03.04
– சிவன்
சிலேடைகள்
2006-05-06
48) சிவன் - கதவு - சிலேடை - 1
-------------------------------------------------------------
செல்லும் வழிகாட்டும் செல்வர் சமயத்தில் (**1)
நல்லஇரு கூறாய் நமைக்காக்கும் சொல்லும்
ஒருசொல் தளைநீக்கும் மேலே ஒருகண்
இருக்கும் கதவெம் மிறை.
கதவு:
நம் செல்வதற்கு வழியைக் காட்டும், அதன் வழியே மக்கள் செல்வார்கள்; ஓரொருகால் இரண்டாகப் பிரிந்து அமையும், (Double door); நம்மைக் காக்கும், வெளியில் நிற்போர் தாம் இன்னார் என்று சொன்னவுடன் தாழ்ப்பாளை நீக்கும் (திறக்கும்); அதன்மீது சாவித்துளை / பார்க்கும் துளை (peephole) உண்டு.
சிவன்:
நாம் செல்வதற்கு நல்வழியைக் காட்டுகின்ற செல்வர் (வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான்); சைவசமயத்தில் (-அல்லது- காட்சிகொடுக்கும்போது சில நேரங்களில்) இரண்டு உருவங்களாகி அர்த்தநாரியாய்த் தோன்றுவார்; ஒப்பற்ற சொல்லான அவன் திருநாமத்தைச் சொன்னால் நம் பந்தங்களை நீக்குவான், கூடுதலாக ஒரு கண் உடையவன் - நெற்றிக்கண் உடையவன். எம் இறைவன்;
(**1 - சம்பந்தர் தேவாரம் - 1.80.5 -
அன்போடு,
வி. சுப்பிரமணியன்

செல்வர்
-
1) போவார்கள்;
2) திரு
உடையவர்;
சமயம்
-
1) காலம்;
தருணம்;
2) மதம்;
(சைவசமயம்);
ஒரு
-
1) ஒன்று;
2) ஒப்பற்ற;
தளை
-
1) தாழ்;
2) பந்தம்;
மேலே
-
1) உயரத்தில்;
மீது;
2) அதிகப்படி
(extra);
கண்
-
1) துவாரம்;
2) விழி;
இறை
-
கடவுள்;
இறைவன்;
கதவு:
நம் செல்வதற்கு வழியைக் காட்டும், அதன் வழியே மக்கள் செல்வார்கள்; ஓரொருகால் இரண்டாகப் பிரிந்து அமையும், (Double door); நம்மைக் காக்கும், வெளியில் நிற்போர் தாம் இன்னார் என்று சொன்னவுடன் தாழ்ப்பாளை நீக்கும் (திறக்கும்); அதன்மீது சாவித்துளை / பார்க்கும் துளை (peephole) உண்டு.
சிவன்:
நாம் செல்வதற்கு நல்வழியைக் காட்டுகின்ற செல்வர் (வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான்); சைவசமயத்தில் (-அல்லது- காட்சிகொடுக்கும்போது சில நேரங்களில்) இரண்டு உருவங்களாகி அர்த்தநாரியாய்த் தோன்றுவார்; ஒப்பற்ற சொல்லான அவன் திருநாமத்தைச் சொன்னால் நம் பந்தங்களை நீக்குவான், கூடுதலாக ஒரு கண் உடையவன் - நெற்றிக்கண் உடையவன். எம் இறைவன்;
(**1 - சம்பந்தர் தேவாரம் - 1.80.5 -
செல்வ
நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ
மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர்
வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன்
கழலேத்தும் செல்வம் செல்வமே.
);அன்போடு,
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment