03.03
– அடியும்
முடியும் -
(பொது)
2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
2009-04-17
71) பதம்
-----------
பதம்தூக்கி நட்டம் பயிலிறையை நெஞ்சில்
நிதம்போற்ற ஆம்நற் பதம்.
72) அலை
--------------
அலைமனத்தைச் செற்றார் அகத்துறையும் ஐயன்
தலைமிசைக் கங்கை அலை.
73) பதி
-------------
பதியைப் பரனைப் படர்சடை தன்னில்
நதியனை நெஞ்சில் பதி.
74) நிலவு
--------------
நிலவும் புகழை உடைய நிருத்தன்
தலைமேல் ஒளிரும் நிலவு.
75) இறந்து
---------------
இறந்துபிறக் கின்ற இடர்தீர்க்கும் முக்கண்
இறைவனுள்ளான் சொல்லை இறந்து.
2009-05-12
76) உளன்
---------------
உளன்அன்றும் இன்றுமென்றும், ஒண்மதி சூடி,
களங்கமிலாத் தொண்டர் உளன்.
2009-05-23
77) வழக்கு
-----------------
வழக்காடி ஆள்இறையைப் பித்தனென்று வாழ்த்தி
அழைப்ப துலக வழக்கு.
78) பிழை
-------------
பிழைசெய் துழலும் மனமே பெருமான்
கழலை வழுத்திப் பிழை.
79) குழை
--------------
குழையொரு காதில் அணியும் குழகன்
கழல்நினைந்து நெஞ்சே குழை;
2009-05-26
80) அணை
--------------
அணையா விளக்கே அருள்என்று பாடிப்
புணையாம் அரன்தாள் அணை.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
2009-04-17
71) பதம்
-----------
பதம்தூக்கி நட்டம் பயிலிறையை நெஞ்சில்
நிதம்போற்ற ஆம்நற் பதம்.
பதம்
-
1) கால்;
பாதம்;
2) இடம்;
நிலை;
('சிவபதம்')
நட்டம்
பயில்தல் -
நடம்
ஆடுதல்;
இறை
-
இறைவன்;
ஆம்
-
ஆகும்
-
கிட்டும்;
72) அலை
--------------
அலைமனத்தைச் செற்றார் அகத்துறையும் ஐயன்
தலைமிசைக் கங்கை அலை.
அலைமனத்தைச்
செற்றார் அகத்து உறையும் -
அலைகின்ற
மனத்தை வென்றவர்கள் நெஞ்சத்தில்
உறைகின்ற;
(செறுதல்
-
அடக்குதல்;
வெல்லுதல்);
ஐயன்
தலைமிசைக் கங்கை அலை -
தலைவன்
தலைமேல் கங்கையின் அலை;
73) பதி
-------------
பதியைப் பரனைப் படர்சடை தன்னில்
நதியனை நெஞ்சில் பதி.
பதி
-
கடவுள்;
தலைவன்;
பரன்
-
மேலானவன்;
படர்சடை
தன்னில் நதியனை -
படரும்
சடையில் கங்கையை உடையவனை;
பதித்தல்
-
நாட்டுதல்;
74) நிலவு
--------------
நிலவும் புகழை உடைய நிருத்தன்
தலைமேல் ஒளிரும் நிலவு.
நிலவுதல்
-
நிலைத்திருத்தல்
(To
be permanent, fixed);
நிருத்தன்
-
நாட்டியம்
ஆடுபவன்;
நிலவு
-
நிலா;
திங்கள்;
75) இறந்து
---------------
இறந்துபிறக் கின்ற இடர்தீர்க்கும் முக்கண்
இறைவனுள்ளான் சொல்லை இறந்து.
இறத்தல்
-
1. சாதல்;
2. கடத்தல்
(To
go beyond, transcend);
(திருவாசகம்
-
குயிற்பத்து
-
"கீதம்
இனிய குயிலே .....
சோதி
மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து
நின்ற தொன்மை ......"
- அவனது
ஒளி பொருந்திய அழகிய திருமுடி
எங்குளது?
என்று
சொல்லப்புகின்,
அது
சொல்லின் அளவைக் கடந்து நின்ற
பழமையுடையது எனப்படும்.)
2009-05-12
76) உளன்
---------------
உளன்அன்றும் இன்றுமென்றும், ஒண்மதி சூடி,
களங்கமிலாத் தொண்டர் உளன்.
உளன்
-
1) உள்ளவன்
-
இருப்பவன்;
2) உள்ளத்தில்
இருப்பவன்;
(உள்
-
உள்ளம்);
ஒண்
மதி சூடி -
ஒளியுடைய
திங்களைச் சூடியவன்;
2009-05-23
77) வழக்கு
-----------------
வழக்காடி ஆள்இறையைப் பித்தனென்று வாழ்த்தி
அழைப்ப துலக வழக்கு.
வழக்கு
-
1) வாதம்
(Dispute);
2) வழக்கம்
(Usage,
practice; habit, custom);
வழக்காடி
ஆள் இறை -
அடிமை
என்று வாதம் செய்து சுந்தரரை
ஆட்கொண்ட சிவபெருமான்;
பித்தன்
-
சிவன்
திருநாமங்களுள் ஒன்று;
வாழ்த்துதல்
-
துதித்தல்;
உலக
வழக்கு -
உலக
வழக்கம்;
78) பிழை
-------------
பிழைசெய் துழலும் மனமே பெருமான்
கழலை வழுத்திப் பிழை.
பிழை
-
1) குற்றம்;
2) உய்வு
பெறு;
வாழ்;
உழல்தல்
-
அலைதல்;
நிலைகெடுதல்;
கழல்
-
கழல்
அணிந்த திருவடி;
வழுத்துதல்
-
துதித்தல்;
79) குழை
--------------
குழையொரு காதில் அணியும் குழகன்
கழல்நினைந்து நெஞ்சே குழை;
குழை
-
1) காதில்
அணியும் குழை;
2) குழைதல்
-
உருகுதல்
இளகுதல்;
கழல்
-
திருவடி;
குழகன்
-
இளைஞன்;
2009-05-26
80) அணை
--------------
அணையா விளக்கே அருள்என்று பாடிப்
புணையாம் அரன்தாள் அணை.
அணைதல்
-
1) அவிதல்
(To
be extinguished); 2) சார்தல்
(To
approach, come near);
புணை
-
தெப்பம்;
படகு;
(சுந்தரர்
தேவாரம் -
7.21.1 - "நொந்தா
ஒண்சுடரே!
நுனையே
நினைந்திருந்தேன் ..."
- அவியாத
ஒளிபொருந்திய விளக்குப்
போல்பவனே)
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment