02.26
– இலம்பையங்கோட்டூர்
2011-08-13
இலம்பையங்கோட்டூர்
-----------------------------
(வஞ்சி விருத்தம் - 'விளம் விளம் காய்' - என்ற அமைப்பு);
(சம்பந்தர் தேவாரம் - 1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")
1)
கார்மலி மிடறினன் கண்ணுதலான்
பேர்பல உடையவன் பெற்றமொன்றில்
ஊர்பவன் உறைவிடம் ஒண்பொழில்சூழ்
ஏர்மலி இலம்பையங் கோட்டூரே.
2)
பழிதுயர் பழவினை தீர்த்தருள்வான்
சுழிநதிச் சடையினன் தோற்றமிலான்
அழிவிலன் உறைவிடம் அஞ்சுரும்பார்
எழில்பொழில் இலம்பையங் கோட்டூரே.
3)
கரும்பன இன்மொழிக் காரிகையை
விரும்பியொர் பங்குடை மேனியினான்
அரும்பிள மதியணி அண்ணலிடம்
இரும்பொழில் இலம்பையங் கோட்டூரே.
4)
சேர்விடம் கண்டிரி தேவருய்யக்
கார்விடம் கரந்தருள் கண்டனவன்
போர்விடை மேல்வரும் புனிதனிடம்
ஏருடை இலம்பையங் கோட்டூரே.
5)
கருஞ்சினக் களிற்றுரிப் போர்வையினான்
அருஞ்சரத் தாலெயில் அன்றெரித்தான்
பெருஞ்சுடர் ஆயவன் பேணுமிடம்
இருஞ்சுனை இலம்பையங் கோட்டூரே.
6)
பாடிய அடியரின் பல்பிணிகள்
ஓடிட அருளரன் உறையுமிடம்
நீடிய பொழிலிடை நீலவண்டு
கூடிடும் இலம்பையங் கோட்டூரே.
7)
அளிகிற அன்பருக் கண்மையனாய்க்
களிதரும் கண்ணுதற் கடவுளிடம்
தெளிநறை மிகமகிழ் தேனினமார்
குளிர்பொழில் இலம்பையங் கோட்டூரே.
8)
தசமுகன் ஓவெனத் தானலற
அசைமலை மேல்விரல் அன்றுவைத்த
பசுபதி ஊர்குயில் பண்பயில
இசைமலி இலம்பையங் கோட்டூரே.
9)
தென்பரங் குன்றினன் தேடிருவர்
முன்பெரி யாயுயர் மூலனவன்
என்பணி இறையிடம் வண்டினங்கள்
இன்புறும் இலம்பையங் கோட்டூரே.
10)
வசைமொழி மதத்தினர் வல்வினைதீர்
திசையினை அறிகிலர் தேடிவந்து
நசையுடை யார்க்கருள் நம்பனிடம்
இசையுடை இலம்பையங் கோட்டூரே.
11)
தோத்திரம் செய்பவர் தொல்வினையைத்
தீர்த்தருள் செய்கிற செல்வனிடம்
தேத்தென என்றளி இன்னிசையால்
ஏத்திடும் இலம்பையங் கோட்டூரே.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) இலம்பையங்கோட்டூர் - (எலுமியன்கோட்டூர்) - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=69
-------------- --------------
2011-08-13
இலம்பையங்கோட்டூர்
-----------------------------
(வஞ்சி விருத்தம் - 'விளம் விளம் காய்' - என்ற அமைப்பு);
(சம்பந்தர் தேவாரம் - 1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")
1)
கார்மலி மிடறினன் கண்ணுதலான்
பேர்பல உடையவன் பெற்றமொன்றில்
ஊர்பவன் உறைவிடம் ஒண்பொழில்சூழ்
ஏர்மலி இலம்பையங் கோட்டூரே.
கார்
மலி மிடறினன் -
நீலகண்டன்;
கண்ணுதலான்
-
நெற்றிக்கண்ணன்;
பெற்றம்
-
இடபம்;
ஒண்
பொழில் சூழ் -
சோலைகள்
சூழ்ந்த;
ஏர்
-
அழகு;
நன்மை;
'ஏர்
=
கலப்பை'
என்று
பொருள்கொண்டு,
'ஏர்
மலி இலம்பையங் கோட்டூர்'
என்பதை
வயல்வளம் மிக்க இலம்பையங்
கோட்டூர் என்றும் பொருள்கொள்ளலாம்;
2)
பழிதுயர் பழவினை தீர்த்தருள்வான்
சுழிநதிச் சடையினன் தோற்றமிலான்
அழிவிலன் உறைவிடம் அஞ்சுரும்பார்
எழில்பொழில் இலம்பையங் கோட்டூரே.
பழி
துயர் பழவினை -
பழியையும்
துயரையும் பழைய வினையையும்;
சுழிநதிச்
சடையினன் -
சுழிகள்
உடைய கங்கையைச் சடையில்
உடையவன்;
தோற்றம்
-
ஆரம்பம்;
அம்
சுரும்பு ஆர் எழில் பொழில்
-
அழகிய
வண்டினங்கள் ரீங்காரம்
செய்யும் அழகிய சோலை சூழ்ந்த;
3)
கரும்பன இன்மொழிக் காரிகையை
விரும்பியொர் பங்குடை மேனியினான்
அரும்பிள மதியணி அண்ணலிடம்
இரும்பொழில் இலம்பையங் கோட்டூரே.
கரும்பு
அன இன் மொழிக் காரிகை -
கரும்பைப்
போன்ற இனிய மொழி பேசும் பார்வதி;
ஒர்
-
ஓர்
என்பதன் குறுக்கம்;
அரும்பிள
மதி -
அரும்பு
இள மதி /
அரும்
பிள மதி;
அரும்பு
இள மதி -
அரும்புகிற/அரும்பு
போன்ற பிறைச்சந்திரன்;
அரும்
பிள மதி -
அரிய
பிளந்த மதி -
அரிய
பிறைச்சந்திரன்;
(பிளத்தல்
-
போழ்தல்;
பிளமதி
-
பிளந்த
மதி -
திங்கள்
துண்டம்);
சம்பந்தர்
தேவாரம் -
3.4.2 - "வாழினும்
சாவினும் .....
போழிள
மதிவைத்த புண்ணியனே ...";
இரும்
பொழில் -
பெரிய
சோலை;
4)
சேர்விடம் கண்டிரி தேவருய்யக்
கார்விடம் கரந்தருள் கண்டனவன்
போர்விடை மேல்வரும் புனிதனிடம்
ஏருடை இலம்பையங் கோட்டூரே.
இரிதல்
-
அஞ்சி
ஓடுதல்;
சேர்
விடம் கண்டு
இரி தேவர் -
திரண்ட
ஆலகால விஷத்தைக் கண்டு அஞ்சி
ஓடிய தேவர்கள்;
கார்
விடம் கரந்து
அருள் கண்டன் அவன் -
கரிய
விஷத்தைக் கண்டத்தில் மறைத்து
அருளிய நீலகண்டன்;
5)
கருஞ்சினக் களிற்றுரிப் போர்வையினான்
அருஞ்சரத் தாலெயில் அன்றெரித்தான்
பெருஞ்சுடர் ஆயவன் பேணுமிடம்
இருஞ்சுனை இலம்பையங் கோட்டூரே.
கரும்
சினக் களிற்று உரிப் போர்வையினான்
-
கரிய
சினம் மிக்க யானையின் தோலைப்
போர்த்தியவன்;
அரும்
சரத்தால் எயில் அன்று எரித்தான்
-
அரிய
அம்பு ஒன்றால் முப்புரங்களை
முன்பு எரித்தவன்;
பேணுதல்
-
விரும்புதல்;
இரும்
சுனை -
பெரிய
நீர்நிலைகள்;
6)
பாடிய அடியரின் பல்பிணிகள்
ஓடிட அருளரன் உறையுமிடம்
நீடிய பொழிலிடை நீலவண்டு
கூடிடும் இலம்பையங் கோட்டூரே.
நீடிய
பொழில் -
நீண்ட
சோலைகள்;
நீல
வண்டு -
கரிய
வண்டுகள்;
7)
அளிகிற அன்பருக் கண்மையனாய்க்
களிதரும் கண்ணுதற் கடவுளிடம்
தெளிநறை மிகமகிழ் தேனினமார்
குளிர்பொழில் இலம்பையங் கோட்டூரே.
அளிகிற
அன்பருக்கு அண்மையனாய்க்
களிதரும் கண்ணுதற் கடவுள்
-
குழையும்
மனத்தை உடைய பக்தர்களுக்கு
அருகிருந்து அவர்களுக்கு
இன்பம் தருபவன் நெற்றிக்கண்
உடைய கடவுள்;
தெளி
நறை மிக மகிழ் தேன் இனம் ஆர்
குளிர் பொழில் -
தெளிந்த
தேனை மிக மகிழும்
வண்டினங்கள் ரீங்காரம்
செய்யும் குளிர்ந்த சோலைகள்;
8)
தசமுகன் ஓவெனத் தானலற
அசைமலை மேல்விரல் அன்றுவைத்த
பசுபதி ஊர்குயில் பண்பயில
இசைமலி இலம்பையங் கோட்டூரே.
தசமுகன்
-
பத்துத்தலைகளை
உடைய இராவணன்;
அசைமலை
-
அசைந்த
மலை/அசைத்த
மலை -
இராவணன்
அசைத்த கயிலைமலை;
பசுபதி
ஊர் -
பசுபதியாகிய
சிவபெருமான் உறையும் தலம்;
பயில்தல்
-
ஒலித்தல்;
குயில்
பண் பயில இசை மலி -
குயில்கள்
பண்களைப் பாட இசை மிகுந்த;
9)
தென்பரங் குன்றினன் தேடிருவர்
முன்பெரி யாயுயர் மூலனவன்
என்பணி இறையிடம் வண்டினங்கள்
இன்புறும் இலம்பையங் கோட்டூரே.
தென்
பரங்குன்றினன் -
அழகிய
திருப்பரங்குன்றத்தில்
உறையும் சிவபெருமான்;
தேடு
இருவர் முன்பு எரியாய் உயர்
மூலன் -
தேடிய
பிரமன் திருமால் இவர்கள்
முன் சோதியாகி
உயர்ந்த முதற்பொருள்;
மூலன்
-
அநாதிகாரணன்;
முதற்பொருள்;
என்பு
அணி இறை இடம்
-
எலும்பை
ஆபரணமாகப் பூணும் இறைவன்
உறையும் தலம்;
10)
வசைமொழி மதத்தினர் வல்வினைதீர்
திசையினை அறிகிலர் தேடிவந்து
நசையுடை யார்க்கருள் நம்பனிடம்
இசையுடை இலம்பையங் கோட்டூரே.
வல்வினை
தீர் திசையினை அறிகிலர்
-
தங்களுடைய
வலிய வினைகளைத் தீர்க்கும்
வழியை அறியாதவர்கள்;
நசை
-
அன்பு;
நம்பன்
-
சிவன்;
தேடிவந்து
நசை உடையார்க்கு அருள்
நம்பன் இடம்
-
அன்பு
உடையவர்களைத் தேடிவந்து
அவர்களுக்கு அருளும் சிவன்
உறையும் தலம்;
இசை
-
சங்கீதம்
(பக்தர்களின்
பாடல்,
வண்டின்
ரீங்காரம்);
புகழ்;
(சம்பந்தர்
தேவாரம் -
2.40.6 -
"எங்கேனும்
யாதாகிப் பிறந்திடினும்
தன்னடியார்க்கு
இங்கேஎன்று
அருள்புரியும் எம்பெருமான்
.....")
11)
தோத்திரம் செய்பவர் தொல்வினையைத்
தீர்த்தருள் செய்கிற செல்வனிடம்
தேத்தென என்றளி இன்னிசையால்
ஏத்திடும் இலம்பையங் கோட்டூரே.
தொல்வினை
-
பழவினை;
தேத்
தென -
வண்டுகளின்
ரீங்காரத்தைக் குறிக்கும்
சொற்றொடர்;
அளி
-
வண்டு;
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) இலம்பையங்கோட்டூர் - (எலுமியன்கோட்டூர்) - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=69
-------------- --------------
No comments:
Post a Comment