02.69
– திருப்பழனம்
2012-12-05
திருப்பழனம்
------------------
(திருவிருக்குக்குறள் அமைப்பில் - “மா புளிமாங்காய்" என்ற வாய்பாடு - வஞ்சித்துறை)
(சம்பந்தர் தேவாரம் - 1.93.6 - “மொய்யார் முதுகுன்றில்”)
1)
நச்சுப் பணிபூணும்
உச்சிப் பழனத்தாய்
நச்சும் அடியேன்றன்
அச்சம் களையாயே.
2)
மங்கை ஒருகூறா
கங்கை முடிமீது
தங்கும் பழனத்தாய்
சங்கை களையாயே.
3)
காடும் திருநட்டம்
ஆடும் இடமாக
நாடும் பழனத்தாய்
பாடு களையாயே.
4)
வற்றல் தலையேந்தி
ஒற்றை விடையேறிச்
சுற்றும் பழனத்தாய்
உற்ற துணைநீயே.
5)
விழியார் நுதலானே
அழியாப் புகழானே
பொழிலார் பழனத்தாய்
அழகா அருளாயே.
6)
சேவார் கொடியானே
பூவார் முடியானே
காவார் பழனத்தாய்
தேவா அருளாயே.
7)
மழையார் மிடறானே
உழையார் கரத்தானே
பழையா பழனத்தாய்
அழகா அருளாயே.
8)
சிலம்பை அசைமூடன்
புலம்ப நெரித்தாய்புள்
அலம்பும் பழனத்தாய்
நலங்கள் அருளாயே.
9)
அயன்மால் அறியாத
உயர்தீ உருவானாய்
வயலார் பழனத்தாய்
துயர்தீர்த் தருளாயே.
அயன் மால் அறியாத - பிரமனாலும் விஷ்ணுவாலும் அறிய இயலாத;
உயர் தீ உரு ஆனாய் - உயர்ந்த சோதி வடிவம் ஆனவனே;
வயல் ஆர் பழனத்தாய் - வயல்கள் நிறைந்த திருப்பழனத்தில் உறைபவனே;
10)
இகழ்வார்க் கிலனானாய்
புகழ்வார் புகலானாய்
பகவா பழனத்தாய்
சுகவாழ் வருளாயே.
11)
குவியாக் கரத்தானே
செவியோர் குழையானே
கவினார் பழனத்தாய்
பவநோய் களையாயே.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
2) திருவிருக்குக்குறள் (திரு இருக்குக்குறள் ) அமைப்பு - வஞ்சித்துறை;
3) A blog post on "சம்பந்தர் தேவாரத்தில் வஞ்சித்துறை”: http://mohanawritings.blogspot.com/2011/06/blog-post_21.html
4) திருப்பழனம் - ஆபத்சகாயேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=959
-------------- --------------
2012-12-05
திருப்பழனம்
------------------
(திருவிருக்குக்குறள் அமைப்பில் - “மா புளிமாங்காய்" என்ற வாய்பாடு - வஞ்சித்துறை)
(சம்பந்தர் தேவாரம் - 1.93.6 - “மொய்யார் முதுகுன்றில்”)
1)
நச்சுப் பணிபூணும்
உச்சிப் பழனத்தாய்
நச்சும் அடியேன்றன்
அச்சம் களையாயே.
நச்சுப்
பணி -
விஷம்
உடைய நாகப்பாம்பு;
உச்சி
-
தலை;
நச்சுப்
பணி பூணும் உச்சிப் பழனத்தாய்
-
விஷப்பாம்பைத்
தலையில் அணிந்த,
திருப்பழனத்து
ஈசனே;
நச்சும்
அடியேன்றன் -
உன்னை
விரும்பும் அடியேனுடைய;
அச்சம்
களையாய் -
அச்சத்தைப்
போக்கி அருள்வாயாக;
ஏ
-
ஈற்றசை
(Expletive
at the end of a line or sentence in a verse or at the end of a word);
(அப்பர்
தேவாரம் -
4.66.1 - "கச்சைசே
ரரவர் போலுங் ...
தம்மை
நச்சுவார்க் கினியர் போலும்
நாகவீச் சரவ னாரே");
2)
மங்கை ஒருகூறா
கங்கை முடிமீது
தங்கும் பழனத்தாய்
சங்கை களையாயே.
சங்கை
-
அச்சம்;
3)
காடும் திருநட்டம்
ஆடும் இடமாக
நாடும் பழனத்தாய்
பாடு களையாயே.
பாடு
-
கஷ்டம்;
வருத்தம்
(Affiction,
suffering, hardship);
4)
வற்றல் தலையேந்தி
ஒற்றை விடையேறிச்
சுற்றும் பழனத்தாய்
உற்ற துணைநீயே.
வற்றல்
தலை ஏந்தி
-
பிரமனது
உலர்ந்த மண்டையோட்டைக் கையில்
ஏந்தி;
ஒற்றை
விடை ஏறி
-
ஒப்பற்ற
இடப வாகனத்தின்மேல் ஏறி;
5)
விழியார் நுதலானே
அழியாப் புகழானே
பொழிலார் பழனத்தாய்
அழகா அருளாயே.
விழி
ஆர் நுதலான் -
நெற்றிக்கண்ணன்;
அழியாப்
புகழானே -
என்றும்
அழியாதவனாய்,
நிலைத்த
புகழை உடையவனே;
பொழில்
ஆர் பழனத்தாய் -
சோலைகள்
நிறைந்த திருப்பழனத்தில்
உறைபவனே;
அழகா
அருளாய் -
அழகனே,
அருள்புரிவாயாக;
6)
சேவார் கொடியானே
பூவார் முடியானே
காவார் பழனத்தாய்
தேவா அருளாயே.
சே
ஆர் கொடி -
இடபக்கொடி;
பூ
ஆர் முடியானே
-
தலையில்
மலர்கள் அணிந்தவனே;
கா
ஆர் பழனத்தாய்
-
சோலைகள்
சூழ்ந்த திருப்பழனத்தில்
உறைபவனே;
7)
மழையார் மிடறானே
உழையார் கரத்தானே
பழையா பழனத்தாய்
அழகா அருளாயே.
மழை
ஆர் மிடறானே
-
மேகம்
போன்ற கண்டம் உடையவனே;
(ஆர்தல்
-
ஒத்தல்);
உழை
ஆர் கரத்தானே -
கையில்
மானை ஏந்தியவனே;
பழையா
-
பழையவனே;
புராணனே;
8)
சிலம்பை அசைமூடன்
புலம்ப நெரித்தாய்புள்
அலம்பும் பழனத்தாய்
நலங்கள் அருளாயே.
சிலம்பு
-
மலை;
சிலம்பை
அசை மூடன் -
கயிலைமலையை
அசைத்த அறிவில்லா அரக்கன்
இராவணன்;
புலம்ப
நெரித்தாய் -
வருந்தி
அழும்படி
அவனை நெரித்தவனே;
புள்
அலம்பும் பழனத்தாய்
-
பறவைகள்
ஒலிக்கும் திருப்பழனத்தில்
உறைபவனே;
(புள்
-
பறவை);
(அலம்புதல்
-
ஒலித்தல்);
நலங்கள்
-
பலவகைச்
செல்வ நலன்கள்;
(சம்பந்தர்
தேவாரம் -
3.120.11 - "பன்னலம்
புணரும் பாண்டிமாதேவி...");
9)
அயன்மால் அறியாத
உயர்தீ உருவானாய்
வயலார் பழனத்தாய்
துயர்தீர்த் தருளாயே.
அயன் மால் அறியாத - பிரமனாலும் விஷ்ணுவாலும் அறிய இயலாத;
உயர் தீ உரு ஆனாய் - உயர்ந்த சோதி வடிவம் ஆனவனே;
வயல் ஆர் பழனத்தாய் - வயல்கள் நிறைந்த திருப்பழனத்தில் உறைபவனே;
10)
இகழ்வார்க் கிலனானாய்
புகழ்வார் புகலானாய்
பகவா பழனத்தாய்
சுகவாழ் வருளாயே.
இகழ்வார்க்கு
இலன் ஆனாய் -
இகழ்பவர்களுக்கு
இல்லாதவன் ஆனவனே;
(இகழ்வார்க்கு
அருள் இல்லாதவன்);
புகழ்வார்
புகல் ஆனாய் -
துதிப்பவர்களுக்கு
அடைக்கலம் ஆனவனே;
பகவா
பழனத்தாய் -
பகவனே;
திருப்பழனத்தில்
உறைபவனே;
சுக
வாழ்வு அருளாயே -
அடியேனுக்கு
இன்ப வாழ்வு அருள்வாயாக;
11)
குவியாக் கரத்தானே
செவியோர் குழையானே
கவினார் பழனத்தாய்
பவநோய் களையாயே.
தனக்கு
ஒரு தலைவன் இன்மையால் குவியாத
கரங்களை உடையவனே;
ஒரு
காதில் குழையை அணிந்தவனே;
அழகிய
திருப்பழனத்தில் உறைபவனே;
என்
பிறவிப்பிணியைக் களைவாயாக.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
-
தேவாரத்தில்
உள்ள திருவிருக்குக்குறள்
அமைப்பை ஒட்டியது.
-
தமிழ்
யாப்பிலக்கணத்தில் "வஞ்சித்துறை";
-
இப்பதிகத்தில்
"மா
புளிமாங்காய்"
என்ற
வாய்பாடு பயில்கின்றது.
2) திருவிருக்குக்குறள் (திரு இருக்குக்குறள் ) அமைப்பு - வஞ்சித்துறை;
-
நான்கு
அடிகள்;
ஒவ்வோர்
அடியிலும் இரண்டு சீர்கள்
-
(குறளடி
நான்கு);
-
எவ்வித
வாய்பாட்டிலும் இருக்கலாம்.
(வஞ்சித்துறை
பல்வேறு ஓசை அமைப்புகளில்
வரும்);
-
சம்பந்தர்
தேவாரம் -
1.93.6 -
“மொய்யார்
முதுகுன்றில்
ஐயா
எனவல்லார்
பொய்யார்
இரவோர்க்குச்
செய்யாள்
அணியாளே”.
3) A blog post on "சம்பந்தர் தேவாரத்தில் வஞ்சித்துறை”: http://mohanawritings.blogspot.com/2011/06/blog-post_21.html
4) திருப்பழனம் - ஆபத்சகாயேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=959
-------------- --------------