03.02
– வான்மியூர்
-
(திருவான்மியூர்
அந்தாதி)
27 January 2007 - 08 February 2007
திருவான்மியூர் அந்தாதி
-----------------------------
(வெண்பா)
51)
பிறப்பிலான் பொன்னடியைப் பேசாநாள் எல்லாம்
சிறப்பிலா நாளேநம் செந்தீ நிறப்பிரான்
வங்கக் கடலோர வான்மியூர் மாதேவன்
அங்கழல் போற்றலுய்யும் ஆறு.
52)
ஆறும் பிறையும் அரவும் உமையொரு
கூறும் உடையஎம் கோன்புகழைக் - கூறும்
வழிஅறி யேனும் மருந்தீசன் அன்பால்
எழுதுகிறேன் ஓர்பாடல் இன்று.
53)
இன்று பொழுதில்லை; இன்னொரு நாள்தொழலாம்
என்று பொழுதுபோக் கென்னெஞ்சே! ஒன்றுகேள்;
மாயும் பொழுதென்றோ? வான்மியூர் சென்றான்றோர்
ஆயும் அரனை அடை.
54)
அடைந்தவர்க் கெம்மையன் அள்ளித் தருவான்;
மடநெஞ்சே, ஏனோ மறந்தாய்; விடையேறி
வந்தருளும் வான்மியூர் வள்ளல் பெயர்தனை
முந்தைவினை போக மொழி.
55)
மொழிவாய் புகழ்நாமம்; முன்னடைந்தோர் சொன்ன
வழியாம் அதுவே; மனமே, பழிபாவம்
தீர்க்கும் மருந்தீசன் சேவடி போற்றிடும்
ஆர்க்கும் அருள்வான் அரன்.
56)
அரன்மேல் எறிகல்லை அன்பறிந்து போதாச்
சிரமேற்றான் நெஞ்சே தினமும் உரைசெய்
கருணைக் கடல்ஆம் மருந்தீசன் பேரை;
ஒருதுயர் இல்லை உனக்கு.
57)
உனக்குள்ள ஆசைக் கொருவரை இல்லை;
தினம்இதனால் தீவினையே செய்தாய்; மனமே!
இடர்போக, வான்மியூர் ஈசன் கழலை
இடைவிடா தெண்ணி இரு.
58)
"இருளார் மிடறா, இறவாப் பிறவாப்
பொருளாய் இருக்கும், புனிதா, அருளாய்!"
எனவேண் டிடுவோர்க் கிலையே இடரே
மனமே, தினமும் வழுத்து.
59)
வழுத்துவாய் நெஞ்சே, மறவா தவன்அஞ்
செழுத்தை; விடம்உண் டிருண்ட கழுத்துடை
ஐயன் மருந்தீசன் அன்பால் உளம்நைவார்
வெய்யவினை அற்று விடும்.
60)
விடாது தொடரும் வினைகளெல்லாம் உன்னைத்
தொடாது விலகவழி சொல்வேன் படாரெனத்
தூணிலிருந் தன்றுவந்தான் தோண்டியும் காணாத்தாள்
பேணிலறும் பின்னைப் பிறப்பு.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
27 January 2007 - 08 February 2007
திருவான்மியூர் அந்தாதி
-----------------------------
(வெண்பா)
51)
பிறப்பிலான் பொன்னடியைப் பேசாநாள் எல்லாம்
சிறப்பிலா நாளேநம் செந்தீ நிறப்பிரான்
வங்கக் கடலோர வான்மியூர் மாதேவன்
அங்கழல் போற்றலுய்யும் ஆறு.
பதம்
பிரித்து:
பிறப்பு
இலான் பொன் அடியைப் பேசா நாள்
எல்லாம்
சிறப்பு
இலா நாளே;
நம்
செம் தீ நிறப் பிரான்,
வங்கக்
கடல் ஓர வான்மியூர் மாதேவன்
அம்
கழல் போற்றல் உய்யும் ஆறு.
பிறப்பு
இலான் =
பிறப்பு
இல்லாத இறைவன்;
செம்
தீ நிறப் பிரான் -
சிவந்த
நெருப்பை ஒத்த நிறம் உடைய
தலைவன் -
சிவன்;
வங்கம்
-
கப்பல்;
அலை;
அம்
கழல் -
அழகிய
கழல் அணிந்த திருவடி; (சம்பந்தர்
தேவாரம் - 3.72.6 - "புலியுமானும்
அல்லாத சாதிகளும் அங்கழல்மேல்
கைகூப்ப");
போற்றல்
-
போற்றுதல்;
வழிபடுதல்
உய்யும்
ஆறு -
உய்யும்
வழி;
அப்பர்
தேவாரம் -
திருமுறை
6.1.1
- "அரியானை......பெரியானைப்
பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே".
52)
ஆறும் பிறையும் அரவும் உமையொரு
கூறும் உடையஎம் கோன்புகழைக் - கூறும்
வழிஅறி யேனும் மருந்தீசன் அன்பால்
எழுதுகிறேன் ஓர்பாடல் இன்று.
ஆறு
-
கங்கை;
அரவு
-
பாம்பு;
உமை
ஒரு கூறு -
உமாதேவியை
உடலில் ஒரு பங்கு;
கோன்
-
அரசன்;
தலைவன்;
கூறும்
வழி அறியேனும் -
புகழும்
முறையை அறியேனாகிய நானும்;
மருந்தீசன்
அன்பால் -
மருந்தீசன்
மேல் கொண்ட பக்தியால்;
மருந்தீசன்
கருணையினால்;
(அன்பு
-
பக்தி;
கருணை);
53)
இன்று பொழுதில்லை; இன்னொரு நாள்தொழலாம்
என்று பொழுதுபோக் கென்னெஞ்சே! ஒன்றுகேள்;
மாயும் பொழுதென்றோ? வான்மியூர் சென்றான்றோர்
ஆயும் அரனை அடை.
பதம்
பிரித்து:
இன்று
பொழுது இல்லை;
இன்னொரு
நாள் தொழலாம்
என்று
பொழுது போக்கு என் நெஞ்சே!
ஒன்று
கேள்;
மாயும்
பொழுது என்றோ?
வான்மியூர்
சென்று,
ஆன்றோர்
ஆயும்
அரனை அடை.
பொழுது
போக்கு என் நெஞ்சே -
காலத்தை
வீணே போக்குகின்ற என் மனமே;
ஆன்றோர்
ஆயும் -
ஞானிகள்
ஆராயும்;
அரனை
அடை -
ஹரனைச்
சரண்புகுவாயாக;
(அடைதல்
-
To take refuge in; சரண்புகுதல்);
(சம்பந்தர்
தேவாரம் -
2.99.1 - "இன்றுநன்று
நாளைநன்று என்றுநின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப்
போகவிட்டுப் போதுமின்..."
- இன்றைய
நாள் நல்லது,
நாளைய
நாள் நல்லது என்று இச்சையால்
காலங் கடத்திப் பெருமானை
வழிபடாது அழிந்தொழியும்
வாழ்க்கையைப் போக்கி மெய்
வாழ்வினை அடைய வாருங்கள்);
54)
அடைந்தவர்க் கெம்மையன் அள்ளித் தருவான்;
மடநெஞ்சே, ஏனோ மறந்தாய்; விடையேறி
வந்தருளும் வான்மியூர் வள்ளல் பெயர்தனை
முந்தைவினை போக மொழி.
அடைந்தவர்க்கு
-
இறைவனது
திருவடியை அடைந்து தொழுபவர்க்கு;
எம்
ஐயன் அள்ளித் தருவான் -
எம்
தலைவன் வரங்களை அள்ளிக்கொடுப்பான்;
மடநெஞ்சே,
ஏனோ
மறந்தாய்;
- பேதை
மனமே,
அதனை
நீ ஏன் மறந்தாய்?
விடை
ஏறி வந்து அருளும் வான்மியூர்
வள்ளல் -
இடபத்தின்மேல்
ஏறி அடியவர் இருக்கும் இடம்
வந்து அருள்கின்ற,
வான்மியூரில்
உறைகின்ற வள்ளலான சிவபெருமான்;
(விடை
-
இடபம்;
எருது);
பெயர்தனை
-
பெயரை;
திருநாமத்தை;
முந்தைவினை
போக மொழி -
பழவினைகள்
தீர்வதற்குச் சொல்வாயாக;
55)
மொழிவாய் புகழ்நாமம்; முன்னடைந்தோர் சொன்ன
வழியாம் அதுவே; மனமே, பழிபாவம்
தீர்க்கும் மருந்தீசன் சேவடி போற்றிடும்
ஆர்க்கும் அருள்வான் அரன்.
மொழிவாய்
புகழ்நாமம்;
- மனமே,
புகழ்
பொருந்திய திருநாமத்தைச்
சொல்வாயாக;
முன்
அடைந்தோர் சொன்ன வழி
ஆம் அதுவே;
மனமே,
- மனமே,
அதுவே
ஈசனை முன்னமே அடைந்த பெரியோர்கள்
சொன்ன வழி ஆகும்;
பழி
பாவம் தீர்க்கும்
மருந்தீசன் சேவடி
-
பழியையும்
பாவத்தையும் மர்ந்தீசன்
சேவடி தீர்க்கும்;
போற்றிடும்
ஆர்க்கும் அருள்வான் அரன்
-
வழிபடும்
எவருக்கும் சிவபெருமான்
அருள்வான்;
(சம்பந்தர்
தேவாரம் -
3.49.5 - "கொல்வாரேனும்
குணம் பல நன்மைகள் இல்லாரேனும்
இயம்புவர் ஆயிடின் எல்லாத்
தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே.");
56)
அரன்மேல் எறிகல்லை அன்பறிந்து போதாச்
சிரமேற்றான் நெஞ்சே தினமும் உரைசெய்
கருணைக் கடல்ஆம் மருந்தீசன் பேரை;
ஒருதுயர் இல்லை உனக்கு.
அரன்
மேல் எறி கல்லை அன்பு அறிந்து
போதாச் சிரம் ஏற்றான் -
(சாக்கிய
நாயனார்)
அரன்
மீது எறிந்த கல்லையும்,
அவர்
அன்பின் தன்மையை அறிந்து,
பூவாகத்
திருமுடிமேல் ஏற்றான்;
(போதா
-
போதாக;
போது
-
பூ);
நெஞ்சே
தினமும் உரைசெய் கருணைக்கடல்
ஆம் மருந்தீசன் பேரை -
மனமே,
கருணைக்கடலான
மருந்தீசன் திருப்பெயரைத்
தினந்தோறும் சொல்லு;
ஒரு
துயர் இல்லை உனக்கு -
உனக்கு
ஒரு துன்பமும் இல்லை;
57)
உனக்குள்ள ஆசைக் கொருவரை இல்லை;
தினம்இதனால் தீவினையே செய்தாய்; மனமே!
இடர்போக, வான்மியூர் ஈசன் கழலை
இடைவிடா தெண்ணி இரு.
பதம்
பிரித்து:
உனக்கு
உள்ள ஆசைக்கு ஒரு வரை இல்லை;
தினம்
இதனால் தீவினையே செய்தாய்;
மனமே!
இடர்
போக,
வான்மியூர்
ஈசன் கழலை
இடைவிடாது
எண்ணி இரு.
வரை
-
12. Limit, boundary; எல்லை;
13. Measure; extent; அளவு;
58)
"இருளார் மிடறா, இறவாப் பிறவாப்
பொருளாய் இருக்கும், புனிதா, அருளாய்!"
எனவேண் டிடுவோர்க் கிலையே இடரே
மனமே, தினமும் வழுத்து.
பதம்
பிரித்து:
"இருள்
ஆர் மிடறா;
இறவாப்
பிறவாப்
பொருளாய்
இருக்கும்,
புனிதா;
அருளாய்!"
என
வேண்டிடுவோர்க்கு இலையே
இடரே;
மனமே,
தினமும்
வழுத்து.
"இருள்
ஆர் மிடறா;
- கருமை
பொருந்திய கண்டனே;
(மிடறு
-
கண்டம்);
(சம்பந்தர்
தேவாரம் -
2.23.1 - "மழையார்
மிடறா மழுவா ளுடையாய்");
இறவாப்
பிறவாப் பொருளாய் இருக்கும்,
புனிதா;
- இறப்பும்
பிறப்பும் இல்லாத பொருள் ஆகி
என்றும் இருக்கும் தூயவனே;
அருளாய்!"
என
வேண்டிடுவோர்க்கு -
அருள்வாயாக"
என்று
இறைஞ்சும்,
அடியவர்களுக்கு;
இலையே
இடர் -
துன்பம்
இல்லையே;
ஏ
மனமே தினமும் வழுத்து -
ஏ
மனமே,
அப்பெருமானைத்
தினமும் வணங்கு;
(ஏ
-
1. An exclamation inviting attention; ஒரு
விளிக்குறிப்பு;
அசைச்சொல்லாகவும்
கொள்ளலாம்);
59)
வழுத்துவாய் நெஞ்சே, மறவா தவன்அஞ்
செழுத்தை; விடம்உண் டிருண்ட கழுத்துடை
ஐயன் மருந்தீசன் அன்பால் உளம்நைவார்
வெய்யவினை அற்று விடும்.
பதம்
பிரித்து:
வழுத்துவாய்
நெஞ்சே,
மறவாது
அவன் அஞ்சு
எழுத்தை;
விடம்
உண்டு இருண்ட கழுத்துடை
ஐயன்,
மருந்தீசன்
அன்பால் உளம் நைவார்
வெய்ய
வினை அற்று விடும்.
மறவாது
-
மறத்தல்
இன்றி;
அன்பு
-
பக்தி;
உளம்
நைதல் -
உள்ளம்
கனிதல்;
வெய்ய
வினை -
கொடிய
வினை;
அற்றுவிடும்
-
தீர்ந்துவிடும்;
60)
விடாது தொடரும் வினைகளெல்லாம் உன்னைத்
தொடாது விலகவழி சொல்வேன் படாரெனத்
தூணிலிருந் தன்றுவந்தான் தோண்டியும் காணாத்தாள்
பேணிலறும் பின்னைப் பிறப்பு.
பதம்
பிரித்து:
விடாது
தொடரும் வினைகள் எல்லாம்
உன்னைத்
தொடாது
விலக வழி சொல்வேன்;
படார்
எனத்
தூணிலிருந்து
அன்று வந்தான் தோண்டியும்
காணாத் தாள்
பேணில்
அறும் பின்னைப் பிறப்பு.
படார்
எனத் தூணிலிருந்து அன்று
வந்தான் தோண்டியும் காணாத்
தாள் பேணில் -
(தூணைப்
பிளந்துகொண்டு தோன்றிய
நரசிம்மன் ஆன)
திருமால்
(பன்றி
வடிவில்)
நிலம்
அகழ்ந்தும் காணாத திருவடியைப்
போற்றினால்;
(பேணில்
-
பேணினால்
-
போற்றினால்);
அறும்
பின்னைப் பிறப்பு -
இனி
வரவிருக்கும் பிறவிகள் எல்லாம்
இல்லாதொழியும்;
குறிப்பு:
'மனமே'
என்ற
விளி தொக்கு நிற்கின்றது.
(சேந்தனார்
அருளிய திருப்பல்லாண்டு -
9.29.1 - "மன்னுக
தில்லை வளர்கநம் பத்தர்கள்
...
பின்னைப்
பிறவி அறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு
கூறுதுமே"
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment