரம் -
4.4.1 - "பாடிளம்
பூதத்தி னானும் ...
ஓடிள
வெண்பிறை யானும் ..."
- ஓடு
இள வெண்பிறை -
வானில்
ஓடும் பிறை,
இளம்
பிறை,
வெண்பிறை);
மைந்தன்
-
இளைஞன்;
வீரன்;
கானில்
ஆடியை -
சுடுகாட்டில்
ஆடுபவனை;
(கான்
-
சுடுகாடு);
பாநல்
மாலைகள் -
நற்பாமாலைகள்;
8)
மாலி னால்மலை ஆட்டினான் வாய்பத்தும்
ஓல மேசெய ஓர்விரல் ஊன்றிய
கால காலனைக் கானூர்க் கரும்பினைச்
சூல பாணியைச் சொல்ல வினைவீடே.
மால்
-
மயக்கம்;
அறியாமை;
மாலினால்
மலை ஆட்டினான்
-
ஆணவத்தால்
கயிலைமலையை ஆட்டிய இராவணன்;
9)
கண்ணன் நான்முகன் நேடியும் காணொணா
வண்ணம் நின்ற வரையிலாச் சோதியைக்
கண்ணிற் றீயனைக் கானூர்க் கரும்பினை
அண்ண லைத்தொழும் அன்பருக் கின்பமே.
கண்ணன்
-
திருமால்;
நேடியும்
காணொணா -
தேடியும்
காண ஒண்ணாத;
வரை
இலாச் சோதியை -
எல்லை
இல்லாத ஒளிப்பிழம்பை;;
கண்ணிற்
றீயனை -
கண்ணில்
தீயனை;
10)
பூதி யைப்புனை யார்புகல் ஒன்றிலர்
ஆதி மூர்த்தியை ஆதிரை யானையோர்
காதில் தோடணி கானூர்க் கரும்பினைக்
காதல் செய்வார் வினைகள் கழலுமே.
பூதி
-
திருநீறு;
புனைதல்
-
அணிதல்;
பூதியைப்
புனையார் -
திருநீறு
பூசாதவர்கள்;
புகல்
-
அடைக்கலம்;
ஆதிரையான்
-
திருவாதிரை
நட்சத்திரத்துக்கு உரியவன்;
ஓர்
காதில் தோடு அணி -
ஒரு
காதில் தோடு அணிகின்ற
-
அர்தநாரீஸ்வரன்;
காதல்
-
அன்பு;
கழலுதல்
-
நீங்குதல்;
11)
தலைவா நின்தாள் சரணெனும் உம்பர்க்காச்
சிலையால் முப்புரம் செற்ற பெருமானைக்
கலைமான் கையனைக் கானூர்க் கரும்பினைத்
தலையால் கும்பிடும் தன்மையர்க் கின்பமே.
உம்பர்க்கா
-
தேவர்களுக்காக;
(கடைக்குறை
விகாரம்);
சிலையால்
முப்புரம் செற்ற
-
மேருமலை
என்ற வில்லால் முப்புரங்களையும்
அழித்த;
(சிலை
-
மலை;
வில்);
கலைமான்
கையனை -
கையில்
மானை ஏந்தியவனை;
தலையால்
கும்பிடுதல் -
தலைதாழ்த்தி
வணங்குதல்;
(சம்பந்தர்
தேவாரம் -
1.80.7 - "அலையார்
புனல்சூடி ...
சிற்றம்
பலந்தன்னைத் தலையால் வணங்குவார்
தலையா னார்களே.");
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு : திருக்குறுந்தொகை அமைப்பு :
-
கலிவிருத்தம்
-
4 அடிகள்;
அடிக்கு
4
சீர்கள்;
-
முதற்சீர்
மாச்சீர்;
-
இரண்டாம்
சீர் நேர்சையில் தொடங்கும்;
-
2-3-4
சீர்களிடையே
வெண்டளை பயிலும்.
-
அடி
நேரசையில் தொடங்கினால்
அடிக்குப் 11
எழுத்துகள்;
அடி
நிரையசையில் தொடங்கினால்
அடிக்குப் 12
எழுத்துகள்;
திருவின் நாதனும் செம்மலர் மேலுறை
உருவ னாயுல கத்தின் உயிர்க்கெலாம்
கருவ னாகி முளைத்தவன் கானூரில்
பரம னாய பரஞ்சுடர் காண்மினே.
3) திருக்கானூர் - இத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சில கிலோமிட்டர் தொலைவில், கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ளது.
4) திருக்கானூர் - செம்மேனிநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=387
5) தலக்குறிப்பு: இறைவன் - செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்;
-
'திருமுறைத்
தலங்கள்'
என்ற
நூலில் பு.மா.ஜெயசெந்தில்நாதன்
எழுதியது:
1924-இல்
வெள்ளம் வந்தபோது கோயில்
முழுவதும் மூடிவிட்டது.
அதன்மீது
ஒரு கரும்பு மட்டுமே
முளைத்திருக்கக்கண்டு,
திரு.
N. சுப்பிரமணிய
ஐயர் என்பவர் முயன்று தோண்டிப்
பார்த்தபோது கோயில்
கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால்
இப்பெருமானுக்கு கரும்பேஸ்வரர்
என்று பெயராயிற்று.
-
தருமபுர
ஆதீன உரையில் காண்பது:
"சுவாமி
பெயர் இட்சுபுரீசுவரர் என்று
கல்வெட்டுக் குறிப்பாளர்
எழுதுகிறார்".
-
திருநாவுக்கரசர்
தேவாரம் -
4.15.2 - "ஆனைக்
காவில் அணங்கினை
....
கானூர்
முளைத்த கரும்பினை ...")
-------------- --------------
No comments:
Post a Comment