04.68 – பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்)
2014-06-15
பந்தணைநல்லூர் (இக்காலத்தில் 'பந்தநல்லூர்')
--------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதானா தனதன தனதானா” என்ற சந்தம்.
தனதன என்பது தானன என்றும் வரலாம். தனதானா என்பது தானானா என்றோ தானதனா என்றோ வரலாம்.)
(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - 'வடியுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்து')
1)
அசுரரும் இமையோரும் அலைகடல் கடைநாளில்
விசுவம தழிநஞ்சே வெளிவர அதுவுண்டான்
பசுமயில் உமைபங்கன் பசுபதி பதியென்பர்
பசிதணி வயல்சூழ்ந்த பந்தணை நல்லூரே.
* பசுபதீசுவரர்
- திருப்பந்தணைநல்லூர்
ஈசன் திருநாமம்;
கடைநாளில்
- வினைத்தொகை
- கடைந்த
சமயத்தில்;
விசுவமது
அழிநஞ்சு - அகிலத்தை
அழிக்கும் விடம்;
அது
உண்டான் - அதனை
உண்டவன்;
பசுமயில்
உமை - பசிய
மயில் போன்ற உமையம்மை;
பசிதணி
வயல் - உலகின்
பசியைத் தணிக்கும் வயல்;
2)
சுடரெரி கரமேந்தி சுடலையில் நடமாடி
இடர்புரி எயில்மூன்றும் நொடியினில் எரிமூழ்கிப்
படவொரு கணையெய்த பசுபதி பதியென்பர்
படர்பொழில் புடைசூழ்ந்த பந்தணை நல்லூரே.
சுடரெரி
கரம் ஏந்தி - சுடர்விட்டு
எரியும் நெருப்பைக் கையில்
ஏந்தியவன்;
சுடலையில்
நடமாடி - சுடுகாட்டில்
கூத்தாடுபவன்;
இடர்புரி
எயில் மூன்றும் நொடியினில்
எரிமூழ்கிப் பட -
துன்பம்
செய்த முப்புரங்களும்
கணப்பொழுதில் தீப்பற்றி
அழியும்படி;
3)
நிலவினைச் சடைமீது நிலவிட அருளண்ணல்
நிலைபெறத் தமிழ்பாடி நிரைகழல் தொழுவார்க்குப்
பலவினின் பழமொக்கும் பசுபதி பதியென்பர்
பலசுரம் அளிபாடும் பந்தணை நல்லூரே.
நிலவுதல்
- நிலைத்திருத்தல்;
தங்குதல்;
நிலைபெறுதல்
- துன்பமற்ற
நிலையை அடைதல்;
நிரைகழல்
- வரிசையாகக்
கழல் அணிந்த திருவடி;
பலவின்
இன் பழம் ஒக்கும் -
பலாவின்
இனிய பழம் போன்ற; (பலவு
- பலா);
பலசுரம்
அளி பாடும் - பல
சுரங்களை வண்டுகள் பாடுகின்ற;
4)
அங்கமும் மறைநாலும் அருளிய திருநாவன்
அங்கமும் அணியீசன் அணிமயில் உமைபங்கன்
பங்கமில் புகழாளன் பசுபதி பதியென்பர்
பைங்கிளி பயில்சோலைப் பந்தணை நல்லூரே.
அங்கமும்
மறைநாலும் - நால்வேதமும்
ஆறங்கமும்;
அங்கமும்
அணி ஈசன் - எலும்பையும்
பூணுகின்ற தலைவன்;
அணி
மயில் உமை பங்கன் -
அழகிய
மயில் போன்ற உமையம்மையை ஒரு
பங்காக உடையவன்;
பங்கம்
இல் புகழாளன் - குற்றமற்ற
புகழை உடையவன்;
பைங்கிளி
பயில் சோலை - பசிய
கிளிகள் ஒலிக்கும் சோலை;
(பயில்தல்
- ஒலித்தல்;
தங்குதல்);
5)
துணிமதி புனைதூயன் சுடுபொடி துதைமார்பன்
அணியிழை ஒருபாகன் அருவிடம் அடைகண்டன்
பணியினை அரையார்த்த பசுபதி பதியென்பர்
பணிபவர் பவம்நீக்கும் பந்தணை நல்லூரே.
துணிமதி
- பிளவுபட்ட
திங்கள்;
சுடுபொடி
- சுடுநீறு
- திருநீறு;
துதைதல்
- படிதல்
(To be steeped);
அணியிழை
- பெண்
(Woman, as adorned with jewels);
அருவிடம்
அடைகண்டன் - கொடிய
நஞ்சை அடைத்த கண்டத்தை உடையவன்;
பணியினை
அரை ஆர்த்த - நாகப்பாம்பை
அரையில் நாணாகக் கட்டிய;
பவம்
- பிறவி;
பாவம்;
6)
சுறவமர் கொடியானைச் சுடுநுதற் கணனெந்தை
இறவொடு பிறவில்லான் இணையிலி இடுகானிற்
பறையொலி தரவாடும் பசுபதி பதியென்பர்
பறவைகள் பயில்சோலைப் பந்தணை நல்லூரே.
சுற
/ சுறவு
- சுறா
- மகரமீன்
(Shark);
சுறவு
அமர் கொடியான் -
மகரக்கொடி
உடைய மன்மதன்; (சம்பந்தர்
தேவாரம் - 2.23.4 - "சுறவக்
கொடிகொண் டவன்நீ றதுவாய்
உறநெற் றிவிழித் தஎம் உத்
தமனே....");
இறவு,
பிறவு
- இறப்பு,
பிறப்பு;
இணையிலி
- இணை
இல்லாதவன்;
பறை
ஒலிதர ஆடும் - பறை
ஒலிக்க ஆடும்; (தருதல்
- ஒரு
துணைவினை);
பயில்தல்
- ஒலித்தல்;
தங்குதல்;
7)
இனியவன் எருதேறும் இறையவன் மறைபாடும்
தனியவன் வரம்யாவும் தருபவன் அலைமோதும்
பனிநனை சடையேந்தல் பசுபதி பதியென்பர்
பனிமதி தொடுசோலைப் பந்தணை நல்லூரே.
தனியவன்
- ஒப்பற்றவன்;
(தனி
- ஒப்பின்மை);
பனி
நனைசடை - நீர்
நனைக்கின்ற சடை;
ஏந்தல்
- பெருமையிற்
சிறந்தவன்;
பனிமதி
- குளிர்ச்சி
பொருந்திய சந்திரன்;
8)
நிசியன வணமேனி நிசிசரன் முடிபத்தும்
நசிவுற விரலூன்றி நனியருள் புரிபெம்மான்
பசியெனப் பலிதேரும் பசுபதி பதியென்பர்
பசியதண் பொழிலாரும் பந்தணை நல்லூரே.
நிசி
அன வண மேனி நிசிசரன் முடி
பத்தும் - இருளைப்
போன்ற கரிய நிறத்து அரக்கனான
இராவணனின் பத்துத்தலைகளும்;
(நிசி
- இரவு;
இருள்);
(நிசிசரன்
- இரவில்
திரிபவன் - அசுரன்;
அரக்கன்);
(அப்பர்
தேவாரம் - 5.65.11 - "மைக்க
டுத்த நிறத்தரக் கன்வரை புக்கெ
டுத்தலும் ..." -
மைக்கடுத்த
நிறத்து அரக்கன் -
கரிய
இருளை ஒத்த நிறத்தினை உடைய
இராவணன்.);
நசிவுற
விரல் ஊன்றி நனி அருள் புரி
பெம்மான் - நெரிவுற
ஒரு விரலை ஊன்றிப் பின் பேரருள்
செய்த பெருமான்; (நசிவு
- நெரிவு
- Bruise, contusion); (நனி
- மிகவும்);
பலி
- பிச்சை;
பசிய
தண் பொழில் ஆரும் -
பசுமையான
குளிர்ந்த சோலைகள் பொருந்திய;
9)
மண்ணகழ் அரிவேதன் மலரடி முடிகாணார்
கண்ணமர் நுதலெந்தை கழலிணை தொழுமன்பர்
பண்ணிய வினைதீர்க்கும் பசுபதி பதியென்பர்
பண்ணிசை மிகுசோலைப் பந்தணை நல்லூரே.
மண்
அகழ் அரி வேதன் - நிலத்தை
அகழ்ந்த திருமாலும் பிரமனும்;
கண்
அமர் நுதல் எந்தை -
நெற்றிக்கண்
திகழும் எம் தந்தை;
கழல்
இணை - இரு
திருவடிகள்;
பண்
இசை மிகு சோலை - வண்டுகள்
முரல்வதால் பண் இசை மிகுந்த
பொழில் சூழ்ந்த;
10)
நுழைவிலர் பலபொய்கள் நுவல்பவர் உரைநம்பேல்
மழையன மணிகண்டன் மலரடி மறவாதார்
பழவினைத் தொடர்நீக்கும் பசுபதி பதியென்பர்
பழமலி பொழில்சூழ்ந்த பந்தணை நல்லூரே.
நுழைவு
இலர் - (நுழைவு
- நுட்பவறிவு
- Keen understanding or perception);
நுவல்தல்
- சொல்லுதல்;
நம்பேல்
- நம்ப
வேண்டா;
மழை
அன மணிகண்டன் - மேகம்
போன்ற நீலமணி திகழும் கண்டத்தை
உடையவன்;
பழமலி
பொழில் - பழங்கள்
மிகுந்த சோலை;
11)
கடிமலர் பலதூவிக் கசிவொடு தமிழ்பாடி
அடியிணை தொழுவாரை அமர்சிவ புரமேற்றும்
படியென அருள்கையன் பசுபதி பதியென்பர்
படியுறு பசிதீர்செய்ப் பந்தணை நல்லூரே.
கடிமலர்
பல தூவிக் கசிவொடு தமிழ் பாடி
- வாசமலர்கள்
பல தூவி உருகிச் செந்தமிழ்ப்
பாமாலைகளைப் பாடி;
(கடி
- வாசனை);
அடியிணை
தொழுவாரை அமர் சிவபுரம்
ஏற்றும் - இரு
திருவடிக்ஃளை வழிபட்டாரை
விரும்பிய சிவலோகத்திற்கு
ஏற்றுகின்ற ; (அமர்தல்
- விரும்புதல்);
படி
என அருள் கையன் பசுபதி பதி
என்பர் - படி
போல அருள்கின்ற திருக்கையை
உடைய பசுபதி உறைகின்ற இடம்
என்பர்;
படி
உறு பசி தீர் செய்ப் பந்தணை
நல்லூரே - உலகின்
பசியைத் தீர்க்கும் வயல்
சூழ்ந்த திருப்பந்தணைநல்லூர்
ஆகும்; (படி
பூமி); (உறுபசி
- உற்ற
பசி; மிக்க
பசி); (செய்
- வயல்);
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment