2018-07-16
N.050 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2018
----------------
(வெண்பா)
வரம்பில் கருணையன் வந்தியின்பிட் டுண்டு
பிரம்படி பெற்றபெரும் பித்தன் - பரம்பரன்
சீர்பாடு வாதவூர்த் தேசிகனார் செங்கமலம்
நேர்பாதம் நெஞ்சே நினை.
வரம்பு இல் கருணையன் - அளவற்ற தயை உடையவனும்;
வந்தியின் பிட்டு உண்டு பிரம்படி பெற்ற பெரும்-பித்தன் - மதுரையில் வந்தி தந்த பிட்டை உண்டு பிரம்பால் அடி வாங்கிய பேரருளாளனுமான;
பரம்பரன் சீர் பாடு - மேலான சிவபெருமானது புகழைப் பாடியருளிய;
வாதவூர்த் தேசிகனார் செங்கமலம் நேர் பாதம் நெஞ்சே நினை - திருவாதவூரில் அவதரித்த குருவான மாணிக்கவாசகரது செந்தாமரையை ஒத்த திருவடியை, மனமே, நினைவாயாக;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment